புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label ஹோலிஸ்டிக் ரெய்கி. Show all posts
Showing posts with label ஹோலிஸ்டிக் ரெய்கி. Show all posts

தியானத்துக்கு ஒரு அறிமுகம்

தியானம்
தியானம் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றலை கட்டுப்படுத்த மற்றும் சீராக வைத்திருக்க ஒரு பயிற்சியாகும். தியானம் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் உதவியாகவும் இருக்கும். தியானம் என்பது எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் தொடர்பு இல்லாதது. சற்று உன்னிப்பாக கவனித்தால் தியானம் எல்லா மதத்திலும் நம்பிக்கையிலும் வெவ்வேறான வடிவில் இருப்பது புரியும்.

தியானம் பல வழிமுறைகளில் பயிற்சி செய்யப்படுகிறது. சிலர் தியானத்தை மட்டுமே தனியாகவும் சிலர் மற்ற சில பயிற்சிகளுடன் சேர்த்தும் செய்கிறார்கள். பல்வேறு வழிமுறைகளில் பயிற்சி செய்தாலும் தியானத்தின் நோக்கம் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றலை கட்டுப்படுத்துவதும் மற்றும் சீராக வைத்திருப்பதும் மட்டுமே. 

மூச்சு பயிற்சி 
மூச்சு பயிற்சி உடலையும், மனதையும், ஆற்றலையும் கட்டுப்படுத்த மிகவும் முக்கியமானது. மூச்சு பயிற்சி என்பது மூச்சுக் காற்றை கட்டுப்படுத்தும் பயிற்சியல்ல மாறாக மூச்சுக் காற்றை சீர்படுத்தும் பயிற்சி மட்டுமே. சுவாசத்தின் போது உள்ளே செல்லும் மூச்சையும் வெளியேறும் மூச்சையும் கவனிப்பது மனதையும் உடலின் ஆற்றலையும் சமப்படுத்தும். உடலும் மனமும் இணைந்து செயல்பட உதவும். சம நிலையில் இருக்கும் மனமும் ஆற்றலும் சுலபமாகவும் முழுமையாகவும் தியானம் செய்ய உதவும்.

மூச்சுப்பயிற்சி செய்யும் வழிமுறைகள்

1. விரிப்பு, பாய் அல்லது தடிப்பான துணியை விரித்து தரையில் வசதியாக அமரவும்.

2. தரையில் அமர்வது கடினமாக இருந்தால் நாற்காலி அல்லது சோஃபாவில் அமரவும்.

3. முதுகு தண்டை நேராக வைத்துக் கொள்ளவும்.

4. இறுக்கம் இல்லாமல், அமைதியாகவும் தளர்வாகவும் அமரவும்.

5. பயிற்சியை வற்புறுத்தி செய்யக் கூடாது.

பயிற்சி முறைகள் 
1. ஆழமாக மூச்சை இழுத்து, மெதுவாகவும் மென்மையாகவும் வெளியில் விடவும். 3 முறைகள்

2. மூக்கின் வலது துவாரத்தை விரலால் அடைத்துக் கொண்டு இடது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின்பு வெளியில் விடவும். 3 முறைகள்

3. மூக்கின் இடது துவாரத்தை விரலால் அடைத்துக் கொண்டு வலது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின்பு வெளியில் விடவும். 3 முறைகள்

4. மூக்கின் வலது துவாரத்தை அடைத்துக் கொண்டு இடது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின்பு இடது துவாரத்தை அடைத்துக் கொண்டு. வலது துவாரம் வழியாக மூச்சை விடவும். 3 முறைகள்.

5. மூக்கின் இடது துவாரத்தை அடைத்துக் கொண்டு வலது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின்பு வலது துவாரத்தை அடைத்துக் கொண்டு. இடது துவாரம் வழியாக மூச்சை விடவும். 3 முறைகள்.

6. மூச்சு ஆழமாக உள்ளே இழுத்து. இயன்ற வரை மூச்சை உள்ளே அடக்கவும். பின்பு மெதுவாக வெளியில் விடவும். 3 முறைகள்

7. இப்போது தியானத்தை தொடங்கவும்.


தியானம் செய்யும் வழிமுறைகள்

1. விரிப்பு, பாய் அல்லது தடிப்பான துணியை விரித்து தரையில் வசதியாக அமரவும்.

2. தரையில் அமர்வது கடினமாக இருந்தால் நாற்காலி அல்லது சோஃபாவில் அமரவும்.

3. முதுகு தண்டை நேராக வைத்துக் கொள்ளவும்.

4. இறுக்கம் இல்லாமல், அமைதியாகவும் தளர்வாகவும் அமரவும்.

5. பயிற்சியை வற்புறுத்தி செய்யக் கூடாது.

6. மூச்சுப்பயிற்சி செய்யவும்.

7. மூச்சு பயிற்சி முடிந்ததும் தளர்வாகவும், அமைதியாகவும் அமரவும்.

8. இரு கைகளையும் தொடைகளின் மீது உள்ளங்கைகள் மேலே பார்ப்பதை போன்று வைத்துக் கொள்ளவும். அல்லது உங்களுக்கு பிடித்த முத்திரையில் வைத்துக் கொள்ளவும்.

9. கண்களை மூடிக் கொள்ளவும்.

10. உங்களின் சுவாசத்தை மட்டும் கவனிக்கவும்.

11. மூச்சுக் காற்று எவ்வாறு உடலுக்குள்ளே செல்கிறது? உடலில் எங்கெல்லாம் செல்கிறது? அது மீண்டும் எவ்வாறு வெளியேறுகிறது? என்பதை மட்டும் எண்ணத்தால் கவனிக்கவும்.

12. நல்லதோ கெட்டதோ எந்த எண்ணம் தோன்றினாலும் அதை கட்டுப்படுத்தக் கூடாது.

13. ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்து உங்கள் உடலிலும், மனதிலும் நடப்பனவற்றை கவனிக்கவும்.

குறிப்புகள்

1. தொடக்கத்தில் 5 நிமிடங்கள் தியானத்தில் இருந்தால் போதுமானது.

2. உங்களுக்கு தியானம் பயிற்சியான பிறகு, 5-5 நிமிடங்களாக பயிற்சி நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

3. தொடக்க காலத்தில் தியானம் செய்ய இசையை பயன்படுத்தலாம். பயிற்சியான பிறகு இசையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

4. எவ்வளவு நேரம் அமைதியாக அமர்ந்து மூச்சுக் காற்றை கவனிக்கிறார்களோ அவ்வளவு நன்மைகளை அடைவீர்கள்.


தியானத்தின் போது கடைபிடிக்க வேண்டியவை

தியானத்திற்கென்று எந்த கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் கிடையாது. ஆனால் தியானம் எளிதாகவும் இயல்பாகவும் நடக்க வேண்டும் என்பதற்காக சில வழிகாட்டுதல்கள்.

1. காலியான வயிற்றில் தியானம் செய்ய வேண்டும்.
2. தரையில் ஆசனமிட்டு அதன் மீது அமர வேண்டும்.
3. மூச்சுப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
4. வசதியாகவும் தளர்வாகவும் அமர வேண்டும்.
5. அமைதியாக அமர வேண்டும்.
6. முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
7. மூச்சை கவனிக்க வேண்டும்.
8. சிந்தனையை கவனிக்க வேண்டும்.
9. பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும்.

தியானத்தின் போது செய்யக் கூடாதவை

1. ஆபரணங்களை அணியக் கூடாது.
2. வெறும் தரையில் அமரக் கூடாது.
3. சாயக்கூடாது.
4. படுக்கக் கூடாது.
5. தியானத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட கூடாது.
6. வற்புறுத்தக் கூடாது.
7. பயம், கவலை, துக்கம், குழப்பம் கூடாது.
8. வற்புறுத்தி மூச்சு விட கூடாது.
9. சிந்தனை செய்யக் கூடாது.
10. கற்பனை செய்யக் கூடாது.
11. எண்ணங்களை கட்டுப்படுத்த கூடாது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே வழிகாட்டுதல்கள் தான். உண்மையில் தியானம் என்பது சுயமாக நடக்கும் ஒரு பரிமாற்றம் அதில் நாம் செய்வதற்கு ஒன்றுமே கிடையாது. உடலின் உள்ளுறுப்புகளை போன்று தியானமும் சுயமாக இயங்கும் இயல்புடையது.

ஆற்றலை சரியான இலக்கை நோக்கி அனுப்ப

பிரபஞ்ச ஆற்றலை முறையாகவும் இலகுவாகவும் தன் இலக்கை நோக்கி அனுப்ப. ரெய்கியை அனுப்புபவரும் அதை பெறுபவரும் அமைதியாகவும், சாந்தமாகவும், மன ஓர்மையுடனும் இருத்தல் வேண்டும்.

ஆற்றல் பற்றிய கட்டுரையை வாசிக்கும் போது உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த உலகில் அனைத்துமே ஆற்றல் தான். மனிதர்கள் முதல் தாவரங்கள் வரையில் அனைத்துமே ஆற்றலின் மறு உருவங்கள்தான். அதனால் அனைத்து உயிர்களுக்கும், இயற்கையின் படைப்புகளுக்கும் ஆற்றல் தேவைப்படும்.

அதனால் ரெய்கியை அனுப்புபவரும் அதை பெறுபவரும் ஒரே மன நிலையில் இல்லாவிட்டால், அனுப்பிய ஆற்றல் போய் சேருவதற்குள் பாதி வழியில் கரைந்துவிட அல்லது முழுமையாக சென்று அடையாமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. மற்ற உயிர்களும் பொருட்களும் அந்த ஆற்றல்களை ஈர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன.

ஆற்றலின் வீரியத்தையும் அதிகரிக்கும் பயிற்சிகள்

ரெய்கி ஆற்றல் பயிற்சிகள் 
உடலில் ஆற்றலின் உற்பத்தியை அதிகரிக்கவும், தக்கவைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சில பயிற்சிகள்.

1. ஆற்றலை அடிக்கடி கைகளில் குவித்து, ஆற்றல் பந்தை (energy ball) உருவாக்க வேண்டும்.

2. உள்ளங்கையில் உருவாகும் ஆற்றலை எப்போதும் கூர்மையாக கவனிக்க வேண்டும்.

3. உடலில் உருவாகும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் ஆற்றலை எப்போதும் கூர்மையாக உணரவும் கவனிக்கவும் வேண்டும்.

4. இயற்கையிலும் நம்மை சுற்றியும் உருவாகும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் ஆற்றல்களை எப்போதும் கூர்மையாக உணரவும் கவனிக்கவும் வேண்டும்.

5. எப்போதுமே இயற்கையுடன் இணைந்திருக்க வேண்டும்.


ரெய்கி ஆற்றலை அனுப்பும் பயிற்சிகள்

ரெய்கி ஆற்றலை ஒரு மனிதருக்கோ, விலங்குக்கோ, தாவரத்துக்கோ, இடத்துக்கோ எளிதாக அனுப்பலாம். மன அமைதியுடனும், மன ஓர்மையுடனும், உங்கள் கரங்களை அந்த மனிதர், விலங்கு, பொருள் அல்லது இடத்தின் மீது காட்டி மனதுக்குள் ரெய்கி ஆற்றல் அவர் மீது பரவட்டும் என்று நினைத்தாலே போதும். நீங்கள் நினைத்த மாத்திரமே ரெய்கி ஆற்றல் உங்கள் உள்ளங்கைகளின் மூலமாக பரவ தொடங்கிவிடும். அதை நீங்கள் உணரவும் முடியும்.

ஒரு குறிப்பிட்ட நோயோ, தொந்தரவோ, நோக்கமோ, தேவையோ இருந்தால். அந்த நோக்கத்தை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும், ரெய்கி ஆற்றலை அனுப்பலாம். உங்கள் உள்ளங்கைகளை காட்டி கொண்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கும். அவ்வளவு எளிமையானது ரெய்கி. இரண்டு கரங்களையும் பயன்படுத்தலாம் அல்லது வலது கரத்தை மட்டுமே பயன்படுத்தலாம். (Reiki symbols) ரெய்கி முத்திரைகளையும் பயன்படுத்தலாம்.

1. அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி ரெய்கி ஆற்றலை பயன்படுத்த வேண்டும்.

2. நம் வீட்டை சுற்றி இருக்கும் செடி, கோடி, மற்றும் மரங்களுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும்.

3. நோய்வாய்ப் பட்டிருக்கும் வீட்டு அல்லது சாலையோர விலங்குகளுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும். 

4. கர்ப்பம் தரித்திருக்கும் விலங்குகளுடன் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

5. விபத்துகளில் பாதிப்படைந்த அல்லது ஊனமுற்ற விலங்குகளுடன் உங்கள் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

6. ஆபத்தில், அவசரத்தில், அல்லது ஆம்புலன்சில் இருக்கும் மனிதர்களுடன் உங்கள் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

7. முதுமையுற்ற, ஏழ்மையில் இருக்கும் அல்லது இயலாமையில் இருக்கும் மனிதர்களுடன் உங்கள் ஆற்றல்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

8. கர்ப்பம் தரித்த தாய்மார்களுடன் ரெய்கி ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

9. வீட்டுக்காக நீங்கள் வாங்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மற்ற உணவு பண்டங்களுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்புங்கள்.

காய்கறிகளோ, பழங்களோ, தானியங்களோ வாங்கினால். வீடு திரும்பியதும் அவற்றின் மீது ரெய்கி ஆற்றலை அனுப்பினால் அவை அதிக நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும். இதை முயற்சி செய்துபாருங்கள்.

 (கைகளில் ஆற்றல் பந்தை உருவாக்கும் உதாரணம்) 
 
(கைகளில் ஆற்றலை உணர்தல் உதாரணங்கள்) 

நோய்களை குணப்படுத்தும் உண்மையான மருத்துவர்

உண்மையான மருத்துவர் 
நோயாளிகளின் நோய்களை குணப்படுத்துவது தாங்கள் அல்ல என்பதை, ரெய்கி சிகிச்சை அளிக்கும் அனைவரும் உணர வேண்டும். சிகிச்சை பெறுபவரின் உடலில் கலக்கும் பிரபஞ்ச ஆற்றல் தான் அவரின் நோய்களையும், வேதனைகளையும், துன்பங்களையும் நீக்க துணைப் புரிகிறது என்பதை உணர வேண்டும்.

ரெய்கி சிகிச்சை அளிப்பவர் அல்லது மற்ற இயற்கையை சார்ந்த சிகிச்சையை அளிப்பவர் நான்தான் சிகிச்சை அளிக்கிறேன், நான்தான் குணப்படுத்துகிறேன் என்ற எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் தான் மக்களுக்கு நோய்களை குணப்படுத்துகிறேன், துன்பங்களில் உதவுகிறேன் என்பன போன்ற எண்ணங்கள் உருவாக தொடங்கிவிட்டால் அவருக்குள் ஆணவமும் கர்வமும் உண்டாகி விட்டது என்று அர்த்தம். 

நடப்பான அனைத்தும் அவன் செயல், அவன் அருளாலே, அவன் உதவியைக் கொண்டு நான் என் முயற்சியை செய்கிறேன். முடிவை இறைவன் கையில் ஒப்படைக்கிறேன் என்று நல்லதோ கெட்டதோ அனைத்தையும் இறைவன் மீது சாற்றி விட வேண்டும். நான் தான் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்தால், முயற்சிகள் வெற்றி பெறாமல் போகலாம் மேலும் மற்றவர்களின் கர்மாக்களையும் நாம் சுமக்க நேரிடலாம். 

நோய்களை குணப்படுத்தும் 5 வழிமுறைகள் 
ஒரு மனிதர் நோய்வாய்ப் படும்போது அதை முழுமையாக குணப்படுத்த அவர் ஐந்து அடிப்படை ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இந்த ஐந்து அடிப்படை ஒழுக்கங்களை கடைபிடிக்கும் போது அவர் விரைவாக குணமடைவார். இந்த ஒழுக்கங்களை கடை பிடிக்கவில்லை என்றால் என்னதான் உயரிய மருத்துவம் செய்தாலும், நவீன மருத்துவம் செய்தாலும், அவரின் உடலும் மனமும் குணமடைய தாமதமாகும். 

1. உணவை உட்கொள்ளும் முறைகள் 
உணவு உண்ணும் பழக்கத்தை முதலில் முறைப்படுத்த வேண்டும். பசித்தால் மட்டுமே பசியின் அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும். அந்த உணவு உடலுக்கு ஒத்துக்கொள்ள கூடியதாகவும் எளிதில் ஜீரணிக்க கூடியதாகவும் இருத்தல் வேண்டும். 

2. தண்ணீர் அருந்தும் முறை 
தேவையில்லாமல் தாகம் இல்லாமல் தண்ணீர் அருந்த கூடாது. தாகம் உண்டானால் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். சீனி, வர்ணங்கள், வாசனைகள், இரசாயனங்கள், போன்றவை கலக்கப்பட்ட பானங்களை அருந்த கூடாது. சுடவைத்த அல்லது அதிகமாக வடி கட்டப்பட்ட தண்ணீரை அருந்தக் கூடாது. 

3. உடலுக்கு போதிய ஓய்வு வேண்டும் 
உடலில் சோர்வு உண்டானால் ஓய்வெடுக்க வேண்டும். அசதியாக இருக்கும் போது வற்புறுத்தி வேலைசெய்யக் கூடாது.  

4. இரவு உறக்கம் அவசியம் 
இரவு 9 மணிக்கெல்லாம் உறக்கம் வரவில்லை என்றாலும் படுக்கைக்கு சென்றுவிட வேண்டும்.  

5. மன அமைதி அவசியம் 
மனதை கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், எரிச்சல், கர்வம் போன்ற தீய எண்ணங்கள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். 

இந்த 5 விசயங்களை சரி செய்யும் போதே உடல் பாதி குணமாகிவிடும். மீதியை ரெய்கி சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம். 

நேர்மறை ஆற்றல்களை பெற


ஒரு மனிதர் நேர்மறை ஆற்றல்களை உணவின் மூலமாகவும். வாழ்க்கை முறைகளின் மூலமாகவும், ஆன்மீக பயிற்சிகளின் மூலமாகவும், மற்றும் இயற்கையிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். ஆற்றல் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது என்று முன்னரே பார்த்தோம். அந்த ஆற்றல்களை நாம் சேகரித்துக் கொள்ள சில வழிமுறைகளை பார்ப்போம்.

உணவின் மூலமாக ஆற்றல்களை பெற
எளிதாக உடலால் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொண்டால் உடல் சுயமாகவே நல்ல ஆற்றல்களை உற்பத்தி செய்துக் கொள்ளும். மேலும் நாம் உட்கொள்ளும் உணவானது மனதுக்கும், கண்களுக்கும், நாவுக்கும் விருப்பமானதாக இருக்க வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வதன் மூலமாக பிரபஞ்ச ஆற்றலை அதிகமாக உடலில் சேகரிக்கலாம். காய்கறிகளின் ஆற்றல் அவற்றை சமைக்கும் போது குறைந்து போகலாம் அல்லது சிதைந்து போகலாம். ஆனால் பழங்களில் இருக்கும் ஆற்றல்கள் மட்டும் மனிதர்களுக்கு முழுமையாக கிடைக்கும், காரணம் பழங்களை சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம். பழங்களை அதிகமாக சாப்பிடுவதன் மூலமாக உடலில் அதிகபடியான ஆற்றல்களை சேகரிப்பது மட்டுமின்றி நோய்களையும் குணப்படுத்தலாம்.

இயற்கையிலிருந்து ஆற்றல்களை பெற
இயற்கையான தூய காற்றை சுவாசிக்கும் போது அவற்றில் கலந்திருக்கும் பிரபஞ்ச ஆற்றல்களை உடல் கிரகித்துக் கொள்ளும். காடு, மலை, குகை, புல்வெளி, போன்ற இடங்களுக்கு சென்று வெறும் காலில் செருப்பில்லாமல் நடக்கும்போது உடல் அந்த நிலத்தில் இருந்தும், காற்றில் இருந்தும், வெளியில் இருந்தும் பிரபஞ்ச ஆற்றல்களை கிரகித்துக் கொள்ளும். கடல், ஆறு, குளம், குட்டை, போன்ற இயற்கையான நீர்நிலைகளில் குளிக்கும் போது உடல் அவற்றில் இருக்கும் பிரபஞ்ச ஆற்றல்களை கிரகித்துக் கொள்ளும். பஞ்சபூதங்களில் காற்று, நீர், ஆகாயம், நெருப்பு, நிலம் போன்றவற்றில் உருவாகும் ஆற்றல்களையும் சுயமாக கிரகித்துக் கொள்ளும் தன்மை நம் உடலுக்கு உள்ளது. 

பயிற்சிகளின் மூலமாக ஆற்றல்களை பெற
மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம், தைச்சி, நோன்பு, வழிபாடுகள், தொழுகை, வணக்கங்கள் போன்றவற்றின் மூலமாகவும் உடல் பிரபஞ்ச ஆற்றல்களை கிரகித்தும் அவற்றை சீர் செய்தும் கொள்கிறது. 

தீய ஆற்றல்கள் உடலில் சேருவதற்கு காரணங்கள்

 t
மனித உடலில் தீய ஆற்றல்கள் சேருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தவறான உணவு முறைகள், தவறான பழக்க வழக்கங்கள், தவறான வாழ்க்கை முறைகள், தீய மனிதர்களின் எண்ணங்கள், தீய மனிதர்களின் செயல்கள், மற்றும் தவறான இடங்களில் இருக்கும் தீய அலைகள் கூட மனிதர்களின் உடலில் தீய ஆற்றல்கள் சேருவதற்கு காரணமாக இருக்கின்றன. இயற்கையில் ஏற்படும் மாற்றங்களும் சீற்றங்களும் கூட மனிதர்களிடம் சில மாற்றங்களை உருவாக்கலாம்.

உணவு முறைகள் 
இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு முறைகளை பின்பற்றுவதனால் மனிதர்கள் எளிதில் நோய்வாய்ப்படுகிறார்கள். இன்றைய மனிதர்கள் உடலுக்கு ஒவ்வாத உணவுகளையும், இரசாயனங்கள் கலந்த உணவுகளையும் அதிகமாக உட்கொள்கிறார்கள். இதனால் உடலில் சத்து குறைபாடுகளும், சோர்வும், நோய்களும், உடல் உறுப்பில் குறைபாடுகளும் அதிகமாக காண முடிகிறது. 

தவறான வாழ்க்கை முறைகள் 
மது அருந்துதல், புகை பிடித்தல், சூதாடுதல், விபச்சாரம் செய்தல், போன்ற செயல்களும். ஆணவம், திமிர், கர்வம், கோபம், பயம், எரிச்சல், பொறாமை போன்ற குணக் கேடுகளும் மனிதர்களின் உடலில் தீய சக்திகளையும் நோய்களையும் உருவாக்குகின்றன.

சுற்றி இருக்கும் மனிதர்கள் 
குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் தொழில் செய்பவர்கள், மற்றும் நம்மை சுற்றி வாழும் மனிதர்களும் நமது ஆற்றல் பாழடைய காரணமாக இருக்க முடியும். நம்மை சுற்றி வாழும் மனிதர்களால் நமது ஆற்றல், ஆரா, அதிர்வு, மனம், மற்றும் சிந்தனையும் மாறுபாடு அடையலாம் அதனால் வாழ்க்கையில் தொந்தரவுகளும் நோய்களும் உருவாகலாம்.

இடங்கள் 
விபத்து நடந்த இடம், மரணம் நடந்த வீடு, மருத்துவமனை, பிணவரை, மயானம், மதுக்கடை, விபச்சார விடுதி, போன்ற இடங்களுக்கு செல்லும்போது நமது சிந்தனை, எண்ணம், உணர்வு, உணர்ச்சி, ஆற்றல் போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்படலாம். வாழ்க்கையில் தொந்தரவுகளும் நோய்களும் உண்டாகலாம். இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது அங்கிருக்கும் தீய ஆற்றல்களும் நமக்குள் பதிவாகலாம், பரவலாம்.

இயற்கையின் மாற்றங்கள் 
சக்தி நிலையில் அனைத்து படைப்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டிருப்பதனால், இயற்கையில் உண்டாகும் ஒவ்வொரு மாற்றங்களும் மனிதர்களிடம் சில மாறுதல்களை உண்டாக்கலாம். நிலத்தில், மலையில், காற்றில், கடலில், மழையில், வானிலையில் என பூமியில் உண்டாகும் ஒவ்வொரு மாற்றமும் மனிதர்களிடமும், விலங்குகளிடமும், தாவரங்களிடமும், மற்ற உயிரினங்களிடமும் சில மாறுதல்களை உண்டாக்கலாம்.

பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் உருவாகும் அசைவும், இந்த பூமியில் ஏதோ ஒரு மூலையில் உருவாகும் மாற்றமும் கூட மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை உண்டாக்கலாம். நிலவிலும், சூரியனிலும், மற்ற கிரகங்களிலும் உருவாகும் மாற்றங்களும் மனிதர்களின் மனநிலையையும் சிந்தனையையும் மாற்றலாம் அதனால் வாழ்க்கையில் எதிர்பாராத சில மாறுதல்கள் உண்டாகலாம்.

ரெய்கி சிகிச்சை


ரெய்கி சிகிச்சை என்பது வெறும் ஆற்றலை மட்டுமே துணையாக கொண்டு செய்யப்படும் சிகிச்சையாகும். மனிதனின் முழு உடலும் மனமும் ஆற்றலில் இருந்தே உருவானவையே. மனிதனுக்கு ஆற்றல் குறையும் போதும், ஆற்றல் சீர்கேடு அடையும் போதும் மட்டுமே நோய்களும் மனநல பாதிப்புகளும் உருவாகின்றன.

ஒரு மனிதனின் உடலுக்குள் இயற்கையின் உதவியைக் கொண்டு, ரெய்கி ஆற்றலை செலுத்தும் போது. அவர் உடலில் ஏற்பட்ட குறைபாடுகள் நிவர்த்தியாகி, ஆரோக்கியமும் மன நலமும் சீராகும்.

ரெய்கியை கொண்டு சிகிச்சை அளிக்கும் வழிமுறைகள் 

1. மனதினாலும் எண்ணத்தாலும் சிகிச்சை அளிப்பது.

2. வார்த்தைகளால் சிகிச்சை அளிப்பது.

3. பார்வையினால் சிகிச்சை அளிப்பது.

4. தொடாமல் சிகிச்சை அளிப்பது.

5. கைகளால் தொட்டு சிகிச்சை அளிப்பது.

6. நீர், உப்பு, மண், உணவு பொருட்கள் மற்றும் உலோகங்களைக் கொண்டு சிகிச்சை அளிப்பது.


ரெய்கி சிகிச்சை


ரெய்கியின் மூலமாக நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள்

1. ரெய்கி சிகிச்சையை பற்றி சிறிய விளக்கம் கொடுக்கவும்.

2. நோயாளியிடம் பேசி நோயின் மூல காரணத்தை கண்டறியவும்.

3. நோயாளியின் தொந்தரவுகள் பேய், பிசாசு, செய்வினை, மந்திரங்கள் 
போன்றவற்றால் உண்டாகியிருந்தால் level 1 தீட்சை பெற்றவர்கள் சிகிச்சை அளிக்க கூடாது.

4. நோயாளியை தொட வேண்டிய அவசியம் உண்டானால் முன் அனுமதி பெற்று பின்னர் தொடவும்.

5. சிகிச்சையை தொடங்கும் முன் மனதாலே அவருக்கு பூரணமான ஆரோக்கியம் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவும்.

6. தொட்டோ, தொடாமலோ, முத்திரைகள் மூலமாகவோ அவருக்கு ரெய்கி ஆற்றலை அனுப்பவும். 

7. நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும்.

8. மேலே உள்ள ஐந்து வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்துங்கள்.

9. நோயாளியின் இரகசியங்களை பாதுகாத்திடுங்கள்.

10. சிகிச்சை அளிக்கும் முன்பாக இறைவன், இயற்கை மற்றும் ரெய்கியிடம் அனுமதியும் உதவியும் கோருங்கள்.

11. சிகிச்சைக்கு பிறகும் இறைவனுக்கும், இயற்கைக்கும், ரெய்கிக்கும் நன்றி கூறுங்கள்.

ஆரோக்கியத்தை மீட்டு தக்க வைத்துக் கொள்ள

ஆரோக்கியம் என்பது இன்றியமையாத ஒன்று. இந்த உலகில் நீங்கள் அடைய நினைப்பது எதுவாக இருந்தாலும், அதை அடைய உங்களுக்கு அடிப்படை தேவையாக இருப்பது உடலின் ஆரோக்கியம். ஆரோக்கியம் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாக இருந்தாலும் அதை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது என்று பெரும்பாலான மனிதர்களுக்கு தெரிவதில்லை. ஆரோக்கியம் மனிதனின் உள்ளேதான் இருக்கின்றது என்பதை உணராமல், மருந்து, மாத்திரை, வைத்தியம் என்று பலர் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கில மருத்துவம் செய்பவர்கள், அந்த மருத்துவம் செய்து மீண்டும் முழுமையான ஆரோக்கியம் பெற்றதாக நான் யாரையும் இதுவரையில் பார்த்ததில்லை. அலோபதி (மேற்கத்திய) மருத்துவத்தில் ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஒன்று மரணம் வரையில் நோயாளியாகவே வாழ்ந்து, தினமும் மருந்து மாத்திரைகளை உட்கொள்வது. இரண்டு நோய் உண்டான உறுப்புகளை நீக்கிவிட்டு ஊனமாக தொந்தரவுகளுடன் வாழ்வது. அல்லது மருந்துகளின் மற்றும் இரசாயனங்களின் பக்கவிளைவுகளால் நோய் முற்றி அல்லது புதிய நோய்கள் உருவாகி மரணமடைவது. நோய்களை எவ்வாறு குணப்படுத்துவது என்று ஆங்கில மருத்துவத்துக்கு தெரியாது. காரணம் அவர்கள் நோய்களின் உண்மையான மூல காரணங்களை கண்டறிவதில்லை. மாறாக அவர்கள் நோய்களின் அறிகுறிகளுக்கு மட்டுமே மருத்துவம் செய்பவர்கள்.

ஆங்கில மருத்துவம் மட்டுமின்றி பெரும்பாலான மருத்துவங்கள் நோயாளிகளின் நோய்களை தீர்ப்பதில் தோல்வி கண்டுள்ளன. இதற்கு காரணம் அவர்களுக்கு மனிதர்களை பற்றிய முழுமையான புரிதல்கள் கிடையாது. மனிதன் என்பவன் உடல், மனம், ஆற்றல் மற்றும் உயிரின் கலவை என்பதை உணராமல், உடலுக்கு மட்டுமே மருத்துவம் செய்து எந்தப் பயனுமில்லை. நோய்கள் மனதிலும், ஆற்றலிலும், கர்மாவினாலும் உருவாகலாம்.

உடலில் உருவாகும் நோய்களுக்கு உடலிலும். மனதில் உருவாகும் நோய்களுக்கு மனதிலும். ஆற்றலினால் உருவாகும் நோய்களுக்கு ஆற்றலிலும் மருத்துவம் செய்ய வேண்டும். கர்மாவினால் உண்டாகும் நோய்களை மனதார ஏற்றுக்கொண்டு அவற்றை அனுபவிப்பதே, அவற்றை குணப்படுத்தும் வழியாகும். கர்ம வினைகளினால் உண்டாகும் நோய்களை குணப்படுத்த முயற்சி செய்தாலும் கர்மா கணக்கு தீரும் வரையில் அவற்றை குணப்படுத்த முடியாது.

ஒரு நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் அந்த நோய் ஏன்? எங்கே? எவ்வாறு? உருவானது என்பதை கண்டறிய வேண்டும். நோயின் மூல வேரை கண்டறியாமல் ஒரு சிறு புண்ணைக் கூட யாராலும் குணப்படுத்த முடியாது. இதற்கு உதாரணம் ஆங்கில மருத்துவர்கள், சர்க்கரை நோயாளிகளின் கால்களில் புண்களை குணப்படுத்த தெரியாமல் காலை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண புண்ணை ஆற்றத் தெரியாத மருத்துவத்தை நம்பி பலர் தங்களின் உயிரையும் ஒப்படைக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக: ஒருவருக்கு வயிறு வலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த வயிற்று வலியை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் அந்த வயிற்று வலி எங்கே? ஏன்? எதனால்? உருவானது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அதை விட்டு விட்டு வயிறு வலித்தால் இதை சாப்பிட வேண்டும் அல்லது அந்த மருந்தை சாப்பிட வேண்டும் என்று தொடங்கினால். அந்த வலி தற்காலிகமாக குறையலாம். ஆனால் அந்த வலி மீண்டும் வர கூடும், உடலின் மற்ற பகுதிகளுக்கும் வலி மாறக்கூடும், புதிய தொந்தரவுகள் வேறு வடிவிலும் உருவாகலாம் அல்லது சாதாரண வலியாக இருந்தது கொடிய நோயாகவும் மாறலாம்.

உடலில் வலிகள் உண்டாக பல காரணங்கள் இருக்கலாம். வலிக்கும் பகுதியில் சக்தி குறைவாக இருக்கலாம். உடலில் கழிவின் தேக்கம் அதிகமாக இருக்கலாம். அந்த வலி ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். மன அழுத்தமாக இருக்கலாம். அல்லது மனதில் உண்டான கவலை, பயம், துக்கம் போன்றவை வலிகள் உண்டாக காரணமாக இருக்கலாம்.

உடலில் தொந்தரவுகள் உண்டானால் அந்த தொந்தரவின் மூலத்தை கண்டறியாமல் எவ்வாறு மருத்துவர்கள் நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்?. ஒரு இயந்திரம், கணினி, அல்லது ஆய்வு கூடத்தின் அறிக்கைகளைக் கொண்டு அனைத்தையும் அறிந்துக் கொள்ள முடியுமா?. நிச்சயமாக யாராலும் முடியாது. இதனால் தான் இயந்திரங்களின் உதவியினால் கண்டறியப்படும் எந்த நோயும் குணமாவதில்லை. ஒரு இயந்திரம் (மிஷின்) ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வற்றை மீண்டும் கூறுமே ஒழிய அதற்கு எந்த அறிவும் கிடையாது. இயந்திரம் சொல்வது சரியாகத்தான் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

மனதில் தோன்றும் நோய்களையும், சக்தி தட்டுப்பாட்டால் உண்டாகும் நோய்களையும் கண்டறியக் கூடிய இயந்திரம் இதுவரையில் கிடையாது. ஒரு நோயாளியுடன் அமர்ந்து அவருடன் நேரம் செலவழித்து பொறுமையாகவும் விரிவாகவும் பேசினால் ஒழிய உண்மையான நோயின் மூலக் காரணத்தை கண்டறிய முடியாது.

உடலில் வலி என்று ஆங்கில மருத்துவரிடம் சென்றால் அவர் வலி தெரியாமல் இருக்க மாத்திரைகளை பரிந்துரைக்கிறார். அந்த மாத்திரைகள் வலியை குணப்படுத்துமா? அல்லது வலியை மறைக்க மட்டும் உதவுமா? நிச்சயமாக அந்த மாத்திரைகள் வலிகளை குணப்படுத்துவது கிடையாது மாறாக அந்த மாத்திரைகள் நோயாளி தன் வலியை உணராமல் இருக்க உணர்வு மண்டலங்களை கட்டுப்படுத்துகிறது. வலியை உருவாகிய நோயும் பாதிப்படைந்த உறுப்பும் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. பாதிப்புகளும் நோய்களும் பெரிதாகும். இதனால் தான் ஆங்கில மருத்துவத்தில் பெரும்பாலான நோயாளிகள் நோய்கள் குணமாகாமல் மற்றும் நோய்கள் மோசமாகி மரணிக்கிறார்கள்.


நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள்

ஒருவர் நோய் வாய்ப்பட்டால் வைத்தியர் (மருத்துவர்) அவரை பரிசோதித்து, அவரின் உபாதைகளை அறிந்து, உடல் காட்டும் அறிகுறிகளைக் கொண்டு நோயாளியின் உண்மையான நோயை கண்டறிய வேண்டும். அந்த நோய் உடல் சம்பந்தப்பட்டதா? மனம் சம்பந்தப்பட்டதா? என்பதை கண்டறிய வேண்டும். நோயின் மூலத்தை அறிந்த பின்பு தான் மருத்துவம் செய்ய வேண்டும்.

மன நிம்மதி 
உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மன நிம்மதியும் மன அமைதியும் மிகவும் அவசியமானது. மனிதர்களின் பெரும்பாலான நோய்கள் மனதில் உண்டாகும் மாறுபாட்டாலேயே உருவாகின்றன.

உதாரணம் 1: ஒரு குழந்தையை மிரட்டினால் அல்லது பயமுறுத்தினால் அந்த குழந்தை பயத்தில் சிறுநீர் கழித்துவிடுகிறது. அந்த குழந்தையின் உடலில் என்ன நடந்தது? ஏன் அந்த குழந்தை சிறுநீர் கழித்தது?

உண்மையில் என்ன நடந்தது என்றால். அந்த குழந்தையின் மனதில் உண்டான அதிகபடியான பயம் மனதின் சமநிலையை கெடுத்தது. அந்த பாதிப்பு சிறுநீர் பையை பாதித்து சிறுநீர் சுயமாக வெளியேற தொடங்கியது. மனதில் உண்டாகும் பயமானது சிறுநீரகங்கள், சிறுநீர் பை, கர்ப்பப்பை, ஆண்மை மற்றும் உடலின் பல உறுப்புகளை பாதிக்கக் கூடியது. அதிகபடியான பய உணர்வு உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட உறுப்புகளில் சில தொந்தரவுகள் உருவாகக் கூடும். அச்ச உணர்வுகளை நீக்கி விட்டால் அந்த பாதிப்புகள் நீங்கிவிடும்.

உதாரணம் 2: ஒரு வீட்டில் துக்ககரமான நிகழ்வுகள் நடக்கும் போது அந்த வீட்டை சார்ந்தவர்களுக்கு பசி உண்டாவதில்லை. மரணம் நடந்த வீட்டில் இதை கண்கூடாக அனைவரும் காணலாம். நாள் முழுதும் சாப்பிடாவிட்டாலும் அதன் குடும்ப உறுப்பினர்களுக்கு பசி என்ற உணர்வு உண்டாவதில்லை. கவலையுடன் இருக்கும் மனிதர்கள் கூட எனக்கு பசியில்லை உணவு வேண்டாம் என்பார்கள்.

இந்த சூழ்நிலையில் என்ன நடக்கிறது என்றால் துக்கம், சோகம், கவலை போன்ற உணர்வுகள் வயிற்றை பாதிக்கின்றன. வயிறு பாதிப்புக்கு உள்ளானதால் அது உணவை சீரணிக்கும் தன்மையில் இருக்காது. அதனால் அவர்களுக்கு பசி உண்டாகாது.

மனதின் அமைதியும் சம தன்மையும் உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது. அதனால் யாருக்காவது உடல் நலம் பாதிப்படைந்தால் உடலை மட்டும் சோதிக்காமல் நோயாளியுடன் உரையாடி அவருக்கு மனம் தொடர்பான பாதிப்புகள் ஏதாவது இருக்கின்றனவா என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.
ஆராக்களின் உதாரணம் (ஆரோக்கியமான ஆராக்களின் உதாரணம்) 

(ஆரோக்கியமற்ற ஆராக்களின் உதாரணம்) 

ஆராவையும் ஆற்றலையும் சீரழிக்க கூடிய விசயங்கள்


1. உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகள் மற்றும் பானங்கள்.
2. அதிகபடியான அசதி, சோர்வு, தூக்கமின்மை.
3. வாழ்க்கையில் விரக்தி அல்லது மன அழுத்தம்.
4. பயம், கவலை, சோகம், திமிர், கர்வம் போன்ற உணர்வுகள்.
5. உடலின் ஆரோக்கியம் குறைபாடுகள்.
6. தவறான புத்தகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள்.
7. தவறான மனிதர்களின் உறவுகள்.
8. தூய்மையற்ற இடங்கள்.
9. தவறான பழக்க வழக்கங்கள்.


ஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்

மனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழகும் போதும், தவறான இடங்களுக்கு செல்லும் போதும்; மனிதர்களின் ஆராவில் துளைகள் விழலாம் உடலின் ஆற்றல்களும் குறையலாம். உடலின் ஆற்றல் குறைவாக இருப்பதினால் அந்த துளைகளின் வழியாக தீய ஆற்றல்களும், தீய எண்ணங்களும், துர் ஆன்மாக்களும் அந்த மனிதனின் உடலுக்குள் நுழைய கூடும். இதன் காரணமாக பல துன்பங்களும், வேதனைகளும், நோய்களும் சம்பந்தப்பட்டவருக்கு அண்டக்கூடும்.

மனிதர்களின் ஒவ்வொரு தவறான பழக்கமும், தவறான வாழ்க்கை முறையும் அவர்களின் ஆராவையும் ஆற்றலையும் சீரழிக்க கூடும். அதைப்போன்றே மனிதர்கள் கடைபிடிக்கும் ஒவ்வொரு நல்ல பழக்க வழக்கமும் அவர்களின் ஆராவை சீர்படுத்தும்.

ஆரோக்கியமற்ற ஆராவையும் குறைந்து போன ஆற்றலையும் சில பழக்க வழக்கங்களை சரி செய்வதன் மூலமாக குணப்படுத்தலாம். 

1. உடலுக்கு ஒத்துப்போகும், எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை உண்பது.
2. அதிகமான பழங்களை உட்கொள்வது.
3. தூய்மையான நீரை பருகுவது.
4. போதிய அளவு ஓய்வெடுப்பது.
5. மனதை எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் வைத்திருப்பது.
6. நல்ல மனிதர்களுடன் பழகுவது.
7. புனிதமான இடங்களுக்கு செல்வது.
8. தூய்மையான ஆடைகளை அணிவது.
9. வாசனை திரவியங்களை பயன்படுத்துவது.
10. பூ, பன்னீரில் குளிப்பது.
11. கல்லுப்பு அல்லது மலை உப்பில் குளிப்பது.

இவை இழந்த ஆற்றல்களை திரும்ப பெரும், அல்லது இருக்கும் ஆற்றல்களை தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகள் 

ஆற்றல் (energy)


ஆற்றல் (energy) ஒவ்வொரு மனிதனுக்கும், விலங்குக்கும், தாவரத்திற்கும் மிகவும் அவசியமானது. ஆற்றல் உயிர்களை வாழ வைக்கிறது. ஆற்றல் குறைபாடே உயிர்களை கொல்கிறது. மனிதர்களுக்கு உணவு, தண்ணீர், இயற்கை, மழை, பயிற்சிகள், தியானம், பிரார்த்தனை, வழிபாடு போன்றவற்றால் ஆற்றல் கிடைக்கிறது.

உணவு பழக்கங்கள் 
உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவுகளையும், எளிதாக ஜீரணிக்க கூடிய உணவுகளையும் உட்கொள்ளும் போது உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம். உடலுக்கு ஏற்ற உணவு எனும் போது அது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடலாம். ஒரு தாய்க்கும் சேய்க்கும் கூட உணவின் தேவைகள் மாறுபடலாம். பழங்களும் காய்கறிகளும் மட்டுமே அனைத்து மனிதர்களுக்கும் ஒத்துக்கொள்ள கூடிய உணவாகும். அவற்றில் மட்டுமே மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.

வழிபாடுகள் மற்றும் பயிற்சிகள் 
தொழுகை, வழிபாடு, பிராத்தனை, தியானம், யோக, தைச்சி, மூச்சு பயிற்சி, மற்றும் மற்ற ஆன்மீக பயிற்சிகளின் மூலமாக மனித உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம், மேலும் தக்க வைக்கலாம். இவ்வாறான பயிற்சிகள் உடலின் ஆற்றல் சீர்கெடாமல் தடுப்பதோடு, சீராக செயல்படவும் உதவும்.

இயற்கையோடு இணைதல்
காடு, மலை, கடல், ஆறு, அருவி, குளம், புல்வெளி, போன்ற இடங்களில் கால்களில் செருப்பின்றி நடக்கும் போதும், அமைதியாக அமர்ந்திருக்கும் போதும், குளிக்கும் போதும் பிரபஞ்ச ஆற்றல் உடலில் அதிகரிக்கும். சீர்கெட்ட ஆற்றல் சரி செய்யப்படும். மேலும் ஆற்றலும் இயற்கையின் தொடர்பும் மேம்பாடு அடையும்.