கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label வாழ்க்கை கவிதைகள். Show all posts
Showing posts with label வாழ்க்கை கவிதைகள். Show all posts

வாழ்க்கை புத்தகம்

வாழ்க்கையெனும்  புத்தகத்தை
சிலர் பரிச்சையாக எண்ணி
பதில் எழுதத் துடிக்கிறார்கள்
சிலர் கதைகளாக எண்ணி
கற்பனையில் மிதக்கிறார்கள்

சிலருக்குக் கவிதைகள்
சிலருக்குக் கட்டுரைகள்
சிலருக்கு அகராதிகள்
சிலருக்குக் கதைகள்
சிலருக்கு நாவல்கள்
சிலருக்குச் சரித்திரங்கள்
சிலருக்கு வெற்று காகிதங்கள்

வாழ்க்கை அனைவருக்கும்
சமமாக அமைவதில்லை
தகுதிக்கு ஏற்ப
கொடுக்கப்படுகிறது

கொடுக்கப்பட்டதை
முதலில் ஆராய்ந்து
புரிந்துக் கொண்டு
வாழத் தொடங்குங்கள்


பாவம் மனிதர்கள், அறிவுகள் ஆறாம்

உயர்ந்த மலைத்தொடர்
அடிவாரத்தில் அடர்ந்த வனம்
வளைந்து நெளியும் நதிகள்
பச்சைப் புல்வெளி
நடுவில் ஒரு குளம்

வெயிலில் குளுமையும்
பனிக் காலத்தில் உஷ்ணமும்
வழங்கும் அழகிய குடிசை

பசிக்கு கனி, காய், காய்கறி
தாகத்துக்கு சுத்தமான ஆற்று நீர்
படுத்துப் புரள புல்வெளி
ஓடி விளையாட மர நிழல்

பசு, காளை, ஆடு, கோழி
மான், மயில், பறவைகள்
நாய், பூனை
புடைசூழ

கூப்பிடும் தூரத்தில்
உற்றார், உறவுகள்
சுற்றத்தார், நண்பர்கள்
கூப்பிடத் தேவையில்லாத
பாதுகாப்பான வாழ்க்கை

அன்பும் காதலும்
பொங்கி வழியும் இந்த
அழகிய வாழ்க்கையை
தொலைத்துவிட்டு

ஆணவமும், அதிகாரமும்
கலந்து கட்டிய
சிமெண்ட் கல்லறையில்
வாழ்கிறார்கள்

பாவம் மனிதர்கள்
அறிவுகள் ஆறாம் - இன்னும்
நம்பிக் கொண்டிருக்கிறார்கள்

வாழ்க்கை

என்னடா?
என்பதைப் போல்
சிலர் வாழ்க்கையும்

ஏன்டா?
என்பதைப் போல்
சிலர் வாழ்க்கையும்

எதுக்குடா?
என்பதைப் போல்
சிலர் வாழ்க்கையும்

எப்படிடா?
என்பதைப் போல்
சிலர் வாழ்க்கையும்
அமைந்துவிடுகிறது

கேள்விகளில் உள்ள
டாக்களை நீக்கிவிட்டாலே
கேள்விகளுக்கு விடைகளும்
வாழ்க்கைக்கு தீர்வுகளும்
கிடைத்துவிடும்

வெளிநாட்டு வாழ்க்கை

நாலுகாசு சேர்த்துவைக்க
நாலுகடல் தாண்டிவந்தேன்
கஷ்டங்களுடன்
நினைவுகளைக் கலந்து
நாட்களை நகர்த்திவந்தேன்

நாளைக்குத் தேவைப்படும்
என்ற மயக்கத்திலே
இன்றைய வாழ்க்கையை
அடகு வைத்தேன்

உன் முகம்கூட முழுமையாக
என்மனதில் பதியும் முன்னே
பணத்துக்காக அயல்நாட்டில்
இடதுக்கால் பதித்தேன்

நமக்காக நாம் வாழ
பெறும் செல்வம் தேவையில்லை
அடுத்தவனிடம் பேர் வாங்க
வாழ்க்கையையே விற்றுவிட்டேன்

ஊருக்காக ஒரு வாழ்க்கை
உறவுக்காக ஒரு வாழ்க்கை
நமக்காக ஒரு வாழ்க்கை
கனவினிலே ஒரு வாழ்க்கை

என்னங்கடா இந்த வாழ்க்கை
அடுத்தவன் திருப்திக்குத்தான்
நான் வாழ வேண்டுமென்றால்
தேவையாடா இந்த வாழ்க்கை?


வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளுங்கள்

மாடி வீடு, ஏசி காரு
வயல் வெளி, சிறிது காணி
வங்கியில் ரொக்கம்

வாழத் தேவையான
அனைத்தையும் சேர்த்துவிட்டு
வாழத் தொடங்கலாம் - என்று
எண்ணும் போதுதான் உணர்ந்தேன்

இதற்கு மேல் - வாழ்வதற்கு
எதுவுமில்லை என்பதை
இளமையை விற்றுத்தான்
செல்வத்தைச் சேர்த்திருக்கிறேன்

அடுத்தவர் கனவுகளை நினைவாக்க
என் கனவுகளை கலைத்திருக்கிறேன்
அடுத்தவர் ஆசைகளை நிறைவேற்ற
என் ஆசைகளை இழந்திருக்கிறேன்

இது தவறான வியாபாரம்
எப்போதுமே லாபமீட்டாது
விழித்துக்கொண்ட பின்புதான்
இது கனவென்று உணர்ந்தேன்

வாழ்வை உணர்ந்த தருணத்திலே
வாழ்வின் முடிவுக்கு வந்துவிட்டேன்
எதிர்காலம் எனும் கனவினிலே
நிகழ்காலம் முழுவதும்
தொலைத்துவிட்டேன்

வாழ்க்கையின் இடையில்
பணம் தேடவேண்டும்
என்பதை உணராமல்
வாழ மறந்து
பணம் சேர்த்தேன்

சேர்த்த செல்வங்களில்
பகுதி ஊருக்கு, பகுதி பேருக்கு
பகுதி மருத்துவமனைக்கு
மீதம் இருந்தால்
என் பிள்ளைகளுக்கு

உடலைப் பிரிந்த உயிர்
வில்லிலிருந்து சீரிய அம்பு
கூறிவிட்ட வார்த்தை
மட்டுமல்ல

இழந்துவிட்ட இளமையும்
நிச்சயமாகத் திரும்பாது
வாழ்க்கையை வாழுங்கள்
வாழ்க்கை அழகானது

இளமையை விற்று
செல்வத்தைச் சேர்க்கலாம் - ஆனால்
எவ்வளவு செல்வத்தைக் கொடுத்தாலும்
இளமையை வாங்க முடியாது

வாழ்க்கை நம் கைகளில்தான் உள்ளது

வாழ்க்கை
நம்மிடம் தந்திருப்பது
வெற்று காகிதங்களை
மட்டுமே

அவற்றில் வரைவதும்
எழுதுவதும் , கிறுக்குவதும்
கசக்குவதும் , கிழிப்பதும்

நம் விருப்பம்
முடிவு - நம்
கைகளில்தான்
உள்ளது