கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label வாந்தி. Show all posts
Showing posts with label வாந்தி. Show all posts

உணவை உட்கொண்டதும் எதனால் வாந்தி வருகிறது?

உணவை உட்கொண்டதும் வாந்தி வந்தால், உட்கொண்ட உணவை உடலால் ஜீரணிக்க முடியவில்லை அல்லது அந்த உணவு உடலுக்கு ஒவ்வாதது அல்லது ஆபத்தானது என்று அர்த்தம். உடலுக்கு ஒத்துக் கொள்ளாத அல்லது ஆபத்தான உணவு என்பதால் உடல் உடனடியாக உடலைவிட்டு வாந்தியாகா வெளியேற்றுகிறது.

குழந்தைகளுக்கு எதனால் வாந்தி வருகிறது?

குழந்தைகளுக்கு ஜீரணசக்தி பலகீனமாக இருக்கும் போதும், உடலில் உபாதைகள் உருவாகும் போதும், வாந்தி வரும். இவை இரண்டுமே மிக நல்ல விசயங்கள். வயிற்றில் இருக்கும் அனைத்தையும் வெளியேற்றிவிட்டு உடல் விரைவாக உடலின் தொந்தரவுகளையும் நோய்களையும் குணப்படுத்தும்.

வாந்தியை தடுப்பது எப்படி?

உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றவும், வயிற்றில் கெட்டுப்போய் கிடைக்கும் உணவுகளை வெளியேற்றவுமே பெரும்பாலும் வாந்தி உண்டாகிறது.

கழிவுகளை வெளியேற்றும் வாந்தியைத் தடுப்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பாகும். உடலிலிருந்து வாந்தியாக வெளியேற வேண்டிய கழிவுகள் உடலின் உள்ளேயே தேக்கி உடல் உபாதைகளையும் நோய்களையும் உருவாக்கும்.

குமட்டல் உருவாவதேன்?

குமட்டல் உண்டானால் அல்லது வாந்தி வரும் உணர்வு உண்டானால்; வயிற்றிலோ உடலிலோ பராமரிப்பு வேலைகள் அல்லது நோய்களை குணப்படுத்தும் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இந்த உணர்வுகள் தோன்றும்போது சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.

நோயாளிகளுக்கு எதனால் வாந்தி வருகிறது?

நோய் கண்டவர்களுக்கு வாந்தி வருவது மிகவும் நல்ல விஷயமாகும். நோயாளிகளுக்கு வாந்தி வந்தால், அவரின் உடல் உணவுகளை ஜீரணம் செய்வதற்காக சேமித்து வைத்திருந்த சக்தியை எடுத்து நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப் போகிறது என்று அர்த்தம். இதன்மூலம் அவரின் நோய்கள் விரைவாகக் குணமாகும்.