புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label ரெய்கி. Show all posts
Showing posts with label ரெய்கி. Show all posts

Meipporul YouTube subscribers gathering

21/09/2019
Trichy Kallanai


23/09/2019 
Coimbatore - VOC Park
25/09/2019
Chennai - Semmozhi PoongaEbook - ஹோலிஸ்டிக் ரெய்கி


ISBN: 9780463406991
Title: ஹோலிஸ்டிக் ரெய்கி
Holistic Reiki Tamil
Author: Raja Mohamed Kassim
Publisher: Smashwords, Inc.

Goolge playbooks: http://bit.ly/2UR28KS
Amazon Kindle: https://amzn.to/2UKPn4A
Also availabe at other ebook stores

வணக்கம்,
ரெய்கி எனும் அற்புத கலையை அறிந்துக் கொள்ள ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இந்த புத்தகம் பயனுள்ளதாக அமையும். இந்த புத்தகத்தை பயன்படுத்தி முழுமையாகவும் ஆழமாகவும் ரெய்கியை புரிந்துக் கொள்ளலாம். இந்த புத்தகத்தை ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியம் குறைவாக உள்ளவர்களுக்கு மீண்டும் ஆரோக்கியம் திரும்பவும், மன நிம்மதியை பாதுகாக்கவும், ஆராவிலும் (Aura), உடலின் சக்ராக்களிலும் (Chakra) படிந்திருக்கும் கெட்ட சக்திகளை தூய்மைபடுத்தவும் அவற்றுக்கு சக்தியளிக்கவும் உதவும். குடும்ப உறவுகள், சமுதாயம் மற்றும் பொருளாதார நிலைகளை, மேம்படுத்தவும் உறுதுணையாக இருக்கும்.


ரெய்கி கலைக்கு அறிமுகம்

(Reiki) ரெய்கி எனும் ஆன்மீக பயிற்சி ஜப்பானில் 1922ஆம் ஆண்டு மிகவோ உசுய் (Mikao Usui) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. “ரெய்” என்றால் பிரபஞ்சம் என்று பொருள். “கி” என்றால் ஆற்றல் அல்லது சக்தி என்று பொருள். ரெய்கி என்றால் பிரபஞ்ச ஆற்றல் அல்லது பிரபஞ்ச சக்தி என்று பொருள் கொள்ளலாம். பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்தி மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் நோய்களை குணப்படுத்திக் கொள்வதும் தான் ரெய்கியின் நோக்கமாகும்.

மிகவோ உசுய் அவர்கள் ரெய்கி பயிற்சியின் மூலமாக மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், நோய்களை குணப்படுத்திக் கொள்ளவும், தேவையான வழிமுறைகளை வகுத்து தந்தார்கள். அவருக்குப்பின் இந்தக் கலை ஜப்பானிலிருந்து அமெரிக்காவுக்கு பரவி, அமெரிக்காவிலிருந்து உலகம் முழுவதும் பரவியது.

இந்த பிரபஞ்சமே மனிதர்களுக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் பிரபஞ்சத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த உலகம் முழுவதும் பிரபஞ்சத்தின் ஆற்றல் பரவி இருப்பதால் அந்த ஆற்றலை முறையாகப் பயன்படுத்தும் போது மனிதர்கள் தங்களின் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.

மனிதர்களின் உடலையும் மனதையும் உருவாக்கியது இந்த பிரபஞ்ச ஆற்றல்தான், உருவாக்கியவருக்கு, உருவாகிய பொருள் பழுதானால் சரிசெய்யத் தெரியாதா?. ரெய்கியின் மூலமாக சிறிய நோய், பெரிய நோய் என்ற பாகுபாடின்றி மனிதர்களின் அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்திக் கொள்ளலாம்.

ரெய்கியின் மூலமாக தனக்கும், தன் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் சக மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும், கூட உதவி செய்யலாம். நோய் கண்டிருக்கும் மனிதர்களின் மீது ரெய்கியை செலுத்தும் பொழுது அவர்கள் தங்கள் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியத்தை அடைவார்கள். நோய்க் கண்ட அல்லது விபத்துக்குள்ளான விலங்குகளின் மீது ரெய்கியை செலுத்தும்போது அந்த விலங்குகள் விரைவாக குணமடையும். வாடிக் கிடக்கும் தாவரங்களின் மீது அல்லது காய்க்காத மரங்களின் மீது ரெய்கியை செலுத்தும்போது அவை மீண்டும் செழிப்பாக வளர்ந்து, பூத்து, காய்த்து நிற்கும்.

ரெய்கி என்பது ஒரு புத்திசாலி சக்தியாகும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று கட்டளையிட்டால் போதும் எப்படி செய்யவேண்டும் என்று சொல்லித்தர தேவையில்லை. மின்சாரம் வானொலியில் சேர்ந்தால் ஒலியாக மாறும், தொலைக்காட்சி பெட்டியில் கலந்தால் ஒளியாக மாறும், பல்பில் கலந்தால் வெளிச்சத்தை உண்டாக்கும். மின்சாரத்திற்கு யாரும் எதுவும் சொல்லித்தர தேவையில்லை. இருக்கும் இடத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். அதைப்போல் ரெய்கி எந்த இடத்தில் கலந்தாலும் அங்கு இருக்கும் அனைத்து வகையான குறைகளையும் சரிசெய்யக் கூடிய அறிவும் ஆற்றலும் ரெய்கிக்கு உண்டு.

ஒரு இல்லத்தில் அல்லது வியாபார தலத்தில் ரெய்கி சேரும் போது அந்த இடத்தில் இருக்கும் அனைத்து வகையான தீய சக்திகளையும் விரட்டி அங்கே நல்ல சக்திகள் சேர வழி வகுக்கும். ஒரு மனிதனின் உடலில் ரெய்கி சேரும் போது அவன் உடலில் இருக்கும் நோய்களையும் மனதில் இருக்கும் துன்ப துயரங்களையும் அவலங்களையும் குணப்படுத்தி அவனுக்கு வாழ்க்கையில் அனைத்தும் சுலபமாக கிடைக்க வழிவகுக்கும். ரெய்கியை கொண்டு வெகு தொலைவில் உள்ளவர்களுக்கும் நோய்களை குணப்படுத்தலாம், உதவி செய்யலாம்.

ரெய்கியில் நான்கு நிலைகள் உள்ளன. ரெய்கி என்பது ஒரு குருவிடமிருந்து தீட்சை வாங்கி செய்ய வேண்டிய பயிற்சியாகும். முறையாக பயிற்சி பெற்ற, ரெய்கியை தெளிவாக அறிந்த குருவிடம் இருந்து முறையாக தீட்சை வாங்கி பயிற்சியை தொடங்குவது சிறப்பாகும்.

ரெய்கியை பயிற்சி செய்பவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இயற்கையையும் பிரபஞ்சத்தையும் நம்ப வேண்டும். எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்கவேண்டும். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், இயற்கை என அனைத்துப் படைப்புகளின் மீதும் அன்பும் கருணையும் பொழிய வேண்டும். தனக்குள் இருக்கும் பிரபஞ்சத்தின் பேராற்றல் தான் நீக்கமற அனைத்து உயிர்களின் மீதும் அனைத்து பொருள்களின் மீதும் படர்ந்திருக்கிறது என்ற தெளிவான சிந்தனை இருக்க வேண்டும்.

ரெய்கியை பயிற்சி செய்பவர்கள் தினமும் தியானம் செய்ய வேண்டும். மனதை அமைதியாகவும் அன்பாகவும் வைத்திருக்க வேண்டும். பிரபஞ்சத்துடனும் இயற்கையுடனும் உறவாக தொடர்புடன் இருக்கும்போது அவர்களின் அத்தனை கட்டளைகளையும் ரெய்கி நிறைவேற்றும்.

ரெய்கி கற்றுக்கொள்ள விரும்புபவர்களும், சிகிச்சை, தீட்சை தேவைப்படுவோரும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

Contact me @WhatsApp:
https://wa.me/60103231755


மனிதனின் உடல்கள்

ரெய்கி மற்றும் மருத்துவம் பயில்வதற்கு முன்பாக மனிதன் என்றால் யார் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் என்பவன் நம் கண்களால் காணக்கூடிய பூதவுடல் மட்டுமே அல்ல. 4 உடல்களின் கலவையே மனிதன் என்று அழைக்கப்படுகிறான். மனிதர்களிடம் நான்கு உடல்களைத் தாண்டி மேலும் சில விசயங்கள் இருந்தாலும் இந்த நான்கு உடல்கள்தான் மனிதர்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.

இந்த நான்கு உடல்களும் மனிதனின் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் பாதுகாக்க தனது பங்கை ஆற்றி கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு உடலுக்கும் ஒரு தனி இயல்பு இருந்தாலும் இந்த நான்கு உடல்களும் ஆரோக்கியமாகவும் சமநிலையாக இருக்கும்போது மட்டுமே மனிதன் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வாழ முடியும்.

(மனிதனின் 4 உடல்கள்)

மேலே குறிப்பிடப்பட்ட நான்கு உடல்களும் ஒன்றாகத்தான் செயல்படும். ஒன்றோடு ஒன்று இணைந்து, ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாகவும், ஒன்றுக்கு ஒன்று உதவியாகவும் செயல்படுகிறது. இந்த நான்கு உடல்களில் ஒன்றினால் கூட மற்றதின் துணை இல்லாமல் சுயமாக செயல்பட முடியாது.

உதாரணத்திற்கு:
உடல் இருந்தும் உயிர் இல்லாவிட்டால் அதை மனிதன் என்று அழைப்பதில்லை பிணம் என்றே அழைக்கிறோம். உடலும் உயிரும் இருந்தும் புத்தி செயல்படவில்லையென்றால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அழைக்கிறோம். அனைத்தும் இருந்தும் ஆற்றல் இல்லாவிட்டால் நோய்வாய்ப்படுகிறார்.

ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மன அமைதியை பாதுகாக்கவும், சிறப்பான வாழ்க்கையை வாழவும், இந்த நான்கு உடல்களையும் பாதுகாப்பதும், ஆரோக்கியமாக வைத்திருப்பதும், மிக முக்கியமாகும்.

ஹோலிஸ்டிக் ரெய்கி

ஹோலிஸ்டிக் என்ற வார்த்தைக்கு முழுமை அல்லது முழுமையானது என்று அர்த்தம். ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி, பாரம்பரிய ரெய்கி பயிற்சியில் இருந்து எளிமையாக்கப் பட்டது. மனித வாழ்க்கையில் அனைத்து தேவைகளையும் சூழ்நிலைகளையும் உள்ளடக்கியிருப்பதால் இதற்கு ஹோலிஸ்டிக் ரெய்கி என்று பெயரிட்டு இருக்கிறேன்.

 ஹோலிஸ்டிக் ரெய்கி மனித வாழ்கைக்கும், ஆரோக்கியத்துக்கும், அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும், முழுமையான வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருக்கும். ஹோலிஸ்டிக் ரெய்கி ஆன்மா, சக்தி, உடல், மனம், புத்தி, அலைகள், அதிர்வுகள், ஆன்மா, ஆன்மீகம் என பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். மனித வாழ்க்கைக்கான முழுமையான விளக்கத்தை கொடுக்கும்.

ஹோலிஸ்டிக் ரெய்கியின் வாழ்க்கை நெறிகள்
ஹோலிஸ்டிக் ரெய்கிக்காக மிகவோ உசூய் அவர்கள் வகுத்த வாழ்க்கை நெறிகளை சற்று திருத்தம் செய்திருக்கிறேன். காரணம் ஜப்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யும் பொழுது மிகவோ உசூய் அவர்கள் கூறிய கருத்துக்கள் சற்று மாற்றம் அடைந்து இருக்கலாம். ஜப்பான் மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யும் பொழுது தவறான அர்த்தங்களையும் கொடுக்கலாம். அதனால் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு சற்று மாற்றம் செய்து இருக்கிறேன்.

ஆங்கிலத்தில் 
From today
Do not anger
Do not worry
Be filled with gratitude
Devote yourself to your duty
Be kind to all life

தமிழில்
இன்று முதல்
கோபப்படாதே
கவலைப்படாதே
நன்றி உணர்வோடு இரு
உன் கடமையை முழுமையாக செய்
எல்லா உயிர்களுக்கும் இரக்கம் காட்டு

ரெய்கியின் சிறப்புகள் என்ன?

ஒருவர் முறையாக தீட்சைப் பெற்று ரெய்கி பயிற்சி செய்யும்போது. அது அவரின் பிரச்சனைகளில் இருந்து வெளிவர உதவும். அவர் தன் வாழ்க்கையில் முன்னேற உதவும். அவரின் நியாயமான தேவைகளை நிறைவேற்றி வைக்கும்.

ரெய்கியினால் அடையக் கூடிய நன்மைகள் என்ன?

ஒருவர் முறையாக ரெய்கி பயிற்சியினை மேற்கொள்ளும் பொழுது அவர் தனது வாழ்க்கையில் பல மாறுதல்களை காணலாம்.

ரெய்கி பயிற்சியினால் அடையும் நன்மைகள்.

தனி நபர் 

1. மனம் எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும்.

2. புத்திக்கூர்மை அதிகரிக்கும் எந்த விசயத்தையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

3. ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் நோய் கொண்டவராக இருந்தால் நோய்கள் குணமாகி ஆரோக்கியம் மேம்படும்.

4. பணம் சம்பாதிப்பது எளிதாக இருக்கும்.

5. குடும்பத்தாரிடமும் சமுதாயத்திடமும் அவரின் மரியாதையும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

6. முகம் வெளிச்சமாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.

7. ஆண்மை பெண்மை ஆற்றல் அதிகரிக்கும். இல்லற வாழ்க்கையில் திருப்தி அடையும்.

8. பிரபஞ்சத்திடம் இருந்து வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

9. உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம்

10. ஆறா தெளிவாகவும் சுத்தமாகவும் இருக்கும்

11. தீய சக்திகளும் செய்வினைகளும் எளிதில் நெருங்க முடியாது.

12. அவர்களை சுற்றியிருக்கும் எதிர்மறை சக்திகள் சுத்தமாகிவிடும்.

13. ஆரோக்கியம் குறைவாக இருந்தால், விரைவாக குணமடைவார்கள்.

14. உடல் பலமாகவும் வீரியமாகவும் இருக்கும்.


குடும்பம் மற்றும் சமுதாய உறவுகள்

1. இந்த பூமியில் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் எளிதில் புரிந்துவிடும்.

2. கணவன் மனைவிக்கிடையில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.

3. குடும்பத்தினர்கள் மத்தியில் அன்பும் உறவும் அதிகரிக்கும்.

4. பிள்ளைகளின் உடனான உறவு அதிகரிக்கும்.

5. நண்பர்களுக்கிடையில் மரியாதை கிடைக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்.

6. வாடிக்கையாளர்கள் இவர்களுடன் விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் வியாபாரம் செய்வார்கள்.

7. சமுதாயத்தில் மதிக்கப்படுவார்கள் முக்கியத்துவம் வழங்கப்படும்.

8. விலங்குகளும் தாவரங்களும் இவர்களுடன் உறவாடும்.

9. இந்த பூமியில் நடந்துகொண்டிருக்கும் வியங்களும், நடக்கப்போகும் வியங்களும் இவர்களுக்கு மறைமுகமாக உணர்த்தப்படும்.
ரெய்கி ஆற்றலுக்கு ஒரு அறிமுகம்

ரெய்கி மிகவும் புத்தி கூர்மையுடைய ஆற்றல் (சக்தி). ரெய்கிக்கு யாரும் எதுவும் கற்றுத்தரத் தேவையில்லை. மின்சாரம் எவ்வாறு தான் சேரும் பொருளுக்கு ஏற்ப தனது தன்மையை மாற்றி கொள்கிறதோ அதைப் போலவே ரெய்கியும் தான் சேரும் மனிதரோ, விலங்கோ, பொருளோ, இடமோ, அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்.

மின்சாரம் விளக்கில் கலந்தால் வெளிச்சம் தரும், மின்விசிறியில் கலந்தால் காற்றை தரும், வானொலிகள் கலந்தால் ஓசையை தரும், தொலைக்காட்சியில் நுழைந்தால் காட்சிகளை தரும். எந்த பொருளில் நுழைகிறதோ அந்த பொருளுக்கு ஏற்ப தனது தன்மைகளை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையது. அதைப் போலவே ரெய்கியும் சேரும் மனிதர்களுக்கு ஏற்பவும், பொருட்களுக்கு ஏற்பவும், தன்னை மாற்றிக் கொள்ளும்.

ரெய்கி ஒரு மனிதனின் உடலில் நுழையும் பொழுது அந்த மனிதரின் குறை நிறைகளை முதலில் சரிசெய்ய தொடங்கும். ஒரு நோயாளியின் உடலில் நுழைந்தால் அந்த நோயாளியின் நோய்களுக்கான மூலத்தை கண்டறிந்து அவற்றை சரி செய்ய தொடங்கும். ரெய்கி ஒரு பொருளிலோ, இடத்திலோ, நுழைந்தால் அந்த பொருளின் அல்லது இடத்தின் குறைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யும். தீய சக்திகள் எங்கிருந்தாலும் அவற்றை ரெய்கி வெளியேற்றிவிடும். மனிதர்கள், விலங்குகள், பொருட்கள், மற்றும் கட்டடங்களின் சக்தியை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் செய்யும்.

நம்மை அறியாமலேயே நமது தினசரி வாழ்க்கையில் ரெய்கியை பயன்படுத்தி வருகிறோம். ஒருவருக்கு தலைவலி, வயிற்று வலி, கால் வலி, மூட்டு வலி, போன்றவை உருவானால் தன்னை அறியாமலேயே தன் கரங்களால் வலிக்கும் இடத்தை அவர் தேய்த்து கொடுப்பார். அவரின் வலிகளும் குறையத் தொடங்கும்.

ஒரு குழந்தை காரணமில்லாமல் அழுது கொண்டிருந்தால் அதன் தாய் அந்தக் குழந்தையை தன் கரங்களால் தேய்த்து கொடுப்பார், தடவி கொடுப்பார். சற்றுநேரத்தில் அந்த குழந்தையும் அழுகையை நிறுத்திவிடும். விலங்குகளுக்கு காயங்கள் உண்டானால் விலங்குகள் காயம் கண்ட இடத்தில் நக்கிக் கொண்டிருக்கும் அந்த காயங்கள் விரைவில் ஆறிவிடும்.

நம் அன்புக்குரிய ஒருவர் நோய்வாய்ப் பட்டாலோ, ஏதாவது பிரச்சனையில் மாட்டி இருந்தாலோ, கவலையில் இருந்தாலோ, நாம் அவரின் கைகளைப் பற்றி ஆறுதல் கூறுவோம். அல்லது அவர்களை கட்டியணைத்து ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூறுவோம். உண்மையில் நாம் என்ன செய்கிறோம் என்றால் வார்த்தைகளின் அல்லது ஓசையின் மூலமாக நாம் நமது ஆற்றலை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ரெய்கி ஆற்றல் குறைவாக இருப்பதனால் அவர்களுக்கு வாழ்க்கையில் பல தொந்தரவுகள் உருவாகிறது. நம் மூலமாக அவர்களுக்கு கிடைத்த ஆற்றல் அவர்கள் பிரச்சனைகளில் இருந்து வெளிவர உதவியாக இருக்கும்.


ரெய்கி என்பது என்ன?

ரெய்கி என்பது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரபஞ்சத்தின் பேராற்றல். இந்த ஆற்றலை முறையாக பயன்படுத்தும் பொழுது இந்த உலகில் அனைத்தையும் அடையலாம்.