புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

நோய்களை குணப்படுத்தும் உண்மையான மருத்துவர்

உண்மையான மருத்துவர் 
நோயாளிகளின் நோய்களை குணப்படுத்துவது தாங்கள் அல்ல என்பதை, ரெய்கி சிகிச்சை அளிக்கும் அனைவரும் உணர வேண்டும். சிகிச்சை பெறுபவரின் உடலில் கலக்கும் பிரபஞ்ச ஆற்றல் தான் அவரின் நோய்களையும், வேதனைகளையும், துன்பங்களையும் நீக்க துணைப் புரிகிறது என்பதை உணர வேண்டும்.

ரெய்கி சிகிச்சை அளிப்பவர் அல்லது மற்ற இயற்கையை சார்ந்த சிகிச்சையை அளிப்பவர் நான்தான் சிகிச்சை அளிக்கிறேன், நான்தான் குணப்படுத்துகிறேன் என்ற எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் தான் மக்களுக்கு நோய்களை குணப்படுத்துகிறேன், துன்பங்களில் உதவுகிறேன் என்பன போன்ற எண்ணங்கள் உருவாக தொடங்கிவிட்டால் அவருக்குள் ஆணவமும் கர்வமும் உண்டாகி விட்டது என்று அர்த்தம். 

நடப்பான அனைத்தும் அவன் செயல், அவன் அருளாலே, அவன் உதவியைக் கொண்டு நான் என் முயற்சியை செய்கிறேன். முடிவை இறைவன் கையில் ஒப்படைக்கிறேன் என்று நல்லதோ கெட்டதோ அனைத்தையும் இறைவன் மீது சாற்றி விட வேண்டும். நான் தான் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்தால், முயற்சிகள் வெற்றி பெறாமல் போகலாம் மேலும் மற்றவர்களின் கர்மாக்களையும் நாம் சுமக்க நேரிடலாம். 

நோய்களை குணப்படுத்தும் 5 வழிமுறைகள் 
ஒரு மனிதர் நோய்வாய்ப் படும்போது அதை முழுமையாக குணப்படுத்த அவர் ஐந்து அடிப்படை ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இந்த ஐந்து அடிப்படை ஒழுக்கங்களை கடைபிடிக்கும் போது அவர் விரைவாக குணமடைவார். இந்த ஒழுக்கங்களை கடை பிடிக்கவில்லை என்றால் என்னதான் உயரிய மருத்துவம் செய்தாலும், நவீன மருத்துவம் செய்தாலும், அவரின் உடலும் மனமும் குணமடைய தாமதமாகும். 

1. உணவை உட்கொள்ளும் முறைகள் 
உணவு உண்ணும் பழக்கத்தை முதலில் முறைப்படுத்த வேண்டும். பசித்தால் மட்டுமே பசியின் அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும். அந்த உணவு உடலுக்கு ஒத்துக்கொள்ள கூடியதாகவும் எளிதில் ஜீரணிக்க கூடியதாகவும் இருத்தல் வேண்டும். 

2. தண்ணீர் அருந்தும் முறை 
தேவையில்லாமல் தாகம் இல்லாமல் தண்ணீர் அருந்த கூடாது. தாகம் உண்டானால் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். சீனி, வர்ணங்கள், வாசனைகள், இரசாயனங்கள், போன்றவை கலக்கப்பட்ட பானங்களை அருந்த கூடாது. சுடவைத்த அல்லது அதிகமாக வடி கட்டப்பட்ட தண்ணீரை அருந்தக் கூடாது. 

3. உடலுக்கு போதிய ஓய்வு வேண்டும் 
உடலில் சோர்வு உண்டானால் ஓய்வெடுக்க வேண்டும். அசதியாக இருக்கும் போது வற்புறுத்தி வேலைசெய்யக் கூடாது.  

4. இரவு உறக்கம் அவசியம் 
இரவு 9 மணிக்கெல்லாம் உறக்கம் வரவில்லை என்றாலும் படுக்கைக்கு சென்றுவிட வேண்டும்.  

5. மன அமைதி அவசியம் 
மனதை கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், எரிச்சல், கர்வம் போன்ற தீய எண்ணங்கள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். 

இந்த 5 விசயங்களை சரி செய்யும் போதே உடல் பாதி குணமாகிவிடும். மீதியை ரெய்கி சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம். 

நீரிழிவு நோயாளிகளின் புண்கள் விரைவில் குணமடைய, சில வழிமுறைகள்

நீரிழிவு நோயாளிகளின் புண்கள் விரைவில் குணமடைய
நீரிழிவு நோயாளிகளின் உடலில் புண்கள் உருவானால் அவை குணமாக தாமதமாகும். சிலருக்கு புண்கள் பெரிதாகவும்,  ஆழமாகவும், புண்களை சுற்றி கருத்தும் போகும். ஒரு சிலருக்கு புண்கள் அழுகவும், புழுக்கள் உருவாகவும் செய்யும். எப்படிப் பட்ட புண்ணாக இருந்தாலும். எவ்வளவு மோசமாக இருந்தாலும் அந்த புண்களை குணபடுத்த உதவும் சில வழிமுறைகள்.

புண்களை புரிந்துக்கொள்ளுங்கள்

1. புண்களை மூடவோ கட்டுப்போடவோ கூடாது.

2. புண்கள் எப்போதும் காற்றோட்டமாக இருக்க வேண்டும். அப்போதுதான் விரைவாக குணமாகும்.

3. புண்களில் இருந்து நீர், சலம் அல்லது இரத்தம் வழிந்தால் பயம் கொள்ள வேண்டாம். புண்கள் உருவாக காரணமாக இருந்த விஷங்கள் தான் வெளியேறுகின்றன என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

4. புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறினால் பயப்பட தேவையில்லை, தடுக்கவும் தேவையில்லை.

5. கொடிய விஷங்கள் தான் புழுக்களின் வடிவில் புண்களில் இருந்து வெளியேறுகின்றன. புண்களில் இருந்து வெளியேறும் புழுக்களை தடுக்க கூடாது.

6. புண்களுக்கு எந்த மருந்தும் போட தேவையில்லை. வாழ்க்கை முறைகளை மாற்றினாலே; உடலின் நோயெதிர்ப்பு சக்தியே புண்களை குணபடுத்திவிடும்.

வாழ்க்கை முறைகள்

1. நீரிழிவு நோயாளிகளுக்கு காலில் புண்கள் உருவாகவும் அவை குணமாகாமல் இருப்பதற்கும் முதல் காரணமாக இருப்பவை அவர்கள் உட்கொள்ளும் மருந்துகளே.

2. தற்போது உட்கொண்டு கொண்டிருக்கும் எல்லா நீரிழிவு மருந்துகளையும் முதலில் நிறுத்த வேண்டும். அவை ஆங்கில மருத்துவமாக இருந்தாலும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவமாக இருந்தாலும் சரியே.

3. பசி எனும் உணர்வை உணருங்கள். நன்றாக பசி உருவாகும் வறையில் காத்திருங்கள். பசி இல்லாமல் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

4. இரவு உணவைத் தவிர்த்து கொள்ளுங்கள். அதிகம் பசியாக இருந்தால் வெறும் தண்ணீரை அருந்துங்கள் அல்லது இனிப்பான பழங்களை மட்டும் உட்கொள்ளுங்கள்.

5. உணவை குறைத்து பசிக்கு ஏற்றவாறு அளவாக உண்ணுங்கள்.

6. உள்ளூரில் விளையும், இனிப்பான பழங்கள் அதிகம் உண்ணுங்கள்.

7. உணவில் காய்கறிகளை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.

8. காய்கறிகளை அரை வேக்காடாக உண்ணுங்கள்.

9. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்கு செல்லுங்கள். தூக்கம் வரவில்லை என்றாலும் வெறுமனே படுத்திருங்கள். உடல் பழகி தானே தூக்கம் வரும்.

இவற்றை மட்டும் பின்பற்றினாலே போதும் எப்படி பட்ட புண்ணும் ஆற தொடங்கும். தேவைப்பட்டால் அக்குபங்சர் அல்லது இயற்கை மருத்துவங்களை மட்டும் நாடுங்கள்.


நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது ஏன்?

சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் ஒரு மாத்திரையிலிருந்து தான் தொடங்குகிறார்கள். ஆனால் மாத்திரைகளை உட்கொள்ள தொடங்கிய சில மாதங்களிலேயே மாத்திரைகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து, சில வருடங்களுக்கு பிறகு அதிகமான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. தொடக்கத்தில் ஒரு மாத்திரைக்கு கட்டுப்பட்ட சர்க்கரை சில காலங்களிலேயே பல மாத்திரைகள் உட்கொண்டும், கட்டுப்படுவதில்லை. ஏன் இந்த சூழ்நிலை உருவாகிறது?.

மாத்திரைகள் நோய்களை குணப்படுத்துகின்றன என்பது உண்மையானால், மாத்திரைகளை உட்கொள்ள தொடங்கிய நாளை விட பின் நாட்களில் மாத்திரைகளின் எண்ணிக்கை குறைய வேண்டும் அல்லவா?. மாத்திரைகளின் எண்ணிக்கை குறையாவிட்டாலும் அதிகரிக்காமலாவது இருக்க வேண்டும் அல்லவா?. மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது நோய் குணமாகவில்லை, நோய் மேலும் தீவிரமடைகிறது என்பதற்கு அத்தாட்சியல்லவா?. சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி பெரும்பாலான நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகளின் எண்ணிக்கை நாள்பட அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதற்கு என்ன காரணம்?

நோயாளிகளுக்கு மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு காரணம் அவர்களின் உடல் அந்த மாத்திரைகளை எதிர்த்துப் போராடத் தொடங்கிவிட்டது.

நாம் தினமும் உணவுகளை உட்கொண்டு வருகிறோம். இத்தனை ஆண்டுகள் மீண்டும் மீண்டும் அதே உணவுகளை உட்கொண்டும், உடல் அந்த உணவுகளை வெறுக்கவில்லை. நாம் உண்ணும் இட்டிலியோ, தோசையோ, சப்பாத்தியோ, சாதமோ, கஞ்சியோ, எதுவாக இருந்தாலும் உடல் இன்று வரையில் அந்த உணவை வெறுக்கவில்லை. அந்த உணவினை பார்க்கும் போதோ உண்ணும் போதோ நமக்கு வெறுப்பு தோன்றுவதில்லை.

ஆனால் மருந்து மாத்திரைகள் உண்ணத் தொடங்கிய சில காலங்களிலேயே; உடல் அந்த மருந்து மாத்திரைகளை வெறுக்க தொடங்குகிறது. மருந்து மாத்திரைகளை எதிர்த்துப் போராட தொடங்குகிறது. தொடக்கத்தில் நோய்களைப் பற்றிய பயத்தினால் மருந்து மாத்திரைகளை உடல் வேறு வழியின்றி ஒப்புக் கொள்கிறது. பிறகு அந்த மாத்திரைகளை உட்கொள்ள தொடங்கிய பிறகு. அந்த மாத்திரைகளினால் விளையக்கூடிய கேடுகளையும் பக்கவிளைவுகளையும் எதிர்த்து போராடுகிறது. அதனால்தான் நோயாளிகள் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள தொடங்கிய நாட்களில் இருந்ததை விடவும் மருந்து மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒன்று மாத்திரைகளில் எண்ணிக்கை அதிகரிக்கும் அல்லது மாத்திரைகளின் வீரியம் அதிகரிக்கும்.

ஒரு வேளை மருந்து மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் நோய்கள் குணமாகுமா? என்றால் அதுவும் கிடையாது. மரணம் வரையில் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு கொண்டே உயிர் துறக்கிறார்கள். இதிலிருந்து உங்களுக்கு புரியவில்லையா மருந்து மாத்திரைகள் நோய்களை குணப்படுத்துவது இல்லை என்பது. ஆங்கில மருத்துவம் மட்டுமல்லாமல் அனைத்து மருத்துவங்களையும் சேர்த்து தான் பேசுகிறேன். உங்கள் உடல்தான் நோய்களை குணப்படுத்தும், அதனால் உடல் சொல்வதை மட்டும் கேளுங்கள்

எது தேவை எது தேவையில்லை, எது நல்லது எது கெட்டது, எது ஒத்துக்கொள்ளும் எது ஒத்துக்கொள்ளாது என்பதை பிரித்து பார்க்கும் ஆற்றல் உடலுக்கு உள்ளது. உடலுக்கென்று சுயமாக அறிவு இருக்கிறது. உடலுக்கு எல்லாம் தெரியும். உடல் சொல்வதை மட்டும் கேட்டு நடந்தால், அனைத்து நோய்களும் தானாக குணமாகும்.

உடல் பேசும் முக்கியமான மொழிகளான பசி, தாகம், சோர்வு, தூக்கம், மற்றும் மலம் சிறுநீர், கழித்தல் இவற்றை தெளிவாக புரிந்துகொண்டு உடல் கேட்கும் நேரத்தில், இந்த விஷயங்களை நிறைவேற்றி வைத்தால், அனைத்து நோய்களும் குணமாகும். பசியில்லாமல் உண்ணாதீர்கள், தாகம் இல்லாமல் தண்ணீர் அருந்தாதீர்கள், சோர்வு உண்டானால் உடலுக்கு ஓய்வு கொடுங்கள், இரவில் விரைவாக படுக்கைக்கு செல்லுங்கள். சிறுநீர் மலம் தடுக்காதீர்கள். அத்தனை நோய்களும் சுயமாக குணமாகும்.


மனம் குணப்படுத்தும் நோய்கள் (Placebo effect)

சிலருக்கு நோய்கள் உருவானால், ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் நோய்கள் குறையத் தொடங்கிவிடும். சிலருக்கு சில குறிப்பிட்ட மருத்துவர்களை சென்று சந்தித்தாலே உடலில் தொந்தரவுகள் குறையத் தொடங்கிவிடும். சிலருக்கு உடலில் தொந்தரவுகள் உருவானால் மருந்து மாத்திரைகள் உட்கொண்டால் மட்டுமே அந்த தொந்தரவுகள் குறையும். சிலருக்கு சில செயல்களை செய்தாலும், சில மனிதர்களை சந்தித்தாலும், சில இடங்களுக்கு சென்றாலும், உடலில் தொந்தரவுகள் குறைந்துவிடும். ஒரு சிலருக்கு இவை எதையுமே செய்யாமலேயே மருந்து மாத்திரைகள் இல்லாமலேயே தூங்கி எழுந்தாலே அனைத்து தொந்தரவுகளும் குறையத் தொடங்கிவிடும்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் பலர் தங்களின் நோய்கள் குணமாகி வீடு திரும்புவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இரசாயனங்கள் நோய் தீர்க்கும் மருந்துகள் அல்ல, இரசாயனங்களால் நோய்களை குணப்படுத்த முடியாது என்று பலர் கூறுகிறார்கள். இது உண்மை என்றால் இவர்களின் நோய்கள் எவ்வாறு குணமாகின?

இங்குதான் மனம் தனது ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. இந்த மருந்தை உட்கொண்டால் நோய்கள் குணமாகும், இந்த மருத்துவரை சந்தித்தால் நோய்கள் குணமாகும், அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் நோய்கள் குணமாகும் என்பவைப் போன்ற நம்பிக்கைகள் உள்ளவர்களுக்கு அந்த செயலை செய்த உடனேயே தங்களின் நோய்கள் குணமாகத் தொடங்கிவிடும்.

இரசாயனங்கள் மருந்துகள் அல்ல என்பதும் இரசாயனங்கள் நோய்களை குணப்படுத்தாது என்பது நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மை. ஆனால் அவற்றை உட்கொள்பவர்களின் மனமானது இந்த மாத்திரை தான் என் உயிரை காப்பாற்றக்கூடிய மருந்து என்று நம்பிக்கை கொண்டுவிட்டால், அவரின் நம்பிக்கையின் பெயரிலேயே நிச்சயமாக அவரின் நோய்கள் குணமாக தொடங்கிவிடும். அதே நேரத்தில் அவர் உட்கொண்ட இரசாயனங்களினால் உண்டாகும் பக்கவிளைவுகளும் நிச்சயமாக இருக்கும்.

இதை ஆங்கிலத்தில் (Placebo effect) என்று அழைப்பார்கள். மனம் மட்டும் என் நோய்கள் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தால் அனைத்து நோய்களும் குணமாகிவிடும். அது எவ்வளவு கொடுமையான நோய்களாக இருந்தாலும் சரியே. உடல் உறுப்பு பாதிப்பு உள்ளவர்கள் கூட இந்த நிலைமை மாறும் என் உடல் உறுப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் நிச்சயமாக அவர்களின் தொந்தரவுகள் நீங்கி அவர்களின் உடல் உறுப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிடும்.


மனதின் உதவியுடன் நோய்களை குணமாக்கும் வழிமுறைகள்

மனமானது மனிதனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும். மனிதன் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் என்று நாம்  கேள்விப்பட்டிருப்போம். நாம் இடும் கட்டளைகளை மனமானது நிறைவேற்றும் போது மனதின் ஆற்றலை ஏன் நோய்களை குணப்படுத்த பயன்படுத்தக் கூடாது? மனதை முறையாக பயன்படுத்தும் போது மனதின் உதவியைக் கொண்டு உடலில் உண்டாகும் அனைத்து வகையான  உபாதைகளையும் தொந்தரவுகளையும் வலிகளையும் நோய்களையும் நிச்சயமாக குணப்படுத்தலாம்.

இரவு உறங்குவதற்கு முன்பாக  அமைதியாக படுத்துக் கொண்டு உங்களுடனே நீங்கள் பேசுங்கள். உங்கள் பெயரை சொல்லி நீங்களே அழைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலில் ஏற்படும் உபாதைகளை உங்களிடமே கூறுங்கள். காலை எழுந்திருக்கும் நேரத்தை உடலிடம் கூறி அதற்குள் நோய்களை குணப்படுத்திவிடு என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு
ராஜா இப்போது முதல் காலை 7 மணி வரையில்  நான் உறங்குவேன். நான் எழுந்திருப்பதற்கு முன்பாக, என் கழுத்தில் ஏற்பட்டிருக்கும் சுளுக்கையும் உடல் வலிகளையும் குணப்படுத்திவிடு. என்று கூறிவிட்டு உடனே உறங்கச் செல்லுங்கள்.

காலையில் எழுந்திருக்கும் போது உங்கள் உடலில் பெரிய மாற்றத்தை உங்களால் உணர முடியும். உடலின் வலிகள் குறைவதையும் , நோய்கள் குணமாக தொடங்குவதையும், தொந்தரவுகள் மறைவதையும் காண்பீர்கள்.

உடலில் பல தொந்தரவுகள் உடையவர்கள், ஒவ்வொரு தொந்தரவாக குணப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். உடலில் 10 தொந்தரவுகள் இருந்தாலும் அனைத்தையும் நிச்சயமாக குணப்படுத்தலாம்; ஆனால் அனைத்தும் ஒரே நாளில் குணப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்யக்கூடாது.

எது நெடுநாட்களாக இருக்கும் தொந்தரவோ அதை முதலில் சரி செய்யுங்கள். அல்லது எந்த உபாதை உங்களை மிகவும் தொந்தரவு செய்கிறதோ அதை முதலில் குணப்படுத்துங்கள்.

மருந்து, மாத்திரைகள், தைலங்கள், எதுவுமே இல்லாமல் மனதும் உடலும் இணைந்து செயல்படும் போது முறையாக கட்டளையிட்டால் அனைத்து நோய்களும் படிப்படியாக குணமாகிவிடும். மனதின் ஆற்றலை நம்புங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.


நோய்களும் நோய்களினால் உண்டாகும் மரணங்களும்

நோய்கள் வேறு, மரணம் வேறு
மரணம் என்பது அனைவருக்கும் வந்தே தீரும். மரணம் அடைவதற்கு என்று எந்த வயது வரையறையும் கிடையாது. யாருக்கும் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம். மரணம் முதுமையில்தான் வரவேண்டும் அல்லது நோய்கள் உண்டானால் தான் மரணம் உண்டாகும் என்று இயற்கையில் எந்த வரைமுறையும் கிடையாது.

நோய்களுக்கும் மரணத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நோய்கள் உயிரை கொள்ளும் என்பது வெறும் கட்டுக்கதையே. நோய்வாய்பட்ட எல்லோரும் மரணமடைவதில்லை. நோய்கள் உண்டாகி, நோய்களின் காரணமாக மரணமடைபவர்கள் மிகக் குறைவே. நோய்கள் உண்டானதும், நோய்களைக் கண்டு உண்டாகும் அச்சத்தினால் மரணமடைபவர்கள் தான் அதிகம்.

நாம் இதை சற்று வேறொரு கோணத்தில் இருந்து பார்ப்போம். நோய்வாய்பட்டு மரணமடைந்தவர்கள்; மரணமடைவதற்கு சில காலங்களுக்கு முன்பாக நோய்வாய்பட்டார்கள் என்று கூறலாம். காரணம், இது தான் உண்மை. மரணம் வேறு நோய்கள் வேறு. இவை இரண்டையும் முடிச்சுப்போட்டு பயமுறுத்தி பணம் பறிக்கிறார்கள் சில மருத்துவர்கள். எல்லா மருத்துவத்திலும் இது போன்ற மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒருவருக்கு ஏதாவது ஒரு நோய் உண்டானால் அதை குணப்படுத்துவது தான் ஒரு மருத்துவரின் வேலை. நோய் குணமாக வேண்டுமென்றால் முதலில் நோயாளியின் மனதில் தைரியத்தை விதைக்க வேண்டும், அடுத்ததாக நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை கொடுக்கவேண்டும், கடைசியாகத்தான் சிகிச்சை செய்ய வேண்டும்.

மன தைரியமும் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கையும் மட்டும் இருந்தாலே அனைத்து நோய்களும் பறந்து போய்விடும். மருந்து மாத்திரைகள் எதுவுமே தேவையில்லை. இதை விடுத்து மருத்துவர்கள் நோயாளிகளின் சாவுக்கு நாள் குறிக்கக் கூடாது. மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் இந்த நோய் கொன்றுவிடும், இந்த நோய் உண்டானால் இத்தனை நாட்கள்தான் உயிர் வாழலாம்; அந்த நோய் உண்டானால் அத்தனை நாட்கள்தான் உயிர் வாழலாம் என்று கூறுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

மருத்துவர்களே ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ளுங்கள், மனிதர்களின் பிறப்பும் இறப்பும் இறைவனின் கைகளில் உள்ளது உங்கள் கைகளில் இல்லை; ஆனால் உங்களின் வார்த்தைகளை முழுமையாக நம்பிக்கை கொள்ளும் நோயாளிகளின் மரணம் உங்கள் வாக்குப்படியே பெரும்பாலும் நடக்கிறது. அதனால் நோயாளிகளுக்கு நம்பிக்கையையும், மன தைரியத்தையும் உருவாக்குங்கள், நோயாளி இறந்துவிடுவார் என்று நீங்கள் கருதினாலும் அவரிடம் தெரிவிக்காதீர்கள்.

எல்லா மருத்துவர்களிடமும் ஒன்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு நோயின் தன்மை விளங்கவில்லை என்றாலோ, உங்களுக்கு ஒரு நோயைக் குணப்படுத்த தெரியவில்லை என்றாலோ. நோய் குணமாகாது என்று நீங்கள் கருதினாலோ. அதை நோயாளிகளிடம் தெரிவிக்காதீர்கள்.

இந்த உலகில் குணபடுத்த முடியாத நோய்களே கிடையாது. உங்களால் முடியாமல் போனாலும் அடுத்தவர் குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நோயாளிகள் மட்டும் மன தைரியத்தை இழந்து விட்டால், அவரை யாராலும் காப்பாற்ற முடியாது. அதனால் எந்த நோயும் குணமாகாது என்றும், இறந்துவிடுவீர்கள் என்றும் நோயாளிகளிடம் கூறாதீர்கள். என் மருத்துவரே குணமாகாது என்று கூறிவிட்டார் என்ற விரக்தி ஒன்று போதும் நோயாளிகளை கொல்வதற்கு.

மருத்துவர்கள் கடவுள்கள் அல்ல
நோயாளிகள் ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் ஒன்றும் கடவுள்கள் அல்ல. ஒரு மருத்துவர் ஒரு நோய் குணமாகாது என்று கூறினால், அதன் வார்த்தைகளின் உண்மையான பொருள், “எனக்கு இந்த நோயை குணபடுத்த தெரியாது” என்பதே. அவர்களால் முடியாவிட்டாலும் அந்த நோய்களைக் குணப்படுத்துவதற்கு யாராவது இருப்பார்கள் தேடிப்பாருங்கள். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள். நிச்சயமாக எல்லா நோய்களும் குணமாகும்.


அனைத்து நோய்களையும் குணமாக்கும் வழிமுறைகள்

இக்கட்டுரையை நோய் கண்டவர்களுக்காகவும், நோய்களுக்கு மருத்துவம் செய்பவர்களுக்காகவும் எழுதுகிறேன். பல வருடங்களாக மருத்துவம் செய்தும் நோய்கள் ஏன் குணமாகவில்லை என்று குழம்புவோருக்கும் இந்த கட்டுரையில் பதில் உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விருப்பப்படுபவர்களும் இந்த கட்டுரையை வாசியுங்கள். கட்டுரையை வாசிக்கும் முன்பாக ஒன்றை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்.

அனைத்து வகையான நோய்களுக்கும், தொந்தரவுகளுக்கும், உபாதைகளுக்கும், இயலாமைக்கும் நிச்சயமாக ஒரு மருத்துவமோ தீர்வோ இருக்கும். மருத்துவமோ தீர்வோ இல்லாத தொந்தரவுகள் யாருக்கும் உருவாவதில்லை.

தலைவலி முதலாக எயிட்ஸ் வரையில் அனைத்து நோய்களுக்கும் ஏதாவது ஒரு தீர்வு நிச்சயமாக இருக்கும். மருத்துவம் தெரியாதவர்களிடமும், மனித உடல் அமைப்பை முழுமையாக அறியாதவர்களிடமும் சிக்கிக்கொண்டு, குணபடுத்த முடியாத நோய்கள் உண்டு என்ற தப்பான எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். குறிப்பாக அனைத்து நோய்களுக்கும் ஆங்கில மருத்துவமே தீர்வு என்ற தவறான முடிவுக்கு வராதீர்கள். இன்று பெரும்பாலானோர் தங்கள் நோய்கள் குணமாகாமல் நிரந்தர நோயாளிகளாகவே வாழ்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது, ஆங்கில மருத்துவமே அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு என்று நம்புவதுதான்.

எந்த ஒரு நோய்க்கும் நிரந்தர தீர்வை தேட வேண்டுமே ஒழிய தற்காலிகமான தீர்வை நாடக்கூடாது. ஒரு நோயை முழுமையாக குணபடுத்த வேண்டுமென்றால் முதலில் அந்த நோயின் தொடக்கத்தையும், அதன் மூலகாரணத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். நோயின் மூல காரணத்தை அறியாமல் யாராலும் எந்த நோயையும் குணபடுத்த இயலாது.

நோய்களை பற்றிய சில முக்கிய குறிப்புகள்
1. வலியோ தொந்தரவோ இருக்கும் இடத்தில் தான் நோய் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

2. தொந்தரவுகள் உண்டான உடன் தான் நோய் தோன்றியது என்று அர்த்தம் கிடையாது. சிறுவயது முதலாக சிறிது சிறிதாக சேர்ந்த கழிவுகளே பின்னாளில் உடலில் தொந்தரவாக வெளிப்படுகின்றன.

3. உடலில் சேரும் கழிவுகளே உடல் உறுப்புகளின் இயக்கத்தை தடுக்கின்றன, கட்டுப்படுத்துகின்றன.

4. உடலில் சேரும் கழிவுகளே அனைத்து வலிகள், இயலாமை, தொந்தரவுகள் மற்றும் நோய்களுக்கு மூல காரணமாக இருக்கின்றது.

5. உடலில் சேரும் கழிவுகளே அனைத்து உபாதைகளுக்கும் மூல காரணமாக இருப்பதனால், அந்த கழிவுகளை வெளியேற்றுவதும், புது கழிவுகள் உடலில் சேராமல் தடுப்பதுமே மருத்துவமாக இருக்க வேண்டும்.

6. எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோர், உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். மேலும் புது கழிவுகள் உடலில் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7. நீங்கள் எந்த வைத்தியம் செய்தாலும், ஆங்கில மருத்துவமோ, சித்த மருத்துவமோ, யுனானியோ, ஹோமியோபதியோ, அக்குபஞ்சரோ, எந்த மருத்துவமாக இருந்தாலும். அவர்கள் செய்யும் ஒரே மருத்துவம் உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

8. உடலின் நோய்களை குணப்படுத்த உடலால் மட்டுமே முடியும், எந்த மனிதனாலும் நிச்சயமாக முடியாது.

9. மருத்துவர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, கழிவுகளை வெளியேற்ற உடலுக்கு உறுதுணை புரிவது மட்டுமே.

10. கழிவுகளை மட்டும் வெளியேற்றிவிட்டால் போதும் உடல் தன்னை தானே குணப்படுத்திக் கொள்ளும்.

11. கழிவுகள் உடலில் சேர முக்கிய காரணமாக இருப்பது இரண்டு. ஒன்று செரிமானம் கோளாறு மற்றொன்று மலச்சிக்கல் இவை இரண்டையும் ஒழுங்கு படுத்த வேண்டும்.

12. உடலில் கழிவு சேரும் மற்ற காரணங்களை முந்தைய கட்டுரைகளில் வாசிக்கலாம்.

நோய்களை குணப்படுத்தும் வழிமுறை உதாரணம்
ஒருவர் மூச்சுவிட சிரமபடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய இந்த தொந்தரவுக்கு ஆங்கில மருத்துவர்கள், பல பெயர்கள் சூட்டுவார்கள், ஆனால் உண்மையில் அவருடைய தொந்தரவு என்ன? மூச்சு விட சிரமமாக உள்ளது அவ்வளவு தானே. இதை எவ்வாறு குணப்படுத்துவது?.

உண்மையில் இந்த நோயாளியை குணப்படுத்துவது மிகச் சுலபம் ஆனால் சில மருத்துவர்கள் அதை செய்யமாட்டார்கள். அந்த நோயாளியை வைத்து பணம் பண்ணுவதற்காக அவரின் நோய் குணமாகாமல் பார்த்துக் கொள்வார்கள், அல்லது அந்த நோயின் தீவிரத்தை அதிகமாக்குவார்கள்.

இந்த நோயாளியை குணபடுத்த என்ன செய்ய வேண்டும்? முதலில் மூச்சுவிட உடலுக்கு எந்த உறுப்பு துணைப் புரிகிறது? நுரையீரல். மூச்சுவிட சிரமமாக இருந்தால் அல்லது மூச்சு தொடர்பான தொந்தரவுகள் இருந்தால் நுரையீரலுக்கு மருத்துவம் செய்ய வேண்டுமே ஒழிய. மூச்சுவிட உதவி செய்கிறேன் என்று மூக்குக்கு மருத்துவம் செய்யக் கூடாது.

அவர் நோய் முழுமையாக குணமாக
1. நுரையீரலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும்.

2. எவ்வாறு கழிவுகள் சேர்ந்தன என்பதை கண்டறிந்து; புதுக் கழிவுகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. நுரையீரலுக்கு சக்தி அளிக்க வேண்டும்.

4. ஒழுங்கான வாழ்க்கை முறைகளையும், உணவு முறைகளையும் கற்றுத்தர வேண்டும்.

5. இவற்றைச் செய்தால் உடலே அவரின் நோய்களை சுயமாக குணப்படுத்திவிடும் தொந்தரவுகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

6. அந்த ஆரோக்கியம் நிரந்தரமாக நிலைத்தும் இருக்கும்.

நோய்களைக் குணப்படுத்துவது எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா?. எந்த மருத்துவர் இவற்றைச் செய்கிறாரோ அவர் மட்டுமே உண்மையான மருத்துவர். மூச்சு திணறல் என்றதும் மூக்கில் கேஸ் வைப்பதும் வாயில் ஸ்பிரே அடிப்பது எந்த காலத்திலும் நிரந்தரமான தீர்வாக அமையாது. அந்த நபர் இறுதிவரையில் நோயாளியாகவே வாழ நேரிடும்.

மருந்துகளை உட்கொள்ளும் வறையில் மூச்சு சுலபமாக விடலாம், இந்த ஸ்பிரே அடிக்கும் போது மூச்சு சுலபமாக விடலாம் என்றும்; மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை நிறுத்தினால் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என்றும் மிரட்டி மக்கள் பணத்தை பறிக்கும் கொள்ளை கூட்டத்திடம் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

மருத்துவம் செய்யும் வழிமுறைகள்
இந்த மருத்துவம் செய்யுங்கள், அந்த மருத்துவம் செய்யாதீர்கள் என்று நான் பரிந்துரைக்க மாட்டேன். உங்கள் உடல், உங்கள் நோய், உங்கள் பணம், உங்கள் விருப்பம். ஆனால் மருத்துவம் செய்யும் வழிமுறைகளை மட்டும் விளக்குகிறேன். மருத்துவரை காண சென்றால்..

1. உங்களுக்கு உருவாகியிருக்கும் தொந்தரவுகளின் மூல காரணத்தை கேளுங்கள். குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதைப் போன்று, தொந்தரவுகளுக்கு பெயர்களை மட்டுமே சூட்டி உங்களை ஏமாற்றப் பார்ப்பார்கள். ஏமாறாதீர்கள். நோயைப்பற்றிய தெளிவாக விளக்கம் கேளுங்கள், மூல காரணம் கேளுங்கள் கூறவில்லை என்றால் அவரிடம் மருத்துவம் செய்யாதீர்கள், கிளம்பிவிடுங்கள்.

2. உங்கள் தொந்தரவுகளை தவிர்க்கும் வழிமுறைகளை கேளுங்கள். இனிமேல் அந்த தொந்தரவு உண்டாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று கேளுங்கள்.

3. அவர்கள் கொடுக்கும் மருந்து / சிகிச்சை என்ன செய்யும், எவ்வாறு நோய்களை குணபடுத்த உதவும் என்று கேளுங்கள்.

4. அவர்கள் கொடுக்கும் மருந்துகளின் / சிகிச்சையின் பக்கவிளைவுகளை தெளிவாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

5. அனைத்துக்கும் மேலாக அந்த மருத்துவர் எவ்வாறு நடந்துகொள்கிறார், எவ்வாறு பேசுகிறார் என்பதை கவனியுங்கள். உங்களை பயமுறுத்தும் நோக்கத்துடனோ, மரண பயம், நோயின் பயம் உருவாக்கும் பானியிலோ பேசினால், பேச்சை நிறுத்திவிட்டு கிளம்பி விடுங்கள்.

6. நோயாளிகளுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுப்பவர் மட்டுமே உண்மையான மருத்துவர். பயத்தை உருவாக்குபவன் ஏமாற்றுக்காரன்.

7. அந்த மருத்துவர் மன தைரியத்தை கொடுத்தால், அவர்கள் கொடுக்கும் மருந்து உடலின் கழிவுகளை வெளியேற்றும் என்றால், உடலுக்குத் தெம்பை கொடுக்கும் என்றால். அவர் கொடுக்கும் மருந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என்றால், தொடர்ந்து வைத்தியம் செய்யுங்கள். இல்லையேல், வேறு நல்ல மருத்துவரை / மருத்துவத்தை நாடுங்கள்.டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் குடிக்கலாமா?

டெங்கு காய்ச்சல்
நூற்றுக்கணக்கான வருடங்களாக உலகில் உள்ள அனைத்து  நாடுகளும்,  அரசாங்கங்களும் கொசுகளுக்கு எதிராக போர் புரிந்து வருகின்றன. இந்தியாவிலும் கோடி கணக்கில் செலவு செய்து கொசு மருந்து அடித்து வருகிறார்கள். கொசுக்கள் ஒழிந்தனவா?. டெங்கு காய்ச்சல் குறைந்தனவா?.

டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, மலேரியா, சிக்கின் குனியா போன்ற சில காய்ச்சல்களுக்கும் பழியை கொசுவின் மீது போடுகிறார்கள். ஆங்கில மருத்துவர்களுக்கு ஒரு நோய்க்கான மூலக் காரணம் விளங்கவில்லை என்றால் பரம்பரை நோய், கொசுவினால் உண்டானது, கிருமிகளினால் உண்டானது, தொற்றுநோய் என்று நான்கு மழுப்பல் காரணங்களை பதிலாக வைத்திருப்பார்கள்.

ஏதாவது ஒரு நோய்க்கு மேலே சொன்ன நன்கு காரணங்களில் ஒன்றை, மருத்துவர் சொல்வாரே ஆனால் அவருக்கு அந்த நோயின் மூல காரணம் தெரியவில்லை என்று விளங்கிக் கொள்ளுங்கள்.

கொஞ்சம், அறிவைப் பயன்படுத்தினாலே நமக்கு புரிந்துவிடும். வருடம் முழுவதும் கொசுக்கள் குறிப்பாக டெங்கு கொசுக்கள் நம் கூடவே இருக்கும் போது, வருடத்தில் சில மாதங்கள் மட்டும், அந்த கொசுக்கள் மனிதர்களைக் கடித்து, அதனால் மனிதர்களுக்கு காய்ச்சல் உண்டாவது ஏன்?. மக்களுக்கும் காய்ச்சல் கண்டால், அவற்றை காய்ச்சல் என்று கூறாமல் டெங்கு என்று சிறப்பு பெயர் வைத்து அழைப்பது ஏன்?.

ஒரு ஊரில் ஆயிரம் குடும்பங்கள் இருந்தும், ஒரே ஒரு குடும்பத்தில், அதுவும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் உண்டாவது ஏன்?. சிந்தனை செய்யுங்கள். ஒரு குடும்பத்தில் பத்து நபர்கள் இருந்தும் அனைவரையும் கொசுக்கள் கடித்தும், ஒருவருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் உண்டாவது ஏன்?.

இன்னும் சற்று ஆழமாக யோசிப்போம். டெங்கு காய்ச்சலுக்கு ஏன் டெங்கு காய்ச்சல் என்று பெயர் வைத்தார்கள்?. டெங்கு என பெயர் வைத்து என்ன லாபம்? மருந்து கண்டுபிடித்தார்களா?. இல்லையே!. நோய்களுக்கு பெயர் மட்டும் தான் வைப்பார்கள் ஆங்கில மருத்துவர்கள். அவற்றுக்கான எந்த மருந்தும் அவர்களிடம் இருக்காது. ஏன் தெரியுமா? காரணம் எந்த நோய்க்கும் மூல காரணமும் அவர்களுக்கு தெரியாது.

கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் என கூறப்படுபவை, மலேரியா, டெங்கு, நைல் வைரஸ், சிக்கின் குனியா, மஞ்சள் காய்ச்சல், ஃபிலிமாசிஸ், துலேரேமியா, டயோரோபிரியாஸிஸ், மூளை காய்ச்சல், மூளையழற்சி, ஸிக்கா மற்றும் பல. இவற்றுக்கு மருத்துவன் உண்டா?. எந்த நோய்க்கும் ஆங்கில மருத்துவர்களிடம் மருத்துவம் கிடையாது ஆனால் அதை அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மற்ற பாரம்பரிய மருத்துவத்தில் எல்லா காய்ச்சல்களையும் குணப்படுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் அவற்றை பொய்யென்றும் ஆபத்து என்றும் பிரச்சாரம் செய்வார்கள். ஏன்?.

அனைத்துக்கும் காரணம் காசு, பணம், துட்டு, Money.. Money...

ஒரு உண்மையை சொல்லட்டுமா?. உங்களால் நம்ப முடியாது என்று, எனக்கு நன்றாகவே தெரியும் ஆனால் வேறு வழியில்லை. நமக்கு என்ன என்று என்னால் இருக்க முடியவில்லை அதனால்தான் சொல்கிறேன்.

டெங்கு காய்ச்சலென்று எதுவுமே கிடையாது. சாதாரண காய்ச்சலைத்தான் டெங்கு என்று பெயர் வைத்து ஏமாற்றுகிறார்கள். நம்பவில்லை என்றால் ஒரு டாக்டரிடம் சென்று டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கேளுங்கள். இன்னும் ஒரு டாக்டரிடம் சென்று காய்ச்சலுக்கு மருந்து கேளுங்கள். இருவரும் ஒரே மருந்தைத்தான் கொடுப்பார்கள். கம்பனி பெயர், மருந்தின் பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கும். அந்த இரு இரசாயனங்களின் கலவையும் ஒன்றாகத் தான் இருக்கும்.

கொசு கடித்து நோய்கள் உண்டாகுமா?
கொசு கடித்துவிட்டது என்ற பயத்தினால் வேண்டுமானால் நோய்கள் உண்டாகுமே ஒழிய கொசு கடித்து எந்த நோயும் யாருக்கும் உண்டாகாது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், சில வருடங்களுக்கு முன்பாக கொசுவினால் சிக்கின் குனியா என்ற காய்ச்சல் பரவுவதாக நம் அரசாங்கங்கள், மருத்துவர்கள், பொது ஊடகங்கள் உட்பட எல்லோரும் கதறி கொண்டிருந்தார்களே. இப்போது எங்கே அந்த சிக்கின் குனியா?. கொசுக்கள் ஒழிந்துவிட்டனவா?  இல்லையே கொசுக்கள் அப்படியே தானே இருக்கின்றன. ஏன் இப்போது யாருக்கும் சிக்கின் குனியா காய்ச்சல் வருவதில்லை?.

அதே கதிதான் டெங்கு காய்ச்சலுக்கும், சென்ற மாதம் வரையில் ஏன் யாருக்கும் டெங்கு காய்ச்சல் வரவில்லை. அப்பொழுதெல்லாம் கொசுக்கள் விடுமுறையில் இருந்தனவா?.

அனைத்துக்கும் ஒரே காரணம் காசு, பணம், துட்டு, Money.. Money. மருந்து கம்பெனிகளும் பெரிய மருத்துவமனைகளும் சேர்ந்து செய்யும் வியாபாரம் தான் இந்த டெங்கு காய்ச்சல்.

காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் குடிக்கலாமா?
ஒருவருக்கு அம்மை நோய் உண்டானால் என்ன செய்வார்கள்?. வெப்பம் இலையில் படுக்க வைப்பார்கள். வேப்ப இலைகளை அரைத்து அம்மையின் மேல் பத்து போடுவார்கள். வேப்ப இலைகளை அரைத்து அல்லது போடி செய்து உண்ணக் கொடுப்பார்கள். அதே மருத்துவ முறைதான் இது.

காய்ச்சல் கண்டவர்கள் நிலவேம்பு கசாயம் அல்லது வேப்பங்கொளுந்தை அரைத்து அல்லது போடி செய்து சாப்பிடும் போது உடலின் செயல்திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலின் உஷ்ணம் குறையும். நிலவேம்பு கசாயம் நோயை போக்காது ஆனால் எதிர்ப்பு சக்தியை பலபடுத்தும். எதிர்ப்பு சக்தி பலமானதும் உடல் தான் நோயை தானே குணப்படுத்திக்கொள்ளும்.

காய்ச்சல் இல்லாதவர்கள் குடிக்க தேவையில்லை. காய்ச்சல் அதிகமாக இருந்தால். நாளுக்கு ஒருவேளை என மூன்று நாட்கள் மட்டும் குடிக்கலாம். அதற்கு மேல் தேவையில்லை.


உண்மையான நோய்களும், நோய்க்கான காரணங்களும்

உடலில் ஏதாவது தொந்தரவுகள் தோன்றினால். அந்த தொந்தரவை மட்டுமே பார்த்து பயந்து கொண்டிருப்பார்கள் பலர். அந்த தொந்தரவு ஏன் உருவானது என்று சிந்திக்காமல், எப்படி சரி செய்வது என்பதில் மட்டுமே சிந்தனை இருக்கும். ஒரு நோய் உருவாக காரணமாக இருப்பனவற்றை சரி செய்யாமல் நோயை எவ்வாறு குணப்படுத்துவது?.

1. கண் நோய்கள், பார்வைக் கோளாறுகள், கண் கட்டிகளுக்கும், கண்கள் காரணம் இல்லை.

2. சலி, மூக்கடைப்பு, சைனஸ், இளைப்புக்கும் மூக்கு காரணம் இல்லை.

3. காது வலி, காது அடைப்பு, காதுகளில் அரிப்பு, கேட்கும் திறன் குறைவுக்கும் காது காரணம் இல்லை.

4. வாய், நாக்கு, உதடு புண்ணுக்கும், வாய் துர்நாற்றத்துக்கும், காரணம் வாயோ, நாக்கோ அல்ல.

5. தோல் நோய், புண், வெண் குஷ்டம், அலர்ஜி, அரிப்புகளுக்கு, முடி கொட்டுதல், மற்றும் பொடுகுக்கு காரணம் தோல் அல்ல.

தொந்தரவுகள் தோன்றும் இடத்தில் தான் உண்மையான நோய் இருக்கவேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. இதனால் தான் என்ன வைத்தியம் செய்தாலும், இந்த நோய்கள் குணமாவதில்லை. இந்த நோய்களுக்கான உண்மைக் காரணத்தை அறிந்து மருத்துவம் செய்தால் தவிர, இவை தீராது. நோயின் மூலக் காரணங்கள் கூட அறியாதவர்கள், இவற்றை சரிசெய்ய நிச்சயமாக முடியாது.

நோய்கள் பலவாக இருந்தாலும், அவற்றை குணப்படுத்த, சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவைதான். தனித்திரு, விழித்திரு, பசித்திரு.

தனித்திரு - கவலை, துக்கம், கர்வம், பயம், எரிச்சல், போன்ற எந்த கெட்ட குணங்களும் மனதை அண்டாமல். நீங்கள் தனி உயிர் எந்த சூழ்நிலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை, என்பதை உணர்ந்து தனித்திருங்கள்.

விழித்திரு - உடலில் என்ன நடக்கிறது? ஏன், எதனால், நடக்கிறது என்று விழிப்பாக பாருங்கள், புரிந்துகொள்ளுங்கள்.

பசித்திரு - பசி எனும் உணர்வை உணருங்கள். நன்றாக பசி உருவாகும் வரையில் காத்திருங்கள். பசி இல்லாமல் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாதீர்கள். பசி அடங்கியவுடன்,  உடனே உண்பதை நிறுத்துங்கள்.

இவை மூன்றையும் பின்பற்றினால். உலகில் உள்ள அனைத்து நோய்களும் சுயமாக குணமாகும்.


(immune system) இம்மியுன் சிஸ்டம் எனும் பாதுகாப்பு சக்தி

(immune system) இம்மியுன் சிஸ்டம் என்றால் நோயெதிர்ப்பு சக்தி என்றுதான் நாம் பொருள் கொள்கிறோம். இம்மியுன் சிஸ்டம் என்றால் உண்மையில் பாதுகாப்பு சக்தி என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். மனித உடலின் முழுமையான செயல்பாட்டுக்கும் ஆரோக்கியத்துக்கும் இந்த இம்மியுன் சிஸ்டமே துணைபுரிகிறது. இந்த பாதுகாப்பு சக்தி (இம்மியுன் சிஸ்டம்) பலகீனமாக இருக்கும் வேளைகளில்தான் மனிதன் நோய்வாய்ப்படுகிறான்.

பாதுகாப்பு சக்தி (இம்மியுன் சிஸ்டம்) என்றால் என்ன?
இம்மியுன் சிஸ்டம் என்று தனியாக உடலில் எதுவும் கிடையாது. மனித உடலின் இயற்கை தன்மையான, இயக்க வேலைகளில் ஒன்றுதான் இந்த இம்மியுன் சிஸ்டம். மனித உடல் தன்னை தானே பாதுகாக்கும் வேலையைத்தான் இம்மியுன் சிஸ்டம் என்று அழைக்கிறார்கள். மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்கும் பிரத்தியேகமான அறிவு இருக்கிறது, ஒவ்வொரு செல்லுக்கும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலும்  இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில் இம்மியுன் சிஸ்டம் என்பது நோய் உண்டான பிறகு உடலை குணப்படுத்துவது அல்ல, அல்லது நோய்கள் உருவாகாமல் தடுப்பது மட்டுமல்ல, மாறாக உடலின் முழுமையான பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும் சக்திதான் இம்மியுன் சிஸ்டம். உடலின் பாதுகாப்பு சக்திக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

ஒருவர் தன்னையே அறியாமல் கெட்டுப்போன உணவை உண்ண முயற்சி செய்தால், கை முதலில் காட்டிவிடும். உணவு கையில் பட்டதும் தோலின் பிசுபிசுப்பு காட்டிவிடும். அடுத்தது மூக்கு கெட்டுப்போன உணவைக் காட்டும். உணவின் கெட்ட வாடையைக் கண்டுபிடித்து அறிவிக்கும். அதைக் கவனிக்காமல் வாயில் போட்டால், வாய் குமட்டல் உணர்வைக் கொடுக்கும். அதையும் கண்டுகொள்ளாமல், உடலையும் மீறி மென்று விழுங்கினால். உடல் வாந்தியின் மூலமாக கெட்டுப்போன உணவுகளை வெளியேற்றிவிடும். அந்த வாந்தியைத் தடுத்தால் வயிற்றுப்போக்கு உண்டாகும். அந்த வயிற்றுப் போக்கையும் தடுக்கும் போது, அந்த கெட்டுப்போன உணவுகள் உடலின் உள்ளேயே தங்கி பல கேடுகளை உடலுக்கு உண்டாக்குகிறது.

இப்படி தோல், மூக்கு, நாக்கு, வயிறு, குடல் என உடலின் பல பாகங்களும் உடலுக்குள் கெட்ட பொருள் சென்றுவிடாமல் தடுக்கின்றன. உடலின் அறிகுறிகளை எல்லாம், மீறிச் செய்பவர்கள் தான், தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொள்பவர்கள். உடலுக்கு ஒவ்வாத உணவுகள் உடலின் உள்ளே செல்லும்போது தானே உடலில் பல உபாதைகள் உருவாகின்றன? உடலின் செயல்பாடுகளை கவனித்தால், உடல் கெட்டுப்போன உணவுகள் உடலுக்குள் செல்லாமலேயே பாதுகாக்கிறது. அந்த அளவுக்கு மிக பாதுகாப்பாக இந்த உடலை இறைவன் வடிவமைத்திருக்கிறார்.

நோயெதிர்ப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்த
மனித உடல் முழுமையாக தானியங்கியாக (Automatic) செயல்படும் முறையில்தான் இறைவன் வடிவமைத்திருக்கிறார். அதனால் பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்), அதிகரிக்க என்று சிறப்பாக நாம் எதையும் செய்ய முடியாது, பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்த எதையாவது செய்யவோ, சாப்பிடவோ தேவையும் கிடையாது.

மனித உடலின் அமைப்பு
மனித உடல் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மனிதன் உட்கொள்ளும் ஒவ்வொரு வேலை உணவும், அந்த உணவிலிருந்து உருவாகும் சக்தியும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு உடலுக்கு பயன்படுகிறது.

உடலில் உற்பத்தியாகும் சக்தியில் 32% உடல் செயல்பாட்டுக்கும், 32% உடல் செரிமானத்துக்கும், 32% உடலின் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்களுக்கு பின்பு மீதமிருக்கும் சக்திகள், சேமிப்பு சக்தியாகவும், அவசரக்கால சக்தியாகவும், உடலில் சேமிக்கப்படுகிறது.

மீதமிருக்கும் சேமிப்பு சக்திகள்தான் மனிதனின் அவசரகாலத்தில் பயன்படுத்தப்படுகிறது, உதாரணத்துக்கு நாய் துரத்தினாளோ, விபத்து நடந்தாலோ,  உயிருக்கோ, உடைமைக்கோ அச்சுறுத்தல் உண்டானாலோ, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உடல் பாதுகாப்பு சக்தியை பயன்படுத்துகிறது. இரசாயன மருந்துகளை நெடுநாட்களுக்கு உட்கொள்பவர்களுக்கு சேமிப்பு சக்தி என்று எதுவுமே இருக்காது. அதனால் தான் நெடுநாட்களாக ஆங்கில மருந்துகள் உட்கொள்பவர்கள், கொடிய உயிர்கொல்லி நோய்களுக்கு ஆளாகிறார்கள். அல்லது ஏதாவது நோய்கள் உண்டானால் முழுவதுமாக உடலாலும், மனதாலும் உடைந்து, சோர்ந்துவிடுகிறார்கள்.

பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்தும் வழிமுறைகள்
மனித உடலில் உருவாகும் எல்லா சக்திகளும் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றன என்று மேலே பார்த்தோம். அதனால் தேவையற்ற உடல் உழைப்புகளை குறைத்து, ஓய்வெடுத்தால் உடல் செயல்பாட்டுக்கும் ஒதுக்கப்பட்ட 32% சக்தி மிச்சப்படும், உடலுக்கு ஒத்துக்கொள்ளக் கூடிய எளிமையான உணவுகளை மட்டுமே உட்கொண்டால் செரிமானத்துக்கு ஒதுக்கப்பட்ட 32% சக்தியும் மிச்சமாகும். இப்படி உழைப்பிலும், உணவிலும் செலவழிக்க கூடிய சக்திகளை சேமித்தல். சேமித்த சக்திகள் அனைத்தும் முழுமையாக பாதுகாப்பு இயக்க சக்திக்கு வழங்கப்படும். உடலின் பாதுகாப்பு சக்தி (இம்மியுன் சிஸ்டம்), பலப்படும்.

இதை விட்டுவிட்டு, எந்த மருந்து மாத்திரைகள் உட்கொண்டாலும் பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்த முடியாது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் மனித உடல் முழுமையாகத் தானியங்கியாக (Automatic) செயல்படும் முறையில் தான் இறைவன் வடிவமைத்திருக்கிறார். யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் உடலின் செயல்.

தடுப்பூசிகள் தேவையில்லை
மனித உடலுக்கு இயற்கையாகவே பாதுகாப்பு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் இருப்பதனால். தடுப்பூசிகள் என்று எதுவுமே மனித உடலுக்கு தேவையில்லை. தடுப்பூசி என்பது வெறும் வணிக நோக்கத்தை கொண்டதே ஒழிய, அதில் எந்த உண்மையும் கிடையாது.


எது உண்மையான மருத்துவம்?

எது உண்மையான நோய்? எது உண்மையான மருத்துவம்?
உடலில் ஏதாவது வலி, தொந்தரவு, அல்லது இயலாமை, ஏற்பட்டால் மருத்துவர்களை நோக்கி ஓடி, அந்த தொந்தரவை, வலியை அடக்குவதிலேயே மும்முரமாக இருக்கிறோம். அந்த தொந்தரவு ஏன் உருவானது? என்ன காரணம்? என்று யாரும் சிந்திக்க தயாராக இல்லை. நோய் ஏன், எவ்வாறு உண்டானது என்பதை அறியாமல் நோய்களை எவ்வாறு களைய முடியும்?.

நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு தொந்தரவையும், வலியையும், இயலாமையையும் நோய் என்றும் மருந்து சாப்பிட்டால்தான் குணமாகும் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறோம். இல்லாததை நம்புவது தான் மூட நம்பிக்கை என்றால். எனக்கு நோய் உள்ளது மருந்து சாப்பிட்டால்தான் குணமாகும் என்று நம்புவதுதான் மூட நம்பிக்கையின் உச்சம்.

நோய்களைப் பற்றிய பயம்
மருந்து கம்பனி முதலாளிகள், பொது ஊடகங்களின் மூலமாக நோய்கள் பற்றிய தவறான கருத்துக்களையும், தவறான தகவல்களையும் மக்களிடையே பரப்புகின்றனர். பொது ஊடகங்களில் வருவதால் மக்களும் நம்புகிறார்கள்.

ஒரு உண்மையை தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள். தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ், பத்திரிகை, இணையம், வாட்ஸாப், ஃபேஸ்புக் போன்றவற்றில் வருபவை அனைத்தும் முழுமையான உண்மையான தாவல்கள் கிடையாது. பொது ஊடகங்கள் உண்மையை மட்டுமே சொல்லும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

தவறான மருத்துவம்
இன்று புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான மருத்துவ முறைகள், அதன் மருத்துவர்களை, இந்த நோய்க்கு இந்த மருந்து, அந்த நோய்க்கு அந்த மருந்து என்ற வகையில்தான் பயிற்றுவிக்கின்றன. பல மருத்துவர்கள் மருந்துகளை  பற்றி மட்டும் படித்து விட்டு வந்து மக்களுக்கு மருத்துவம் பார்க்க தொடங்கி விடுகிறார்கள். அதனால் தான் அவர்களால் எந்த நோயையும் முழுமையாக குணப்படுத்த முடிவதில்லை.

ஒரு உண்மையை தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள், பல மருத்துவர்கள் நோய்களை குணப்படுத்துவதில்லை. நோய்களை மறைப்பதிலும், அடக்குவதிலும், வேறு நோய்களாக மற்றும் வேலைகளையும் மட்டுமே செய்கிறார்கள். ஒரு நோய்க்காக மருத்துவம் செய்ய தொடங்கி, பல புதிய நோய்கள் உருவாவது இதனால்தான். பழைய நோயினால்தான் புதிய நோய்கள் உருவானது என்று மருத்துவர்கள் கூறுவார்கள், அது முழுமையான உண்மையல்ல.

மருத்துவம் செய்யாமல் ஒரு நோயிலிருந்து , மற்றொரு நோய் தோன்றினால் அவர்கள் சொல்வது சரி. ஆனால் மருத்துவம் செய்ய தொடங்கிய பிறகு புதிய நோய்கள் உண்டாக தொடங்கினால் அதற்கு அந்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் தான் காரணமாக இருக்க முடியும். ஒருவேளை மருந்துகளினால் புதிய நோய்கள் தோன்றவில்லை என்று மருத்துவர்கள் கூறினால்; அவர்கள் கொடுக்கும் மருந்து பொய்யானது, அவை நோய்களை தடுப்பதில்லை என்பதை ஒப்புக்கொள்வர்களா?.

உடலின் தொந்தரவுகளுக்கு என்ன தான் தீர்வு?.
நான் கூறவில்லை, திருவள்ளுவ பெருந்தகை மிக அழகாக அன்றே கூறிச் சென்றார்.

"நோய்நாடி நோய்முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்"

பொருள்:
ஒருவர் உடலில் உள்ள நோயைக் குணப்படுத்த வேண்டுமாயின். அது என்ன நோய் என்பதை அறிந்து. அந்த நோய் உடலில் எங்கு எப்படி உருவானது என்பதை ஆராய்ந்து. அந்த நோயை குணப்படுத்தக்கூடிய மருத்துவத்தை அறிந்து. அந்த மருத்துவத்தை பிழையில்லாமல் முறையாக செய்ய வேண்டும்.

இது திருவள்ளுவர் அருளிய நோய் தீர்க்கும் முறை. ஆனால் இன்றைய மருத்துவ உலகில் நடப்பதென்ன?

- நோய் தெரியாது
- நோய் உண்டான உறுப்பு தெரியாது
- அதன் மூல காரணம் தெரியாது
- அதை தீர்க்கும் வழிமுறையும் தெரியாது

ஆனால் நோய்க்கான மருந்துகள் மட்டும் தெரியும். அந்த மருந்துகளில் இருந்து பல பக்க விளைவுகள் உருவாகும் என்பதும் தெரியும், ஆனாலும் கொடுப்போம், எங்களுக்கு தெரிந்தது இதுதான். ஆங்கில மருத்துவம் மட்டுமல்ல, பல பாரம்பரிய வைத்திய முறைகளும் இன்று சீர்கெட்டுக் கிடக்கிறது. நாம் தான் சூதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

எது நோய்?
நம் அன்றாட அலுவல்களை செய்யவிடாமல் முடக்கிப்போடும் அனைத்தையும் நோய் என்று கூறுகிறோம்.

ஏன் நோய்கள் உருவாகிறது?
நம் உடலின் செயல்திறன் முழுமையாக இல்லாத போதும். கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் உடலின் உள்ளேயே தேங்கும் போதும், கழிவு தேங்கும் உறுப்பில் நோய்கள் உற்பத்தி ஆகிறது.

எது உண்மையான மருத்துவம்?
உடலின் செயல்திறனை அதிகரிப்பதும், தேங்கிய கழிவுகளை முழுமையாக வெளியேற்றுவது, இனிமேல் புதிய கழிவுகள் தேங்காமல் தடுப்பதும், மட்டுமே உண்மையான மருத்துவமாகும்.

இந்த வழிமுறையில் மருத்துவம் செய்யும்; அதாவது. நாடிப்பார்த்து நோயரிந்து. நோயின் காரணம் அறிந்து. உடலின் சக்தி நிலையை அதிகரித்து, தேங்கிய கழிவுகளை வெளியேற்றக் கூடிய மருத்துவத்தை மட்டுமே நாடுங்கள். இதுவே உங்களுக்குச் சிறப்பானதாகும். இது மட்டுமே நோய்களில் இருந்தும். உடல் உபாதைகளில் இருந்தும் உங்களுக்கு நிரந்தர தீர்வை தரும்.

மருத்துவத்தின் உண்மை
எந்த மருத்துவரும் சொல்லாத, ஒரு முக்கியமான உண்மையை உங்களிடம் சொல்கிறேன் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உண்மையில் நோய் என்று எதுவுமே இந்த உலகில் கிடையாது. அதைப்போல் மருந்து என்றும் எதுவும் இந்த உலகில் கிடையாது. எல்லாம் வெறும் மூட நம்பிக்கைகளும், மனிதர்களின் கற்பனைகளும் தவிர வேறில்லை.

தொடரும்….