கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

இந்த உலகில் ஏற்படும் மரணத்தின் நோக்கம் என்ன?

இந்த உலகில் மரணம் அடையாதவர்கள் எவருமில்லை என்று எல்லோருக்கும் தெரியும். அனைவரையும் மரணம் நிச்சயமாக அடைந்தே தீரும் என்றும் எல்லோருக்கும் தெரியும். நமக்கு முன்னோரும் போய்விட்டார்கள், நமக்கு பின்னோரும் வந்து விடுவார்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், யாரும் மரணமடைய விரும்புவதில்லை.

மரணத்தை பற்றிய ஒரு மாயையும், பயமும் எல்லோருக்கும் உண்டு. மரணம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் ஒரு வகையான அச்ச உணர்வு பலரை கவ்விக் கொள்கிறது. அதுவும் ஒரு மருத்துவர் வாயிலிருந்து மரணம் என்ற வார்த்தை வெளிவரும் போது கடவுளே சொல்லிவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு. எமன் நம் முன்னே நின்றுக் கொண்டு வா வா என்று அழைப்பதைப் போன்ற ஒரு மாயை பலருக்கு உருவாகிவிடுகிறது.

குறள் 339:
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி, விழிப்பது போலும் பிறப்பு.

திருவள்ளுவர் மிக அழகாகச் சொல்கிறார். ஒருவன் காலையில் விழித்தெழுவதைப் போன்றது பிறப்பு, இரவு மீண்டும் உறங்குவதைப் போன்றது மரணம். மரணத்தை ஏன் உறக்கத்தோடு தொடர்புபடுத்தி கூறுகிறார் என்றால், நாம் ஒரு முறை மட்டுமே உறங்குவதில்லை, அனுதினமும் உறங்குகிறோம் மறுநாள் மீண்டும் எழுகிறோம். விழித்தெழும் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உறங்கச் செல்வார்கள்.

அந்த சுழற்சியைப் போன்றே பிறந்த அனைவரும் ஒரு காலத் தவணையில் மரணமடைவார்கள். அவர்கள் ஒரு காலத் தவணைக்குப் பிறகு மீண்டும் பிறந்து வருவார்கள். மற்றுமொரு குறளில் இப்படிக் கூறுகிறார்.

குறள் 338:
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே, உடம்பொடு உயிரிடை நட்பு.

உடலுக்கும், உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும், பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றது தான் என்கிறார். ஒரு முட்டை முழுமையாக வளர்ச்சி அடையும் போது, அது குஞ்சாக வெளிவருகிறது. அதைப் போன்றே மனித உயிரானது தனக்கான பயிற்சி காலத்தில் முதிர்ச்சி பெறும்போது, அது மேன்மையான அடுத்த பிறப்புக்குச் செல்வதற்காக உடலை விட்டுப் பிரிகிறது. முட்டை ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தால் தான், அதனால் பறவையாக பறக்க முடியும். அதைப்போலவே உடம்பெனும் இந்தக் கூட்டை விட்டு வெளியில் பறந்தால் தான், அந்த ஆன்மா அடுத்த மேன்மையான வாழ்க்கையை அனுபவம் செய்ய முடியும்.

ஆகையால் மரணமென்பது பயப்பட வேண்டிய விசயமோ, கொடுமையான விசயமோ அல்ல. மரணம் என்பது மனிதனின் உயிர் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் ஒரு முன்னேற்றம் அல்லது பழைய நோய்வாய்ப்பட்ட, பலகீனமான உடலைத் துறந்து, புதிய ஆரோக்கியமான உடலை அடையும் அழகான நகர்வு மட்டுமே.

உடல் தளர்ந்து விழுவதற்கு முன்பாக, முதுமை முடிவைத் தருவதற்கு முன்பாக, எமன் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக, நீங்களாக மனமுவந்து உயிரைத் துறக்க தயாராக இருங்கள். வாழ்க்கை எளிமையானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். மரணம் அமைதியானதாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்.

நோய்களும் நோய்களினால் உண்டாகும் மரணங்களும்

நோய்கள் வேறு, மரணம் வேறு
மரணம் என்பது அனைவருக்கும் வந்தே தீரும். மரணம் அடைவதற்கு என்று எந்த வயது வரையறையும் கிடையாது. யாருக்கும் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம். மரணம் முதுமையில்தான் வரவேண்டும் அல்லது நோய்கள் உண்டானால் தான் மரணம் உண்டாகும் என்று இயற்கையில் எந்த வரைமுறையும் கிடையாது.

நோய்களுக்கும் மரணத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நோய்கள் உயிரை கொள்ளும் என்பது வெறும் கட்டுக்கதையே. நோய்வாய்பட்ட எல்லோரும் மரணமடைவதில்லை. நோய்கள் உண்டாகி, நோய்களின் காரணமாக மரணமடைபவர்கள் மிகக் குறைவே. நோய்கள் உண்டானதும், நோய்களைக் கண்டு உண்டாகும் அச்சத்தினால் மரணமடைபவர்கள் தான் அதிகம்.

நாம் இதை சற்று வேறொரு கோணத்தில் இருந்து பார்ப்போம். நோய்வாய்பட்டு மரணமடைந்தவர்கள்; மரணமடைவதற்கு சில காலங்களுக்கு முன்பாக நோய்வாய்பட்டார்கள் என்று கூறலாம். காரணம், இது தான் உண்மை. மரணம் வேறு நோய்கள் வேறு. இவை இரண்டையும் முடிச்சுப்போட்டு பயமுறுத்தி பணம் பறிக்கிறார்கள் சில மருத்துவர்கள். எல்லா மருத்துவத்திலும் இது போன்ற மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒருவருக்கு ஏதாவது ஒரு நோய் உண்டானால் அதை குணப்படுத்துவது தான் ஒரு மருத்துவரின் வேலை. நோய் குணமாக வேண்டுமென்றால் முதலில் நோயாளியின் மனதில் தைரியத்தை விதைக்க வேண்டும், அடுத்ததாக நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை கொடுக்கவேண்டும், கடைசியாகத்தான் சிகிச்சை செய்ய வேண்டும்.

மன தைரியமும் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கையும் மட்டும் இருந்தாலே அனைத்து நோய்களும் பறந்து போய்விடும். மருந்து மாத்திரைகள் எதுவுமே தேவையில்லை. இதை விடுத்து மருத்துவர்கள் நோயாளிகளின் சாவுக்கு நாள் குறிக்கக் கூடாது. மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் இந்த நோய் கொன்றுவிடும், இந்த நோய் உண்டானால் இத்தனை நாட்கள்தான் உயிர் வாழலாம்; அந்த நோய் உண்டானால் அத்தனை நாட்கள்தான் உயிர் வாழலாம் என்று கூறுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

மருத்துவர்களே ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ளுங்கள், மனிதர்களின் பிறப்பும் இறப்பும் இறைவனின் கைகளில் உள்ளது உங்கள் கைகளில் இல்லை; ஆனால் உங்களின் வார்த்தைகளை முழுமையாக நம்பிக்கை கொள்ளும் நோயாளிகளின் மரணம் உங்கள் வாக்குப்படியே பெரும்பாலும் நடக்கிறது. அதனால் நோயாளிகளுக்கு நம்பிக்கையையும், மன தைரியத்தையும் உருவாக்குங்கள், நோயாளி இறந்துவிடுவார் என்று நீங்கள் கருதினாலும் அவரிடம் தெரிவிக்காதீர்கள்.

எல்லா மருத்துவர்களிடமும் ஒன்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு நோயின் தன்மை விளங்கவில்லை என்றாலோ, உங்களுக்கு ஒரு நோயைக் குணப்படுத்த தெரியவில்லை என்றாலோ. நோய் குணமாகாது என்று நீங்கள் கருதினாலோ. அதை நோயாளிகளிடம் தெரிவிக்காதீர்கள்.

இந்த உலகில் குணபடுத்த முடியாத நோய்களே கிடையாது. உங்களால் முடியாமல் போனாலும் அடுத்தவர் குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நோயாளிகள் மட்டும் மன தைரியத்தை இழந்து விட்டால், அவரை யாராலும் காப்பாற்ற முடியாது. அதனால் எந்த நோயும் குணமாகாது என்றும், இறந்துவிடுவீர்கள் என்றும் நோயாளிகளிடம் கூறாதீர்கள். என் மருத்துவரே குணமாகாது என்று கூறிவிட்டார் என்ற விரக்தி ஒன்று போதும் நோயாளிகளை கொல்வதற்கு.

மருத்துவர்கள் கடவுள்கள் அல்ல
நோயாளிகள் ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் ஒன்றும் கடவுள்கள் அல்ல. ஒரு மருத்துவர் ஒரு நோய் குணமாகாது என்று கூறினால், அதன் வார்த்தைகளின் உண்மையான பொருள், “எனக்கு இந்த நோயை குணபடுத்த தெரியாது” என்பதே. அவர்களால் முடியாவிட்டாலும் அந்த நோய்களைக் குணப்படுத்துவதற்கு யாராவது இருப்பார்கள் தேடிப்பாருங்கள். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள். நிச்சயமாக எல்லா நோய்களும் குணமாகும்.


புற்றுநோயினால் மரணங்கள் உண்டாகுமா?

புற்றுநோய் கட்டிகளை வெட்டாமல் இருந்தால். புதிய இரசாயனங்களையும், புதிய கழிவுகளையும் உடலில் சேர்க்காமலிருந்தால். புற்றுநோயினால் மரணங்கள் நடக்காது. உடலே அந்த புற்றுநோயை சுயமாக உடலை விட்டு வெளியேற்றிவிடும்.

அனைத்து நோய்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் இயல்பாகவே உடலுக்கு இருக்கின்றது.

நோயாளிகளின் நோய்கள் முற்றுவதற்கு காரணம் என்ன?

மனிதர்களுக்கு உடலில் தொந்தரவுகள் உண்டாவதற்கு உடலில் சேரும் கழிவுகள் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றன. இவ்வாறு இருக்கையில், உடலில் தொந்தரவு உள்ளவர்கள் ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இரசாயனங்களை மருந்துகள் என நம்பி உட்கொள்ளும் போது. உடலில் இரசாயனங்களும் கழிவுகளும் அதிகரித்து. சிறிய தொந்தரவுகள் நோய்களாக மாறுகின்றன. சில வேளைகளில் மரணங்களைக் கூட உண்டாகின்றன.

இந்த உலகத்தில் அனைத்து விஷயங்களும் அழியக்கூடியவையா?

இல்லை, இந்த உலகத்தில் நாம் காணும் அனைத்தும் ஒன்று மற்றொன்றாக மாற்றம் பெறுமே ஒழிய எதுவுமே அழியாது.

உதாரணத்துக்கு ஒரு பழம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பழத்தை மனிதன் சாப்பிட்டதும் பழம் அழிவதில்லை மாறாக பழம் மனிதனாக மாறிவிட்டது. மனிதன் இறந்து மக்கி மண்ணாகிறான். அந்த மண்ணிலிருந்து (மனிதனிலிருந்து) புற்களும் புழுக்களும் உற்பத்தியாகின்றன. புற்களை ஆடு சாப்பிடுகின்றது. புற்கள் ஆடாக மாறுகின்றன. ஆட்டை புலி சாப்பிட்டால், ஆடு புலியாக மாறுகிறது.

இவ்வாறு இந்த உலகில் உயிருள்ள மற்றும் உயிரில்லாத அதனை விஷயங்களும் அழியாமல் உருமாற்றங்கள் மட்டுமே அடைகின்றன.

நோய்க்கும் மரணத்துக்கும் என்ன தொடர்பு?

நோய்கள் வேறு மரணம் வேறு, இவை இரண்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நோய்கள் உருவானால் மரணம் உண்டாக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. ஆனால் சிலருக்கு மரணம் நெருங்குவதற்கு முன்பாக நோய்கள் உண்டாகலாம்.

நோயாளிகள் ஏன் திடீரென்று மரணமடைகிறார்கள்?

நோயாளிகள் உட்கொள்ளும் இரசாயனங்களின் பக்கவிளைவுகளாலும், இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்வதனாலும், தவறான மருத்துவம் செய்வதனாலும் நோயாளிகள் திடீரென மரணமடைகிறார்.

இரசாயன பயன்பாட்டை உடலால் ஏற்றுக்கொள்ள முடியாத போதும் அந்த கழிவுகளை உடலால் வெளியேற்ற முடியாத போதும் உடலின் உள்ளுறுப்புகள் திடீரென செயலிழந்து மரணம் உண்டாகிறது.

மரணம்


வயதும் மரணமும்

10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 என்று வயதை எண்ணுவது, மனிதன் எத்தனை வருடங்களாக இந்த உலகில் வாழ்கிறான், அவனுக்கு எவ்வளவு அனுபவம் இருக்கும் என்று கணக்கிடுவதற்காக தானே ஒழிய. அவனது மரண தேதியை கணக்கிடுவதற்காக அல்ல.

வயதுக்கும் நோய்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது அதைப்போலவே வயதுக்கும் மரணத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மரணம் எப்பொழுதும், எப்படியும், யாருக்கும் வரலாம். மரணம் மனிதனை நெருங்குவதற்கு எந்த நேரமும் தகுதியும் தேவையில்லை, யாருக்கும் எப்பொழுதும் வரலாம்.

ஒரு சிலர், யாராவது மரணித்து விட்டால் அவர் ஏன் மரணித்தார் என்று காரணம் கேட்பார்கள். ஒரு சிலர் ஒருவரை குறிப்பிட்டு அவருக்கு எந்த நோயுமில்லை, எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை ஆனால் திடீரென்று மரணமடைந்து விட்டார், ஏன் என்று கேட்பார்கள். ஒரு சிலர் அவன் சிறுகுழந்தை நான்கு ஐந்து வயதுதான் இருக்கும் ஆனால் திடீரென்று மரணமடைந்து விட்டான், ஏன் என்று கேட்பார்கள்.

இவர்கள் அனைவருக்கும் ஒரே பதில் தான், மரணம் நடக்க எந்தக் காரணமும் தேவையில்லை, மரணத்துக்கு வயது வரம்பு கிடையாது. மரணம் யாருக்கும் எப்பொழுதும் வரலாம். இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட வாழ்நாள் அளவு கொடுக்கப்படுகிறது. அந்த அளவு ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும், எல்லோருக்கும் ஒரே அளவான வாழ்நாள் இருக்காது. ஒரு மனிதன் இந்த உலகத்தில் பிறக்க ஒரு காரணமும் நோக்கமும் இருக்கும், அந்த நோக்கம் நிறைவேற எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு வாழ்நாள் மட்டுமே கொடுக்கப்படும். வந்த நோக்கம் நிறைவேறியதும், மரணம் சம்பவிக்கும்.

பிறந்த நோக்கம் நிறைவேற சிலருக்கு 90 ஆண்டுகள் ஆகலாம், சிலருக்கு 60 ஆண்டுகள் ஆகலாம், சிலருக்கு 40, சிலருக்கு 20, சிலருக்கு 10, அவ்வளவு ஏன் ஒரு சிலருக்கு 3 வயதுக்குள்ளாகவே பிறந்த நோக்கம் நிறைவேறி விடலாம். ஒரு உண்மையைச் சொல்கிறேன் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், மனிதன் இந்த மண்ணில் பிறந்த அன்றே மரணிக்கத் தொடங்கிவிடுகிறான். ஒவ்வொரு நாளும் அவன் உறங்குவது ஒரு சிறு மரணம்தான். மரணம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒத்திகைதான் தூக்கம்.

குறள் 339:
"உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி, விழிப்பது போலும் பிறப்பு"

என்றார் திருவள்ளுவர். ஒரு மனிதன் உறங்கும் நிலைதான் மரணம், உடலில் வாழ்ந்த ஆன்மா ஒரு நெடுந்தூக்கம் போடுவது தான் மரணமே ஒழிய, மரணம் ஒரு முடிவு கிடையாது. உறங்குபவன் எப்படி மறுபடியும் விழிப்பானோ அதைப்போல் மரணிப்பவனும் மறுபடியும் அடுத்த வாழ்க்கைக்குச் செல்வான். அந்த வாழ்க்கை எங்கே எப்படி இருக்கும் என்று நான் சொல்ல விரும்பவில்லை. அது அவர் அவர் ஞானத்தையும் நம்பிக்கையையும் பொறுத்தது. ஆனால் மறுபடியும் சொல்கிறேன் மரணம் ஒரு முடிவில்லை. வாழ்க்கை முடியாது தொடரும்…!

வயதானால் நோய்கள் நிச்சயமாக உண்டாகுமா?
சத்தியமாக கிடையாது! வயதானால் நிச்சயமாக நோய்கள் உண்டாகும் என்பது வெறும் கற்பனையும் கட்டுக்கதையும் மட்டுமே. வயது என்பது வெறும் அனுபவத்தின் எண்ணிக்கை அளவு மட்டுமே, தேய்மானத்தின் அளவு அல்ல. ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். மனிதனைப் படைத்த இறைவன் தவறுகள் செய்ய வழியே கிடையாது. இறைவன் தவறு செய்யும் பட்சத்தில் அதைச் சரிசெய்ய கூடியவரும் கிடையாது.

மனிதனின் நோய்களுக்கு காரணம்
இன்றைய மனிதன் அனுபவிக்கும் அனைத்து நோய்களுக்கும் அவன் மட்டுமே காரணம். இறைவன் சோதிக்கிறார், இறைவன் பயிற்சி கொடுக்கிறார் என்பதெல்லாம் மனிதனாக செய்துகொள்ளும் கற்பனைகள் மட்டுமே. உண்மையில் இறைவன் மனிதர்களுக்கு எந்த துன்பத்தையும், நோய்களையும் கொடுப்பதில்லை. மனிதன் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் அவன் மட்டுமே காரணமாகிறான்.

மனிதர்களின் தவறான உணவு முறைகளும், தவறான வாழ்க்கை முறைகளும் தான் அனைத்து நோய்களுக்கும் காரணமாக இருக்கின்றன. உணவு முறைகளையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றி அமைத்தால் நோய்கள் நிச்சயமாக அண்டாது. தற்போது நோய்கள் இருந்தாலும் நிச்சயமாக அவை குணமாகும்.

நமது புராணங்கள் மற்றும் இதிகாசங்களைப் பாருங்கள். நம் முன்னோர்கள் 100 வயதில் 120 வயதில் போர்களில் போரிட்டு இருக்கிறார்கள். 100 வயதுக்கு மேல் திருமணம் செய்தார்கள், 100-200 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவை கூறும். இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் வெறும் கற்பனையே என்று சொல்பவர்களுக்கு சொல்கிறேன், இல்லாத ஒன்றை யாராலும் கற்பனை செய்ய முடியாது. உதாரணத்துக்கு சொல்கிறேன், புலிக்கு 5 கால், 3 தலை, என்று கொஞ்சம் கூடுதலாக சொல்லலாமே ஒழிய இல்லாத ஒரு விலங்கை கற்பனை செய்து இருப்பதை போல் காட்டமாட்டார்கள்.

மனிதன் 100 வயதிலும் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் வாழ முடியும் என்பதற்கு பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை, உங்கள் முன்னோர்களைப் பாருங்கள். உங்கள் குடும்பத்திலேயே 2-3 தலைமுறைகளுக்கு முன்பாக 100 வயதுக்கு மேல் வாழ்ந்தவர்கள் இருப்பார்கள். என் வார்த்தையைக் கவனியுங்கள், நான் வாழ்ந்தார்கள் என்று சொன்னேனே ஒழிய இருந்தார்கள் என்று சொல்லவில்லை. படுத்த படுக்கையாக இருப்பவர்களைக் கூட நாம் இருக்கிறார்கள் என்று சொல்லலாம் ஆனால் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தவர்களைத்தான் வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியும்.

மனித வாழ்க்கை
மனிதனின் உடல் அனுதினமும் புதுப்பிக்கப்படுகிறது. மனித உடலில் புதிய செல்கள் உற்பத்தி ஆவதும் இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதும் ஒரு அன்றாட வேலையாக நடைபெறுகிறது. உடலின் ஒவ்வொரு பகுதியின் செல்களும் மறு சீரமைக்கப்படும், அதிகபட்சம் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு முழு மனிதன் தோன்றுகிறான். அதாவது நீங்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் உடலின் பெரும்பாலான பகுதிகளை புதுப்பித்து கொள்கிறீர்கள். இந்த படைப்பின் அடிப்படையில் பார்த்தால், மனிதனுக்கு எவ்வளவு கொடுமையான, எவ்வளவு ஆபத்தான நோய் இருந்தாலும் அவை 6 மாதங்களில் குணமாக வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேல் நோய் குணமாகவில்லை என்றால், நோய்களை குணமாகவிடாமல் அந்த நோயாளி ஏதோ தவறு செய்கிறார் என்று அர்த்தம்.

அவரின் நோய் குணமாகாமல் இருப்பதற்கு அவர் சாப்பிடும் மருந்து மாத்திரைகளே கூட காரணமாக இருக்கலாம். இல்லாத நோய்களுக்கு வைத்தியம் பார்க்கும் போதும், தவறான மருந்து மாத்திரைகள் சாப்பிடும் போதும், இரசாயனங்களை பயன்படுத்தும் போதும் நோய்கள் குறையாமல் பெருகக் கூடும். மரணம் கூட சம்பவிக்கலாம்.

மனித உடலை 120 வருடங்களுக்கு மேல் பயன்படுத்த முடியும் ஆனால் 100 வருடங்கள் 120 வருடங்கள் வாழ வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ஆனால் 30 வருடங்கள் வாழ்ந்தாலும் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக, மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ்ந்து, நிம்மதியாக மன நிறைவாக மரணிக்க வேண்டும். நிறைவேறாத ஆசைகளுடனும், ஏக்கங்களுடனும், பயத்துடனும் உயிர் பிரியக்கூடாது. மரணம் என்பது பயப்பட வேண்டிய ஒன்று அல்ல.

மரணம் என்பது ஒரு அழகான மகிழ்ச்சியான விசயம். “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து”, என்று மாணிக்கவாசகர் பாடும் அந்த எல்லாம் வள்ள இறைவனை நாம் சந்திக்க கூடிய ஒரு வாய்ப்பு. இந்த உடல் அனுபவிக்கும் எல்லா தொந்தரவுகள், உபாதைகள், நோய்களிலிருந்தும் விடுதலை அடைய கூடிய ஒரு வாய்ப்பு. உலகியல் வேதனைகள், துன்பங்களிலிருந்தும் விடுபட ஒரு வாய்ப்பு. அந்த மரணத்தை பார்த்து ஏன் பயப்பட வேண்டும்?.

இப்போது இருக்கும் வீட்டை விட்டு, இதைவிட ஒரு நல்ல விசாலமான அனைத்து வசதிகளும் நிறைந்த ஒரு வீட்டைக் கொடுத்தால் வேண்டாமென சொல்வீர்களா?. மரணம் என்பதும் அப்படிதான், ஊனமுற்ற நோய்வாய்பட்ட, முதுமை அடைந்த உடலை விட்டு வேறு ஒரு புதிய ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஒரு வாய்ப்பு. இது சந்தோஷப்பட வேண்டிய விசயம் தானே?.

எல்லாம் வல்ல இறைவனை, நம்மை படைத்த பரம்பொருளை அடைவது தான் மனித பிறப்பின் நோக்கமென்று அனைத்து சமயங்களும் சொல்கிறது. மரணம் அடையாமல் எப்படி அந்த பரம்பொருளை அடைவீர்கள்?.

மனிதன் மரணத்தை நினைத்து பயப்படுவதற்கு காரணம் அவனது மனம். அந்த மனதில் அவன் சேர்த்து வைத்திருக்கும் ஆசைகளும் இச்சைகளும். அந்த இச்சைகளை அடைய முடியாமல் அல்லது அடையாமல் இறந்து விடுவோமோ என்ற பயத்தில் தான் மனிதர்கள் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள்.

நோய்களால் உண்டாகும் மரணங்கள்
சிலர், நோய்வாய் கண்டு மரணிக்கிறார்கள். நோய்களுக்கும் மரணத்துக்கும் என்ன தொடர்பு?. நோய்கண்டவர்கள் மரணிப்பார்களா?.

மனித உடலின் குறைபாடுகளால் உண்டாகும் நோய்களை குணப்படுத்த முயற்சி செய்யலாம், அவற்றை குணப்படுத்த வாய்ப்புகள் உண்டு ஆனால் மரணம் நடக்க உண்டாகும் நோய்களை குணப்படுத்த முடியாது. மனித உடலில் நோய்கள் உண்டாக காரணம் என்ன வென்று ஏற்கனவே பல கட்டுரைகள் எழுதியுள்ளேன் அதை படித்து புரிந்துகொள்ளுங்கள்.

நோய்வாய் கண்டவர்கள் சிலர் மரணித்து விடுகிறார்கள். உண்மையைச் சொல்வதானால் அவர்களின் மரணத்துக்கும் அவர்களின் நோய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது. நோய்வாய்ப்பட்டவர்கள் மரணிக்கவில்லை, மாறாக மரணத்தின் தறுவாயில் அவர்களுக்கு நோய் கண்டது. புரிகிறதா?. நோய்கள் உண்டானால் மரணம் நிகழும் என்பது சுத்த பொய். ஆனால் மரணம் நிகழ வேண்டிய நேரம் வந்துவிட்டால், அந்த மரணத்தை நிகழ்த்த சிலருக்கு நோய் உண்டாகலாம்.

அதனால் நோய்களை கண்டோ, மரணத்தைக் கண்டோ பயம் கொள்ளாதீர்கள். தைரியமாக இருங்கள் அனைத்து உடல் உபாதைகளும் தானாக குணமாகும்.


வயதானவர்களுக்கு உண்டாகக்கூடிய நோய்கள்

வயதானவர்களுக்கு உண்டாகக் கூடிய நோய்கள், குறிப்பாக நாற்பது வயதைத் தொட்டவர்களுக்கு உண்டாகக்கூடிய நோய்கள்.

- கண்களின் பார்வை மங்கும்
- காதுகளின் கேட்கும் திறன் குறையும்
- ஞாபக மறதி உண்டாகும்
- பற்கள் கொட்டும்
- வாய் பேச கொளரும்
- மூச்சு விட சிரமம் உண்டாகும்
- சாப்பாடு முறையாக ஜீரணமாகாது
- மலச்சிக்கல் உண்டாகும்
- கை கால்களில் வலிகள் உண்டாகும்
- இடுப்பு வலி உண்டாகும்
- கால் வலி, கால் பாத வலி உண்டாகும்
- நடக்க, நிற்க சிரமமாக இருக்கும்
- சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும்
- மலம் கழிப்பதில் சிரமங்கள் தோன்றும்
- இரவில் தூக்கம் பிடிக்காது
- சர்க்கரை நோயும், இரத்த கொதிப்பும் உண்டாகும்
- உடலில் பலவகையான நோய்களும் தொந்தரவுகளும் உண்டாகும்.

இவ்வாறு, எந்த பன்னாடையாவது கூறினால். கண்டிப்பாக நம்பாதீர்கள். வயதானால் நோய்கள் உண்டாக வேண்டும் என்று எந்த இயற்கையின் சட்டமும் கிடையாது.

உங்களைப் படைத்தது இறைவன் அல்லது இயற்கை, என்று எதை நீங்கள் நம்பினாலும் உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறது. உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை காலமும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.

அதனால் எவனாவது வயதானால் அந்த நோய் உண்டாகும், வயதானால் இந்த நோய் உண்டாகும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்.

உங்கள் கூடவே வாழும் விலங்குகளை பாருங்கள். மரணம் வரும் வறையில் தன் வேலைகளை தானே செய்துகொள்கிறது. எந்த சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை. எந்த பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் ஜலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வறையில் ஆரோக்கியமாக வாழ்கிறது. சுயமாக தன் வேளைகள் அனைத்தையும் செய்துகொள்கிறது.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்கள் உண்டாகும், இயலாமை உண்டாகும் என்று நம்புகிறார்கள். வயது அதிகரிக்க அதிகரிக்க அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ தொடங்குகிறார்கள்.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
- முதுமை என்று எதுவுமே கிடையாது
- நோய்கள் என்று எதுவுமே கிடையாது
- இயலாமை என்று எதுவுமே கிடையாது

எல்லாம் உங்கள் மனதிலும், உங்கள் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

வயது அதிகரிக்க அதிகரிக்க முதுமை வரும், முதுமை உண்டானால் நோய்கள் உண்டாகும், முதுமை என்பது வலியும் வேதனையும் நிறைந்தது என்று மக்கள் மனதில் விஷத்தை கலக்கிறார்கள். யாரையும் நம்பாதீர்கள்.

மரணம் 

ஒரு மனிதனின் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?. அவன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து. நான் இந்த வாழ்க்கையை முடித்துக்கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். சென்று வருகிறேன்; மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று. அவன் குடும்பத்தினரிடம் விடைபெற்றுக் கொண்டு, மகிழ்ச்சியாக தன் உடலை துறக்க வேண்டும்.

யாருடைய மரணமும், சாலைகளிலோ, மரண படுக்கையிலோ, மருத்துவமனையிலோ ஏற்படக்கூடாது. 

சிந்தனையை மாற்றுங்கள், நான் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் வாழ்வேன் என்று நம்புங்கள். எல்லா தொந்தரவுகளும் பறந்து போகும். வாழும்போது ஆரோக்கியமாக வாழுங்கள் மரணம் வந்தால் மகிழ்ச்சியாக விடைபெற்று செல்லுங்கள். நல்லதே நடக்கும்.