புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

வீட்டுப் பிரசவம் மற்றும் சுகப்பிரசவம் ஆபத்தானதா?

இன்றும் உலகம் முழுவதும் கிராமப்புறங்களில் வீட்டுப் பிரசவமும் சுகப்பிரசவமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இன்னொரு பக்கத்தில் அரசாங்கங்களும் சில தனியார் அமைப்புகளும், ஆங்கில மருத்துவமும், வீட்டுப் பிரசவத்தை எதிர்த்து வருகின்றன.

"வீட்டுப் பிரசவம் ஆபத்தானதா?" என்ற கேள்வியை எழுப்பினால், "ஆம் ஆபத்தானதுதான்" என்றுதான் கூற வேண்டும். வீட்டுப் பிரசவம் என்பது ஆங்கில மருத்துவத்திற்கும், இரசாயன மருந்துகளை தயாரிப்பவர்களுக்கும், அவற்றை விற்பனை செய்பவர்களுக்கும், மருத்துவத்தின் மூலமாக செல்வம் சேர்க்கும் தொழில் அதிபர்களுக்கும் வீட்டுப் பிரசவம் ஆபத்தானதுதான்.

ஒரு பெண் கர்ப்பம் தரித்த நாளிலிருந்து, குழந்தை பிறந்து, அந்தக் குழந்தை சிறுவன் சிறுமி என்ற நிலையை அடையும் வரையில், மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், மருத்துவ செலவுகள், மருத்துவமனை செலவுகள், அறுவைசிகிச்சைகள், தடுப்பூசிகள், என்று பல்லாயிரம் கோடிகளை ஆங்கில மருத்துவத்திற்கு பெற்றோர்கள் வழங்குகிறார்கள்.

ஒரு பெண்மணி சுயமாக வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளும் சூழ்நிலை உருவானால், அந்தப் பெண்மணிக்கு ஆங்கில மருத்துவத்தின் எந்த ஒரு உதவியும் தேவைப்படாது. அந்தப் பெண்மணியிடமிருந்தும், அந்தப் பெண்மணியின் குடும்பத்தாரிடமிருந்தும், ஆங்கில மருத்துவத்திற்கு லட்சக்கணக்கான வருமான இழப்பு ஏற்படும்.

இந்த வருமான இழப்புகள் ஏற்படக்கூடாது, என்பதற்காகத்தான் இயற்கை மருத்துவத்தையும், இயற்கை வாழ்க்கை முறையையும், இயற்கையையும், அழித்து வருகிறார்கள் ஆங்கில மருத்துவ துறையை சார்ந்தவர்கள். உண்மையை அறிந்துகொண்டோ அல்லது அறியாமையினாலோ, பல அமைப்புகளும், நிறுவனங்களும், அரசாங்கங்களும், உறுதுணையாக இருக்கின்றன.

நம் கண் முன்னே வாழும் மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு, ஜீவன்கள் எல்லாம் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக கர்ப்பம் தரித்து, சுயமாக கருவை சுமந்து, சுயமாக பிரசவம் செய்து கொள்ளும் போது. ஆறறிவு மனிதனுக்கு என்ன கேடு வந்தது?. அவனால் சுயமாக கர்ப்பம் தரிக்க முடியவில்லை, சுயமாக கருவை வளர்க்கத் தெரியவில்லை, சுயமாக பிரசவம் செய்ய தெரியவில்லை, எங்கே தவறு நடக்கிறது?.

நம் முன்னோர்கள் என்று சொல்லத்  தேவையில்லை, இன்றும் நம் கிராமங்களில் சுகப் பிரசவங்களும், வீட்டுப் பிரசவங்களும், நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதை யாரும் பெரிதுபடுத்துவதோ, தடுக்க முயற்சிகள் செய்வதோ கிடையாது. ஏனென்றால் கிராமங்களில் வாழும் ஏழைகளிடம் பணம் இல்லை.

இன்று இயற்கை மருத்துவத்தையும், வீட்டுப் பிரசவத்தையும், எதிர்ப்பவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான். கர்ப்பம் தரிக்கும், பெண் கர்ப்பம் தரித்தது முதல், பிரசவம் ஆகும் வரையில், அவர்களை பணம் காய்க்கும் மரமாக நினைத்து, அவர்களிடம் பணம் சுரண்ட வேண்டும். இந்த வருமானம் கெட்டுவிடும் என்பதற்காகத் தான் அனைவரும் ஒன்று சேர்ந்து மிரட்டுகிறார்கள்.

இந்த நிலை தொடர்ந்தால், 50 வருடங்களில் சுகப்பிரசவம் என்ற சொல் கூட அழிந்துவிடும். பிரசவம் என்றாலே, அருத்துதான் எடுக்க வேண்டும், என்ற சூழ்நிலையை உருவாக்கி விடுவார்கள். உங்கள் எதிர்கால தலைமுறையினர், எவ்வாறு வாழ வேண்டும்? எவ்வளவு நாட்கள் வாழ வேண்டும்? எவ்வாறு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்? என்பதை நீங்கள்தான் இன்று முடிவு செய்ய வேண்டும்.

சரி இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இதே ஆங்கில மருத்துவ முறை தானே மேற்கத்திய நாடுகளிலும் பின்பற்ற படுகின்றன? அங்குள்ள மருத்துவர்கள் மட்டும் எவ்வாறு வீட்டுப் பிரசவங்களை அனுமதிக்கிறார்கள்?. காரணம், அங்குள்ள மக்கள் சிந்தனை ஆற்றல் உள்ளவர்கள், மற்ற உயிர்கள் எவ்வாறு வாழ்கிறது என்பதை பார்க்கிறார்கள், சிந்திக்கிறார்கள். நம் நாட்டிலோ பக்கத்து வீட்டுக்காரர் எப்படி வாழ்கிறார் என்பதை மட்டும்தான் பார்க்கிறோம்.

பக்கத்து வீட்டில், எதிர் வீட்டில், அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெறுகிறார்கள் என்றால், நாமும் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றுக் கொள்வது சரிதான், என்ற முடிவுக்கு வருகிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள்.

வீட்டுப் பிரசவம் மற்றும் சுகப்பிரசவம் ஒன்றும் குதிரைக் கொம்பான காரியமல்ல. அமேரிக்கா, ஐரோப்பா, போன்ற வளர்ந்த மேற்கத்திய நாடுகள் அனைத்திலும், சுகப்பிரசவம் மற்றும் வீட்டுப் பிரசவ முறை அரசால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. ஏனென்றால் அங்கே நோயாளிகளை பணம் காய்க்கும் மரமாக மருத்துவர்கள் பார்ப்பதில்லை.

இந்தியாவில் தான் மிக அதிகமாக, மருத்துவர்கள் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் இருக்கிறார்கள். நாம் தான் புத்திக் கூர்மையுடன், சிந்தித்து செயல்பட வேண்டும். சிந்தியுங்கள். வீட்டுப் பிரசவம் கூடாது என்று கூக்குரலிடும் மருத்துவர்கள் பலரும் வீட்டில் தான் பிறந்திருப்பார்கள்.


பெண் பிள்ளைகளின் பருவம் அடையும் காலமும் உடல் உபாதைகளும்

இந்த காலத்தில் பெண் பிள்ளைகள் வெகு விரைவாக, 12 வயதிலெல்லாம் பூ பெய்து விடுகிறார்கள். சில பிள்ளைகள் 10 வயதிலும், இன்னும் சில பிள்ளைகள் 9 வயது, 8 வயதிலெல்லாம் பூ பெய்து விடுகிறார்கள். இது இயற்கைக்கு மாறான தன்மையாகும்.

விரைவாக பருவம் அடைவது ஆரோக்கியம் அல்ல
பெண் பிள்ளைகள் பருவம் அடைவதாவது, அவள் கர்ப்பப்பையில் ஒரு உயிரை, ஒரு குழந்தையை சுமக்க, அவளின் கர்ப்பப்பை தயாராகி விட்டது என்பதைத் தானே அறிவிக்கிறது? 12 வயதில், 9 வயதில், 8 வயதில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை சுமக்க தயாராக இருக்கிறது என்று உடல் அறிவித்தால், அந்த உடலில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்று தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

14 வயதுக்கு மேல் பருவம் அடைவது தான் ஆரோக்கியம்
14 - 15 வயதுதான் பெண் பிள்ளைகள் பருவம் அடைய ஏற்ற பருவமாகும். இது புரியாமல் 15 - 16 வயதில் பூப்பெய்தும் பிள்ளைகளை நோயாளி போலும் 12 வயதில் பூப்பெய்தும் பிள்ளைகளை ஆரோக்கியவான் போலும் மக்கள் நினைக்கிறார்கள். ஒரு பெண் பிள்ளை 14 வயதுக்கு முன் பருவம் அடைந்து விட்டால், அவளின் கர்ப்பப்பை பலகீனமாக இருக்கிறது என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 14 வயதில் பருவம் அடைவதே ஆரோக்கியமாகும்.

பெண் பிள்ளைகள் விரைவாக பூபெய்த கரணம்
பெண் பிள்ளைகள் விரைவாக பூபெய்வதற்கு காரணம் அவளின் கர்ப்பப்பையும் உடலும் பலகீனமாக இருப்பதுதான். தவறான உணவு முறைகளினாலும், தவறான வாழ்க்கை முறைகளினாலும் தான் இந்த தொந்தரவுகள் உருவாகின்றன. குறிப்பாக பசியின்றி உண்பது, பசிக்கு மீறி உண்பது, ஹார்மோன் ஊசி போடப்பட்ட கோழி இறைச்சிகளை அதிகமாக உண்பது, KFC, Marry Brown, McDonald, Pizza, Burger, Fries, Chips போன்ற துரித உணவுகளை அதிகமாக உண்பது.

பாகெட்களில் அடைக்கப்பட்ட உணவுகள், பிஸ்கெட், நொறுக்கு தீனிகள், குளிர்பானங்களை அதிகமாக உண்பது, மற்றும் மன அழுத்தங்களும், உடல் ஆரோக்கியம் சீர்கெட முக்கிய காரணமாக இருக்கின்றன.

பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, பெற்றோர்கள் இத்தகைய உணவு வகைகளை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்க வேண்டும். இல்லை என் பிள்ளைகள் பேச்சை கேட்பதில்லை, அடம் பிடிக்கிறார்கள் என்று நீங்கள் கூறினால். அவர்களுக்கு அந்த பழக்கத்தை உருவாகியதே நீங்கள்தான். சற்று கடுமையாக நடந்து கொள்ளுங்கள்.

பருவம் அடைந்த சிறுமிகளின் தொந்தரவுகள்
பருவம் அடைந்த பெண் பிள்ளைகள், பருவம் அடைந்த ஆரம்ப கால கட்டத்தில் சில தொந்தரவுகளை உணரலாம். குறிப்பாக மாதம் தவறி வருதல், அதிகமாக அல்லது குறைவான மாத போக்கு. மாத போக்கு சில நாட்கள் நீடித்தல் அல்லது ஓரிரு நாட்களில் நின்று விடுதல். பருவம் அடைந்து சில மாதங்கள் வராமல் இருத்தல். கால், தொடை, இடுப்பு பகுதிகளில் வலி போன்றவை.

பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் இவற்றை தெரிந்து, புரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களின் பெண் பிள்ளைகளுக்கும் கற்று தர வேண்டும்.

- 16 வயது வரையில் பருவம் அடைய வில்லை என்றாலும் பரவாயில்லை, பொறுமையாக இருங்கள், உடல் தன்னை தானே சீர்செய்து கொண்டு, பருவம் அடைவாள்.

- பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு, சில மாதங்கள் மாத சுழற்சி நடக்கவில்லை என்றால் தவறில்லை.

- பருவம் அடைந்த பெண் பிள்ளைகளின் மாத சுழற்சி முறையாக நடக்க சில காலம் ஆகலாம், சிலருக்கு சில வருடங்கள் கூட ஆகலாம், அதனால் பயம் தேவை இல்லை.

பெண் பிள்ளைகளின் தொந்தரவுகளுக்குத் தீர்வு
பெண் பிள்ளைகள் பருவம் அடைந்த தொடக்கத்தில் தோன்றும் எந்த தொந்தரவுகளுக்கும் மருத்துவம் பார்க்க கூடாது. மீறி மருத்துவம் செய்தால் அது அவர்களின் கர்ப்பப்பையை பாதித்து நோய்களையும், உடல் உபாதைகளையும் உருவாகும்.

உணவு முறைகளையும் வாழ்க்கை முறைகளையும் சரி செய்தாலே போதும், அனைத்து தொந்தரவுகளும் குணமாகும். பசி எடுத்து சாப்பிட சொல்லுங்கள். இனிப்பான பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகமாகச் சாப்பிட கொடுங்கள். இரவில் விரைவாக படுக்கைக்கு செல்ல சொல்லுங்கள். இது போதும், எந்த மருத்துவமும் தேவையில்லை.

தற்போது ஏதாவது மருந்துகள் கொடுத்து கொண்டிருந்தால், உடனே நிறுத்துங்கள். அனைத்து தொந்தரவுகளும் படி படியாக குணமாகும்.

An acupuncture point to cure women's physical health disorders


பெண்களின் அனைத்து உடல் உபாதைகளையும் குணப்படுத்தக் கூடிய அக்குபங்க்சர் புள்ளி.

கருவில் வளரும் குழந்தை சத்தாகவும் ஆரோக்கியமாகவும் வளர என்ன சாப்பிடலாம்?

குழந்தை ஆரோக்கியமாக வளர, அன்றாட உணவை பசி உண்டான பின்பு, பசியின் அளவுக்கு சாப்பிட வேண்டும். இனிப்பான பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பரம்பரை நோய்களை தடுக்க முடியுமா?

நிச்சயமாக முடியும், கர்ப்பம் தரித்த பெண்கள் அவர்களின் உடலின் மொழிகளை புரிந்து நடந்துகொண்டு. எந்த ஊசி, மருந்துகளும் பயன்படுத்தவில்லை என்றால் பரம்பரை நோய்களை குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்கும் ஆற்றல் தாயின் கர்ப்பபைக்கு இயற்கையாகவே உள்ளது.

சில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்?

பெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள் கர்ப்பம் தரிப்பதும் மிகவும் இயல்பாக நடக்கக் கூடிய விசயங்களில் ஒன்று. அறியாமையினாலும் வியாபார நோய்களினாலும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதையும் பெண்களின் கர்ப்ப காலங்களையும் ஏதோ மிகவும் ஆபத்தான ஆச்சரியமான விசயங்களில் ஒன்று என்பதை போன்ற ஒரு மாயையை உருவாக்கி விட்டார்கள் சில தரப்பினர்.

நம் முன்னோர்கள் சர்வ சாதாரணமாக பத்துப் பதினைந்து குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள். முன்னோர்கள் என்று கூறியவுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கி செல்லத் தேவையில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக கூட நம் குடும்பங்களில் பத்து குழந்தைகளை ஈன்ற தாய்மார்கள் இருந்தார்கள். குழந்தைகளை பெற்றுக் கொள்வது அவர்களுக்கு கடினமான விசயமாக இருக்கவில்லை.

ஆங்கில மருத்துவம் விரிவான பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் நம் பெண்களுக்கு இந்த நிலைமை உருவானது. இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்வதையே ஒரு சாதனையைப் போல் எண்ணுகிறார்கள் சில பெண்கள். இதற்கு காரணம் கர்ப்பம் தரிக்க இயலாமலும், சுகப்பிரசவம் செய்ய இயலாமலும், ஆரோக்கியமான குழந்தைகளை ஈன்றெடுக்க இயலாமலும் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து பெருமை கொள்கிறார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரையில் மிக இயல்பாக நடந்து வந்த ஒரு விசயம் இப்போது திடீரென கடினமான ஒரு விசயமாக மாறியதற்கு என்ன காரணம்?

கர்ப்பம் தரிக்க இயலாமைக்கு பெரும்பாலும் ஆண்கள் காரணமாக இருக்க மாட்டார்கள். ஆணின் விந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது கர்ப்பம் தரிக்க இயலாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம், என்று கூறுவது வெறும் வேடிக்கையான விசயம் மட்டுமே. ஒரு குழந்தை உருவாக ஒரு தரமான விந்து போதும். விந்து தரமாக இல்லையென்றால் ஆண்களுக்கு வீரியம் உருவாகாது. ஆணுக்கு வீரியம் இருக்கிறது என்றால் அவனின் விந்தால் குழந்தையை உருவாக்க முடியும் என்று அர்த்தம்.

பெரும்பாலும் குழந்தை உருவாகாமல் இருப்பதற்கு பெண்களே காரணமாக இருக்கிறார்கள். பெண்ணுறுப்பில் செலுத்தப்படும் விந்து சுயமாக நீந்திச் சென்று பெண்ணின் கருமுட்டையை அடையும் என்று பலர் நினைக்கிறார்கள். சில மருத்துவர்களும் இதைத்தான் கூறிவருகின்றனர். உண்மை என்னவென்றால் பெண்ணின் கருமுட்டை தான் ஆணின் விந்தை தன்பக்கம் கவர்ந்திழுக்கும். வெளியில் எவ்வாறு அழகான பெண்கள் ஆண்களை கவர்ந்திழுக்கிறார்களோ அதைப் போன்றே, கர்ப்பப்பையிலும் ஆரோக்கியமான கரு முட்டைகளே விந்தணுவை தன்பக்கம் கவர்ந்திழுக்கும். இரண்டும் சேர்ந்து குழந்தையாக உருவாகும்.

சிறுவயது முதலாக பெண் பிள்ளைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் அவர்கள் கர்ப்பம் தரிக்க இயலாமைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அடுத்ததாக அவர்களின் சிறு சிறு உடல் தொந்தரவுகளுக்கும் குழந்தை முதலாக கொடுக்கப்பட்ட மருந்துகளும் மாத்திரைகளும் அவற்றிலிருக்கும் இரசாயனங்களும் முக்கியமான காரணமாக அமைகின்றன.

சிறுவயது முதலாக பசியில்லாமல் கொடுக்கப்பட்ட உணவுகள், குழந்தைகளின் உடலில் நோய்களை உருவாக்குகின்றன. ஆண் பிள்ளைகளுக்கு வீரிய குறைபாட்டையும் பெண் பிள்ளைகளுக்கு கர்ப்பப்பையின் பலவீனத்தையும் உருவாகின்றன.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கருத்தரிக்க இயலாமல் இருப்பதற்கு இரண்டே முக்கிய காரணங்கள்தான் இருக்கின்றன. ஒன்று ஒரு குழந்தையை சுமந்து வளர்க்கும் அளவுக்கு அவர்களின் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இல்லை. அடுத்தது ஒரு குழந்தையை ஆரோக்கியமாக கர்ப்பப்பையில் வளர்த்து உருவாக்கும் அளவிற்கு அவர்களின் உடலில் சக்தி போதவில்லை. இவை இரண்டையும் சரி செய்தால் கர்ப்பம் தரிப்பதும் குழந்தையை ஈன்றெடுப்பது மிகவும் எளிதான காரியமாக இருக்கும்.

உடலின் ஆரோக்கியமும், சத்து உற்பத்தியும், செரிமானமும், மாதவிடாய் சுழற்சியும், முறைப்படுத்தப்பட்டால் மட்டுமே பெண்கள் எளிதாக கர்ப்பம் தரிக்க முடியும். இயற்கையாக இறைவன் கொடுத்த வழிமுறைகளை விட்டுவிட்டு செயற்கையாக கருத்தரிக்க முயல்வது முட்டாள்தனம் அன்றி வேறில்லை. கர்ப்பம் தரிக்க இயலாத பெண்களே இந்த உலகில் கிடையாது. அனைத்து பெண்களாலும் கர்ப்பம் தரிக்க முடியும். அழகான ஆரோக்கியமான நல்ல குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். இதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் பொருட்களை வாங்க கடைக்குச் சென்றால் எவ்வாறு அந்த பொருட்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து வாங்குவீர்களோ அதைப்போன்றே இயற்கையும் ஒரு குழந்தையை இந்த மண்ணில் படைக்கும் போது சிறந்த கர்ப்பப்பையையே தேர்ந்தெடுக்கும். ஆரோக்கியமான நிலத்தில் நல்ல விளைச்சல் உருவாவதைப் போன்று ஆரோக்கியமான கர்ப்பப்பையில் மட்டுமே ஆரோக்கியமான குழந்தைகள் உருவாகும்.

கர்ப்பம் தரிக்க எண்ணம் கொண்ட பெண்கள் முதலில் அனைத்து வகையான மருத்துவ முறைகளையும் தவிர்க்க வேண்டும். இதுவரையில் பயன்படுத்தி வந்த அனைத்து மருந்து மாத்திரைகளையும் நிறுத்த வேண்டும். குறிப்பாக ஆங்கில மருத்துவத்தின் பக்கமே தலைவைத்தும் படுக்கக் கூடாது.

வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளை மாற்றவேண்டும். பசித்தால் மட்டுமே உணவை பசியின் அளவுக்கு உட்கொள்ள வேண்டும். தாகம் இல்லாமல் தண்ணீர் அருந்தக்கூடாது. தேவையில்லாமல் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இரவில் ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்கு சென்று விட வேண்டும்.

உடலின் சத்துக்களையும் சக்தியையும் மேம்படுத்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும். இரவில் வெறும் வயிற்றுடன் படுக்கைக்கு செல்ல வேண்டும்.

இவற்றை பின்பற்றினால் கர்ப்பப்பை சுத்தமாகி, பலமடைந்து இறைவனின் அருளால் கர்ப்பம் தரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இறைவனை நம்புங்கள், இயற்கையை நம்புங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்.

கர்ப்பமான பெண்களுக்கு ஐயோடின் உப்புகளினால் ஆபத்து

கர்ப்பம் தரித்த பெண்கள் ஐயோடின் கலந்த உப்புகளை (iodized salt) பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். பாக்கெட் உப்புகளில் கலக்கப்படும் ஐயோடின் உடலில் தேவையற்ற தைரொயிட்  ஹார்மோன்களை (thyroid hormone) சுரக்க செய்யும். இதனால் தாயின் உடல் பெருத்துவிடும். கருவில் வளரும் குழந்தையும் ஊதிப் பெருத்துவிடும்.

ஐயோடின் கலந்த உப்பு மிக நன்மையானது என்று சில ஆங்கில மருத்துவர்கள் கூறுவார்கள், நம்பாதீர்கள். உண்மையில் ஐயோடின் கலந்த உப்பு மிக கேடானது. மனித உடலுக்கு பல வகையான தீங்குகளை விளைவிக்கும்.

கர்ப்பமான பெண்களுக்கு ஐயோடின் கலந்த உப்பை இலவசமாக சில மகப்பேறு மருத்துவர்கள் கொடுப்பதாக கேள்விப்பட்டேன். ஏன் இலவசமாகக் கொடுக்கிறார்கள் தெரியுமா?. எல்லாம் பணம் பண்ணும் நோக்கம் தான்.

ஐயோடின் கலந்த உப்பை சாப்பிட்டால்தான் கர்ப்பம் தரித்த பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான தொந்தரவுகள் உருவாகும். வயிற்றில் வளரும் குழந்தை அளவுக்கு மீறி ஊதிப் பெருத்து, சுயமாக பிரசவம் ஆக முடியாமல், (சிசரியன்) அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பிரசவத்துக்குப் பின்பும் இடுப்பு, தோள்பட்டை, தொடை , கால் மற்றும் கர்ப்பப்பை சம்பந்தமான தொந்தரவுகள் உருவாகும். கர்ப்பம் தரித்ததிலிருந்து குழந்தை பிறந்த பின்பும், அந்தப் பெண்களை நிரந்தர நோயாளிகளாக வைத்திருக்கும் கெட்ட எண்ணம் தான் காரணம்.

கர்ப்பமான பெண்கள் மட்டுமின்றி அனைவருமே பாக்கெட்களில் வரும் உப்புக்களையும், ஐயோடின் கலந்த உப்புக்களையும் பயன்படுத்துவதை தவிர்த்து. சுத்தமான கல்லுப்பை வாங்கி பயன்படுத்துங்கள். நோய் உண்டாகி பின் மருத்துவம் செய்வதை காட்டிலும், நோய்கள் உருவாகாமல் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.

கணவன் மனைவி தாம்பத்தியம்

தாம்பத்தியத்தில் திருப்தி அடைந்தீர்களா?

70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிறது. தாம்பத்தியத்தில் திருப்தி அடைந்த மனிதர்கள் மட்டுமே வாழ்கையில் திருப்தி அடைவார்கள். தாம்பத்தியத்தில் முழு திருப்தி அடையாத மனிதனிடம் வேறு என்ன இருந்தாலும் ஒரு வெறுமையை உணர்வான்.

தாம்பத்திய உறவில் பலர் திருப்தி அடையாததற்குக் கரணம். தாம்பத்திய உறவு என்பது வெறும் ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் சார்ந்தது என்று நம்பிக் கொண்டிருப்பதுதான்.

காமம் என்பது உடல் மட்டுமே சார்ந்த விஷயம் அல்ல. காமம் உடல், மனம், புத்தி, சக்தி என நான்கு விசயங்கள் சம்பந்தப்பட்டவை. மனமும் புத்தியும் இணையாமல் உடலுறவு கொள்வதால்தான், இன்றைய கால கட்டத்தில் பல கணவன் மனைவிகள் உடலுறவில் திருப்தி இல்லாமல் வாழ்கிறார்கள். கணவனிடமோ மனைவியிடமோ உடலுறவில் திருப்தி அடையாதவர்கள், வேறு ஒரு ஜோடியைத் தேடி போகிறார்கள்.

ஆண்களுக்கு சில அறிவுரைகள்
1. சினிமா, வீடியோ மற்றும் கதைகளில் வரும் பெண்களோடு உங்கள் மனைவியை ஒப்பிடாதீர்கள். அவை வெறும் நடிப்பு, கற்பனை, உங்கள் மனைவியோ உண்மை.

2. செக்ஸ் வீடியோக்களில் வரும் பெண்களுடன் உங்கள் மனைவிகளை ஒப்பிடாதீர்கள். அவர்களை போல் இருக்க வேண்டும், நடிக்க வேண்டும், நடந்து கொள்ளவேண்டும் என்று ஆசை படாதீர்கள். அது பெரிய தவறு.

3. செக்ஸ் வீடியோக்களில் வருவதை போல் உடலுறவு கொள்ள வேண்டும் என்று ஆசை படாதீர்கள். அவை வெறும் நடிப்பு மட்டுமே. அதில் எதுவும் உண்மை இல்லை.

4. செக்ஸ் வீடியோக்களில் வரும் ஆண்களுடன் உங்கள் ஆணுறுப்பை ஒப்பிடாதீர்கள். அவை வெறும் கேமரா லென்ஸ் விளையாட்டுக்கள். ஒவ்வொரு ஆணுக்கும் ஆணுறுப்பின் அளவு மாறுபடும் ஆனால் பெண் அனுபவிக்கும் சுகத்தில் ஒன்றும் பெரிய வித்தியாசமாக இருக்காது. அதனால் கவலை வேண்டாம்.

5. ஆணுறுப்பு ஒல்லியான ஆணுக்குப் பெரிதாகவும் பருமனான ஆண்களுக்குச் சிறிதாகவும் இருப்பது போல் தோன்றும், அதற்குக் காரணம். அவர்களில் தொடை பெரிதாக இருப்பதால் அதன் இடையில் இருக்கும் ஆணுறுப்பு, தொடையுடன் ஒப்பிடும்போது சிறிதாக இருப்பது போல் தோன்றும்.

6. தினமும் உடலுறவு கொள்ளவேண்டும், அல்லது அடிக்கடி உடலுறவு கொள்ளவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது.

7. உண்மையில் ஆசையும், தேவையும் இருந்தால் மட்டுமே உடலுறவு கொள்ளுங்கள்.

8. மனைவியை வற்புறுத்தாதீர்கள். வேண்டா வெறுப்பாக உடலுறவு கொள்வதில் இன்பம் இருக்காது.

9. படம், வீடியோ, கதைகள் என எந்த வெளித் தூண்டுதலும் இல்லாமல். தானாகத் தோன்றும் காம உணர்வுக்கே உடலும் மனமும் முழு ஒத்துழைப்பும் கொடுக்கும்

10. உடலுறவு என்பது, வெறும் விந்தை வெளியாக்கும் வேலை அல்ல, எனது சுகம், எனது திருப்தி என்று சுயநலமாக இருக்காதீர்கள். மனைவியின் சுகத்துக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

11. ஆண்களுக்கு விந்து வெளியானால் போதும் திருப்தி உணர்வு வந்துவிடும். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அவள் மனம் திருப்தி அடைந்தால் மட்டுமே அவளுக்கு நிறைவு அடையும்.

12. மனைவியை ரசிப்பதையும், ருசிப்பதையுமே அவள் அதிகம் விரும்புவாள். அதுதான் அவளுக்கு முழு திருப்தியை தரும்.

13. உங்கள் மனைவியைத் திருப்தி படுத்துவதும், அவளை மகிழ்ச்சிப் படுத்துவதுமே உண்மையான உடலுறவு என்று புரிந்துகொள்ளுங்கள்.

14. உங்களுக்குப் பிடித்த ஒன்று உங்கள் மனைவிக்குப் பிடிக்காமல் இருக்கலாம், சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

15. ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் பொழுது உங்கள் மனைவியின் மன நிலையை கவனியுங்கள். அவள் திருப்தி அடைந்தாளா? அவளுக்குப் பிடித்திருக்கிறதா? என்று அறிகுறிகளை கவனித்து செயல்படுங்கள்.

16. நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தாள், அவள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பாள். இன்பத்தை கொடுத்து திரும்ப பெற்றுகொள்ளுங்கள்.

17. உண்மையான காம உணர்வு வரும் வரை காத்திருந்து, உறவு கொண்டால் இன்பம் பல மடங்கு கூடுதலாக இருக்கும்.

18. மனைவியைப் பார்த்து தானாகத் தோன்றும் காம உணர்வில்தான் மனம் திருப்தி அடையும்.

19. ஒரு ஆணின் முழுமையான ஆண்மையின் வளர்ச்சி 35 வயதுக்கு மேல்தான் முழுமை அடையும் அதனால். 35 வயதைத் தாண்டியதும், கிழவனைப் போல் உணராதீர்கள். 30 வயதுக்கு மேல்தான் காளை பருவம் ஆரம்பம். பூந்து விளையாடுங்கள்.

20. ஆரோக்கியமான ஆண் 80 வயதிலும் உடலுறவு கொள்ள முடியும்.


பெண்களுக்கு சில அறிவுரைகள்
1. கணவனுடன் உடலுறவில் ஒத்துழையுங்கள். இரண்டு கை தட்டினால்தான் ஓசை உண்டாகும். இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் முழுமையான இன்பம் கிட்டும்.

2. கணவனின் மனம் அறிந்து நடந்துகொள்ளுங்கள். அவன் வேலைக்கும், வெளியிடங்களுக்கும் சென்று வருவதினால், அவன் மனம் எப்பொழுதும் ஒரே சமநிலையில் இருக்காது.

3. கணவனின் ஆசைகளை நிறைவேற்றுவதே உங்களின் பொறுப்பு என்று உணர்ந்து செயல்படுங்கள். அதுக்காக உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். விருப்பமில்லாதவற்றைச் செய்யாதீர்கள்.

4. உடலுறவில் ஈடுபடும் பொழுது உங்கள் உணர்வுகளை அறிகுறிகள் மூலமோ, ஓசைகள் மூலமோ கணவனுக்கு அறிவியுங்கள்.

5. சுத்தமாக, அழகாக அலங்காரம் செய்யும் மனைவிகளைத்தான் கணவர்களுக்கு அதிகம் பிடிக்கும். முடிந்தவரையில் சுத்தமாகவும், அழகாகவும் இருங்கள்.

6. உங்களுக்கு ஆசைகள் உணர்வுகள் வந்தால் கணவனிடம் தயங்காமல் குறிப்பின் மூலம் உணர்த்துங்கள். ஆசையை அடக்காதீர்கள்.


தாம்பத்தியத்தில் திருப்தி அடைய

1. முடிந்தவரையில் உண்மையான ஆசை இல்லாமல் சேராதீர்கள்

2. முடிந்தவரையில் தாம்பத்தியத்தை இரவில் வைத்துக்கொள்ளுங்கள்

3. முடிந்தவரையில் தாம்பத்தியத்தை இருட்டான அறையில், ஒரு சிறு வெளிச்சம் மட்டும் இருக்கும் அறையில் வைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.

4. ஆணுறை பயன்படுத்தாதீர்கள். விந்தை உள்ளே விடாவிட்டால் பிள்ளை தங்காது பயம் வேண்டாம்.

5. ஆணுறை பயன்படுத்தினால் 50% இன்பம் கூட கிடைக்காது.

6. உங்கள் ஜோடியின் மனம் மற்றும் தேவை அறிந்து நடந்து கொள்ளுங்கள்.

7. எடுத்த எடுப்பில் உடலுறவில் ஈடு படாமல். மெதுவாகவும் பொறுமையாகவும் முதலில் காதல் செய்யுங்கள். பொறுமையாக நிதானமாக நடந்து கொண்டால்தான், சிறப்பாக இருக்கும்.

8. கணவன் மனைவி இருவரும் உடலுறவின் வேளைகளில் உங்கள் ஐம்பொறிகளையும் பயன் படுத்துங்கள்.

9. பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, உணர்வது என ஐந்து பொறிகளையும் பயன்படுத்தி முழுமையாக ரசித்து விளையாடுங்கள்.

10. ஒவ்வொரு முறையும் புது புது முறையை (position) முயற்சி செய்யுங்கள். தினமும் ஒரே மாதிரி செய்தல் சலிப்புதட்டிவிடும். குறைந்த பட்சம் 20 முறைகளை (position) கற்றுக்கொள்ளுங்கள்.


மனைவி கர்ப்பம் தரிக்காமல் இருக்க ஆணுறையை பயன்படுத்தலாமா?

தேவையில்லை. விந்து பெண்ணின் பிறப்புறுப்புக்குள் செல்லாமல் இருந்தாலே கர்ப்பம் தரிக்காது. ஆணுறுப்பை பயன்படுத்தி மனைவியுடன் சேரும்போது முழு சுகம் கிடைக்காது, திருப்தியும் இருக்காது.

கணவன் மனைவி உடலுறவு கொள்ள உகந்த நேரம் எது?

உடலுறவுக்கு என்று குறித்த நேரத்தை ஒதுக்காமல். காம ஆசை சுயமாக தோன்றும் நேரத்தில் உடலுறவு கொள்வதுதான் நல்லது. அப்போதுதான் திருப்தி கிடைத்தும்.