கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label பால். Show all posts
Showing posts with label பால். Show all posts

பாக்கெட் பாலின் கேடுகள்

இந்திய கலாச்சாரத்தில் பால் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. சாமிக்கும் பால், ஆசாமிக்கும் பால். பிறந்தாலும் பால் ஊற்றுவார்கள், இறந்தாலும் பால் ஊற்றுவார்கள். ஆனால் பாக்கெட் பாலை மட்டும் நோய்களை உண்டாக்குவதற்காகவே ஊற்றுகிறார்கள் போலும்.

பால் உடலுக்கு மிகவும் நல்லது என்ற ஒரு மாயை மனிதர்களுக்கிடையில் உள்ளது. குறிப்பாக வளரும் குழந்தைகள் பால் அருந்தினால் நல்லது என்று பல பெற்றோர்கள் நம்புகிறார்கள். பால் ஏன் அருந்துகிறீர்கள் என்று கேட்டால் பாலில் அதிக கால்சியம் இருக்கிறது என்று கூறுவார்கள். சரி மனிதர்கள் பால் அருந்தினால் கால்சியம் கிடைக்கும் என்று கூறும் மருத்துவர்கள், பசு மாட்டுக்கு எவ்வாறு கால்சியம் கிடைத்தது என்று ஏன் சிந்திக்க வில்லை?.

ஒரு மாடு எத்தனை இடை இருக்கும்?. ஒரு மாடு எத்தனை வேகமாக வளரும்?. மாடு எவ்வளவு வேலைகளை செய்யும்?. மாடு எவ்வளவு சுமையை சுமக்கும்?. இவ்வளவு உழைப்புக்காக தான் மாட்டின் பாலில் அதிகமான கால்சியம் இருக்கிறது. மனிதர்களுக்கு மாட்டின் அளவுக்கு உருவமும் இல்லை, உழைப்பும் இல்லை அப்புறம் எதற்கு மாட்டின் அளவுக்கு கால்சியம்?.

சரி! ஒரு ஐந்தறிவு ஜீவனான பசுவின் உடலால் அதிகமான கால்சியத்தை உற்பத்தி செய்ய முடியும் போது ஆறறிவு ஜீவனான மனிதனின் உடலால்; அந்த உடலுக்கு தேவையான கால்சியத்தை உற்பத்தி செய்துக் கொள்ள முடியாதா?. சற்று சிந்தியுங்கள். ஒரு விலங்கால் செய்ய முடிந்த ஒரு வேலையை மனிதனால் செய்ய முடியாதா?

பசும்பால் மனிதர்கள் பயன்படுத்துவதற்காக இயற்கை வழங்கவில்லை பசுவின் கன்று அருந்துவதற்காக தான் படைத்திருக்கிறது. பசும்பாலை இரண்டாம் கட்ட உணவாக பயன்படுத்தலாமே ஒழிய நேரடி உணவாக பயன்படுத்துவது ஆரோக்கியமில்லை. சமைத்த உணவை உட்கொள்ளாத சிறு குழந்தைகளும் முதியவர்களும் மற்றும் நோயாளிகளும் மட்டுமே பசும்பாலை அருந்தலாம். மற்றவர்கள் பசும்பால் அருந்தினால் அவை ஜீரணிக்க வெகுநேரம் ஆகும். வயிறும் உடலும் மந்தமாகும். நாளடைவில் உடலின் ஜீரண திறன் பழுதடைந்து பல நோய்கள் உண்டாகும்.

பால் அருந்தும் வழக்கம் உள்ளவர்கள், சுத்தமான கறந்த பாலை மட்டும் அருந்துங்கள். பாக்கெட்டில் விற்கும் எந்த நிறுவனத்தின் பாலையும் அருந்த வேண்டாம்.

பாக்கெட் பால் மனிதனுக்கு மிகவும் கெடுதியானது.
இன்றைய மனிதர்கள் குறிப்பாக இந்தியர்கள் உட்கொள்ளும் உணவு பொருட்களில் மிகவும் கெடுதியானது பாக்கெட்டில் வரும் பால் தான். அவர்கள் உட்கொள்வது மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளுக்கும் கொடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறார்கள். பாக்கெட்டில் வரும் பால்களை எங்கு வேண்டுமானாலும் ஊற்றுங்கள். வாயிலும் வயிற்றிலும் மட்டும் ஊற்றாதீர்கள், விலங்குகளுக்குக் கூட கொடுக்காதீர்கள்.

இந்தியாவுக்கு சென்ற போது கவனித்தேன், அங்கு எந்த கம்பெனியின் பால் பாக்கெட்டிலும் பசும் பால், மாட்டுபால், கறவைப் பால், பசு, அல்லது மாடு இப்படி எந்த வார்த்தைகளும் கிடையாது. Ingredients / என்ற பாலில் கலக்கப்பட்ட பொருட்களின் விவரங்களை பார்த்தால் கூட அதில் பசும் பால் என்ற வார்த்தை கூட கிடையாது. அவ்வளவு ஏன் பசு மாட்டின் படத்தைக் கூட பால் பாக்கெட்டில் போடுவது கிடையாது.

தொலைக்காட்சி பெட்டியில் வரும் விளம்பரங்களில் கூட நான் கவனித்தேன். அவர்கள் பசு, மாடு, பசும்பால் என்ற வார்த்தைகளை உச்சரிப்பது கிடையாது. இவை அனைத்துமே, நீங்கள் அருந்துவது பசும் பால் அல்ல என்று உங்களுக்கு மறைமுகமாக அறிவிக்கிறார்கள். இவை சட்டரீதியாக எந்த சிக்கலும் உண்டாக கூடாது என்ற அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் .

பாக்கெட் பாலில் உள்ளது என்ன?
அதிகம் தண்ணீர், கொஞ்சம் பசும்பால் அதுவும் அந்த பால் கெட்டுப்போக கூடாது என்பதற்காக இயற்கையாக பாலில் இருக்கும் உடலுக்கு நன்மை தரக் கூடிய அனைத்து பொருட்களையும் நீக்கிவிட்டு அதை இரசாயனம் கலந்து பதப்படுத்துகிறார்கள்.

செலவுகளை குறைப்பதற்காகவும், லாபத்தை அதிகரிக்கவும் அதில் செயற்கை பால் பவுடர், மைதா, பல வகையான இரசாயனங்கள், தண்ணீர் மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட உடலுக்கு ஒவ்வாத சத்து பொருட்களைக் கலக்கிறார்கள்.

பாக்கெட் பால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்
ஒரு வயதான பெண்மணியிடம் பாக்கெட் பாலின் தீங்கை பற்றி பேசும் பொது அவர் கூறுகிறார், தூய பசும்பால் தண்ணியாக நீர்த்துப் போயிருக்கும் பாக்கெட் பால் தான் நல்லா கெட்டியாக இருக்கும் அதனால்தான் பாக்கெட் பால் வாங்குகிறேன் என்று. அவர் ஆசைப்பட்டது போல் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் அருந்த அவர் தயாராக இருக்கிறார். உடல் ஆரோக்கியத்தை விடவும் நாக்கின் சுவையே முக்கியம் என பலர் எண்ணுகிறார்கள்.

பாக்கெட் பாலை அருந்தினால் அந்த நோய் உருவாகும் இந்த நோய் உருவாகும் என்று பயமுறுத்த எனக்கு விருப்பமில்லை. ஆனால் பாக்கெட் பால் மிக மோசமான மிகக் கெடுதியான பல நோய்கள் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது. பாக்கெட் பாலை பயன்படுத்துவதை இன்றே நிறுத்துங்கள்.

ஆரோக்கியமாக வாழ குறிப்புகள்
பசும்பால் மனிதர்களுக்கு மிகவும் நல்லது என்பது வெறும் மாயை மட்டுமே. அது உண்மை அல்ல. பாலை செரித்து சக்தியாக மாற்றக்கூடிய தன்மை பலர் வயிற்றுக்கு இருப்பதில்லை. அதனால் பாலை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

- செரிமான கோளாறு, வயிறு மந்தம் மற்றும் நோய் உள்ளவர்கள் பால் அருந்துவதை உடனே நிறுத்துங்கள்.

- பிறந்த குழந்தைகளுக்கு நான்கு வயது வரையில் தாய் பாலை மட்டுமே கொடுங்கள். தாய்ப் பால் எனக்கு ஊறவில்லை என்று கூறும் தாய்மார்கள், எல்லா வகையான இரசாயன மருந்துகளையும் நிறுத்துங்கள் நிச்சயம் தாய்ப்பால் ஊறும்.

- பசு மாடு வளர்ப்பவர்களிடம் இருந்து கறந்த பால் வாங்குங்கள். அவர்கள் மிக அதிகமாகப் போனாலும் தண்ணீரை மட்டும்தான் கலப்பார்கள்.

- பசு வளர்ப்பவர்களிடம் பால் வாங்கி அதில் ஒன்றுக்கு நான்கு என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து உபயோகியுங்கள்.

- சிறுவர்களும் முதியவர்களுக்கு ஒன்றுக்கு ஆறு என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து பயன்படுத்துங்கள்.

பாக்கெட்டில் விற்கும் எந்த நிறுவனத்தின் பாலையும் அருந்த வேண்டாம்.


குழந்தைகளுக்கு பாக்கெட் பால் கொடுக்கலாமா?

பாக்கெட் பால் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்கும் விஷமாகும். குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களும் பாக்கெட் பாலை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு எது?

பிறந்தது முதல் இரண்டு வயது வரையில் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பால் சுரக்காதவர்கள், சுத்தமான நாட்டுப் பசுவின் பாலில் ஒன்றுக்கு நான்கு என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.

பசும்பால் உடலுக்கு நன்மையானதா?

பசும்பால் கன்று குட்டிகளுக்கு உணவாக இறைவன் படைத்தது. சராசரியாக 30 கிலோவில் பிறந்து 1000 கிலோக்கள் வரையில் வளரக்கூடிய மாடுகளுக்கு பசும்பாலை ஜீரணிப்பது எளிதானது. ஆனால் சராசரியாக 2.8 கிலோக்களில் பிறந்து 100 கிலோக்கள் வரையில் வளரக்கூடிய மனிதர்களுக்கு பசும்பாலை ஜீரணிப்பது கடினம்.

மனிதர்களின் தேவையைவிடவும் 10 மடங்கு அதிகமான கொழுப்புகளும் கால்சியமும் மற்ற சத்துக்களும் பாலில் உள்ளன. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. பசும்பாலை தவிர்ப்பது நல்லது.

பசும்பாலை யார் அருந்தலாம்?

பால் மட்டுமே அருந்தும் குழந்தைகளுக்கு 1:4 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து கொடுக்கலாம். திட உணவுகளை சாப்பிட முடியாத நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு 1:6 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து கொடுக்கலாம். சமைத்த உணவுகளை உண்பவர்கள், பசும்பாலை தவிர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும்.