புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label பஞ்சபூதங்கள். Show all posts
Showing posts with label பஞ்சபூதங்கள். Show all posts

நீரின்றி அமையாது உலகு

உலக உயிர்களின் தோற்றம்
நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம், என் அனைத்தும் உருவான பின்பும், இந்த பூமியில் உயிர்கள் தோன்றவில்லை. இந்த பூமியின் நிலத்திலிருந்து தோன்றிய வாயுக்கள் வானத்தில் மேகமாகத் திரண்டு, மழையாக பெய்து பின்புதான் நுண்ணுயிர்கள், புற்கள், செடி கொடிகள், உருவாகத் தொடங்கின.

படைப்புகளின் தொடர்ச்சியாக உயிரினங்களும் உருவாகத் தொடங்கின. முதன் முதலில் நிலத்தில் குளம், குட்டைகள், ஆறுகள், கடல்கள் உருவாகி. அந்தக் கடலில் தோன்றிய சிறு சிறு உயிரினங்களின் பரிமாண வளர்ச்சியாக மீன்களும், கடல் வாழ் உயிரினங்களும் உருவாகின.

கடலில் தோன்றிய உயிர்கள் அதன் பரிமாண வளர்ச்சியாக, நீர், நிலம் இரண்டிலும் வாழக்கூடிய உயிர்கள் தோன்றின. அடுத்ததாக நிலத்தில் மட்டுமே வாழக்கூடிய உயிர்கள் தோன்றின. நிலத்தில் தோன்றிய உயிர்களின் பரிமாண வளர்ச்சியின் உச்சமாக மனிதர்கள் தோன்றினார்கள்.

இந்த பரிமாண வளர்ச்சி ஆறாவது அறிவான மனித பிறப்போடு முடிவதாக எனக்குத் தோன்றவில்லை. மனிதர்கள் அனைவரும் ஏழாவது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். முதல் ஆறு அறிவின் வளர்ச்சிகள், உடல் மூலமாகவும் ஆறாவது அறிவுக்கு மேலான வளர்ச்சிகள், உயிர் மற்றும் புத்தியின் மூலமாகவும் நடைபெறுகின்றன.

அனைத்தும் இருந்தும் தோன்றாத உயிர் நீர் உருவான பின்பு தோன்றியதால், “நீரின்றி அமையாது உலகு”.


சீன மருத்துவத்தில் பஞ்சபூதங்கள் என்பவை யாவை?

சீன மருத்துவத்தில் பஞ்சபூதங்கள் என்பவை நெருப்பு, நிலம், உலோகம், நீர், மரம்.

பஞ்சபூதங்கள் என்பவை யாவை?

பஞ்சபூதங்கள் என்பவை நெருப்பு, நிலம், கற்று, நீர், ஆகாயம்.

மனித உடலின் பஞ்சபூத உறுப்புகள் யாவை?

பஞ்சபூத உறுப்புகள் என்பவை இருதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல்.

ஒரு நாட்டில் வாழும் உயிரினம் ஏன் மற்ற நாடுகளில் வாழ்வதில்லை?

பஞ்சபூத சக்திகள் ஒன்றுக்கூடும் போது, அங்கு உயிர்கள் தோன்றுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் பஞ்சபூத சக்திகளின் தன்மைகள் மாறுபடுவதால் அந்த நாடுகளில் தோன்றும் உயிரினங்களும் மாறுபடுகின்றன.

பஞ்சபூத சக்திகள் எவ்வாறு உருவாகின்றன?

பஞ்சபூத சக்தியின் உருவாக்கம்
மனித உடலிலும், உலகிலும் பஞ்சபூத சக்திகள் தன்னை தானே சரி செய்துகொண்டும், தனக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்துகொண்டும்; தன்னைச் சார்ந்த மற்றொரு பஞ்சபூத சக்தியை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறது. இந்த செயல் பெரும்பாலும், தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்த பஞ்சபூத சக்தியின் உற்பத்தி தடைப்படும் போதுதான் மனிதனின் உடலில் குறைபாடுகளும் நோய்களும் உருவாகின்றன.


பஞ்சபூத சக்தியின் உருவாக்கம்

பஞ்சபூதங்கள் யாவை?

பஞ்சபூதங்கள் ஐந்து
1. நெருப்பு
2. நிலம்
3. காற்று
4. நீர்
5. மரம் / ஆகாயம்