புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label நோய்கள். Show all posts
Showing posts with label நோய்கள். Show all posts

மருத்துவரிடம் ஊசி போட்ட பிறகு குழந்தைகளுக்கு காய்ச்சல் உருவாவது ஏன்?

மருத்துவரிடம் சென்று குழந்தைகளுக்கு ஏதாவது ஊசி போட்டாலோ; அல்லது நோய் தடுப்பூசி போட்டாலோ, பல குழந்தைகளுக்கு காய்ச்சல் உருவாகும். இந்தக் காய்ச்சல் உருவாக காரணம் என்ன?.

குழந்தைகளுக்கு ஊசி போட்டவுடன் காய்ச்சல் உருவானால், குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட ஊசியில் கலந்திருக்கும் ரசாயனங்களோ அல்லது கிருமிகளோ அந்தக் குழந்தையின் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம். அந்த ஊசியில் கலந்திருக்கும் உடலுக்கு ஒவ்வாத ரசாயனங்களையும் கிருமிகளையும் கொல்வதற்காகத்தான், உடலானது தனது உஷ்ணத்தை அதிகரிக்கிறது. உடலின் உஷ்ணம் அதிகரித்து அதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து, அந்தக் கிருமிகளையும் ரசாயனங்களையும் எதிர்த்து உடல் போராடுகிறது. காய்ச்சல் என்பது உடலில் நன்மைக்காக மட்டுமே உருவாகும் என்பதை பெற்றோர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

யாருக்காவது காய்ச்சல் உருவாகி, அந்த காய்ச்சல் அதிக நாட்கள் இருந்தால் மருத்துவர்கள் என்ன சொல்வார்கள்?. இது வைரஸ் காய்ச்சல், கிருமி காய்ச்சல், கிருமி தோற்று என்று கூறுகிறார்களா இல்லையா?. கிருமி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், என்று மருத்துவர்கள் பெயர்கள் வைத்திருக்கும் போதே நமக்கு தெரியவேண்டும், கிருமிகள் உடலுக்குள் சென்றால் காய்ச்சல் உண்டாகும் என்பது.

எந்த காரணத்துக்காக மருத்துவர்கள், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க சொல்கிறார்களோ, அதே காரணத்துக்காகத்தான் கிருமிகள் உடலுக்குள் செல்லும் போது காய்ச்சல் உண்டாகிறது, கிருமிகளை கொல்வதற்கு.

காய்ச்சலை கட்டுப்படுத்த கொடுக்கப்படும் மருந்துகளும் ஊசிகளும் குழந்தைகளின் நோய்யெதிர்ப்பு சக்தியை கொன்று, ஊசியில் இருக்கும் குழந்தையின் உடலுக்குத் தீங்கான, கிருமிகளும், இரசாயனங்களும், உடலிலேயே தங்கிவிட துணை புரிகிறது. இன்று உடலில் தேங்கும் இந்த கிருமிகளும் இரசாயனங்களும் பின்னாட்களில் கொடிய நோய்களாக குழந்தைகளின் உடலில் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.

சில குழந்தைகளுக்கு சிறுவயதில் காய்ச்சல் கண்ட பிறகு பேச்சு வராமல் போவதற்கும், பார்வை கோளாறுகள் உண்டாவதற்கும், மூளை வளர்ச்சி குறைவதற்கும், கை கால்கள் செயல் இழப்பதற்கும், இடுப்புக்குக் கீழ் செயல்படாமல் போவதற்கும் இது போன்ற ஊசிகளில் இருக்கும் ரசாயனங்களும் கிருமிகளுமே முக்கிய காரணமாக அமைகின்றன. முடிந்த வரையில் உங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் கொடுக்காதீர்கள்.

ஒரு வேளை குழந்தைகளுக்கு காய்ச்சல் உண்டானால், ஈரத்துணியை நனைத்து தலையிலும், முகத்திலும், நெஞ்சிலும், துடைத்து விடுங்கள். ஒரு துணியை ஈரமாக்கி நெற்றியில் பற்றுக் கொடுங்கள். உணவு ஏதும் கொடுக்காதீர்கள். காய்ச்சல் படிப்படியாக குறைந்துவிடும். ஒருவேளை மருத்துவம் தேவைப்பட்டால், இயற்கை மருத்துவத்தை மட்டும் நாடுகள் ரசாயனங்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்.

Image by Steve Buissinne from Pixabay

பாக்கெட் பாலின் கேடுகள்

இந்திய கலாச்சாரத்தில் பால் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. சாமிக்கும் பால், ஆசாமிக்கும் பால். பிறந்தாலும் பால் ஊற்றுவார்கள், இறந்தாலும் பால் ஊற்றுவார்கள். ஆனால் பாக்கெட் பாலை மட்டும் நோய்களை உண்டாக்குவதற்காகவே ஊற்றுகிறார்கள் போலும்.

பால் உடலுக்கு மிகவும் நல்லது என்ற ஒரு மாயை மனிதர்களுக்கிடையில் உள்ளது. குறிப்பாக வளரும் குழந்தைகள் பால் அருந்தினால் நல்லது என்று பல பெற்றோர்கள் நம்புகிறார்கள். பால் ஏன் அருந்துகிறீர்கள் என்று கேட்டால் பாலில் அதிக கால்சியம் இருக்கிறது என்று கூறுவார்கள். சரி மனிதர்கள் பால் அருந்தினால் கால்சியம் கிடைக்கும் என்று கூறும் மருத்துவர்கள், பசு மாட்டுக்கு எவ்வாறு கால்சியம் கிடைத்தது என்று ஏன் சிந்திக்க வில்லை?.

ஒரு மாடு எத்தனை இடை இருக்கும்?. ஒரு மாடு எத்தனை வேகமாக வளரும்?. மாடு எவ்வளவு வேலைகளை செய்யும்?. மாடு எவ்வளவு சுமையை சுமக்கும்?. இவ்வளவு உழைப்புக்காக தான் மாட்டின் பாலில் அதிகமான கால்சியம் இருக்கிறது. மனிதர்களுக்கு மாட்டின் அளவுக்கு உருவமும் இல்லை, உழைப்பும் இல்லை அப்புறம் எதற்கு மாட்டின் அளவுக்கு கால்சியம்?.

சரி! ஒரு ஐந்தறிவு ஜீவனான பசுவின் உடலால் அதிகமான கால்சியத்தை உற்பத்தி செய்ய முடியும் போது ஆறறிவு ஜீவனான மனிதனின் உடலால்; அந்த உடலுக்கு தேவையான கால்சியத்தை உற்பத்தி செய்துக் கொள்ள முடியாதா?. சற்று சிந்தியுங்கள். ஒரு விலங்கால் செய்ய முடிந்த ஒரு வேலையை மனிதனால் செய்ய முடியாதா?

பசும்பால் மனிதர்கள் பயன்படுத்துவதற்காக இயற்கை வழங்கவில்லை பசுவின் கன்று அருந்துவதற்காக தான் படைத்திருக்கிறது. பசும்பாலை இரண்டாம் கட்ட உணவாக பயன்படுத்தலாமே ஒழிய நேரடி உணவாக பயன்படுத்துவது ஆரோக்கியமில்லை. சமைத்த உணவை உட்கொள்ளாத சிறு குழந்தைகளும் முதியவர்களும் மற்றும் நோயாளிகளும் மட்டுமே பசும்பாலை அருந்தலாம். மற்றவர்கள் பசும்பால் அருந்தினால் அவை ஜீரணிக்க வெகுநேரம் ஆகும். வயிறும் உடலும் மந்தமாகும். நாளடைவில் உடலின் ஜீரண திறன் பழுதடைந்து பல நோய்கள் உண்டாகும்.

பால் அருந்தும் வழக்கம் உள்ளவர்கள், சுத்தமான கறந்த பாலை மட்டும் அருந்துங்கள். பாக்கெட்டில் விற்கும் எந்த நிறுவனத்தின் பாலையும் அருந்த வேண்டாம்.

பாக்கெட் பால் மனிதனுக்கு மிகவும் கெடுதியானது.
இன்றைய மனிதர்கள் குறிப்பாக இந்தியர்கள் உட்கொள்ளும் உணவு பொருட்களில் மிகவும் கெடுதியானது பாக்கெட்டில் வரும் பால் தான். அவர்கள் உட்கொள்வது மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளுக்கும் கொடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறார்கள். பாக்கெட்டில் வரும் பால்களை எங்கு வேண்டுமானாலும் ஊற்றுங்கள். வாயிலும் வயிற்றிலும் மட்டும் ஊற்றாதீர்கள், விலங்குகளுக்குக் கூட கொடுக்காதீர்கள்.

இந்தியாவுக்கு சென்ற போது கவனித்தேன், அங்கு எந்த கம்பெனியின் பால் பாக்கெட்டிலும் பசும் பால், மாட்டுபால், கறவைப் பால், பசு, அல்லது மாடு இப்படி எந்த வார்த்தைகளும் கிடையாது. Ingredients / என்ற பாலில் கலக்கப்பட்ட பொருட்களின் விவரங்களை பார்த்தால் கூட அதில் பசும் பால் என்ற வார்த்தை கூட கிடையாது. அவ்வளவு ஏன் பசு மாட்டின் படத்தைக் கூட பால் பாக்கெட்டில் போடுவது கிடையாது.

தொலைக்காட்சி பெட்டியில் வரும் விளம்பரங்களில் கூட நான் கவனித்தேன். அவர்கள் பசு, மாடு, பசும்பால் என்ற வார்த்தைகளை உச்சரிப்பது கிடையாது. இவை அனைத்துமே, நீங்கள் அருந்துவது பசும் பால் அல்ல என்று உங்களுக்கு மறைமுகமாக அறிவிக்கிறார்கள். இவை சட்டரீதியாக எந்த சிக்கலும் உண்டாக கூடாது என்ற அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் .

பாக்கெட் பாலில் உள்ளது என்ன?
அதிகம் தண்ணீர், கொஞ்சம் பசும்பால் அதுவும் அந்த பால் கெட்டுப்போக கூடாது என்பதற்காக இயற்கையாக பாலில் இருக்கும் உடலுக்கு நன்மை தரக் கூடிய அனைத்து பொருட்களையும் நீக்கிவிட்டு அதை இரசாயனம் கலந்து பதப்படுத்துகிறார்கள்.

செலவுகளை குறைப்பதற்காகவும், லாபத்தை அதிகரிக்கவும் அதில் செயற்கை பால் பவுடர், மைதா, பல வகையான இரசாயனங்கள், தண்ணீர் மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட உடலுக்கு ஒவ்வாத சத்து பொருட்களைக் கலக்கிறார்கள்.

பாக்கெட் பால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்
ஒரு வயதான பெண்மணியிடம் பாக்கெட் பாலின் தீங்கை பற்றி பேசும் பொது அவர் கூறுகிறார், தூய பசும்பால் தண்ணியாக நீர்த்துப் போயிருக்கும் பாக்கெட் பால் தான் நல்லா கெட்டியாக இருக்கும் அதனால்தான் பாக்கெட் பால் வாங்குகிறேன் என்று. அவர் ஆசைப்பட்டது போல் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் அருந்த அவர் தயாராக இருக்கிறார். உடல் ஆரோக்கியத்தை விடவும் நாக்கின் சுவையே முக்கியம் என பலர் எண்ணுகிறார்கள்.

பாக்கெட் பாலை அருந்தினால் அந்த நோய் உருவாகும் இந்த நோய் உருவாகும் என்று பயமுறுத்த எனக்கு விருப்பமில்லை. ஆனால் பாக்கெட் பால் மிக மோசமான மிகக் கெடுதியான பல நோய்கள் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது. பாக்கெட் பாலை பயன்படுத்துவதை இன்றே நிறுத்துங்கள்.

ஆரோக்கியமாக வாழ குறிப்புகள்
பசும்பால் மனிதர்களுக்கு மிகவும் நல்லது என்பது வெறும் மாயை மட்டுமே. அது உண்மை அல்ல. பாலை செரித்து சக்தியாக மாற்றக்கூடிய தன்மை பலர் வயிற்றுக்கு இருப்பதில்லை. அதனால் பாலை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

- செரிமான கோளாறு, வயிறு மந்தம் மற்றும் நோய் உள்ளவர்கள் பால் அருந்துவதை உடனே நிறுத்துங்கள்.

- பிறந்த குழந்தைகளுக்கு நான்கு வயது வரையில் தாய் பாலை மட்டுமே கொடுங்கள். தாய்ப் பால் எனக்கு ஊறவில்லை என்று கூறும் தாய்மார்கள், எல்லா வகையான இரசாயன மருந்துகளையும் நிறுத்துங்கள் நிச்சயம் தாய்ப்பால் ஊறும்.

- பசு மாடு வளர்ப்பவர்களிடம் இருந்து கறந்த பால் வாங்குங்கள். அவர்கள் மிக அதிகமாகப் போனாலும் தண்ணீரை மட்டும்தான் கலப்பார்கள்.

- பசு வளர்ப்பவர்களிடம் பால் வாங்கி அதில் ஒன்றுக்கு நன்கு என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து உபயோகியுங்கள்.

- சிறுவர்களும் முதியவர்களுக்கு ஒன்றுக்கு ஆறு என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து பயன்படுத்துங்கள்.

பாக்கெட்டில் விற்கும் எந்த நிறுவனத்தின் பாலையும் அருந்த வேண்டாம்.


நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது ஏன்?

சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் ஒரு மாத்திரையிலிருந்து தான் தொடங்குகிறார்கள். ஆனால் மாத்திரைகளை உட்கொள்ள தொடங்கிய சில மாதங்களிலேயே மாத்திரைகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து, சில வருடங்களுக்கு பிறகு அதிகமான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. தொடக்கத்தில் ஒரு மாத்திரைக்கு கட்டுப்பட்ட சர்க்கரை சில காலங்களிலேயே பல மாத்திரைகள் உட்கொண்டும், கட்டுப்படுவதில்லை. ஏன் இந்த சூழ்நிலை உருவாகிறது?.

மாத்திரைகள் நோய்களை குணப்படுத்துகின்றன என்பது உண்மையானால், மாத்திரைகளை உட்கொள்ள தொடங்கிய நாளை விட பின் நாட்களில் மாத்திரைகளின் எண்ணிக்கை குறைய வேண்டும் அல்லவா?. மாத்திரைகளின் எண்ணிக்கை குறையாவிட்டாலும் அதிகரிக்காமலாவது இருக்க வேண்டும் அல்லவா?. மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது நோய் குணமாகவில்லை, நோய் மேலும் தீவிரமடைகிறது என்பதற்கு அத்தாட்சியல்லவா?. சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி பெரும்பாலான நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகளின் எண்ணிக்கை நாள்பட அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதற்கு என்ன காரணம்?

நோயாளிகளுக்கு மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு காரணம் அவர்களின் உடல் அந்த மாத்திரைகளை எதிர்த்துப் போராடத் தொடங்கிவிட்டது.

நாம் தினமும் உணவுகளை உட்கொண்டு வருகிறோம். இத்தனை ஆண்டுகள் மீண்டும் மீண்டும் அதே உணவுகளை உட்கொண்டும், உடல் அந்த உணவுகளை வெறுக்கவில்லை. நாம் உண்ணும் இட்டிலியோ, தோசையோ, சப்பாத்தியோ, சாதமோ, கஞ்சியோ, எதுவாக இருந்தாலும் உடல் இன்று வரையில் அந்த உணவை வெறுக்கவில்லை. அந்த உணவினை பார்க்கும் போதோ உண்ணும் போதோ நமக்கு வெறுப்பு தோன்றுவதில்லை.

ஆனால் மருந்து மாத்திரைகள் உண்ணத் தொடங்கிய சில காலங்களிலேயே; உடல் அந்த மருந்து மாத்திரைகளை வெறுக்க தொடங்குகிறது. மருந்து மாத்திரைகளை எதிர்த்துப் போராட தொடங்குகிறது. தொடக்கத்தில் நோய்களைப் பற்றிய பயத்தினால் மருந்து மாத்திரைகளை உடல் வேறு வழியின்றி ஒப்புக் கொள்கிறது. பிறகு அந்த மாத்திரைகளை உட்கொள்ள தொடங்கிய பிறகு. அந்த மாத்திரைகளினால் விளையக்கூடிய கேடுகளையும் பக்கவிளைவுகளையும் எதிர்த்து போராடுகிறது. அதனால்தான் நோயாளிகள் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள தொடங்கிய நாட்களில் இருந்ததை விடவும் மருந்து மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒன்று மாத்திரைகளில் எண்ணிக்கை அதிகரிக்கும் அல்லது மாத்திரைகளின் வீரியம் அதிகரிக்கும்.

ஒரு வேளை மருந்து மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் நோய்கள் குணமாகுமா? என்றால் அதுவும் கிடையாது. மரணம் வரையில் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு கொண்டே உயிர் துறக்கிறார்கள். இதிலிருந்து உங்களுக்கு புரியவில்லையா மருந்து மாத்திரைகள் நோய்களை குணப்படுத்துவது இல்லை என்பது. ஆங்கில மருத்துவம் மட்டுமல்லாமல் அனைத்து மருத்துவங்களையும் சேர்த்து தான் பேசுகிறேன். உங்கள் உடல்தான் நோய்களை குணப்படுத்தும், அதனால் உடல் சொல்வதை மட்டும் கேளுங்கள்

எது தேவை எது தேவையில்லை, எது நல்லது எது கெட்டது, எது ஒத்துக்கொள்ளும் எது ஒத்துக்கொள்ளாது என்பதை பிரித்து பார்க்கும் ஆற்றல் உடலுக்கு உள்ளது. உடலுக்கென்று சுயமாக அறிவு இருக்கிறது. உடலுக்கு எல்லாம் தெரியும். உடல் சொல்வதை மட்டும் கேட்டு நடந்தால், அனைத்து நோய்களும் தானாக குணமாகும்.

உடல் பேசும் முக்கியமான மொழிகளான பசி, தாகம், சோர்வு, தூக்கம், மற்றும் மலம் சிறுநீர், கழித்தல் இவற்றை தெளிவாக புரிந்துகொண்டு உடல் கேட்கும் நேரத்தில், இந்த விஷயங்களை நிறைவேற்றி வைத்தால், அனைத்து நோய்களும் குணமாகும். பசியில்லாமல் உண்ணாதீர்கள், தாகம் இல்லாமல் தண்ணீர் அருந்தாதீர்கள், சோர்வு உண்டானால் உடலுக்கு ஓய்வு கொடுங்கள், இரவில் விரைவாக படுக்கைக்கு செல்லுங்கள். சிறுநீர் மலம் தடுக்காதீர்கள். அத்தனை நோய்களும் சுயமாக குணமாகும்.


சர்க்கரை நோய் என்பது உண்மையில் என்ன?

இந்த கட்டுரையை வாசித்து புரிந்துக் கொண்டால் என்னது இதுதான் சர்க்கரை நோயா? இதைக் காட்டியாடா எங்களை இத்தனை நாளா பயமுறுத்தினிங்க? என்று நிச்சயமாக உங்களுக்கு தோன்றும்.

இனிப்பு நீர், சர்க்கரை நோய், நீரிழிவு நோய், ஆங்கிலத்தில் டைபெடிக் என்று அழைக்கப்படும் இந்த நோயை. மிகக் கொடியது மிகவும் ஆபத்தானது, அது உங்களை கொன்றுவிடும் என்று ஆங்கில படத்துக்கு தமிழில் டப்பிங் பேசுவதைப் போன்று கொடூரமாக சொல்வார்கள். இது மிகவும் ஆபத்தான கொடிய மிருகம் ஓடுங்கள், உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்பதைப் போன்று விலக்குவார்கள். உண்மையில் எல்லாமே பொய்யும் அறியாமையும் மட்டுமே!

உண்மையில் கொடிய மிருகம் எது?
உண்மையிலேயே கொடிய மிருகம் மருந்து கம்பெனிகாரர்கள் தான். இரசாயனங்களை கொண்டு மனித உடலுக்கு ஒவ்வாத மிகவும் கேடான பக்கவிளைவுகளை உருவாக்கக் கூடிய மருந்துகளை உருவாக்கும் மருந்து கம்பனி முதலைகள், அந்த மருந்துகளை விற்பனை செய்வதற்காக திட்டமிட்டு நோயாளிகளை உருவாக்குகிறார்கள். ஒன்றும் அறியாத ஆங்கில மருத்துவர்கள் அவர்களுக்கு துணை போகிறார்கள்.

என்னது ஐந்து வருடங்கள் ஆங்கில மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் ஒன்றும் அறியாதவர்களா? என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆம் அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் தான். இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது? அவர்களுக்கு தெரியாது. மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது? அவர்களுக்கு தெரியாது. நோய்க்கும், கழிவு நீக்கத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?. அவர்களுக்கு தெரியாது. நோய்கள் எதனால் உருவாகின்றன? அவர்களுக்கு தெரியாது. நோய்களை எவ்வாறு  குணப்படுத்துவது? அவர்களுக்கு தெரியாது. உண்மையில், பல ஆங்கில மருத்துவர்களுக்கு மருத்துவமே தெரியாது.

அவர்களுக்கு தெரிந்தது எல்லாம், இந்த தொந்தரவு என்றால் இந்த மருந்தை கொடுக்க வேண்டும். அந்த தொந்தரவு என்றால் அந்த மருந்தை கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். முதலில் நோய் ஏன்? எவ்வாறு? உருவாகிறது என்று அறிந்துக் கொண்டால் மட்டுமே அந்த நோயை குணபடுத்த முடியும். வெறும் இயந்திரங்கள் சொல்வதை நம்பிக்கொண்டு மருத்துவம் பார்த்தால் நோய்கள் எவ்வாறு குணமாகும்?

சர்க்கரை என்பது நோயா?
ஒரு மனிதனுக்கு சர்க்கரை நோயினால் காலில் புண்கள் உருவாகி, பின்பு அழுகி, காலை வெட்ட வேண்டும் என்று ஆங்கில மருத்துவர் பரிந்துரைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக எதை நோயாளியின் உடலில் ஏற்றுவார்கள் தெரியுமா?. குளுகோஸ்! குளுகோஸ் என்பது சர்க்கரை. சர்க்கரை அதிகரித்து தான் கால் அழுகிவிட்டது என்று கூறினீர்களே பின்பு என்ன மைத்துக்கு இப்போது மீண்டும் சர்க்கரையை என் உடம்பில் ஏற்றுகிறீர்கள் என்று எந்த நோயாளியும் கேட்பதில்லை.

சர்க்கரையினால் தான் கால் அழுகியது என்று கூறிய மருத்துவரே மீண்டும் சர்க்கரையை உடலில் செலுத்துவார், அறுவை சிகிச்சை செய்யும்போது. இயற்கையாக உடல் சர்க்கரையை உருவாகினால் நோயாம். இவர்கள் செயற்கையாக செய்து உடலில் செலுத்தினால் அது வைத்தியமாம். என்ன ஒரு பித்தலாட்டம்.

பிரசவம், விபத்து, எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை என எந்த அவசர சிகிச்சையாக இருந்தாலும் குளுகோஸ் என்ற சர்க்கரையை தானே மனித உடலில் முதலில் செலுத்துகிறார்கள்? ஆங்கில மருத்துவர்கள். அப்படி என்றால் மனித உடலின் அவசரகாலத்தில் சர்க்கரை அதிகமாக தேவைப்படும், மனிதனின் நோய்களைக் குணப்படுத்த சர்க்கரை அதிகமாக தேவைப்படும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் தானே?

அப்படியானால் எதனால் உடல் சுயமாக சர்க்கரையை அதிகரித்தால் நோய் என்றும் வாழ்நாள் முழுதும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள் இதே ஆங்கில மருத்துவர்கள்? அவர்கள் செயற்கையாக உருவாக்கிய குளுகோஸ் மருந்தாம் உயிரைக் காப்பாற்றுமாம், மனித உடல் இயற்கையாக உருவாக்கிய சர்க்கரை (குளுகோஸ்) கெடுதியாம் உயிரைக் கொல்லுமாம். ஏண்டா உனக்கு வந்தால் இரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்று யாரும் கேட்பதில்லை! இனிமேல் கேளுங்கள்.

சர்க்கரை கெடுதி என்றால், சர்க்கரை நோயாளிகளின் உடலில் சர்க்கரையின் அளவு குறையும்போது ஏன் மயக்கம் அடைகிறார்கள்? சர்க்கரை அதிகரிப்பது நோய் என்றால் குறைவது நல்லது தானே, பின்பு எதனால் மயக்கம் உண்டாகிறது?. சர்க்கரை கெடுதி என்றால் மருத்துவர்கள் எதனால் நோயாளிகளுக்கு குளுகோஸ் என்ற சர்க்கரையை உடலில் செலுத்துகிறார்கள்?

இனிப்பு நல்லது
மனித உடலுக்கு இனிப்பு மிக அவசியமானது. இனிப்பு இல்லாமல் எந்த மனிதனும் செயல்பட முடியாது. எந்த நோயையும் குணபடுத்த முடியாது. உடலில் சர்க்கரை போதிய அளவு இருந்தால் மட்டுமே உடலால் ஆரோக்கியமாக செயல்பட முடியும். அவசர காலங்களில் சர்க்கரை அதிகரித்தால் மட்டுமே நோய்களை குணபடுத்த முடியும்.

விபத்துகளில் சிக்கியவர்கள், கர்ப்பம் தரித்த தாய்மார்கள், எழும்பு முறிவுக்கு ஆளானவர்கள், முதியவர்கள், நோய்வாய் கண்டவர்கள் என் பலகீனமாக இருப்பவர்களுக்கு உடலில் சர்க்கரை அதிகரிப்பது, அவர்களின் நோய்களையும் அவர்களின் தொந்தரவுகளையும் குணப்படுத்தவே ஒழிய அவை நோய்களல்ல.

உடலின் இயல்பான நோய் தீர்க்கும் முறையான சர்க்கரை அதிகரிப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு. ஆங்கில மருத்துவர்களிடம் வருகின்ற அனைவரையும் நோயாளிகளாக மாற்றுகின்றனர். வேலியில் போகிற ஓணானை, வேட்டிக்குள் பிடித்து விட்ட கதையாக. இலவச இரத்தப் பரிசோதனைகளுக்கு ஆசைப்பட்டு ஆங்கில மருத்துவர்களிடம் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள்.


குறைகளுடைய, ஊனமுற்ற, குழந்தைகள் ஏன் பிறக்கிறார்கள்

குழந்தைகள் ஊனமாகவோ, குறைகளுடனோ, மூளை வளர்ச்சி குறைவாகவோ, பிறந்தால் இரண்டு விஷயங்களைத்தான் காரணமாக பெரும்பாலானோர் கூறுவார்கள். ஒன்று இறைவன் அந்த குழந்தையையும் பெற்றோரையும் சோதிக்கிறார் என்று கூறுவார்கள். அல்லது அந்தப் பெற்றோர் செய்த பாவம் அல்லது பெற்றோர் பெற்ற சாபத்தினால் அந்த குழந்தை குறைகளுடன் பிறந்திருக்கிறது என்று கூறுவார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் இவை இரண்டுமே தவறுதான். இந்த உலகில் இருக்கும் அனைத்து மதங்களும் அனைத்து நம்பிக்கைகளும் இறைவன் கருணையுடையவன், நியாயமானவன், அன்பானவன், என்று தான் கூறுகின்றன. இறைவன் அன்பும் கருணையும் உடையவன் என்ற கூற்று உண்மையாக இருந்தால் இவ்வாறான குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை இவ்வாறான குழந்தைகள் பிறப்பதற்கு இறைவன் தான் காரணம் என்றால், அந்த இறைவனுக்கு அன்பும் கருணையும் இருக்க வாய்ப்பே இல்லை.

மனிதர்களிலேயே கெட்டவர்கள் கொடூரமானவர்கள் என்று கூறக்கூடிய மனிதர்கள் கூட குழந்தைகளுக்கு தீங்கு செய்ய அஞ்சுவார்கள், அவ்வாறு இருக்கையில் அன்பும் கருணையும் உடைய இறைவன் குழந்தைகளை ஊனமாக படைப்பாரா? என்றால் நிச்சயமாக கிடையாது.

ஆனால் குழந்தைகள் ஊனமாகவும் குறைகளுடன் பிறப்பது நம் கண் முன்னாலேயே பார்க்கிறோம். நம் கண் முன்னே நடக்கின்ற ஒரு உண்மையான விசயமாக இருப்பதினால் இதற்கு விடை தேட வேண்டியது நம் கடமையாகிறது. எதையாவது ஒன்றை கண்மூடித்தனமாக நம்புவதைவிட சிந்தித்து செயல்படுவது சிறந்ததல்லவா.

மனித வாழ்க்கையில் சத்தியமான ஒரு உண்மை என்னவென்றால் எந்த ஒரு காரண காரியமும் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே நடக்காது. உதாரணத்திற்கு இன்று நம் குழுவில் கேட்கப்பட்ட மூன்று நான்கு கேள்விகளுக்கு கூட ஏதோ ஒரு காரணம் நிச்சயமாக இருக்கும். நான் கூறுகின்ற இந்த பதில்கள் கூட யாரோ சிலருக்கு தேவையானதாகவும் இருக்கும். இதைப் போன்றே குழந்தைகள் குறைகளுடன் பிறப்பதற்கும் நிச்சயமாக காரணங்கள் இருக்கும். அந்த காரணம் என்னவென்றால், அந்தக் குழந்தை, அந்தக் குழந்தையின் பெற்றோர், அவர்களின் குடும்பத்தார், அனைவரும் சேர்ந்து முற்பிறவியில் செய்த தவறுகள் தான் இதற்கு காரணம்.

ஒரு குழந்தை ஊனமாகப் பிறந்தால், பெற்றோர்களின் சாபம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் அனைத்து வேதனைகளையும்  அந்த குழந்தையின் பெற்றோர்கள் மட்டுமே தனியாக அனுபவிப்பதில்லை. அந்தக் குழந்தையும், அந்த குழந்தையின் உறவினர்களும் சேர்ந்து தான் வேதனைகளை அனுபவம் செய்கிறார்கள்.

பெற்றோர்கள், குழந்தை மற்றும் அதன் உறவினர்கள் அனைவரும் வேதனையை அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே, சில குழந்தைகள் ஊனமாகப் பிறக்கிறார்கள். இல்லை எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை என்று கூறுபவர்களுக்கு நீங்கள் நம்பவில்லை என்றால் அது உங்கள் விருப்பம். ஒரு குழந்தை ஊனமாக பிறப்பதற்கு, அந்த குழந்தையை பராமரிக்க, யார் யாரெல்லாம் கஷ்டப்படுகிறார்களோ அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் காரணமாக இருப்பார்கள்.

காட்டுக்குள் வாழும் விலங்குகளை பார்த்தால் விளங்கும். விலங்குகள் கூட மிக மிக அரிதாகத்தான் ஊனமாகப் பிறக்கின்றன. மனிதர்கள் தான் மிக அதிகமான குறைகளுடைய குழந்தைகளை பெற்று இருக்கிறார்கள். குறைகளுடைய குழந்தைகள் பிறப்பதற்கு அவர்களுடைய போன ஜென்மத்து வாழ்க்கை மட்டுமின்றி. இந்த ஜென்மத்தில் இந்த வாழ்க்கையில் குழந்தையின் பெற்றோர்களின் வாழ்க்கை முறையும், அவர்கள் உட்கொள்ளும் இரசாயன மருந்துகளும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.

சரி பெற்றோர்களின்  இரசாயன பயன்பாட்டினால் கருவில் வளரும் குழந்தை ஊனமாக இருந்தால், குழந்தையின் தவறில்லையே. பின்பு ஏன் குழந்தை துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அந்த குழந்தை வளர வளர பலவகையான இன்னல்களையும் கஷ்டங்களையும் அனுபவிக்குமே; என்று கேட்பவர்களுக்கு. கருவில் குழந்தை வளரும் போது அதன் வளர்ச்சி ஒரு காலகட்டத்தை அடையும் வரையில் அந்த கருவில் உயிர் (ஆன்மா) இருக்காது.

கரு குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்த பிறகு, அந்தக் குழந்தை, அந்தக் குழந்தையின் குடும்பத்தார், அவர்களின் வாழ்க்கை முறைகளை வைத்து. இந்தக் குழந்தை பிறந்தால் எந்த வகையான இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவம் செய்யும் என்று கணித்து. அந்த அனுபவங்களை, அனுபவிக்க வேண்டிய விதி எந்த உயிர்க்கு இருக்கிறதோ, அந்த உயிர் அந்தக் கருவில் செலுத்தப்படும்.

அந்த உயிர் குழந்தையாக பூமியில் பிறந்து தன் தண்டனைக் காலம் முடியும் வரையில், அந்தக் குழந்தை ஊனத்துடன் உயிரோடு இருக்கும். சிலருக்கு குறுகிய கால தடையாக இருப்பதால், சில ஊனமுற்ற குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்து விடுவார்கள். தண்டனை காலம் அதிகமாக இருந்தால் பல வருடங்கள் உயிரோடு இருப்பார்கள்.

சரி, ஒரு சந்தேகம் குறைகளுடைய குழந்தைகள் பிறக்காமல் தவிர்க்க முடியுமா?. நிச்சயமாக முடியும். ஒரு விதை மரமாக வளர வேண்டுமானால், அதற்கு மண், சூரிய கதிர், நீர், கற்று, சக்தி போன்றவை தேவை. இவற்றில் ஒன்று குறைந்தாலும் விதை மரமாகாது. அதைப்போலவே பழைய கர்மாக்கள் கெட்ட பலனை தர வேண்டுமானால், இந்த வாழ்க்கையிலும் தவறான விசயங்களை செய்ய வேண்டும். தவறான வாழ்க்கை முறை, தவறான உணவு முறை, சக்தி குறைபாடு, இரசாயன பயன்பாடு போன்றவை இருந்தால் மட்டுமே குறைகளுடைய குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உள்ளன. இதைத்தான் நம் முன்னோர்கள் "விதியை மதியால் வெல்லலாம்" என்று சொன்னார்கள்.

மனதறிந்து பாவங்களை செய்யாதீர்கள், யாருக்கும் கெடுதல் செய்யாதீர்கள். யார் நமக்கு என்ன பாவங்கள், துரோகங்கள், செய்திருந்தாலும் அனைத்தையும் மன்னித்துவிடுங்கள். நீங்கள் இதுவரையில் ஏதாவது தவறுகள் செய்திருந்தால், சம்பந்தப்பட்ட நபரிடமோ, இறைவனிடமோ மன்னிப்பு கோருங்கள்.

இந்த வாழ்க்கை அனைவருக்கும் சிறப்பாகவும், மகிழ்ச்சியானதாகவும், அமையட்டும் .


மன அழுத்தம், சோர்வு, கவலை மற்றும் வேதனைகளுக்கு காரணங்களும் தீர்வுகளும்

மனிதர்களின் மனங்களில் உருவாகும் அழுத்தம், சோர்வு, கவலை, வேதனை, அத்தனையும் வெளியில் இருந்து வருபவைதான். மனதில் உருவாகும் இந்த மாற்றங்களுக்கும், தொந்தரவுகளுக்கும், அவற்றை அனுபவம் செய்யும் நபர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருப்பதில்லை. யாரோ ஒரு மனிதர் செய்த தவறுகளை நினைத்து, இவர்கள் வேதனைகளை அனுபவம் செய்கிறார்கள்.

யாரோ செய்த தவறுகளுக்கு நாம் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்? என்று சிந்திக்காமல். மற்றவர்கள் செய்த செயல்களை நினைத்து-நினைத்து தன்னை வருத்திக் கொண்டு. தன் மனதை கெடுத்து, தனது ஆரோக்கியத்தையும் சீர்கெடுத்துக் கொள்கிறார்கள்.

மன அழுத்தம்
மன அழுத்தம் உள்ளவர்கள், குடும்ப வாழ்க்கை, வேலை சூழல், சமுதாயம் பிரச்சனைகள், சமுதாய அமைப்பு, என்று எந்தக் காரணத்தை முன் வைத்தாலும். இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது, தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் மனப்பான்மை தான்.

யாரோ ஒரு நபர் பேசிய வார்த்தைகளும், செய்த செயல்களும், சிலருக்கு மன அழுத்தத்தை உருவாக்கலாம். யாரோ ஒரு நபரிடம் உள்ள திறமையோ, செல்வமோ, பொருளோ, தன்னிடம் இல்லையே என்று சிலருக்கு மன அழுத்தம் உருவாகலாம். தன்னை வேறு ஏதாவது வகைகளிலாவது மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.

மன சோர்வு
மன சோர்வு உருவாவதற்கு பெரும்பாலும், என்னால் இயலாது அல்லது என்னால் இயலவில்லை என்ற அவநம்பிக்கையே முக்கிய காரணமாக இருக்கிறது. சிலர் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தனக்கு அது இயலவில்லை, தனக்கு அந்த திறமை இல்லை, எனக்கு அது கிடைக்கவில்லை என்று தன்னையே தாழ்திக் கொண்டு மனச்சோர்வு அடைகிறார்கள்.

மன வேதனை
யாரோ ஒரு மனிதர் செய்த தவறுகளை நினைத்து, சிலர் தங்களது மனதை வேதனைக்கு ஆளாக்குகிறார்கள். தவறு செய்தவன் கூட நிம்மதியாக வாழும்போது, இவர்களோ நிம்மதி இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.

மனக் கவலை
மனக்கவலைகள் பெரும்பாலும் ஒருவர் இழந்த மனிதரையோ, பொருளையோ, வாய்ப்பையோ நினைத்து வருந்தும் போது உருவாகின்றன. இந்த உலகில் யாரும், எதுவும், யாருக்கும் நிரந்தரமில்லை என்ற அடிப்படை உண்மையைக் கூட புரிந்துக் கொள்ளாமல். என்னிடம் அது இல்லை அல்லது அது என்னை விட்டு தொலைந்துவிட்டது, என்று கவலையில் மூழ்குகிறார்கள்.

மனக் குழப்பங்கள்
இந்த சமுதாய அமைப்பு பெரும்பாலும் ஒரு மனிதன் சுயமாக வாழ்வதற்கு கற்றுக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் யாரோ ஒருவரை எதிர்பார்த்தோ, சார்ந்தோ, வாழ பழக்கப்படுகிறார்கள். பெற்றோர்களோ, சகோதர சகோதரிகளோ, நண்பர்களோ, முதலாளிகளோ, கல்வியோ, செல்வமோ, வேலையோ, தொழிலோ, ஜாதியோ, மதமோ, எதையோ ஒன்றை சார்ந்தே மனிதர்கள் வாழ பழகிக் கொண்டார்கள்.

அவர்கள் சார்ந்திருந்த மனிதர்களோ, விசயங்களோ, அவர்களுக்கு தக்க நேரத்தில் உதவவில்லை என்றாலோ அல்லது தக்க நேரத்தில் தக்க உதவி கிடைக்காது என்ற எண்ணம் தோன்றினாலோ, அவர்களின் மனதில் சமமின்மையும், குழப்பமும் உருவாகின்றன.

மன சமமின்மைகளுக்கு காரணங்கள்
இன்றைய மனிதர்கள், அறிந்தோ, அறியாமலோ, பெரும்பாலும் அடுத்தவர்களை சார்ந்தே வாழ்ந்து கொண்டிருப்பதால், அவர்களுக்கு மன அழுத்தங்கள் மிக எளிதாக உருவாகின்றன.

பெற்றோர்கள் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோர்களையும் சார்ந்து வாழ்கிறார்கள். குடும்பத்தில் அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, என்று உறவோடு வாழ்வதற்குப் பதிலாக சிலர் அவர்களை சார்ந்து வாழ தொடங்கிவிட்டார்கள். சமுதாயத்தில், உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், என யாரையாவது சார்ந்து மனிதர்கள் வாழ்கிறார்கள்.

அவர்கள் சார்ந்திருக்கும் மனிதர்களிடமிருந்து அவர்களுக்கு, மதிப்பும், மரியாதையும், கிடைக்காத போது; அவர்கள் மனக் குழப்பங்களுக்கும், மன அழுத்தங்களுக்கும் ஆளாகிவிடுகிறார்கள்.

மனக் குழப்பங்களுக்கு தீர்வுகள்
மனதில் உருவாகும் அனைத்து வகையான மாற்றங்களுக்கும், வேதனைகளுக்கும், குழப்பங்களுக்கும், தீர்வாக இருக்க கூடியது; உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் மட்டுமே.

ஒரு மனிதர் ஏன் இவ்வாறு நடந்துக் கொள்கிறார்? ஏன் அவ்வாறு நடந்துக் கொள்ளவில்லை என்று குழம்பாமல். ஒரு நிகழ்வை ஏன் இவ்வாறு நடந்தது, ஏன் அவ்வாறு நடக்கவில்லை என்று மனதை குழப்பிக் கொள்ளாமல். அந்த மனிதரையும் நிகழ்வினையும் உள்ளது உள்ளபடியே ஏற்றுக் கொண்டால் மன வேதனைகளும், மன அழுத்தங்களும் நிச்சயமாக உருவாகாது.

உறவினர்களையும், நண்பர்களையும், உடன் பணி புரிவோர்களையும், அவர்களின் இயல்புடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உருவாகிவிட்டால். அது கடுமையான மன வேதனைகளை நிச்சயமாக உருவாக்காது. பிற மனிதர்களை நம்முடனும், நம்மை பிற மனிதர்களுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும் செயலை கைவிட வேண்டும். இதுவும் மனவேதனைகளுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

ஒவ்வொரு மனிதர்களும், தனி தன்மையுடன் படைக்கப்பட்ட உயிர்கள் என்றும். இரு மனிதர்கள் ஒன்றைப் போல் இருக்கமாட்டார்கள் என்றும் புரிந்துக் கொண்டு. மற்றவர்கள் நம்மை புரிந்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்காமல்.

மனிதர்களையும் வாழ்க்கையையும் ஒப்பிடாமல், சார்ந்து வாழாமல், உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொண்டால்; மன அழுத்தமும், சோர்வும், கவலையும், வேதனையும், நிச்சயமாக நமக்கில்லை.

வைரஸ் காய்ச்சல் எதனால் உருவாகின்றன?

காய்ச்சல்கள் உருவாவது ஏன்?
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல்கள் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் காய்ச்சல்கள், நோய்களுக்கான அறிகுறிகளாகவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலின் குறைகளை சரி செய்யவும், உடலின் கழிவுகளையும் கிருமிகளையும் வெளியேற்றும் நோக்கத்துடனும் மட்டுமே தோன்றுகின்றன.

இந்த கட்டுரையில் கிருமிகளினால் உருவாகும் காய்ச்சலை பற்றி பார்ப்போம். மனிதனின் உடலில் இருக்கும் பெரும்பான்மையான கிருமிகள் மனித உடலால் சுயமாகவே உருவாக்கப்பட்டவை. இந்த கிருமிகள் உடலில் தேவைகளுக்காக உடல் சுயமாக உருவாக்கிய கிருமிகள். இந்தக் கிருமிகள் உடலுக்கு மிகவும் தேவையானவை, மிகவும் நன்மையானவை, இவற்றால் உடலுக்கு எந்த தீங்குகளும் உண்டாகாது.

இரண்டாவதாக வெளியிலிருந்து உடலுக்குள் நுழையும் கிருமிகள். இவ்வகையான கிருமிகள் உணவின் மூலமோ, தின பயன்பாட்டு பொருட்களின் மூலமோ, ஆங்கில மருத்துவத்தின் ஊசிகள், மருந்துகள் மூலமோ அல்லது வெளி நபர்கள் மூலமோ உடலுக்குள் நுழையலாம்.

உடலுக்குத் தேவையில்லாத கிருமிகள் உடலுக்குள் நுழைந்துவிட்டால், உடல் எவ்வாறு தன்னை தற்காத்துக்கொள்ளும்?.

நமது அரசாங்கங்களும், மருத்துவர்களும், தொலைக்காட்சிகள், வானொலிகள், மற்றும் நாளிதழ்களில், பல விளம்பரங்களை கொடுக்கிறார்கள். தண்ணீரில் கிருமிகள் இருக்கும், அதனால் கொதிக்க வைத்து அருந்துங்கள். உங்கள் இறைச்சியில், காய்கறிகளில், உணவுகளில், கிருமிகள் இருக்கும் நன்றாக கழுவி பின் சமைத்து உண்ணுங்கள் என்று. கிருமிகளைப் பற்றிய அச்சத்தை மக்களுக்கு உருவாகுகிறார்கள்.

சரி, ஒருவேளை அந்தக் கிருமிகள் மனிதனின் உடலுக்குள் நுழைந்துவிட்டால்; உடலை சுட வைக்க முடியுமா? அல்லது நெருப்பால் சுட்டு அந்த கிருமிகளைக் கொல்ல முடியுமா? என்ன செய்வது?. அதனால்தான் உடலுக்குள் தேவையற்ற கிருமிகள் ஏதாவது தவறுதலாக நுழைந்து விட்டால்; அந்த கிருமிகளை கொல்வதற்காக, சில வேளைகளில் உடல் காய்ச்சலை உருவாக்குகிறது. தண்ணீரில் இருக்கும் கிருமிகள் எவ்வாறு தண்ணீர் கொதிக்கும் போது கொல்லப்படுகிறதோ; அதைப்போலவே மனித உடலில் காய்ச்சல் உருவாகும் போது உடலுக்குள்ளும் தேவையற்ற கிருமிகள் கொல்லப்படுகின்றன.

வைரஸ் காய்ச்சல், அல்லது கிருமிகளால் உண்டான காய்ச்சல் என்பது உண்மையில் கிருமிகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய காய்ச்சல் கிடையாது. அல்லது உடல் சுயமாக உருவாக்கிய கிருமிகளை கொல்வதற்காக உருவான காய்ச்சல் கிடையாது. மாறாக உடலுக்கு தேவையற்ற கழிவுகளையும் கிருமிகளையும் கொல்வதற்காக உருவான காய்ச்சலாகும்.

தெருவோரங்களில் நாயோ பூனையோ செத்துக் கிடப்பதை பார்த்திருப்பீர்கள். அந்தப் பிணத்தை தின்று அழிப்பதற்காக செத்துப்போன பூனை அல்லது நாயின் உடலில் புழுக்கள் உருவாவதையும் பார்த்திருப்பீர்கள். இப்போது சற்று சிந்தனை செய்து பாருங்கள். அந்தப் புழுக்கள் அனைத்தும் சேர்ந்து, அந்த நாயை கொன்றதா? அல்லது செத்துப்போன நாயின் உடலை அழிப்பதற்காக புழுக்கள் உருவானதா?.

உடலில் வைரஸ் உருவானதால் தான் காய்ச்சல் உருவானது என்ற ஆங்கில மருத்துவத்தின் கூற்றுப்படி பார்த்தால் புழுக்கள் அனைத்தும் சேர்ந்து தான் நாயை கொன்றன என்று நாம் நம்ப வேண்டி வரும். ஆனால் உண்மையில் நடந்ததோ என்ன? செத்துப் போன நாயின் உடலை அழிப்பதற்காக; நாயின் உடலில் இருந்து உருவானவைதான் அந்த புழுக்கள்.

செத்துப் போன விலங்குகளின் மேல் மொய்த்துக் கொண்டிருக்கும் புழுக்கள் வெளியில் இருந்து வந்தவையல்ல. செத்துப்போன விலங்குகளின் உடலில் இருக்கும் புழுக்கள் அனைத்துமே, அந்த உடல் சுயமாக உருவாக்கியவை. புற்கள் முதல் மனிதர்கள் வரை, இந்த உலகத்திற்கு தேவையில்லாத அனைத்து பொருளும் சுயமாக தன்னைத் தானே அழித்துக் கொள்ளும். இயற்கை இவ்வாறுதான் படைத்திருக்கிறது.

காய்ச்சலின் போது உடலில் உருவாகும் கிருமிகள், அந்தக் காய்ச்சல் கண்ட நபரின் உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை உடலை விட்டு வெளியேற்ற உறுதுணையாக இருக்கின்றன.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். சாலையோரத்தில் ஒரு எலி செத்து கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த செத்த எலியை காக்கைகள் தின்று விடுகின்றன. இப்போது அந்த எலியின் உடல் அங்கு இருக்காது. இடம் சுத்தமாகிவிடும். அதைப்போல் தான் உடலில் ஆபத்தான கழிவுகள் அதிகமாகும் போது; உடலில் சுயமாகவே கிருமிகளை உருவாக்கி, அந்தக் கிருமிகள் அந்த ஆபத்தான கழிவுகளை தின்றுவிட்டு இரத்தம், சிறுநீர், மலம், கட்டிகள் என பல வழிகளில் உடலைவிட்டு வெளியேறி விடுகின்றன.

இவ்வாறான உடலை சுத்தப்படுத்தும் செயல்கள் நடைபெறும் போது, உடலில் காய்ச்சல் உருவாகும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் இரத்தத்தையோ, சிறுநீரையோ பரிசோதித்துப் பார்த்துவிட்டு; கிருமிகள் இருக்கின்றன என்று கூறுவார்கள். அந்த காய்ச்சலுக்கு கிருமி காய்ச்சல், மலேரியா, டிங்கி, சிக்கின் குனியா, டீ-பீ என்றும் பெயர்களை சூட்டுவார்கள். நாமும் பயந்து கொண்டு அவர்கள் கூறுவதை எல்லாம் செய்து, அவர்கள் கொடுக்கும் மருந்துகளை எல்லாம் உட்கொண்டு. கழிவுகள் உடலை விட்டு வெளியேறவிடாமல் தடுத்து. ஆபத்தான கழிவுகளை உடலின் உள்ளேயே தேக்கி வைத்துக் கொள்வோம்.

காய்ச்சலை தடுப்பது எதிர்காலத்தில் கொடிய நோய்கள் உருவாக மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன. இவ்வாறு தேக்கி வைக்கப்படும் கழிவுகள் பின்நாட்களில் கட்டிகள், புண்கள், சொரி, அடைப்புகள், இளைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களாக மாறும்.

அதனால் காய்ச்சலை எந்தக் காரணத்தைக் கொண்டும் தடுக்கக்கூடாது. காய்ச்சல் என்பது உடலின் நன்மைக்காக மட்டும் உருவாகுமே ஒழிய, காய்ச்சல் என்பது ஒரு நோய் கிடையாது.

உறக்கம் ஏன் குறைகிறது?

உறக்கம்
இன்றைய காலகட்டத்தில் உறக்கம் தொடர்பான தொந்தரவுகளால் பலர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். உறங்குவதில் சிரமம், உறக்கமின்மை, உறக்கம் குறைவு, உறக்கத்தின் பகுதியில் விழித்துக்கொள்வது, பகலில் உறக்கம் உண்டாவது, வேலைகளுக்கு இடையில் உறக்கம் வருவது என பலருக்கு பலவகையான தொந்தரவுகள். பெரும்பாலானோர் ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் போதை மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இன்னும் பலர் உறக்கமின்றி மன நிம்மதியும் இன்றி அவதிப்படுகிறார்கள். உறக்கம் தொடர்பான தொந்தரவுகளுக்கு உண்மையான காரணங்களை சிறிது ஆராய்வோமா?

உறக்கம் என்றால் என்ன?
உறக்கம் தொடர்பான தொந்தரவுகளைப் பற்றி அறியும் முன்பு உறக்கம் என்றால் என்னவென்று முதலில் அறிந்துகொள்வோம். உறக்கம் என்பது மனித உடலும் மனமும் சக்தியை புதுப்பித்து, சக்தி நிலையை சமன்படுத்தும் ஒரு ஓய்வு நிலையே அன்றி வேறில்லை.

மனிதர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான உறக்கத்தின் தேவை இருக்காது. உறக்கத்தின் தேவையும், அளவும் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஆங்கில மருத்துவர்கள் கூறும் 8 மணிநேர உறக்கம் என்பது வெறும் கற்பனையே. ஒரு தனி நபருக்கு எவ்வளவு உறக்கம் தேவை என்பது அவர் உடலின் சக்தி நிலையையும், அவரின் உடலின் சக்தி உபயோகத்தையும் பொருத்து மட்டுமே அமையும்.

மனிதர்களின் உறக்கத்தின் கால அளவு
ஒவ்வொரு மனிதர்களுக்கும் தேவைப்படும் உறக்கத்தின் அளவு, அவர் அவர் செய்யும் தொழில், வாழ்க்கை முறை, உணவு முறை, சிந்தனை, மனநிலை, உடலின் உழைப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு மாறுபடும். மூட்டைத் தூக்கும் தொழிலாளி, வாகன ஓட்டுநர், ஆசிரியர், வியாபாரி, அலுவலகத்தில் வேலை செய்பவர், இல்லத்தரசி, ஓய்வில் இருக்கும் முதியவர், இவர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான உறக்கம் தேவைப்படுமா?.

மேலே குறிப்பிடபட்ட ஒவ்வொருவரின் உடல் உழைப்பும் வெவ்வேறாக இருக்கும். அவர்களின் மனோசக்தியின் பயன்பாடும் மாறுபடும். உடலின் சக்தி செலவும் மாறுபடும் அதனால் அவர்களின் உடலின் அசதியும் சக்தி தேவைகளும் நிச்சயமாக மாறுபடும். இவ்வாறு உடலின் மற்றும் மனதின் சக்தி தேவைகள் மாறுபடும் போது அவர்களின் சக்தி உற்பத்தி அளவும் கட்டாயம் மாறுபடும். இதனால் தான் சிலருக்கு அதிகமாக உறக்கம் வருவதும், சிலருக்கு குறைவாக உறக்கம் வருவதுமாக இருக்கிறது.

ஒருவருக்கு எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ, அல்லது அந்த உடலுக்கு தேவையான சக்தியை முழுமையாக உற்பத்தி செய்ய அந்த உடலுக்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகிறதோ; அதன் அளவுக்குத்தான் உறக்கம் இருக்கும். எல்லோருக்கும் ஒரே அளவிலான உறங்கும் நேர அளவு இருக்காது.

பயம்
நம் உடலின் தேவைகளுக்கு ஏற்ப உறக்கத்தின் அளவும் தன்மையும் மாறுபடும் என்பதை அறியாதவர்கள், ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவுக்கு நம்மால் தூங்க முடியவில்லை என்றும்; தனக்கு ஏதாவது நோய்கள் இருக்குமோ என்றும் அஞ்சுகிறார்கள். இந்த பயமே அவர்கள் மனதிலும் உடலிலும் புதிய தொந்தரவுகளை உருவாக்குகிறது.

உறக்கத்தில் ஏற்படும் குறைபாடுகள்
குறிப்பாக சிறுவர்களும், முதியவர்களும், இல்லத்தரசிகளும் உறங்குவதில் சில சிரமங்களை எதிர்நோக்குவார்கள். இதற்கு காரணம் சிறுவர்களின் உடல் தூங்காமலேயே சக்தியை அதிகமாக உற்பத்தி செய்யும் ஆற்றலுடன் இருக்கும், முதியவர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும், உடல் உழைப்பு குறைவாக இருப்பதனால் சக்தி விரயம் இல்லை. அதனால் சக்தி உற்பத்தியின் தேவையும் இல்லை. இந்த காரணங்களால் தான் அவர்களின் உறக்கத்தின் அளவும் குறைகிறது.

உறக்கம் குறைவாக தேவைப்பட்டால், உடலில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம் கிடையாது, மாறாக உடல் விரைவாக சக்தியை உற்பத்தி செய்கின்ற ஆற்றலுடன் இருக்கிறது என்று அர்த்தம். குறைவாக உறங்குபவர்கள் தான் ஆரோக்கியமான மனிதர்கள்.

ஆரோக்கியமான உறக்கத்தின் கால அளவு
நான் முன்பே கூறியது போல, ஒவ்வொரு மனிதனுக்கும் உறக்கத்தின் அளவு மாறுபடும். ஆனால் குறைந்தபட்ச உறக்கத்தின் அளவு என்று இருக்குமே என்று கேட்டால், ஆம் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் குறைந்த அளவாக 4 மணி நேரங்கள் உறங்கினால் போதுமானது. அதுவும் கண்டிப்பாக இரவு நேர உறக்கமாக இருக்க வேண்டும்.

முறையான உறக்கத்தின் அளவு என்பது அவர் அவர் உடலின் தேவைக்கு ஏற்ப இருக்க வேண்டும். உடல் மற்றும் மனதின் உழைப்பை பொறுத்து உறக்கம் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும்.

உறக்கம் தொடர்பான பயம் வேண்டாம்
எனக்கு உறக்கம் பற்றவில்லை, எனக்கு உறக்கம் குறைவாக இருக்கிறது என்று எந்த பயமும் தேவையில்லை. உங்களுக்கு உறக்கம் குறைவாக இருந்தால், உங்கள் உடலுக்கு குறைவான உறக்கத்தின் அளவே போதுமானதாக உள்ளது என்று அர்த்தம்.

உதாரணத்துக்கு என்னையே எடுத்துக்கொள்வோம். முன்பு நான் அதிக நேரங்கள் உறங்குவேன். இரவில் 9-10 மணி நேரம் உறங்கி, பின்பு பகலிலும் 2-3 மணி நேரம் உறங்குவேன். ஆனால் இப்போது இரவில் மட்டுமே, 5-6 மணி நேரங்கள் உறங்குகிறேன். எனக்கு என்ன நோய் கண்டுவிட்டதா?, இல்லை என் உடலும் மனமும் இப்பொழுது தான் ஆரோக்கியமான நிலையில் இருக்கிறது. எனக்கு உறக்கம் குறைவாகவே தேவைபடுகிறது என்று அர்த்தம். 5 மணி நேர உறக்கமே என் உடலுக்கும் மனதுக்கும் போதுமானதாக இருக்கிறது.

அதனால் உங்களுக்கு உறக்கம் குறைவாக இருக்கும் பட்சத்தில், பயம் வேண்டாம் உங்கள் உடலுக்கு உறக்கம் குறைவாகவே தேவைபடுகிறது, நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அறிக. ஆங்கில மருத்துவர்கள் கூறுவதை நம்பி பயப்பட வேண்டாம். உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க எவ்வளவு நேர உறக்கம் தேவை என்பதை உங்கள் உடல் நன்றாக அறியும். உங்கள் உடலை தவிரவும் உங்களை முழுமையாக அறிந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது.


மனதில் தேங்கும் உணர்ச்சிகளால் உருவாகக்கூடிய நோய்கள்

மனதினில் தேங்கக்கூடிய ஒவ்வொரு கெட்ட உணர்ச்சிகளும் உடலில் சில பாதிப்புகளை  ஏற்படுத்தக் கூடும். உணர்ச்சிகள் மனதில் தோன்றுவதும் பின் மறைவதும் மனித இயல்புதான். ஆனால் தோன்றிய  உணர்ச்சிகள் மறையாமல்  மனதிலேயே தேக்கம் கொள்ளும்போதும், பல நாட்களுக்கு தொடர்ந்து மீண்டும் மீண்டும் தோன்றும் போதும்  அவை  உடலின் உறுப்புகளை, பாதித்து நோய்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.

உணர்ச்சிகளும் அவை பாதிக்கும் உடலின் பகுதிகளும்

உணர்ச்சிகள் / பாதிக்கும் உறுப்புகள்

ஆணவம், கர்வம், திமிர், தற்பெருமை
இருதயம், சிறுகுடல், இரத்த நாளங்கள், மூட்டுக்கள், நாக்கு

கவலை, துக்கம்
மண்ணீரல், வயிறு, தசைகள், இடுப்பு, கீழ் உதடு

ஏக்கம், பற்று
நுரையீரல், பெருங்குடல், தோல், முடி, மூக்கு, தோள்பட்டை

அச்சம், பயம், காமம்
சிறுநீரகம், சிறுநீர் பை, எலும்புகள், கர்ப்பப்பை, ஆண்மை, காது

பொறாமை, எரிச்சல், கோபம்
கல்லீரல், பித்தப்பை, தசை நார்கள், கண்கள்

மேலே கூறப்பட்ட உணர்ச்சிகள் அதன் தொடர்புடைய உறுப்புகளையும், உடலின் பகுதிகளையும், பாதிப்புக்குள்ளாக்கி, அவற்றை பலகீனமாக்கி, அவற்றில் நோய்களை தோன்றச் செய்ய வாய்ப்பிருக்கிறது. இவைப் போன்ற உணர்ச்சிகள் அடிக்கடி தோன்றக்கூடியவர்கள், இவ்வாறான உணர்ச்சிகள் தோன்ற காரணம் என்ன, என்பதை ஆராய்ந்து. அவ்வாறான உணர்ச்சிகளை தூண்டக்கூடிய, உருவாக்கக் கூடிய செயல்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட உறுப்புகளில் சக்தி குறைவுகள் ஏற்பட்டாலோ அல்லது கழிவுகள், இரசாயனங்கள் தேக்கம் கொண்டாலோ, அதன் தொடர்பான குணங்களும் உணர்ச்சிகளும்  உருவாக வாய்ப்புகள் உள்ளன.

மேலே குறிப்பிட்ட உடலின் பகுதிகளில் தொந்தரவுகளும், பாதிப்புகளும் உள்ளவர்கள், மேலே குறிப்பிட்ட குணங்களும், உணர்ச்சிகளும் அவர்களிடம் இருக்கின்றனவா என்பதைப் பார்த்து, ஆராய்ந்து அவற்றை மாற்றிக் கொண்டால் அந்த பாதிப்புகளில் இருந்து உடல் விடுபட்டு ஆரோக்கியத்தை மீட்டுத்தரும். மேலே குறிப்பிட்ட குணங்கள், அதன் தொடர்புடையது மட்டுமில்லாமல். மற்ற உறுப்புக்களையும் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

மனித உடலில் எந்த பாகம் சீர் கெட்டாலும், எந்த நோய் தோன்றினாலும். மனம் மட்டும், நம்பிக்கையை இழக்காமல் தைரியமாக இருந்தால், உடலின் அத்தனை தொந்தரவுகளில் இருந்தும் மீண்டு, மீண்டும் நல்ல சுகம் பெறலாம். மனதின் பதிவுகளும், நம்பிக்கைகளுமே ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. மனம் மாசு படாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனதை எந்த நேரத்திலும் அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.


குழந்தைகளுக்கு உதட்டுப் பிளவு ஏன் ஏற்படுகிறது?

Cleft lips, Cleft palate என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உதட்டுப் பிளவுகள் மற்றும் வாயின் அண்ணத்தில் உண்டாகும் பிளவுகளும் குழந்தைகளுக்கு ஏன் உருவாகின்றன? இந்தியாவில் என் உறவுக்கார பெண் ஒருவரின் மகனுக்கு உதட்டில் பிளவு பிறக்கும் போதே இருந்தது. நான் மலேசியாவில் இருப்பதனால் இந்த வகையான குறைகளுடைய குழந்தைகளை நான் பார்த்ததில்லை.

அந்த பெண்ணின் மகனுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை செய்து உதட்டுப் பிளவுகளை சரி செய்கிறார்கள் என்று ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்தார்கள். அறுவை சிகிச்சை முடிந்த மறுநாள் நான் அந்த குழந்தையை பார்க்கச் சென்றேன். அந்த மருத்துவமனையில் இந்த வகையான குறைகளுடைய குழந்தைகளுக்கென தனிப் பிரிவே இருந்தது. அங்குச் சென்று அங்கு இருந்த குழந்தைகளையும் அங்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களையும் பார்த்த பொழுது எனக்குள் கோபமும் சந்தேகமும் அதிகரித்தது.

அங்கு இருந்த ஒரு தாதியிடம் "nurse" நான் இந்த அறுவை சிகிச்சைகளை செய்த மருத்துவரை காணவேண்டும் என்றேன். அதற்கு அவர் அந்த டாக்டர் இன்று வரமாட்டார் என்றார். அவர் அனுபவமுள்ள முதிர்ந்த தாதியாக இருந்ததால் நான் அவரிடம் கேட்டேன். "குழந்தைகள் ஏன் வாய் பிளவு நோய்களுடன் பிறக்கிறார்கள் என்று" அவர் என்னை யார் என்று விசாரித்து விட்டு சொன்னார் "கர்ப்பமுற்ற தாய்மார்கள், கர்ப்பமாக இருக்கும் போது உட்கொண்ட மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவாகத் தான் குழந்தைகள் ஊனங்களுடன் பிறக்கிறார்கள் என்று". நான் அவருக்கு நன்றி கூறி விடைபெற்றேன்.

அந்த நர்சுக்கு தெரிந்த இந்த விஷயம் ஒரு டாக்டருக்கு தெரியாதா?. குழந்தைகள் ஊனமாக பிறக்க வாய்ப்புகள் உண்டு என்று தெரிந்தும், ஏன் ஆங்கில மருத்துவர்கள் இரசாயன மருந்துகளை கர்ப்பமுற்ற பெண்களுக்கு பரிந்துரைக்கிறார்கள்?

அமெரிக்காவில் இருந்து இலவசம்
சற்று சிந்தனை செய்யுங்கள். ஏன் அமெரிக்காவில் இருந்து ஏதோ ஒரு அமைப்பு இந்தியாவில் உள்ள பிள்ளைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள்?. இந்த கேள்வியை நான் கேட்டதுக்காக உங்களுக்கு கோவம் உண்டாகலாம். ஆனாலும் முதலில் சிந்தியுங்கள். எங்கோ உள்ள குழந்தைகளுக்கு ஏன் எவனோ வந்து உதவ வேண்டும்?. நல்ல மனதை நான் குறை சொல்கிறேன் என்று நினைகிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள்.

எது மருத்துவம்?
உதடு மற்றும் அண்ணத்தில் வெடிப்புகளுடன் குழந்தைகள் பிறக்காமல் தடுப்பது சிறந்ததா? அல்லது உடல் குறைகளுடன் குழந்தைகள் பிறக்க காரணமாக இருந்துவிட்டு, இலவச அறுவை சிகிச்சை செய்வது சிறந்ததா?. எது சிறந்தது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

மருத்துவத்தின் அரசியல்
மீண்டும் சற்று சிந்தனை செய்யுங்கள். உங்களுக்கு தெரிந்த ஒருவர் நொண்டிக் கொண்டு நடந்தால், இரத்தம் சிந்தினால் அல்லது அடிபட்டு கிடந்தால், ஏன்? என்ன? என்று விசாரிப்பீர்கள் தானே?. அதற்கு காரணமும், தீர்வும் தேடுவீர்கள் தானே?. ஆனால் அப்படி நடந்ததை நீங்கள் கண்களால் காணவில்லை என்றால். அப்படி நடந்ததே உங்களுக்கு தெரியாது என்றால், அதன் தொடர்பாக சிந்திக்கவோ, விசாரிக்கவோ மாட்டீர்கள் அல்லவா?.

அதுதான் மருத்துவ அரசியல். வெளி உலக மக்கள் யாரும் வாய் அல்லது அண்ணப் பிளவு உள்ள குழந்தைகளை பார்க்கக்கூடாது என்று திட்டமிட்டு இலவசமாக அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள் என்பது எனது கருத்து. ஒருவேளை மக்கள் உதடு மற்றும் வாய் அண்ணப் பிளவுகள் உள்ள குழந்தைகளை அதிகமாக காணத் தொடங்கினால், அந்த குறைகள் உருவாக காரணம் என்ன என்று சிந்திக்கத் தொடங்குவார்கள். அதற்கு நிரந்தர தீர்வு தேடுவார்கள். தங்களின் குழந்தைகளுக்கு இந்த குறைகள் வராமல் தடுக்க முயற்சி செய்வார்கள். இது நடந்தால் ஆண்டுக்கு 11000 கோடி ரூபாய்கள் வரையில் வருமான இழப்பு ஏற்பட வாய்புள்ளது, மருத்து, இரசாயனம் மற்றும் மருத்துவ தொழில் துறைகளுக்கு. இதை நடக்க விடுவார்களா?. அந்த வருமானத்தை தக்கவைத்துக்கொள்ள தான் இந்த இலவச அறுவை சிகிச்சைகளை செய்கிறார்கள்.

பெற்றோர்களின் மனோதத்துவம்
குறைகளுடைய குழந்தைகளை பெற்றவர்கள், முதலில் வேதனைப்படுகிறார்கள். சிறிது நாட்களில் இறைவன் சோதனை, சாமி, முன்னோர்கள் சாபம், செய்வினை, ஆவி, பூதம் என எதையாவது சொல்லி தன்னை தானே ஏமாற்றிக்கொள்கிறார்கள். ஒரு குழந்தைக்கு ஏதாவது குறை ஏற்படும் போது இந்த குறை ஏன் உருவானது என்று யோசித்து, அதற்கான உண்மை காரணத்தை கண்டறிந்தால் அதன் பின்னர் பிறக்கும் எந்த குழந்தைக்கும் இது போன்ற குறைகள் உண்டாகாமல் பாதுகாக்கலாம் அல்லவா?.

ஆனால், தமிழகத்தின் பரம்பரை நோயான மறதியும், அலட்சிய போக்கும், சுயநலத்துடன் கலக்கும்போது, அடுத்தவன் எப்படி போனால் நமக்கு என்ன, நாம் நன்றாக இருந்தால் போதும் என்று முடிவுக்கு வருகிறார்கள். சென்ற தலைமுறையின் அலட்சிய போக்கும் சுயநலமும் இன்றைய தலைமுறையின் நோய்கள். இன்று நமது சுயநலமும் அலட்சியமும் நமக்கு அடுத்த தலைமுறையின் நோய்களாக மாறும்.

உதடு பிளவுக்கு காரணம்
ஆங்கில மருத்துவர்கள் கர்ப்பமுற்ற தாய்மார்களுக்கு பரிந்துரைக்கும், இரசாயன மருந்துகளே குழந்தைகள் ஊனமாக பிறப்பதற்கு மூல காரணமாக இருக்கின்றன. ஆங்கில மருத்துவர்கள் இரும்பு சத்து, கால்சியம் போன்ற சத்து மாத்திரைகள் என்ற பெயரில் கொடுக்கும் இரசாயனங்களே, தாய்மார்களின் உடலையும் கர்ப்பப்பையையும் பாதித்து, அந்த கர்ப்பப்பையில் உருவாகும் குழந்தையையும் ஊனமாக்குகிறது.

தவறான வாழ்க்கை முறைகளும், தூக்கமின்மையும், தவறான உணவு முறைகளும், இரசாயன பயன்பாடுகளும், மன சிதைவும், சில குழந்தைகளை ஊனமாக்குகின்றன. எப்படி பார்த்தாலும் 90% குழந்தைகளின் ஊனத்துக்கு இரசாயன மருந்துகளே முக்கிய காரணமாக இருக்கின்றன.

உதட்டு வெடிப்பு குறைகளுக்கு தீர்வு
ஆங்கில மருத்துவத்தையும், இரசாயனங்களையும், முழுமையாக ஒதுக்குவது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாகும். மருத்துவர்களை நம்பாமல் உங்கள் உடலை நம்புங்கள், உங்களை படைத்த இறைவனை நம்புங்கள், உங்களை பாதுகாக்கும் இயற்கையை நம்புங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். ஆங்கில மருத்துவம் தோன்றுவதற்கு முன்பும் குழந்தைகள் பிறந்து கொண்டு தான் இருக்கின்றன.