கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label நம்பிக்கைகள். Show all posts
Showing posts with label நம்பிக்கைகள். Show all posts

முஸ்லிம்கள் நாய்களை வளர்க்கலாமா? கூடாதா?

முஸ்லிம்களுக்கு நாய்களை வளர்க்கக் கூடாது என்று அல்குர்ஆனில் எந்த ஒரு தடையும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக அல்குர்ஆன் நாய்களை வளர்ப்பதை அனுமதிக்கிறது. உஸ்தாஸ்கள், ஆலிம்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள்தான் நாய்கள் வளர்ப்பதை தடை செய்கிறார்கள். நாய்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவை போன்ற ஒரு பிம்பம் மக்களிடையே இருப்பதினால், சிலர் நாய்களை துன்புறுத்துகிறார்கள், கொல்கிறார்கள். இது மிகப் பெரிய பாவமாகும். இதற்கு கடுமையான தண்டனையும் நிச்சயமாக இறைவனிடம் உண்டு.

...அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி (நாய்களுக்கு) , பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்;. எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன். (Al-Maaida: 4)

ஹதீஸ்களில் நாய் வளர்க்கக் கூடாது என்று இருப்பதாக கூறுகிறார்கள். அல்குர்ஆன் அனுமதித்த பிறகு எதற்காக ஹதீஸை பின்பற்ற வேண்டும்?. அல்குர்ஆனை விடவா ஹதீஸ் உயர்ந்தது?

உலக அரசியலை புரிந்துக்கொள்ளுங்கள்
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, இடைப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு இயக்கம், அல்லது ஒரு குழு முஸ்லிம்களை, கொல்வதற்கும், அடிமைப் படுத்துவதற்கு, நாய்கள் தடையாக இருக்கும் என்று அறிந்துக் கொண்டு. திட்டமிட்டு நாய்களை, ஹராம் நஜிஸ், என்று பரப்பி விட்டிருக்கிறார்கள். அல்குர்ஆனை ஆராய்ச்சி செய்யாத மக்களும், அவற்றை நம்பிக் கொண்டிருக்கிறார்கள், பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் முஸ்லிம்கள், கொல்லப்படுவதையும், துன்புறுத்தப்படுவதையும், வேதனை படுத்தப்படுவதையும், அடிமையாக்கப் படுவதையும், சூறையாடப் படுவதையும் அனுதினமும் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கலாம். அவற்றில் வெளிப்படையாக காட்டப்படுபவை குறைவானவை மட்டுமே, நம் அறிவுக்கு எட்டாமல் இன்னும் அதிகமாக நடக்கின்றன.

சற்று சிந்தித்துப் பாருங்கள், இந்த வேதனைகளை அனுபவிக்கும் முஸ்லிம்கள் நாய்களை வளர்த்திருந்தால். கொல்லப்பட்ட, ஊனமான, துன்புறுத்தப்பட்ட, மானபங்கம் செய்யப்பட்ட, முஸ்லிம்களில் பாதி பேர்களாவது காப்பாற்ற பட்டிருப்பார்கள். உண்மையா? இல்லையா?. ஒரு மனிதர் துன்பப்படும்போது, மனிதர்கள் வேண்டுமானால் பயத்தினால் ஒதுங்கி நிற்கலாம், நாய்கள் நிற்குமா?. தன் உயிர் இருக்கும் வரையில் எஜமானனை காத்து நிற்காதா?. அதனால்தான் இஸ்லாமியர்களுக்கு நாய்கள் தடை.


உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் 
ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், சிரியா, வங்கதேசம், மியான்மர், அவ்வளவு ஏன் நம் பக்கத்து மாநிலங்களில் எத்தனை முஸ்லிம்கள் கொல்லப் படுகிறார்கள். எத்தனை முஸ்லிம்கள், உடமைகளை இழந்து, உரிமைகளை இழந்து, மானம் இழந்து அலைகிறார்கள். அவர்களை ஏன் மலக்குகள் வந்து காப்பாற்றவில்லை?. அவர்களுக்கு உதவாத மலக்குமார்கள் உங்களுக்கு வந்து உதவுவார்கள் என்று இன்னும் நம்புகிறீர்களா?.

இந்த நம்பிக்கை தான் உண்மையான ஈமான் என்று சிலர் வாதிடுவார்கள். இது நம்பிக்கையல்ல, மூட நம்பிக்கை என்கிறேன் நான். உங்களுக்கு உதவிக்கும் பாதுகாப்பிற்கும் இறைவன் நாய்களை படைத்து துணைக்கு அனுப்பி விட்டான். அதை வளர்க்காமல் வானத்திலிருந்து உதவி வரும் என்று மேலேயே பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் தவறுதான்.

மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. (Ad-Dukhaan: 38)

அத்தனை ஹதீஸ்களும் உண்மையல்ல
ஹதீஸ்களின் பெயரால் முஸ்லிம்கள் முட்டாள்கள் ஆக்கப்படுகிறார்கள் என்பது எனது கருத்து. நாய்களை வளர்ப்பது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், உங்கள் வீட்டுக்கும், மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியாத, வருவாரா? வரமாட்டாரா? என்று தெரியாத மலக்குகள், வீடுகளில் நாய்களை வளர்த்தால் உள்ளே வரமாட்டார் என்ற வெறும் நம்பிக்கையின் அடிப்படையில், நாய்களை ஒதுக்குவது உங்கள் உடமைகளுக்கும், உயிருக்கும் ஆபத்தாக முடியும்.

நாய்கள் வளர்த்தால் மலக்குகள் வர மாட்டார்கள், இதுதானே பெரும்பாலானோர் கூறும் காரணமாக இருக்கிறது? அப்படி என்றால் நாய் வளர்க்காதவர்கள் வீடுகளில் மலக்குகள் வந்து ஆபத்துகளில் உதவுகிறார்களா? அவ்வாறான உதவிகளை பெற்றவர்கள் யாராவது உண்டா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அல்லது கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?

நாய்களை வளர்க்காத முஸ்லிம்களின் வீடுகளில் கொள்ளை, கொலை, கற்பழிப்பு, போன்ற கெட்ட விஷயங்கள் நடக்காமல் மலக்குகள் தடுக்கிறார்களா? அல்லது யாரையாவது மலக்குகள் வந்து காப்பாற்றி இருக்கிறார்களா? இவ்வாறு நடந்ததாக கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?. ஆனால் நாய்களை வளர்த்திருந்தால், கண்டிப்பாக அவை காப்பாற்ற முயற்சிகளை செய்திருக்கும் அல்லவா?. தனக்கு சம்பந்தம் இல்லாத எத்தனையோ நபர்களை குழந்தைகளை நாய்கள் காப்பாற்றியதாக நீங்கள் நாளிதழ்களில் வாசித்ததில்லையா? கேள்விப் பட்டதில்லையா?

எல்லாவற்றையும் அப்படியே நம்பாதீர்கள், சிந்தியுங்கள்
அல்குர்ஆனில் பலமுறை ஒலிக்கும் ஒரு வசனம், நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? சிந்திக்கும் சமுதாயமாக மாற மாட்டீர்களா? என்பதுதான். சிந்திக்க சொல்லி அல்குர்ஆன் தூண்டுகிறது, சிந்திக்கக் கூடாது, நபியை எதிர்த்து ஹதீஸை எதிர்த்து, அல்குர்ஆனை எதிர்த்து கேள்விகள் கேட்கக் கூடாது என்று நமது ஹஜ்ரத்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.

நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா? (As-Saaffaat: 155)

முஸ்லிம்களே வீட்டுக்கு இரண்டு நாய்களை வளர்க்க தொடங்குங்கள்
நாட்டு நாய்களை வளர்க முயற்சி செய்யுங்கள், நாட்டு நாய்கள் மட்டும்தான் விசுவாசமாக யாருக்கும் அஞ்சாமல், தன் உயிரைக் கொடுத்து எஜமானனை பாதுகாக்கும். அழகுக்காக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நாய்களை வாங்குவதும் வளர்ப்பதும் வீண் வேலையாகும்.

அல்குர்ஆனை பின்பற்றுகிறீர்களா? அல்லது மனிதர்களை பின்பற்றுகிறீர்களா? முடிவு உங்கள் கையில் தான் உள்ளது. ஒரு வேட்டை நாய் பிடித்து வரும் விலங்கை உண்ணலாம் என்றால், நாய் வளர்க்காமல் அதை செய்ய முடியுமா?. நாய்களை வளர்க்கக் கூடாது என்றால் இந்த வசனத்தை அல்லா இறக்கி வைக்க தேவையே இல்லையே.

இந்தக் கட்டுரையை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. மக்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. சிந்தியுங்கள்.மனதின் நம்பிக்கைகளினால் நோய்கள் உண்டாகுமா?

ஒருவர் மழையில் நனைந்தால் காய்ச்சல் உண்டாகும், சளி உண்டாகும் என்று நம்புவாரேயானால், ஆரோக்கியமான உடல் இருந்தாலும் அவர் நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்தினால் மழையில் நனைந்தால் அவை உண்டாக வாய்ப்பிருக்கிறது.

அது செய்தால், அந்த நோய்கள் உண்டாகும், இந்த வயதில் இந்த நோய்கள் உண்டாகும் என்று ஒருவர் மனதாலே நம்பிக்கை கொண்டுவிட்டால், அவர் நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்தினால் அவை உண்டாகும்.

மனதினால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அதனால் எவற்றை அறிந்துக் கொள்கிறோம், எவற்றை நம்பிக்கை கொள்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Placebo effect என்றால் என்ன?

சிலருக்கு நோய்கள் உருவானால், ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் நோய்கள் குணமாகிவிடும். சிலருக்கு சில குறிப்பிட்ட மருத்துவர்களைச் சென்று சந்தித்தாலே உடலில் தொந்தரவுகள் குறைந்துவிடும். சிலருக்கு உடலில் தொந்தரவுகள் உருவானால் மருந்து மாத்திரைகள் உட்கொண்டால் மட்டுமே அந்த தொந்தரவுகள் நீங்கும்.

சிலருக்கு சில செயல்களைச் செய்தாலும், சில மனிதர்களைச் சந்தித்தாலும், சில இடங்களுக்குச் சென்றாலும், உடலில் தொந்தரவுகள் குறைந்துவிடும். ஒரு சிலருக்கு இவை எதையுமே செய்யாமலேயே மருந்து மாத்திரைகள் இல்லாமலேயே தூங்கி எழுந்தாலே அனைத்து தொந்தரவுகளும் குணமாகிவிடும்.

இவைதான் ப்லேசிபோ எபெக்ட், நம்பிக்கையினால் விளையும் விளைவுகள். இதைச் செய்தால் இது நடக்கும் என்று ஒருவர் மனதாலே முழு நம்பிக்கை கொண்டுவிட்டால், அந்த குறிப்பிட்ட செயலை செய்யும்போது, அவர் நம்பிக்கை கொண்ட விளைவுகள் அவருக்கு நடக்கும். அவரின் நம்பிக்கை தவறாக இருந்தாலும் அதற்குரிய விளைவு அவருக்குக் கிடைக்கும்.

தெய்வ வழிபாடுகள் எதற்காக உருவாக்கப்பட்டன?

தெய்வ வழிபாடுகள் தனக்கு உதவியாக ஒரு சக்தி இருக்கிறது என்று மனிதர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. மனிதர்கள் எப்பொழுதுமே சக மனிதர்களை எளிதில் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அதனால்தான் உனக்கு மேலே ஒரு சக்தி உள்ளது. அந்த சக்தி உனக்குத் துணையாக இருக்கும், உனக்கு உதவி புரியும் என்று மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டினார்கள்

நோய்கள் விரைவில் குணமாக நோயாளிகளுக்கு என்ன தேவை?

நம்பிக்கை. மனம் தான் மனிதன், மனதின் வெளிப்பாடே வாழ்க்கை. எந்த நோய் கண்டவராக இருந்தாலும், இந்த நோய் நிச்சயமாகக் குணமாகும் என்ற மன தைரியமிருந்தால் கண்டிப்பாக அந்த நோய் குணமாகும், உடலின் ஆரோக்கியம் திரும்பும்.