கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label தீட்சை. Show all posts
Showing posts with label தீட்சை. Show all posts

ரெய்கி தீட்சை - Attunement

 ரெய்கியில் தீட்சை (Attunement) என்பது ஒரு மாஸ்டர் தனது மாணவருக்கு அவரின் குண்டலினி ஆற்றலையும், சக்ராக்களையும் சீர்படுத்தி. பின் தனது ஆற்றலை அவருடன் பகிர்ந்துக் கொள்வதாகும். பிரபஞ்ச ஆற்றலான “கி”யின் உதவியுடன் “கி”யை மாணவரின் உடலுக்கு திருப்பிவிடுவார். அந்த ஆற்றல் மாணவரின் உடலுக்குள் முழுமையாக நுழைந்து செயல்பட தொடங்கும். தீட்சை பெற்ற மாணவரின் ஆற்றல் அந்த மாணவரின் சக்தி, சக்ராக்கள், ஆரா, மனம் மற்றும் உடலை சீர்படுத்த தொடங்கும். பிரபஞ்ச ஆற்றல்களை பயன்படுத்தும் திறனும் அதிகரிக்கும்.

ரெய்கியில் தீட்சை (Attunement) பெற்ற மாணவரை ஒரு தொலைக்காட்சி பெட்டியுடன் ஒப்பிடலாம். தொலைக்காட்சியை அதற்குரிய அலைவரிசையுடன் சரியாக இணைக்கும் போது நமக்கு தேவையான ஒளிபரப்பை அது வழங்குவதைப் போன்று, முறையாக தீட்சை பெற்றவுடன் மாணவரின் ஆற்றல் பிரபஞ்சத்துடன் இணைந்து அந்த மாணவருக்கு தேவையான விசயங்களை தனக்குள் கிரகித்துக் கொள்ளும்.

ரெய்கி தீட்சைக்கு முன் ஏற்பாடுகள் 
ரெய்கி தீட்சை வழங்குவது என்பது ஒரு முக்கியமான மற்றும் புனிதமான காரியமாகும். தீட்சை வழங்கப்படும் இடம் சுத்தமாகவும், அமைதியாகவும், பிற மனிதர்கள் மற்றும் பிற விசயங்களின் இடையூறுகள் இல்லாமலும் இருப்பது முக்கியம். முடிந்தால் தீட்சை வழங்கும் செயலை கடற்கரை ஓரம், நதிக்கரை, தோட்டம், புல்வெளி, காடு, மலை போன்ற அமைதியான இடங்களில் செய்ய வேண்டும்.

மாஸ்டரும் மாணவரும் அமைதியாகவும் மன ஓர்மையுடனும் இருக்க வேண்டும். உடலாலும், மனதாலும், சக்தி நிலையிலும் சம தன்மை ஏற்பட வேண்டும். அப்போதுதான் சக்தி மாற்றம் முழுமையாகவும் நிறைவாகவும் ஏற்படும். அதன் மூலம் அந்த மாணவர் பல நன்மைகளை அடைவார். 

தீட்சை வழங்கும் மற்றும் பெறும் வழிமுறைகள்

ஹோலிஸ்டிக் ரெய்கியில் தீட்சையை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். முதல் கட்டம் “Reiki Practitioner Level 1 ” இரண்டாம் கட்டம் “Reiki Practitioner Level 2” மற்றும் மூன்றாம் கட்டமாக “Reiki Master”.

Reiki Practitioner Level 1 
தீட்சை பெற்றுக்கொள்ளும் மாணவரும், தீட்சையை வழங்கும் மாஸ்டரும் 20 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.

1. 20 நிமிடங்கள் தியானம் செய்த பிறகு.
2. மாஸ்டருக்கு மனதளவில் தீட்சை வழங்கும் நோக்கம் இருக்க வேண்டும்.
3. மாணவருக்கு மனதளவில் தீட்சை பெற்றுக்கொள்ளும் நோக்கம் இருக்க வேண்டும்.
4. மாஸ்டர் மாணவரின் ஆராவை சுத்தம் செய்வார்.
5. மாஸ்டர் மாணவரின் சக்ராக்களை சுத்தம் செய்வார்.
6. மாஸ்டர் மாணவரின் ஆற்றலை சமன்படுத்துவார்.
7. மாஸ்டர் முதல் 5 சக்ராக்களை சரிசெய்து, சக்ராக்களுக்கு ஆற்றலை வழங்குவார்.
8. மாஸ்டர் level 1 ஆற்றலை மாணவருக்கு வழங்குவார்.
9. மாணவருக்கு பிரபஞ்ச ஆற்றலுடன் தொடர்பை உண்டாக்குவார்.
10. தீட்சை முழுமை பெற்றது.

Reiki Practitioner Level 2 
இரண்டாம் கட்ட தீட்சையை பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக முதல் கட்ட தீட்சையை பெற்று; மூன்று மாதங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

தீட்சை பெற்றுக்கொள்ளும் மாணவரும், தீட்சையை வழங்கும் மாஸ்டரும் 20 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.

1. 20 நிமிடங்கள் தியானம் செய்த பிறகு.
2. மாஸ்டருக்கு மனதளவில் தீட்சை வழங்கும் நோக்கம் இருக்க வேண்டும்.
3. மாணவருக்கு மனதளவில் தீட்சை பெற்றுக்கொள்ளும் நோக்கம் இருக்க வேண்டும்.
4. மாஸ்டர் மாணவரின் ஆராவை சுத்தம் செய்வார்.
5. மாஸ்டர் மாணவரின் சக்ராக்களை சுத்தம் செய்வார்.
6. மாஸ்டர் மாணவரின் ஆற்றலை சமன்படுத்துவார்
7. மாஸ்டர் 7 சக்ராக்களையும் சரிசெய்து, சக்ராக்களுக்கு ஆற்றலை வழங்குவார்.
8. மாஸ்டர் level 2 ஆற்றலை மாணவருக்கு வழங்குவார்.
9. மாணவருக்கு பிரபஞ்ச ஆற்றலுடன் தொடர்பை உண்டாக்குவார்.
10. தீட்சை முழுமை பெற்றது.

Reiki Master 
ரெய்கி மாஸ்டர் தீட்சை முதல் இரண்டு தீட்சைகளையும் பெற்று அவற்றை முறையாக பயிற்சி செய்துவரும் மாணவர்களுக்கு வழங்கப்படும். ரெய்கி மாஸ்டர் தீட்சை என்பது புதிய மாணவர்களுக்கு முதல் இரண்டு கட்ட தீட்சை வழங்கும் அளவுக்கு அறிவும், ஆற்றலும் வழங்கப்படும்.


ரெய்கி தீட்சை அளிக்கும் முறைகள்

தீட்சையை பல வழிமுறைகளில் வழங்கலாம். ஒவ்வொரு குருவும் ஒரு தனிப்பட்ட வழிமுறையை பின்பற்றுவார். தீட்சை வழங்கும் குருவுக்கும், அதை பெற்றுக்கொள்ளும் மாணவருக்கும் ஏற்ப வழிமுறைகள் மாறுபடும். சிலர் எழுத்துக்கள் மூலமாகவும், சிலர் வார்த்தையாகவும், சிலர் ஓசையாகவும், சிலர் தொட்டும், சிலர் தொடாமலும், சிலர் வெறும் எண்ணங்களைக் கொண்டே தீட்சை வழங்குவார்கள்.

1. மனதாலே நினைத்து எண்ணங்களால் வழங்குவது.
2. மனதாலே நினைத்து பார்வையால் வழங்குவது.
3. மனதாலே நினைத்து வார்த்தையால் வழங்குவது.
4. மனதாலே நினைத்து ஒலியால் வழங்குவது.
5. மனதாலே நினைத்து எழுத்தால் வழங்குவது.
6. மனதாலே நினைத்து தொட்டு வழங்குவது.
7. மனதாலே நினைத்து மந்திரங்கள் மூலம் வழங்குவது.

ரெய்கி தீட்சையை உணர்வது எப்படி?


ரெய்கி தீட்சையை பெற்ற மாணவர் தான் பெற்ற தீட்சையை உணர வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. ரெய்கி ஆற்றல் உடலில் இருந்தாலும் அதை தொடவோ, பார்க்கவோ, உணரவோ முடியாது. தொடவோ, பார்க்கவோ அல்லது உணரவோ முடியவில்லை என்பதனால் உடலில் அந்த ஆற்றல் இல்லை என்று அர்த்தமும் கிடையாது. தொடர்ந்து பயிற்சிகளை செய்துவரும் போது உடலிலும், தன்னை சுற்றியும் இருக்கும் ரெய்கி ஆற்றலை மாணவரால் உணர முடியும். 

ரெய்கி தீட்சை - Attunement


ரெய்கியில் தீட்சை (Attunement) என்பது ஒரு மாஸ்டர் தனது மாணவருக்கு அவரின் குண்டலினி ஆற்றலையும், சக்ராக்களையும் சீர்படுத்தி, பின் தனது ஆற்றலை அவருடன் பகிர்ந்துக் கொள்வதாகும். பிரபஞ்ச ஆற்றலான “கி”யின் உதவியுடன் “கி”யை மாணவரின் உடலுக்கு திருப்பிவிடுவார். அந்த ஆற்றல் மாணவரின் உடலுக்குள் முழுமையாக நுழைந்து செயல்பட தொடங்கும். தீட்சை பெற்ற மாணவரின் ஆற்றல் அந்த மாணவரின் சக்தி, சக்ராக்கள், ஆரா, மனம் மற்றும் உடலை சீர்படுத்த தொடங்கும். பிரபஞ்ச ஆற்றல்களை பயன்படுத்தும் திறனும் அதிகரிக்கும்.

ரெய்கியில் தீட்சை (Attunement) பெற்ற மாணவரை ஒரு தொலைக்காட்சி பெட்டியுடன் ஒப்பிடலாம். தொலைக்காட்சியை அதற்குரிய அலைவரிசையுடன் சரியாக இணைக்கும் போது நமக்கு தேவையான ஒளிபரப்பை அது வழங்குவதைப் போன்று, முறையாக தீட்சை பெற்றவுடன் மாணவரின் ஆற்றல் பிரபஞ்சத்துடன் இணைந்து அந்த மாணவருக்கு தேவையான விசயங்களை தனக்குள் கிரகித்துக் கொள்ளும்.

ரெய்கி தீட்சைக்கு முன் ஏற்பாடுகள் 
ரெய்கி தீட்சை வழங்குவது என்பது ஒரு முக்கியமான மற்றும் புனிதமான காரியமாகும். தீட்சை வழங்கப்படும் இடம் சுத்தமாகவும், அமைதியாகவும், பிற மனிதர்கள் மற்றும் பிற விசயங்களின் இடையூறுகள் இல்லாமலும் இருப்பது முக்கியம். முடிந்தால் தீட்சை வழங்கும் செயலை கடற்கரை ஓரம், நதிக்கரை, தோட்டம், புல்வெளி, காடு, மலை போன்ற அமைதியான இடங்களில் செய்ய வேண்டும்.

மாஸ்டரும், மாணவரும் அமைதியாகவும் மன ஓர்மையுடனும் இருக்க வேண்டும். உடலாலும், மனதாலும், சக்தி நிலையிலும், சம தன்மை ஏற்பட வேண்டும். அப்போதுதான் சக்தி மாற்றம் முழுமையாகவும் நிறைவாகவும் ஏற்படும். அதன் மூலம் அந்த மாணவர் பல நன்மைகளை அடைவார். 

ரெய்கி தீட்சை பெற்ற பின்னர்

ரெய்கி தீட்சை பெற்ற பின்னர், சக்தியில் உண்டாகும் மாற்றங்கள்

ரெய்கி தீட்சை பெற்ற பிறகு மாணவரின் சக்தி நிலையில் பல மாறுதல்கள் உண்டாகும். உடலும், மனமும், சக்தியும் பலம் பெறும். கீழே உள்ள படங்களில் ஒவ்வொரு தீட்சைக்கு பிறகும் உண்டாகக் கூடிய சக்தி நிலை மாற்றங்களை காணலாம். இந்த மாற்றங்கள் ஒவ்வொரு தனி நபருக்கும் மாறுபடலாம்.முதல் இரண்டு கட்ட தீட்சைகளை பெற்ற மாணவர்கள் அடையும் நன்மைகள்:

1. தன் உடலில் இருக்கும் தீய ஆற்றல்களை சுயமாக சுத்தம் செய்து கொள்ளலாம்.

2. தனது ஆராவையும் மற்றவர்களின் ஆராவையும் சுத்தம் செய்யலாம்.

3. கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் பொருட்களில் இருக்கும் தீய ஆற்றல்களை வெளியேற்றலாம்.

4. மனிதர்களுடனும் மற்ற உயிர்களுடனும் நல்ல தொடர்புகள் உண்டாகும்.

5. பொருளாதாரம் மேம்படும்.

6. ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழலாம்.

7. தனது நோயையும் தன் குடும்ப உறுப்பினர்களின் நோய்களையும் குணப்படுத்திக் கொள்ளலாம்.

8. ஆற்றல்களை சக மனிதர்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாம்.

Attunement level Master- மாஸ்டர் தீட்சை


ரெய்கி மாஸ்டர் பயிற்சியில் கலந்துக் கொண்டு, ரெய்கி மாஸ்டர் தீட்சை பெற்றவர்கள், மாணவர் தீட்சையில் செய்யக் கூடிய அனைத்தையும் மற்றும் கூடுதலாக கீழே குறிப்பிட்டுள்ளவற்றையும் செய்யலாம்.

1. இயற்கையிடமிருந்து ஆற்றல்களை பெற்றுக் கொள்ளலாம்.

2. உலகில் எந்த மூலையில் உள்ளவர்களுக்கும் ஆற்றலை அனுப்பலாம்.

3. தீய ஆற்றல்கள் அண்டாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

4. பேய் பிசாசு கோளாறுகளை குணப்படுத்தலாம்.

5. மனிதர்கள், இடங்கள் மற்றும் பொருட்களில் இருக்கும் கெட்ட
ஆற்றல்களை அகற்றலாம்.

6. மற்றவர்களுக்கு level 1& 2 தீட்சை வழங்கலாம்.

7. ஆன்மீகத்தில் மேன்மை அடையலாம்.

8. ஆறாம் அறிவையும் தாண்டி சிந்திக்கலாம்.

9. சிந்தனையின் தரமும், திறனும், உயரும்.

10. இந்த உலகத்தை வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்க்க முடியும்.

ரெய்கி கலைக்கு அறிமுகம்

(Reiki) ரெய்கி எனும் ஆன்மீக பயிற்சி ஜப்பானில் 1922ஆம் ஆண்டு மிகவோ உசுய் (Mikao Usui) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. “ரெய்” என்றால் பிரபஞ்சம் என்று பொருள். “கி” என்றால் ஆற்றல் அல்லது சக்தி என்று பொருள். ரெய்கி என்றால் பிரபஞ்ச ஆற்றல் அல்லது பிரபஞ்ச சக்தி என்று பொருள் கொள்ளலாம். பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்தி மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் நோய்களை குணப்படுத்திக் கொள்வதும் தான் ரெய்கியின் நோக்கமாகும்.

மிகவோ உசுய் அவர்கள் ரெய்கி பயிற்சியின் மூலமாக மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், நோய்களை குணப்படுத்திக் கொள்ளவும், தேவையான வழிமுறைகளை வகுத்து தந்தார்கள். அவருக்குப்பின் இந்தக் கலை ஜப்பானிலிருந்து அமெரிக்காவுக்கு பரவி, அமெரிக்காவிலிருந்து உலகம் முழுவதும் பரவியது.

இந்த பிரபஞ்சமே மனிதர்களுக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் பிரபஞ்சத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த உலகம் முழுவதும் பிரபஞ்சத்தின் ஆற்றல் பரவி இருப்பதால் அந்த ஆற்றலை முறையாகப் பயன்படுத்தும் போது மனிதர்கள் தங்களின் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.

மனிதர்களின் உடலையும் மனதையும் உருவாக்கியது இந்த பிரபஞ்ச ஆற்றல்தான், உருவாக்கியவருக்கு, உருவாகிய பொருள் பழுதானால் சரிசெய்யத் தெரியாதா?. ரெய்கியின் மூலமாக சிறிய நோய், பெரிய நோய் என்ற பாகுபாடின்றி மனிதர்களின் அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்திக் கொள்ளலாம்.

ரெய்கியின் மூலமாக தனக்கும், தன் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் சக மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும், கூட உதவி செய்யலாம். நோய் கண்டிருக்கும் மனிதர்களின் மீது ரெய்கியை செலுத்தும் பொழுது அவர்கள் தங்கள் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியத்தை அடைவார்கள். நோய்க் கண்ட அல்லது விபத்துக்குள்ளான விலங்குகளின் மீது ரெய்கியை செலுத்தும்போது அந்த விலங்குகள் விரைவாக குணமடையும். வாடிக் கிடக்கும் தாவரங்களின் மீது அல்லது காய்க்காத மரங்களின் மீது ரெய்கியை செலுத்தும்போது அவை மீண்டும் செழிப்பாக வளர்ந்து, பூத்து, காய்த்து நிற்கும்.

ரெய்கி என்பது ஒரு புத்திசாலி சக்தியாகும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று கட்டளையிட்டால் போதும் எப்படி செய்யவேண்டும் என்று சொல்லித்தர தேவையில்லை. மின்சாரம் வானொலியில் சேர்ந்தால் ஒலியாக மாறும், தொலைக்காட்சி பெட்டியில் கலந்தால் ஒளியாக மாறும், பல்பில் கலந்தால் வெளிச்சத்தை உண்டாக்கும். மின்சாரத்திற்கு யாரும் எதுவும் சொல்லித்தர தேவையில்லை. இருக்கும் இடத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். அதைப்போல் ரெய்கி எந்த இடத்தில் கலந்தாலும் அங்கு இருக்கும் அனைத்து வகையான குறைகளையும் சரிசெய்யக் கூடிய அறிவும் ஆற்றலும் ரெய்கிக்கு உண்டு.

ஒரு இல்லத்தில் அல்லது வியாபார தலத்தில் ரெய்கி சேரும் போது அந்த இடத்தில் இருக்கும் அனைத்து வகையான தீய சக்திகளையும் விரட்டி அங்கே நல்ல சக்திகள் சேர வழி வகுக்கும். ஒரு மனிதனின் உடலில் ரெய்கி சேரும் போது அவன் உடலில் இருக்கும் நோய்களையும் மனதில் இருக்கும் துன்ப துயரங்களையும் அவலங்களையும் குணப்படுத்தி அவனுக்கு வாழ்க்கையில் அனைத்தும் சுலபமாக கிடைக்க வழிவகுக்கும். ரெய்கியை கொண்டு வெகு தொலைவில் உள்ளவர்களுக்கும் நோய்களை குணப்படுத்தலாம், உதவி செய்யலாம்.

ரெய்கியில் நான்கு நிலைகள் உள்ளன. ரெய்கி என்பது ஒரு குருவிடமிருந்து தீட்சை வாங்கி செய்ய வேண்டிய பயிற்சியாகும். முறையாக பயிற்சி பெற்ற, ரெய்கியை தெளிவாக அறிந்த குருவிடம் இருந்து முறையாக தீட்சை வாங்கி பயிற்சியை தொடங்குவது சிறப்பாகும்.

ரெய்கியை பயிற்சி செய்பவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இயற்கையையும் பிரபஞ்சத்தையும் நம்ப வேண்டும். எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்கவேண்டும். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், இயற்கை என அனைத்துப் படைப்புகளின் மீதும் அன்பும் கருணையும் பொழிய வேண்டும். தனக்குள் இருக்கும் பிரபஞ்சத்தின் பேராற்றல் தான் நீக்கமற அனைத்து உயிர்களின் மீதும் அனைத்து பொருள்களின் மீதும் படர்ந்திருக்கிறது என்ற தெளிவான சிந்தனை இருக்க வேண்டும்.

ரெய்கியை பயிற்சி செய்பவர்கள் தினமும் தியானம் செய்ய வேண்டும். மனதை அமைதியாகவும் அன்பாகவும் வைத்திருக்க வேண்டும். பிரபஞ்சத்துடனும் இயற்கையுடனும் உறவாக தொடர்புடன் இருக்கும்போது அவர்களின் அத்தனை கட்டளைகளையும் ரெய்கி நிறைவேற்றும்.

ரெய்கி கற்றுக்கொள்ள விரும்புபவர்களும், சிகிச்சை, தீட்சை தேவைப்படுவோரும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

Contact me @WhatsApp:
https://wa.me/60103231755


Reiki Tamil Class #7 - Attunment - தீட்சை


✔️ரெய்கி தீட்சை என்றால் என்ன?
✔️எவ்வாறு தீட்சை அளிக்க / பெற வேண்டும்?
✔️ அதன் நன்மைகள் என்ன?
✔️ மற்றும் தீட்சை பற்றிய விளக்கங்கள்.