கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label தாம்பத்தியம். Show all posts
Showing posts with label தாம்பத்தியம். Show all posts

கணவன் மனைவிக்கு இடையில் சந்தேகங்கள் உருவாக காரணங்கள் என்ன?

கணவன் மனைவிக்கு இடையில் சந்தேகங்கள் உருவாவதற்கு காரணமாக இருப்பவை. சந்தேகத்திற்கிடமான நடத்தைகள், நடவடிக்கைகள், உறவுகள், நட்புகள்.

திருமணம் மற்றும் முதலிரவு


ஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம்?. திருமணம் என்பது ஒரு ஆண்மகனின் மனதையும் பெண் மகளின் மனதையும் இணைக்கும் ஒரு அற்புத நிகழ்வு. இந்த அற்புதமான நிகழ்வில் இரு மனங்கள் இணைகிறதே ஒழிய இரு உடல்கள் மட்டுமல்ல. திருமணத்தின் பிரதான நோக்கம் என்பது உடல் உறவு கொள்வது அல்ல, இரு மனம் இணைந்து, புரிந்து, அன்பு செலுத்தி, சேர்ந்து வாழ்வதே திருமணம்.

இதைத்தான் திருவள்ளுவர் மிக அழகாக:
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை, பண்பும் பயனும் அது". என்று கூறுகிறார்.

இரு மனங்கள் இணைந்து ஒருவருக்கொருவர் அன்பாகவும் ஆதரவாகவும் வாழும் பொழுது இயற்கையாகத் தூண்டுதல் உண்டாகி உடல் உறவு நடக்க வேண்டும். இன்று அன்பையும், காதலையும் விட உடலுறவே பிரதானம் என்று ஆனதுதான் பல குடும்ப பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கிறது.

முதல் இரவு
திருமணமான முதல் இரவுக்கு நம் முன்னோர்கள் வைத்த பெயர் சாந்தி முகூர்த்தம். அது என்ன சாந்தி முகூர்த்தம். ஆண் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஏங்கும் பெண்ணின் மனதையும், பெண் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஏங்கும் ஆணின் மனதையும், இதோ உன் மறுபாதி என்று இருவருக்கும் அறிமுகப்படுத்தி இருவர் மனதையும் அமைதிப்படுத்தும் நிகழ்வுக்குப் பெயர் தான் சாந்தி முகூர்த்தம்.

அந்த சாந்தி முகூர்த்தம் கணவனுக்கும் மனைவிக்கும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைய வேண்டுமே ஒழிய. அந்த முதல் இரவே ஒரு கெட்ட கனவாக மாறிவிடக் கூடாது. கணவன்மார்களே இரு மனம் இணைந்து காதலால் காமம் உருவாகி உடல் உறவு நடக்க வேண்டுமே தவிர உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள உங்கள் மனைவியை வற்புறுத்தாதீர்கள். அது அவளுக்கு ஒரு கெட்ட அனுபவமாக அமையும், உங்களுக்கும் கேடுதான்.

முதல் இரவில் உடல் உறவு கொள்ள அவசியமில்லை
நேற்று வரை யார் என்றே தெரியாத ஒரு ஆணும் பெண்ணும் ஒரு சடங்கின் பெயராலும், ஆசையின் பெயராலும், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்தும், முதல் இரவு அன்றே உடல் உறவில் ஈடுபடுவது அவ்வளவு நல்லதல்ல.

வெறும் காமத்தினாலும் ஆசையினாலும் உடலுறவு கொண்டால், அது வெறும் நிகழ்வாக இருக்குமே ஒழிய, அது ஒரு ஆனந்த நிகழ்வாக உணர மாட்டீர்கள். முழுதான மன திருப்தியும் அடைவது கடினம்.

திருமணமான ஆணும் பெண்ணும் முதலில், ஒருவரை ஒருவர் பார்த்து, பழகி, அன்புக் கொண்டு, காதலாகி, ஆசையாகி பின்பு உடல் உறவு கொண்டால், அந்த உறவு மிகவும் இனிமையாகவும் என்றென்றும் நிலைத்து நிற்கும் காதலாகவும் இருக்கும். இது உங்களுக்குச் சிறந்தது.


கணவன் மனைவி தாம்பத்தியம்

தாம்பத்தியத்தில் திருப்தி அடைந்தீர்களா?

70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிறது. தாம்பத்தியத்தில் திருப்தி அடைந்த மனிதர்கள் மட்டுமே வாழ்கையில் திருப்தி அடைவார்கள். தாம்பத்தியத்தில் முழு திருப்தி அடையாத மனிதனிடம் வேறு என்ன இருந்தாலும் ஒரு வெறுமையை உணர்வான்.

தாம்பத்திய உறவில் பலர் திருப்தி அடையாததற்குக் கரணம். தாம்பத்திய உறவு என்பது வெறும் ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் சார்ந்தது என்று நம்பிக் கொண்டிருப்பதுதான்.

காமம் என்பது உடல் மட்டுமே சார்ந்த விஷயம் அல்ல. காமம் உடல், மனம், புத்தி, சக்தி என நான்கு விசயங்கள் சம்பந்தப்பட்டவை. மனமும் புத்தியும் இணையாமல் உடலுறவு கொள்வதால்தான், இன்றைய கால கட்டத்தில் பல கணவன் மனைவிகள் உடலுறவில் திருப்தி இல்லாமல் வாழ்கிறார்கள். கணவனிடமோ மனைவியிடமோ உடலுறவில் திருப்தி அடையாதவர்கள், வேறு ஒரு ஜோடியைத் தேடி போகிறார்கள்.

ஆண்களுக்கு சில அறிவுரைகள்
1. சினிமா, வீடியோ மற்றும் கதைகளில் வரும் பெண்களோடு உங்கள் மனைவியை ஒப்பிடாதீர்கள். அவை வெறும் நடிப்பு, கற்பனை, உங்கள் மனைவியோ உண்மை.

2. செக்ஸ் வீடியோக்களில் வரும் பெண்களுடன் உங்கள் மனைவிகளை ஒப்பிடாதீர்கள். அவர்களை போல் இருக்க வேண்டும், நடிக்க வேண்டும், நடந்து கொள்ளவேண்டும் என்று ஆசை படாதீர்கள். அது பெரிய தவறு.

3. செக்ஸ் வீடியோக்களில் வருவதை போல் உடலுறவு கொள்ள வேண்டும் என்று ஆசை படாதீர்கள். அவை வெறும் நடிப்பு மட்டுமே. அதில் எதுவும் உண்மை இல்லை.

4. செக்ஸ் வீடியோக்களில் வரும் ஆண்களுடன் உங்கள் ஆணுறுப்பை ஒப்பிடாதீர்கள். அவை வெறும் கேமரா லென்ஸ் விளையாட்டுக்கள். ஒவ்வொரு ஆணுக்கும் ஆணுறுப்பின் அளவு மாறுபடும் ஆனால் பெண் அனுபவிக்கும் சுகத்தில் ஒன்றும் பெரிய வித்தியாசமாக இருக்காது. அதனால் கவலை வேண்டாம்.

5. ஆணுறுப்பு ஒல்லியான ஆணுக்குப் பெரிதாகவும் பருமனான ஆண்களுக்குச் சிறிதாகவும் இருப்பது போல் தோன்றும், அதற்குக் காரணம். அவர்களில் தொடை பெரிதாக இருப்பதால் அதன் இடையில் இருக்கும் ஆணுறுப்பு, தொடையுடன் ஒப்பிடும்போது சிறிதாக இருப்பது போல் தோன்றும்.

6. தினமும் உடலுறவு கொள்ளவேண்டும், அல்லது அடிக்கடி உடலுறவு கொள்ளவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது.

7. உண்மையில் ஆசையும், தேவையும் இருந்தால் மட்டுமே உடலுறவு கொள்ளுங்கள்.

8. மனைவியை வற்புறுத்தாதீர்கள். வேண்டா வெறுப்பாக உடலுறவு கொள்வதில் இன்பம் இருக்காது.

9. படம், வீடியோ, கதைகள் என எந்த வெளித் தூண்டுதலும் இல்லாமல். தானாகத் தோன்றும் காம உணர்வுக்கே உடலும் மனமும் முழு ஒத்துழைப்பும் கொடுக்கும்

10. உடலுறவு என்பது, வெறும் விந்தை வெளியாக்கும் வேலை அல்ல, எனது சுகம், எனது திருப்தி என்று சுயநலமாக இருக்காதீர்கள். மனைவியின் சுகத்துக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

11. ஆண்களுக்கு விந்து வெளியானால் போதும் திருப்தி உணர்வு வந்துவிடும். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அவள் மனம் திருப்தி அடைந்தால் மட்டுமே அவளுக்கு நிறைவு அடையும்.

12. மனைவியை ரசிப்பதையும், ருசிப்பதையுமே அவள் அதிகம் விரும்புவாள். அதுதான் அவளுக்கு முழு திருப்தியை தரும்.

13. உங்கள் மனைவியைத் திருப்தி படுத்துவதும், அவளை மகிழ்ச்சிப் படுத்துவதுமே உண்மையான உடலுறவு என்று புரிந்துகொள்ளுங்கள்.

14. உங்களுக்குப் பிடித்த ஒன்று உங்கள் மனைவிக்குப் பிடிக்காமல் இருக்கலாம், சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

15. ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் பொழுது உங்கள் மனைவியின் மன நிலையை கவனியுங்கள். அவள் திருப்தி அடைந்தாளா? அவளுக்குப் பிடித்திருக்கிறதா? என்று அறிகுறிகளை கவனித்து செயல்படுங்கள்.

16. நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தாள், அவள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பாள். இன்பத்தை கொடுத்து திரும்ப பெற்றுகொள்ளுங்கள்.

17. உண்மையான காம உணர்வு வரும் வரை காத்திருந்து, உறவு கொண்டால் இன்பம் பல மடங்கு கூடுதலாக இருக்கும்.

18. மனைவியைப் பார்த்து தானாகத் தோன்றும் காம உணர்வில்தான் மனம் திருப்தி அடையும்.

19. ஒரு ஆணின் முழுமையான ஆண்மையின் வளர்ச்சி 35 வயதுக்கு மேல்தான் முழுமை அடையும் அதனால். 35 வயதைத் தாண்டியதும், கிழவனைப் போல் உணராதீர்கள். 30 வயதுக்கு மேல்தான் காளை பருவம் ஆரம்பம். பூந்து விளையாடுங்கள்.

20. ஆரோக்கியமான ஆண் 80 வயதிலும் உடலுறவு கொள்ள முடியும்.


பெண்களுக்கு சில அறிவுரைகள்
1. கணவனுடன் உடலுறவில் ஒத்துழையுங்கள். இரண்டு கை தட்டினால்தான் ஓசை உண்டாகும். இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் முழுமையான இன்பம் கிட்டும்.

2. கணவனின் மனம் அறிந்து நடந்துகொள்ளுங்கள். அவன் வேலைக்கும், வெளியிடங்களுக்கும் சென்று வருவதினால், அவன் மனம் எப்பொழுதும் ஒரே சமநிலையில் இருக்காது.

3. கணவனின் ஆசைகளை நிறைவேற்றுவதே உங்களின் பொறுப்பு என்று உணர்ந்து செயல்படுங்கள். அதுக்காக உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். விருப்பமில்லாதவற்றைச் செய்யாதீர்கள்.

4. உடலுறவில் ஈடுபடும் பொழுது உங்கள் உணர்வுகளை அறிகுறிகள் மூலமோ, ஓசைகள் மூலமோ கணவனுக்கு அறிவியுங்கள்.

5. சுத்தமாக, அழகாக அலங்காரம் செய்யும் மனைவிகளைத்தான் கணவர்களுக்கு அதிகம் பிடிக்கும். முடிந்தவரையில் சுத்தமாகவும், அழகாகவும் இருங்கள்.

6. உங்களுக்கு ஆசைகள் உணர்வுகள் வந்தால் கணவனிடம் தயங்காமல் குறிப்பின் மூலம் உணர்த்துங்கள். ஆசையை அடக்காதீர்கள்.


தாம்பத்தியத்தில் திருப்தி அடைய

1. முடிந்தவரையில் உண்மையான ஆசை இல்லாமல் சேராதீர்கள்

2. முடிந்தவரையில் தாம்பத்தியத்தை இரவில் வைத்துக்கொள்ளுங்கள்

3. முடிந்தவரையில் தாம்பத்தியத்தை இருட்டான அறையில், ஒரு சிறு வெளிச்சம் மட்டும் இருக்கும் அறையில் வைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.

4. ஆணுறை பயன்படுத்தாதீர்கள். விந்தை உள்ளே விடாவிட்டால் பிள்ளை தங்காது பயம் வேண்டாம்.

5. ஆணுறை பயன்படுத்தினால் 50% இன்பம் கூட கிடைக்காது.

6. உங்கள் ஜோடியின் மனம் மற்றும் தேவை அறிந்து நடந்து கொள்ளுங்கள்.

7. எடுத்த எடுப்பில் உடலுறவில் ஈடு படாமல். மெதுவாகவும் பொறுமையாகவும் முதலில் காதல் செய்யுங்கள். பொறுமையாக நிதானமாக நடந்து கொண்டால்தான், சிறப்பாக இருக்கும்.

8. கணவன் மனைவி இருவரும் உடலுறவின் வேளைகளில் உங்கள் ஐம்பொறிகளையும் பயன் படுத்துங்கள்.

9. பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, உணர்வது என ஐந்து பொறிகளையும் பயன்படுத்தி முழுமையாக ரசித்து விளையாடுங்கள்.

10. ஒவ்வொரு முறையும் புது புது முறையை (position) முயற்சி செய்யுங்கள். தினமும் ஒரே மாதிரி செய்தல் சலிப்புதட்டிவிடும். குறைந்த பட்சம் 20 முறைகளை (position) கற்றுக்கொள்ளுங்கள்.


மனைவி கர்ப்பம் தரிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

உடலுறவு கொள்வதற்கு முன் "டிசு பேப்பர்" அல்லது காகிதத்தை தயாராக வைத்துக்கொண்டு, விந்து வெளியேறும்போது விந்தை அவற்றில் பிடிக்கலாம். விந்து வெளியேறுவதை மட்டும் சற்று கவனமாக கவனிக்க வேண்டும். விந்து பெண்ணுறுப்பின் உள்ளே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கணவன் மனைவி வாரத்திற்கு எத்தனை முறை உடலுறவு கொள்ளலாம்?

வாரம் இத்தனை முறை, மாதம் இத்தனை முறை, என்று கணக்கு வைத்து உறவுக் கொள்ளக்கூடாது. கணவனைப் பார்த்து மனைவிக்கும், மனைவியைப் பார்த்து கணவனுக்கும், சுயமாக ஆசை தோன்றும் போது உடலுறவு கொண்டால்தான் உடலுறவில் முழு திருப்தி கிடைக்கும்.

கணவன் மனைவி உடலுறவு கொள்ள உகந்த நேரம் எது?

உடலுறவுக்கு என்று குறித்த நேரத்தை ஒதுக்காமல். காம ஆசை சுயமாகத் தோன்றும் நேரத்தில் உடலுறவு கொள்வதுதான் நல்லது. அப்போதுதான் திருப்தி கிடைத்தும்.