கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label தாகம். Show all posts
Showing posts with label தாகம். Show all posts

ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்?

ஓர் நாளைக்கு இவ்வளவு தண்ணீரை அருந்த வேண்டும் என்று கணக்கிட்டு அருந்தத் தேவையில்லை. தாகம் இருந்தால் மட்டும் அருந்தினால் போதுமானது. உடலின் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் அருந்துவது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

தாகம் எதனால் உண்டாகிறது?

தாகம் உண்டானால் மண்ணீரலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது என்று அர்த்தம். தாகம் உண்டாகும் போது கொஞ்சமாக தண்ணீர் அருந்த வேண்டும், ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் அருந்தினால் அது வயிற்றைப் பாதிக்கும்.

உணவையும் தண்ணீரையும் ஒரே நேரத்தில் உடல் கேட்குமா?

தாகம் உண்டாகும் வேளைகளில் பசி இருக்காது. பசி உண்டாகும் வேளைகளில் தாகம் இருக்காது. பசியும் தாகமும் ஒன்றாக இருப்பது உடலின் பழக்கத்தினால் கற்பனைகளாலும் மட்டுமே.