கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label தண்ணீர். Show all posts
Showing posts with label தண்ணீர். Show all posts

உணவை உட்கொள்ளும் போது ஏன் தண்ணீர் அருந்தக் கூடாது?

உணவை உட்கொள்ளும் போது அதிகமாக தண்ணீர் அருந்தினால், முதலில் ஜீரணத்துக்காக உடல் சுரக்கும் சுரப்புகள் நீர்த்துப்போய்விடும். அடுத்தது வயிற்றின் உஷ்ணம் குறைந்துவிடும். இவற்றினால் உட்கொண்ட உணவு ஜீரணமாக தாமதமாகும்.

ஜீரணமாகாத உணவுகள் வயிற்றில் கெட்டுப்போய் நோய்களையும் உடல் உபாதைகளையும் உருவாக்கக் கூடும்.

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் உண்டானது ஏன்?

தற்போது ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சத்திற்கு, வறட்சிக்கும் அடிப்படை காரணமாக இருக்கக் கூடிய விஷயங்கள்.

1. குளங்களை முடியாது
2. ஆற்றில் மண் அள்ளுவது
3. நிலத்தடி நீரை உறிஞ்சுவது
4. காடுகளை அழிப்பது
5. மலை பகுதிகளை அழிப்பது

குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா?

நிச்சயமாக கொடுக்கலாம், கட்டாயம் கொடுக்கவும் வேண்டும். பெரியவர்களைப் போலவே, குழந்தைகளின் உடலுக்கும் தண்ணீர் அவசியமான தேவையாகும். சிறுகுழந்தைகளுக்கும் தினமும் ஒரு வேலை தண்ணீர் கொடுக்க வேண்டும். 

ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்?

ஓர் நாளைக்கு இவ்வளவு தண்ணீரை அருந்த வேண்டும் என்று கணக்கிட்டு அருந்தத் தேவையில்லை. தாகம் இருந்தால் மட்டும் அருந்தினால் போதுமானது. உடலின் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் அருந்துவது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

அதிகமாக தண்ணீர் அருந்துவது உடலுக்கு நன்மையானதா?

இல்லை. உடலுக்கென ஒரு உஷ்ண அளவு இருக்கின்றது அந்த உஷ்ணத்தின் அளவை எப்போதுமே உடல் பாதுகாத்திருக்கும்.

அதிகமாகத் தண்ணீர் அருந்தினால் உடலின் உஷ்ணம் குறைந்து, குளுமை அதிகரிக்கும். உடலின் உள்ளுறுப்புக்கள் முறையாகச் செயல்பட முடியாமல் பாதிப்புக்குள்ளாகும்.

தண்ணீரை அதிகமாக அருந்தினால் உடலின் கழிவுகள் வெளியேறுமா?

இல்லை. மனித உடலின் அமைப்பு சாக்கடையைப் போன்றது அல்ல. தண்ணீரை எவ்வளவு அருந்தினாலும் அவை வயிற்றுக்குத்தான் செல்லும். வயிற்றிலிருந்து நீரை சிறுநீரகங்கள் சுத்திகரித்து, சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுமே ஒழிய, எவ்வளவு நீர் அருந்தினாலும் அவற்றினால் உடலின் கழிவுகளை வெளியேற்ற முடியாது.

மனித உடலின் கழிவுகள் பெரும்பாலும் குடலிலும், கல்லீரலில், பித்தப்பையில், சிறுநீர்ப் பையிலும் தான் இருக்கும்.

அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவது ஏன்?

அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும், என்பது ஆராய்ச்சியின் முடிவுகள் என்ற பெயரில் மருந்து கம்பெனிகள் கிளப்பிவிட்டு தவறான வதந்திகளில் ஒன்று. அதிகமாக தண்ணீர் அருந்துவது உடலுக்கு நன்மையானது என்று ஆங்கில மருத்துவர்கள் அறியாமையினால் கூறுகிறார்கள்.

உடலின் தேவைக்கு அதிகமாக தண்ணீர் அருந்தினால், அவை ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே சிறுநீராக உடலைவிட்டு வெளியேறிவிடும். ஆனால் சிறுநீரகங்களுக்கு தேவையில்லாத உழைப்பை வழங்குவதால் சிறுநீரகங்கள் விரைவாக பழுதடையும். மேலும் உடலில் குளிர்ச்சி அதிகரித்து உடலின் இயக்கம் குறையும்.

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமும் தீர்வும்

“மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டி போரடித்த அழகான தென்மதுரை” என்று சொல்லும் அளவிற்கு விவசாயத்தில் செழித்து விளங்கிய தமிழகத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் உண்டானது ஏன்? வெகுநாட்களாக என் மனதில் இந்த கேள்வியும், இதற்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவலும் இருந்து வந்தது.

அண்மையில் தமிழகத்திற்கு சென்றிருந்த போது அங்கு 50 வயதுக்கும் மேற்பட்ட சில உறவினர்களை சந்தித்து, அவர்களின் இளம் வயதில் உண்டான தண்ணீர் தட்டுப்பாட்டை பற்றி விசாரித்தேன்

அவர்களிடம் நான் கேட்ட கேள்விகள் 

1. நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது தற்போது இருப்பதைப் போன்று கருவேல மரங்கள் இருந்தனவா?

2. உங்கள் ஊரில் ஆறு, குளம், நீர் ஊற்று, போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் இருந்தனவா?

3. பருவம் தவறாமல் மழை பெய்ததா?

4. நீங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது தண்ணீர் பஞ்சம் இருந்ததா?

5. இப்போது இருப்பதைப் போன்று நீர் பஞ்சமும், வறட்சியும், உஷ்ணமும், இருந்ததா?

என் கேள்விகளுக்கு அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பதில்களை தான் கூறினார்கள். 

நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது இப்போது இருப்பதை விடவும் அதிகமான கருவேல மரங்கள் இருந்தன. பருவம் தவறாமல் மழை பெய்தது. நீர்நிலைகளில் எப்போதுமே தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். தற்போது இருப்பதைப் போன்று நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. இப்போது இருப்பதைப் போன்று உஷ்ணமோ வறட்சியோ இருந்ததில்லை.

அவர்கள் கூறிய பதில்களை வைத்துப் பார்க்கும் பொழுது கருவேல மரங்களுக்கும் தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பது தெளிவாக தெரிகிறது. தற்போது இருப்பதை விட அதிகமான கருவேல மரங்களிலிருந்தும் வறட்சி ஏற்பட்டதில்லை, பருவம் தவறாமல் மழையும் பெய்திருக்கிறது. தற்போது ஏற்பட்டிருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும், பருவம் தவறிய மழைக்கும், வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. உண்மையான காரணங்களை மறைப்பதற்காக யாரோ கருவேல மரங்களின் மீது மக்களின் பார்வையை திருப்பி விட்டிருக்கிறார்கள்.

தற்போது ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சத்திற்கு, வறட்சிக்கும் அடிப்படை காரணமாக இருக்கக் கூடிய விஷயங்கள்.

1. குளங்களை முடியாது
2. ஆற்றில் மணல் அள்ளுவது
3. நிலத்தடி நீரை உறிஞ்சுவது
4. காடுகளை அழிப்பது
5. மலை பகுதிகளை அழிப்பது

குளங்களை அழிப்பதினாலும், நிலத்தடி நீரை உறிஞ்சுவதாலும் நிலத்தடி நீரின் மட்டம் குறைகிறது. மண்ணின் செழிப்பு தன்மையும் கெடுகிறது. காடு மற்றும் மலைகளை அழிப்பதனால் காற்றில் இருக்கும் ஈரத்தன்மை நீராக மாறாமல் போகிறது. மண்ணின் ஈரமும், வளமும் கெடுகிறது. மழை பருவம் தவறாமல் பெய்வதற்கு மண்ணின் செழுமை மிகவும் அவசியமானது. ஆனால் நம்மிடம் மரம்தான் முக்கியம் என்று சொல்வார்கள். மரமும் முக்கியம்தான் மரத்தைவிடவும் மண் ஆரோக்கியமாகவும், வளமாகவும், செழிப்பாகவும் இருந்தால்தான் அந்த மண்ணிலிருந்து உருவாகும் வாயுக்கள் மேகத்தில் நீராக தேங்கி மழையாக பொழியும்.

ஆற்று மணல் திருடுபவர்கள் திட்டமிட்டு பிற மாநிலங்களிலிருந்து நமக்கு வரவேண்டிய ஆற்று நீரை வரவிடாமல் தடுக்கிறார்கள். திட்டமிட்டு மொழி பிரச்சனைகளை உண்டாக்குகிறார்கள். இதற்குக் காரணம் ஆற்றில் தண்ணீர் வந்தால் அவர்களால் மணல் திருட முடியாது. இதில் பல மாநிலங்களின் அரசியல்வாதிகளுக்கும் பங்குண்டு. ஆற்று மணலை அள்ளுவதால் ஆற்றில் நீர் இல்லாமல் வறண்டு, மண்ணில் கனிம வளம் குறைகிறது. ஆற்றில் மட்டுமின்றி அந்த ஆறு பயணிக்கும் நிலங்கள் முழுவதிலும் மண்ணின் கனிமமும், வீரியமும், ஆரோக்கியமும் பாதிப்படைகிறது.

ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணுவது முட்டாள்தனம். அதைப்போல் நீர் வானத்திலிருந்து பொழிய வேண்டும். பூமியிலிருந்து உறிஞ்சக் கூடாது. அனைத்து தரப்பு மக்களும் விழித்துக்கொண்டு இந்த பிரச்சனைக்கு உடனடியாக ஒரு தீர்வை காண வேண்டும். இல்லையென்றால் தமிழ் நாடு பாலைவனமாவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த பிரச்சனையில் நமக்கு ஏன் வம்பு என்று இருக்கும் அத்தனை பேரும் குற்றவாளிகளே.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து கொள்ளலாம் என்று எண்ணாதீர்கள். தண்ணீர் பிரச்சனைக்கு இன்று ஒரு தீர்வை காண வேண்டும்.

சித்தர்கள் கூறிய தண்ணீரை சுடவைக்கும் முறைகள்

தண்ணீரை கொதிக்க வைத்து அருந்தக்கூடாது. தண்ணீரை கொதிக்க வைத்தால் தண்ணீரில் உள்ள உயிர் சத்துக்கள் அழிந்துவிடும் மற்றும் தண்ணீரில் உள்ள சத்து பொருட்கள் அனைத்தும் கெட்டுவிடும் என்று நாங்கள் கூறும் போது. வள்ளலார் அவர்கள் தண்ணீரை கொதிக்க வைத்துதான் அருந்த வேண்டும் என்று கூறினார் என்று சிலர் சொல்வார்கள்.

தேரையர் என்ற சித்தர் கூட தன் பாடலில்;
“திண்ணமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல்
பெண்ணின் பாலொன்றை பெருக்காமல்-உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பார் தம்
பேருரைக்கில் போமே பிணி” – என்று கூறுகிறார்

மலம் மற்றும் சிறுநீரை அடக்காமல். பெண் போகத்தில் அதிகமாக ஈடுபடாமல். நீரை காய்ச்சியும், மோரை அதிகமாகவும், நெய்யை உருக்கியும் உட்கொண்டால், நோய்கள் குணமாகும் என்கிறார். தண்ணீரை கொதிக்க வைப்பது நன்மை இல்லை என்றால் ஏன் வள்ளலாரும் மற்றும் சில சித்தர்களும் தண்ணீரை சூடுபடுத்தி அருந்த வேண்டும் என்கிறார்கள்?.

சித்தர் பாடல்களையும், சித்த மருத்துவ முறைகளையும் ஆராயும்போது நாம் முக்கிமான சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அந்த சித்த மருத்துவ மருந்துகளை எவ்வாறு தயாரிக்க வேண்டும்?. அந்த சித்த மருத்துவ மருந்துகளையும், மருத்துவ முறைகளையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?. இவை இரண்டையும் புரிந்து செய்தால் மட்டுமே அந்த மருத்துவம் பயன் தரும்.

வள்ளலாரும் சித்தர்களும் தண்ணீரை காய்ச்சி பயன்படுத்த வேண்டும் என்றார்கள் என்பதை மட்டும் அறிந்துக் கொண்ட பலர், தண்ணீரை எவ்வாறு காய்ச்ச வேண்டும் என்பதை சிந்திப்பதில்லை. அவர்கள் கூறியது எந்த நீரை என்பதையும் சிந்திப்பதில்லை. காய்ச்சிய தண்ணீரை எப்போது பயன்படுத்துவது என்பதும் சிந்திப்பதில்லை.

சித்தர்கள் காலத்திலும், வள்ளலார் காலத்திலும் இப்போது நாம் பயன்படுத்தும் நவீன கேஸ் அடுப்புகள் கிடையாது. இப்போது நாம் பயன்படுத்தும் steel மற்றும் aluminium பாத்திரங்களையும் அவர்கள் பயன்படுத்தவில்லை. அதனால் அந்த பாடல்களை பார்த்து இப்போது இருக்கும் பாத்திரங்களில் தண்ணீரை காய்ச்சினால் அவை மனிதர்களுக்கு உகந்த மருந்தாகவோ, நீராகவோ இருக்காது. அதைவிட முக்கியமான விசயம் சித்தர்கள் காய்ச்ச பயன்படுத்தியது குளத்து நீர் அல்லது ஆற்று நீர். அவற்றின் தன்மைகளும் இன்று நாம் பயன்படுத்தும் நீரின் தன்மைகளும் வெகுவாக மாறுபடும்.

சித்தர்கள் கூறும் தண்ணீரை காய்ச்சும் முறைகள்
சித்தர்கள் கூறிய வழிமுறையில் தண்ணீரை காய்ச்ச வேண்டுமானால், மண் பானையில் தண்ணீரை நிரப்பி, விறகடுப்பில் அல்லது கரியடுப்பில் தான் தண்ணீரை காய்ச்ச வேண்டும்.

விறகு அல்லது கரியடுப்பில் மண் பானையை பயன்படுத்தி தண்ணீரை காய்ச்சும் போது. லேசான சூட்டில் மண் பானை மெது மெதுவாக சூடேறும். மண் பானையில் தன்மையும், விறகடுப்பின் உஷ்ணமும், தண்ணீரும் ஒன்றாக சேரும் போது மட்டுமே அந்த நீர் மருந்தாக மாறும். மிதமான சூட்டில் சுடுவதினால் தண்ணீரின் உயிரும், உயிர் சத்துக்களும் சீர் கெடாமல் இருக்கும்.

இவ்வாறு சூடுபடுத்திய தண்ணீரை சுத்தமான மண்பானையில் நிரப்பி வைத்து அருந்தலாம். இவ்வாறு தயாரான நீர் உடலுக்கு மிகவும் நன்மையானது. மற்றபடி சில்வர் பாத்திரங்களில் தண்ணீரை சுட வைத்து அருந்துவதும். கேஸ் அடுப்புகளில் அல்லது அதிக சூட்டில் தண்ணீரை சுடுவதும் ஆரோக்கியமற்ற செயலாகும்.

தண்ணீரில் இருக்கும் கிருமிகள் ஆபத்தானவையா?

தண்ணீரில் இருக்கும் கிருமிகள் பெரும்பாலும் உடலுக்குத் தேவையானவை மற்றும் நன்மையானவை. ஒரு சில உடலுக்கு ஒவ்வாத கிருமிகள் உடலுக்குள் சென்றாலும் அவற்றை வெளியேறும் திறன் உடலுக்கு இயற்கையாகவே உள்ளது.

எந்த வகையான தண்ணீர் உடலுக்கு மிகவும் நன்மையானது?

இயற்கையாக கிடைக்கக்கூடிய வடிகட்டாத, கொதிக்கவைக்காத தண்ணீர் அனைத்துமே நன்மையானதுதான். மழை நீர், ஆற்று நீர், கிணற்றை நீர், குழாய் நீர் என அனைத்துமே நன்மையானதுதான்.

தண்ணீரை வடிகட்டி (filter செய்து) அருந்துவது நல்லதா?

நிச்சயமாக இல்லை. தண்ணீரை வடிகட்டினால், தண்ணீரில் இயற்கையாக கிடைக்கக் கூடிய சத்துக்கள் பெரும்பாலும் வடிகட்டப்பட்டுவிடும். தண்ணீரிலிருந்து மட்டுமே கிடைக்கக்கூடிய சத்துக்கள் கிடைக்காமல் உடல் நோய்வாய்ப்படும்.

தண்ணீரை கொதிக்க வைத்து அருந்துவது நல்லதா?

இல்லை. தண்ணீரை கொதிக்கவைத்தால், தண்ணீரிலிருந்து இயற்கையாக கிடைக்கக் கூடிய சத்துக்கள் அனைத்தும் செத்துவிடும். தண்ணீரிலிருந்து மட்டுமே கிடைக்கக்கூடிய சத்துக்கள் கிடைக்காமல் உடல் நோய்வாய்ப்படும்.