கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label சிறுநீர். Show all posts
Showing posts with label சிறுநீர். Show all posts

சிறுநீரில் கழிவுகள் இருந்தால் நல்லது

உங்கள் சிறுநீர் அழுக்காக இருக்கிறது. உங்கள் சிறுநீரில் சர்க்கரை அதிகமாக இருக்கிறது. உங்கள் சிறுநீரில் கிருமிகள் இருக்கின்றன. உங்கள் சிறுநீரில் கழிவுகள் இருக்கின்றன. உங்கள் சிறுநீரில் கழிவுகள் இருப்பதனால் உங்கள் உடலின் உள்ளேயும் கழிவுகள் இருக்கும், உங்களுக்கு நோய்கள் இருக்கும் என்று யாராவது சொன்னால்.

அங்கே இரண்டு விடயங்களை நீங்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும். ஒன்று அந்த நபருக்கு உடலியலைப் பற்றி முழுமையாக புரியவில்லை அல்லது அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம். ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், சிறுநீர் என்பதே உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும் வழிதான். உடலில் உள்ள கழிவுகள் சிறுநீரின் மூலமாக வெளியேறுவதால், சிறுநீர் அழுக்காகத்தான் இருக்கும்.

அது மட்டுமல்ல சிறுநீரில் கழிவுகள், கிருமிகள் அல்லது சர்க்கரை இருந்தால், அந்த கழிவு அல்லது கிருமி உடலை விட்டு வெளியேறிவிட்டது என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமே ஒழிய, சிறுநீரில் இருப்பதனால் உடலின் உள்ளேயும் இருக்கும் என்று பொருள் கொள்ளக் கூடாது. சிறுநீரில் இருக்கும் கழிவுகள் உடலின் உள்ளேயும் இருக்கும் என்று சொல்வது வியாபாரத்துக்காக கூறப்படும் பொய் மட்டுமே.

சிறுநீரின் மூலமாக ஒரு பொருள் உடலை விட்டு வெளியேறி விட்டால், அந்த பொருள் உடலின் உள்ளே இல்லை அல்லது குறைந்த கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ளவேண்டும்.

ஒரு உதாரணத்துக்காக சொல்கிறேன். உணவை உட்கொண்ட ஒருவர் வாந்தி எடுத்து உண்ட உணவு வெளியேறினால், உடலின் உள்ளே உணவு இருக்கிறது என்று அர்த்தமா அல்லது உணவு வெளியேறி விட்டது என்று அர்த்தமா?.

ஒரு பகுதி வெளியேறி விட்டது என்று சொல்லலாம் அல்லது முழுதாக வெளியேறி விட்டது என்று சொல்லலாம். இவை இரண்டையும் விட்டுவிட்டு வாந்தியில் உணவு வெளியேறியதால், உடலின் உள்ளேயும் உணவு இருக்கும் அல்லது வெளியேறியதை விடவும் அதிகமாக உள்ளே இருக்கும் என்று சொன்னால் அது பொய் என்பது உங்களுக்கே புரிகிறது அல்லவா?.

அதைப்போல்தான் சிறுநீரின் மூலமாக உடலின் உள்ள கழிவுகள் வெளியேறினால். உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன. உங்கள் உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் தன்மையுடன் இருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளுங்கள். சிறுநீரை காரணமாக காட்டி யாராவது பயமுறுத்தினால் பயம் கொள்ளாதீர்கள்.

ஒரு மனிதனுக்கு ஏற்படும் பயம் போதும், அவனைக் கொல்வதற்கு. எதற்கும் பயம் கொள்ளாதீர்கள் தைரியமாக இருங்கள். சிறுநீரின் மூலமாக ஒரு பொருள் உடலை விட்டு வெளியேறி விட்டால், அந்த பொருள் உடலின் உள்ளே இல்லை அல்லது குறைந்த கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள்.


குளுமையான இடங்களில் இருக்கும் போது, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுவது ஏன்?

குளுமையான இடங்களில் இருக்கும்போது உடலின் உஷ்ணம் குறையும், குளுமை அதிகரிக்கும். உடலில் குளுமை அதிகரித்தால் தொந்தரவுகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. அதனால் உடலின் குளுமையைக் குறைத்து உஷ்ணத்தை அதிகரிக்க, தேவையில்லாத நீரை உடலிலிருந்து உடல் சுயமாக வெளியேற்றுகிறது. 

அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஏன்?


  1. உடலில் தண்ணீரின் அளவு அதிகமாக இருக்கலாம்.
  2. உடலில் குளிர்ச்சி அதிகமாக இருக்கலாம்.
  3. உடல் தன் கழிவுகளை வெளியேற்றலாம்.
  4. உடல் தேவையற்ற சர்க்கரைகளை வெளியேற்றலாம்.
  5. ஆணுறுப்பின் நரம்புகள் பலகீனமாக இருக்கலாம்.