கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label கொரோனா வைரஸ். Show all posts
Showing posts with label கொரோனா வைரஸ். Show all posts

கோவிட்-19 மூன்றாவது உலகப்போர் -2

ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் மலேசியாவில் ஒருவர் என்னைத் தொலைப்பேசி மூலமாகத் தொடர்பு கொண்டு, கொரோனா தொற்றுக்கு அறிகுறியாகக் கூறப்படும் அத்தனை அறிகுறிகளும் ஒரு வாரமாக என்னிடம் இருக்கிறது. வீட்டில் பிள்ளைகளும் பெரியவர்களும் இருப்பதனால் நான் வீட்டுக்குச் செல்லாமல் வெளியில் தங்கியிருக்கிறேன். கோவிட்-19 தொற்றாக இருக்குமோ என்று அச்சமாக இருக்கிறது! மருத்துவமனைக்குச் செல்லலாமா வேண்டாமா? என்ற குழப்பத்துடன் இருக்கிறேன். இந்த உடல் உபாதைகளைச் சரிசெய்யும் மருந்து ஏதாவது உள்ளதா? என்று கேட்டார்.

கிருமிகள் மற்றும் உடலைப் பற்றிய சில விளக்கங்களைக் கூறிவிட்டு, திரிகடுகு சூரணத்தை மருந்தாக, தினம் மூன்று வேலைகள் சாப்பிடுங்கள் என்றேன். காலையில் வெறும் வயிற்றில் ஒரு வேலையும், மதியம் சாப்பாட்டுக்கு முன்பாக ஒரு வேலையும், இரவு உறங்குவதற்கு முன்பாக ஒரு வேளையும் வெந்நீரில் ஒரு டீக்கரண்டி திரிகடுகு சூரணம் உட்கொள்ள அறிவுறுத்தினேன்.

சில நாட்கள் கழித்து தொலைப்பேசியில் கேட்டபொழுது, முதல் நாள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு வேலை திரிகடுகு சூரணம் உட்கொண்டதும், மதியம் தொண்டைக்கட்டு குணமானது, அன்று மாலையே முழுமையாக அத்தனை தொந்தரவுகளும் மறைந்துவிட்டன என்றார். சாதாரணமாக நாம் சளிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தும் இயற்கை மற்றும் சித்த மருந்துகள் மூலமாகக் குணமாகக்கூடிய சாதாரண தொந்தரவுதான் கோவிட்-19 தொற்று என்பது.

நாளிதழ்களில் வெளிவந்த செய்தி:
அண்மையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை கட்டணம் குறித்து தமிழக அரசுக்கு, இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாள் கட்டணமாக ரூ.2,31,820 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு நாளைக்கு ரூ.23 ஆயிரம் வரை வசூலிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொந்தரவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைச்சும், உலக நாடுகளும் அறிவித்த பின்பும், ஆங்கில மருத்துவர்கள் 2-3 லட்சங்களுக்கு என்ன மருத்துவம் செய்வார்கள்? இருக்கின்ற மருந்திலேயே குணமாகுமென்றால் கோவிட்-19 என்பது முன்பு இருந்துவந்த சாதாரண தொந்தரவுகள்தான், பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது என்று நான் சொல்வது சரிதானே?

சுகப்பிரசவம் ஆகக்கூடிய பெண்களுக்குக்கூட வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுக்கும் கேடுகெட்ட, மனசாட்சி இல்லாத சில மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இருக்கும் இந்த நாட்டில், காய்ச்சலுக்கு 2 லட்சம் வாங்கலாம் என்றால் விடுவார்களா? 

சாதாரணமாக கோவிட்-19 நோய் அறிகுறிகளைப் பரிசோதனை செய்கிறேன் என்ற பெயரிலேயே பல லட்சங்களை சம்பாதிக்கக்கூடிய சந்தர்ப்பம், இதை 50 ரூபாய் மருந்தில் குணமாகிவிட விடுவார்களா? அதனால்தான் கோவிட்-19 நோய்க்கு மருந்து என்று யார் பேசினாலும் ஒடுக்கப்படுகிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

கோவிட்-19னால் பாதிக்கப்பட்ட முதல் நாடு சீனா. அது முழுமையாக அந்தத் தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டது. அந்த நாட்டு அரசாங்கம் நாங்கள் பாரம்பரிய இயற்கை மூலிகை மருந்துகளைக் கொண்டுதான் பெரும்பாலான நோயாளிகளைக் குணப்படுத்தினோம் என்று கூறும்பொழுது இந்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் இயற்கை பாரம்பரிய மருத்துவங்களை ஒதுக்குவது ஏன்? சோதனை முறையில் கூட இயற்கை மருத்துவங்களைப் பரிசோதித்துப் பார்க்க முன்வராதது ஏன்?

காரணம் மருத்துவ வியாபாரம் மற்றும் பணம். மனித உயிர்களைவிடவும் பணம் சம்பாதிப்பது அவ்வளவு முக்கியமா? இறைவன் என்று ஒருவர் இருக்கிறார்! நீங்கள் செய்யும் அத்தனை விஷயங்களும் உங்களுக்கும் உங்களின் தலைமுறைக்கும் திரும்பிவரும், என்பதில் நினைவில் கொள்ளுங்கள்.


மக்கள் வீட்டிலேயே இருப்பதினால் எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று குறையும்?


இடங்களிலும் பொருட்களிலும் கொரோனா வைரஸின் வாழும் காலம் அதிகபட்சம் 14 நாட்கள் என்று நம்பப்படுகிறது. மனிதர்களின் உடலிலும் அதிகபட்சம் 14 நாட்களுக்கு தான் கொரோனா வைரஸ் வாழும், அதற்குள் அது அந்த நபருக்கு எதாவது உடல் தொந்தரவுகளை உருவாக்கித் தனது இருப்பை காட்டி கொடுத்துவிடும்.

அதனால், 14 நாட்கள் பொது மக்கள் விலகியிருந்தால் புதிய நோயாளிகள் உருவாக மாட்டார்கள். ஏற்கனவே கிருமி தோற்று இருந்தவர்களும் தனக்கு உடலில் தொந்தரவு இருக்கிறது என்பதை அறிந்து குணப்படுத்திக் கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் - ஒரு அலசல்

கொரோனா வைரஸ் - ஒரு அலசல் 
ராஜா முகமது காசிம் 

வைரஸ் என்பது என்ன?

வைரஸ் என்பது கண்களால் காண முடியாத நுண்ணிய கிருமிகள். கிருமிகள் என்பவை உயிரினங்கள் அல்ல. கிருமிகளின் பொதுவான வேலைகள் இரண்டு. கிருமிகள் ஒன்றை உருவாக்க அல்லது அழிக்க உதவுகின்றன.

உதாரணத்துக்கு: நுரையீரலில் இருக்கும் பழைய நாள்பட்ட கழிவுகளை அழிப்பதற்கு டீ. பி கிருமிகள் உதவுகின்றன. புண்களில் இருக்கும் ஆபத்தான விசயங்களை அழிப்பதற்கு சில கிருமிகள் உதவுகின்றன.

தோளில் புண்கள் ஏற்படும் போதும், சில நோய்கள் உருவாகும் போதும், உடல் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படும் போதும் அவற்றைச் சீர்செய்ய சில பாக்டீரியாக்கள் / கிருமிகள் உதவுகின்றன.

கொரோனா வைரஸ் என்பது என்ன?

கொரோனா என்பது கிருமிகளின் குடும்ப பெயர். COVID-19 னும் Coronavirus (CoV) என்று வகைப்படுத்தப்பட்ட கிருமி குடும்பத்தைச் சார்ந்தது. சில வருடங்களுக்கு முன்பு பிரபல்யமாக இருந்த (SARS) மற்றும் (MERS) கிருமிகளும் (CoV) கிருமி வகையைச் சார்ந்தவைதான்.

COVID-19 என்றால் என்ன அர்த்தம்?

COVID-19 என்றால் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட Corona குடும்பத்தைச் சார்ந்த கிருமி நோய் என்று அர்த்தம். COVID-19 என்றால் Corona Virus Disease 2019.

கொரோனா வைரஸ் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

கொரோனா வைரஸ் கிருமிகள் 1930களில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

ஒரு மனிதனிடமிருந்து அடுத்த மனிதனுக்கு பரவுவதாக நம்பப்படுகிறது. இந்த கிருமிகள் விலங்குகளுக்கு பரவாது என்றும் நம்பப்படுகிறது.

கிருமி இருக்கும் ஒரு மனிதன் தும்மினாலோ, இருமினாலோ, அருகில் இருப்பவர்களுக்குப் பரவும் என்று நம்பப்படுகிறது. கிருமியால் பாதிக்கப்பட்டவர் அவர் கைகளால் ஒரு இடத்தை அல்லது பொருளை, தொட்டால் கிருமி அந்த இடத்தின் மீதும், பொருளின் மீதும் பரவும் என்று நம்பப்படுகிறது. கிருமித் தொற்று உள்ளவர் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நபரைத் தொட்டால், அவருக்கும் பரவும் என்று நம்பப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?

கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல். இவை மூன்றும் இருந்தாலே கொரோனா வைரஸ் தொற்றிவிட்டது என்று அர்த்தமில்லை. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இவை மூன்றும் காலம் காலமாக மனிதர்களுக்கு வந்து போகும் தொந்தரவுகள் தான்.

இதுவரையில் எத்தனை நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது?

07/04/2020 இரவு 9 மணிவரையில் உலகம் முழுவதும்:

1,362,852 நபர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

293,743 நபர்கள் இந்த நோயிலிருந்து முழுமையாகக் குணமாகி வீடு திரும்பியிருக்கிறார்கள்.

76,367 நபர்கள் இறந்திருக்கிறார்கள்.

மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் ஆபத்தானதா?

கொரோனா வைரஸால் ஆபத்தான கிருமி என்று சொல்ல முடியாது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 2% டினர் மட்டுமே மரணித்திருக்கிறார்கள். மரணித்தவர்களில் பெரும்பாலோனோருக்கு மற்ற நோய்களும் இருந்தன மேலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.

உண்மையைச் சொல்லப்போனால் கொரோனா வைரஸால் பாதிப்பால் இறந்தவர்கள் என்று கூறப்படுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அந்த கிருமித் தொற்றால் இருந்தாலும், மற்ற நோய்களினாலும் முதுமையின் காரணமாகவும் இறந்து தான் போயிருப்பார்கள்.

உடல் ஆரோக்கியமாகவும் உடலில் எதிர்ப்புச் சக்தி பலமாகவும் இருப்பவர்கள் எதைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. அவர்களை எந்த கிருமியும் ஒன்றும் செய்யாது.

கொரோனா வைரஸ் எவ்வாறு உயிரைக் கொல்கிறது?

கொரோனா வைரஸ் உயிரைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தான கிருமியோ நோயோ அல்ல. மற்ற கடுமையான நோய்கள் உள்ளவர்களும், உடலும் மனமும் பலவீனமாக உள்ளவர்களும் மட்டுமே மரணிக்கிறார்கள். மேலும் ஒரு சிலர் மருந்துகளின் வீரியம் தாங்காமலும், பக்கவிளைவுகளாலும் மரணிக்கக் கூடும். கொரோனா வைரஸ் தொற்றி உயிரிழந்தவர்களைக் கணக்கிட்டால் புரியும்.

கொரோனா வைரஸ் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

பசி உண்டாகும் வரையில் காத்திருந்து உணவை உட்கொள்ள வேண்டும். இரவில் 9 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். உடலில் கழிவுகள் (மலம், சிறுநீர், சலம்) தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அசதி உண்டானால் ஓய்வெடுக்க வேண்டும். இவற்றை முறையாகப் பின்பற்றினால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கொரோனா வைரஸை நினைத்தோ அல்லது மற்ற எதையும் நினைத்தோ மனதில், அச்சம், பதட்டம், கவலை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்வதையும் மற்றவர்களுடன் பழகுவதையும் தவிர்க்க வேண்டும்.

நோய்க் கண்டு வைத்தியம் செய்வதைவிடவும் நோய் அண்ட முடியாத அளவுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

கொரோனா வைரஸை பாரம்பரிய மருத்துவங்களில் குணப்படுத்த முடியுமா?

எந்த நோயும், எந்த கிருமியும் இந்த மருத்துவத்தில் தான் நான் குணமாகுவேன் என்று சொல்வதில்லை. நெடுநாள் நம்பிக்கை மற்றும் பழக்கத்தின் காரணங்களாலும், அரசியலின் காரணங்களாலும், பொருளாதார காரணங்களாலும் சில மருத்துவங்கள் போற்றப்படுகின்றன சில மருத்துவங்கள் ஒதுக்கப்படுகின்றன.

காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறலுக்கான தீர்வும், கிருமி நாசினிகளும் எல்லா பாரம்பரிய மருத்துவங்களிலும் இருக்கின்றன. எந்த மருத்துவம் என்பது முக்கியமல்ல நோய்கள் குணமாக வேண்டும் அவ்வளவுதான்.

சீனாவில் 90% கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பாரம்பரிய மருந்துகளைத் தான் கொடுத்திருக்கிறார்கள், அதில் நல்ல வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். பாரம்பரிய மருத்துவங்களில் இல்லாத மருந்துகள் வேறு எங்கும் நிச்சயமாக இருக்காது தேடுங்கள் கிடைக்கும்.

எதற்காக நடமாட்ட கட்டுப்பாடு விதித்தார்கள்?

கொரோனா வைரஸ் ஒரு மனிதனிடமிருந்து அடுத்த மனிதனுக்குத் தொற்றும் அன்று அஞ்சப்படுவதால் மக்கள் ஒன்றாகக் கூடுவதை உலகம் முழுவதும் தடைவிதித்தார்கள். பத்து பேர் ஒன்றாக இடத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்து அவர் தும்மினால் மீதமிருக்கும் 9 நபர்களுக்கும் அந்த கிருமி பரவும் அபாயம் உள்ளதல்லவா?

கொரோனா வைரஸ் ஒரு வியாபாரம் என்கிறார்களே அதில் என்ன வியாபாரம் உள்ளது?

கொரோனா வைரஸ் பீதியினால் மக்கள் பதட்டத்துடன் பொருட்களை வாங்குவார்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வியாபாரிகள் தேவையற்ற பொருட்களை அவர்கள்மீது திணிக்கலாம். பொருட்களின் உற்பத்தி குறைந்துவிட்டதால் பொருட்களின் விலையை வியாபாரிகள் விருப்பத்துக்கு ஏற்றலாம். உதாரணம் சொல்வதானால் ஒரு பெரிய நிறுவனம் 3 ஆண்டுகளில் ஈட்டும் லாபத்தை இந்த இரண்டு மாதங்களில் ஈட்டியிருப்பார்கள். முக கவசம், கையுறை, கைகழுவும் திரவம், கிருமி நாசினிகள் போன்றவற்றைத் தயாரிப்பவர்கள் தங்களின் 10 வருட வருமானத்தை இந்த இரண்டு மாதங்களில் எடுத்திருப்பார்கள்.

இந்த பொருளாதார நெருக்கடியில் பல சிறிய நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்படலாம் அவற்றை பெரிய நிறுவனங்கள் கைபற்றிக் கொள்ளும். சிறிய நிறுவனங்களின் சந்தையும் பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குப் போய்விடும். பங்குச்சந்தை வீழ்ச்சியினால் சிறிய நிறுவனங்களின் பங்குகள் பெரும்பாலும் பெரிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றுவிடும். சிறிய நிறுவனங்களையும் போட்டி நிறுவனங்களையும் ஒழிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பெரிய நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றில் என்ன அரசியல் உள்ளது?

உலக சுகாதார நிறுவனங்களும், மருந்து நிறுவனங்களும், பணக்கார நாடுகளும், பணக்கார நிறுவனங்களும் ஏழை நாடுகளுக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பார்கள். ஏழை நாடுகள் கடன் சுமைகளினால் மேலும் ஏழையாகும். அதே நேரத்தில் கடன் வாங்கிய நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு கடன் கொடுத்த நிறுவனங்களும் நாடுகளும் ஆட்டிப் படைப்பார்கள். புதிய சட்டங்களையும், மருந்துகளையும், தடுப்பூசிகளையும், வியாபாரங்களை, நிறுவனங்களையும், கடன் பெற்ற நாடுகளில் அறிமுகம் செய்வார்கள்.

கடன் வாங்கும் அரசியல்வாதிகளும் இப்போது நம் துயரம் தீர்ந்தால் போதும் என்றோ, ஊழல் செய்ய இதுதான் நல்ல வாய்ப்பு என்றோ எண்ணி தூர நோக்கோடு சிந்திக்காமல் அவர்களின் வலையில் சிக்கிக் கொள்வார்கள்.

அனைவரும் கொரோனா வைரஸ் அச்சத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜெர்மன், போன்ற நாடுகள் தன் மக்களுக்கு அவசர கால நிதிகளையும் சலுகைகளையும் வாரி வழங்குகின்றன. சில நாடுகளில் இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் பொது மக்களுக்கு எந்த மாற்றங்களும் நடக்க போவதில்லை.

கேடுகெட்ட அரசாங்கங்களும் அரசியல் வாதிகளும் தன் மக்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்கள் என்பதை நினைவில் கொண்டு, உங்களை நீங்கள் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாக்கும் அதே வேளையில் உங்களுக்குக் கீழே உள்ளவர்களையும் நினைவில் கொண்டு அவர்களின் பசியைப் போக்க உதவுங்கள்.