புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label கேள்வி பதில். Show all posts
Showing posts with label கேள்வி பதில். Show all posts

எழுத்தாளர்களுக்கு தேவையான ஆண்ட்ராய்ட் மென்பொருள்

Google Docs இது எழுதுபவர்களுக்கும், மாணவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள மென்பொருள். கையடக்க தொலைபேசியில் இருப்பதனால் எங்கேயும் எப்போதும் எழுதலாம். கற்பனைகள் தோன்றும்போது காகிதங்களை தேட வேண்டிய அவசியம் இல்லை. Microsoft word டுக்கு மாற்றாக இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். இது முற்றிலும் இலவசமானது.

இந்த மென்பொருளை கையடக்க தொலைபேசியிலும், கணினியிலும், டேப்லெட்டிலும், ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை பயன்படுத்தி எழுதும் போது பலர் ஒரே நேரத்தில் ஒரே கட்டுரையே எழுதலாம், திருத்தலம்.

இந்த மென்பொருளில் எழுதும்போது நீங்கள் எழுதுபவை உடனுக்குடன் உங்களின் google drive கணக்கில் பதிந்துவிடும். நீங்கள் எழுதுபவை அழிந்துவிடாமல் பாதுகாக்கலாம். இந்த மென்பொருளைக் கொண்டு தமிழில் எழுதினாலும் எழுத்துப் பிழைகளை சரி பார்க்கலாம்.

Download Google Docs
http://bit.ly/2GAzie3

மென்பொருள் - Google Maps

Google Maps நாம் போகவேண்டிய இடத்துக்கு வழி காட்டுவது மட்டுமின்றி மேலும் பல பலவகைகளில் நமக்குப் பயன் தரக்கூடியது. நாம் பயணிக்கும் பாதையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அரசாங்க அலுவலகங்கள், முக்கியமான நிறுவனங்கள், முக்கியமான அலுவலகங்கள், தூதரகங்கள், சுற்றுலா தளங்கள், வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், என மக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் Google Maps சில் கிடைக்கும்.

முக்கியமான அனைத்து அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் வேலை நேரம், விடுமுறை நாட்கள், முகவரி, தொலைபேசி எண், அமைந்திருக்கும் இடம், போன்ற எல்லா தகவல்களும் இங்கு கிடைக்கும்.

Download Google Maps
http://bit.ly/2GAxMbR

Download Google Maps lite
http://bit.ly/2GACkyA

மென்பொருள் - Google Translate

Google Translate எந்த மொழியிலிருந்தும் எந்த மொழிக்கும் மொழி மாற்றம் செய்யக்கூடிய மென்பொருள். பலதடவை மேம்படுத்தப்பட்டு சரியாகவும் துல்லியமாகவும் மொழிபெயர்ப்பு செய்யக் கூடிய ஆற்றலை பெற்றுவிட்டது.

புரியாத வார்த்தைகளையும் வாக்கியங்களையும் புரிந்து கொள்வதற்கு இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Download Google translate
http://bit.ly/2GBhBuE

மென்பொருள் - Google Assistant

Google Assistant மென்பொருளை உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் பதிவிறக்கம் செய்து. அதை இன்ஸ்டல் செய்து, செட்டிங் செய்து கொண்டால். உங்களின் ஆண்ட்ராய்டு போனை வார்த்தைகளின் மூலமாக கட்டுப்படுத்தலாம்.

"Ok google" என்று கூறினால் உங்களின் போன் உங்களின் கட்டளையை ஏற்க தொடங்கிவிடும். Ok google என்று கூறிவிட்டு "Add reminder" "Add alarm" "Add appointment" என்று கூறி உங்களுக்கு தேவையான வாற்றை பதிந்துக் கொள்ளலாம்.

"Ok google" என்று கூறிவிட்டு "Open Maps" "Open Gmail" "Open YouTube" என்று உங்களுக்கு எந்த மென்பொருளை திறக்க வேண்டுமோ அதன் பெயரை கூறினாலே அதை உங்கள் போன் திறந்துவிடும்.

Download Google Assistant: http://bit.ly/2Gzs49P

உயிர்களின் பிறவியை தீர்மானிப்பது யார்?

உயிர்கள் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களை கணக்கில் கொண்டும் அவர்கள் பூச்சிகள் முதல் மனிதர்கள் வரையில் எந்தப் பிறவியை எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

நம் வாழ்க்கையை தீர்மானிப்பது யார்?

நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையை நாம் தான் தேர்ந்தெடுத்தோம்.

அடுத்த ஜென்மத்தில் எந்த உயிராக பிறப்போம்?

இந்தப் பிறவியில் செய்த நன்மை தீமைகளை கணக்கிட்டு அடுத்த பிறவி தீர்மானிக்கப்படுகிறது. மனிதனாகப் பிறந்தவன் மீண்டும் மனிதனாக தான் பிறக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஓரறிவு முதல் ஆறறிவு வரை எந்தப் பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்து அடுத்த பிறவி நிர்னைக்கப்படும்.

மறுபிறவி எடுக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

இந்த வாழ்க்கையை புரிந்துகொண்டு வாழ்பவர்களுக்கும் பற்றில்லாமல் வாழ்பவர்களுக்கும் மறுபிறவி அமையாது.

முன்னோர்கள் என்பவர்கள் யார்?

முன்னோர்கள் என்ற சொல் நமக்கு முன்பாக வாழ்ந்தவர்களை குறிக்கவில்லை. மாறாக தனது  சந்ததியினருக்கு ஒரு பாடமாக வாழ்ந்து காட்டியவர்களும். அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொண்டவர்களும் தான் முன்னோர்கள். முன்னோர்கள் என்றால் முன்னோடிகள் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

பெரியோர் சிறியோர் என்பவர்கள் யார்?

பெரியோர் என்பவர்கள் எந்த விசயத்தையும் சிந்தித்து ஆராய்ந்து செய்பவர்கள். சிறியோர் என்பவர்கள் எந்த விசயத்தையும் சிந்திக்காமல் மனம் போன போக்கில் செய்பவர்கள்.

மனிதர்களின் வாழ்க்கையில் ஏன் ஏற்ற தாழ்வுகள் உருவாகின்றன?

மனிதர்கள் இந்த பூமியில் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களுக்கு ஏற்றவாறு அவர்களின் வாழ்க்கையில் ஏற்றமும் தாழ்வும் உருவாகின்றன.