கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label கேள்வி பதில். Show all posts
Showing posts with label கேள்வி பதில். Show all posts

அடுத்த பிறவியில் மீண்டும் மனிதனாகப் பிறப்போமா?


இந்தப் பிறவியில் செய்த நன்மை தீமைகளைக் கணக்கில் கொண்டு  அடுத்த பிறவி தீர்மானிக்கப்படுகிறது. மனிதனாகப் பிறந்தவன் மீண்டும் மனிதனாகத் தான் பிறக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஓரறிவு முதல் ஆறறிவு வரை எந்தப் பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்து அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படும்.

எந்த மனிதனுக்கும் எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யாமல், ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ்பவர்கள் மீண்டும் மனித பிறப்பை அடைய வாய்ப்புகள் உள்ளன.

புட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீர் உடலுக்கு நன்மையானதா?

தண்ணீரில் இயற்கையாகவே உயிர்களை உருவாக்கக்கூடிய உயிர் சக்தி இருக்கிறது. அந்த உயிர் சக்தி மனித உடலுக்கு மிகவும் அவசியமானது. புட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரில் உயிர்சக்தியும், உயிர்ச்சத்துக்களும், நீக்கப்படுகின்றன.

தண்ணீரை பல மாதங்கள் பாதுகாக்கவும், வாசனை, அல்லது சுவை வராமல் இருப்பதற்காகவும் பாட்டில் தண்ணீரில் அத்தனை சத்துக்களும் நீக்கப்படுகின்றன. எந்த சத்தும் இல்லாவிட்டால் அது தண்ணீர் அல்ல வெறும் திரவம் மட்டுமே. பாட்டில் தண்ணீரை அருந்துவது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

Coca-cola, pepsi, Fanta போன்ற பானங்களை ஏன் உடலுக்குக் கெடுதி என்கிறார்கள்?

Coca-cola, pepsi, Fanta என்று பிரித்துப் பார்க்காமல் புட்டிகளில், பாட்டல்களிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் அத்தனை பானங்களும் எதாவது ஒரு வகையில் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவைதான். அவற்றில் கலக்கப்படும் மிகுதியான சீனியும், பதப்படுத்த, சுவையூட்ட, மற்றும் வர்ணத்துக்காக கலக்கப்படும் இரசாயனங்களும் மனித உடலுக்கு பல வகையிலும் தீங்கை விளைவிக்கின்றன.

பகலில் கண்களில் எதனால் எரிச்சல் உண்டாகின்றன?

பகல் வேளைகளில் கண்களில் எரிச்சல் உண்டானால் உடல் சோர்வாக இருக்கிறது, உடலில் கழிவுகள் கூடிவிட்டது, அல்லது உடலின் உஷ்ணம் அதிகரித்து விட்டது என்று அர்த்தம்.

தூங்கி எழுந்ததும் எதனால் கண்களில் எரிச்சல் உண்டாகின்றன?

காலையில் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும்போது கண்களில் எரிச்சல் உண்டானால் முந்தைய இரவு நீங்கள் ஒழுங்காகத் தூங்கவில்லை என்று அர்த்தம்.

போதுமான உறக்கமில்லாமல் பாதியில் எழுந்துவிட்டீர்கள், அல்லது தாமதமாக உறங்கச் சென்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இரவு வேளைகளில் உடல் செய்ய வேண்டிய கடமைகள் சில தடைப்பட்டதால் உடல் அதை கண்ணெரிச்சல் என்ற அறிகுறியில் காட்டுகிறது.

மனதுக்கு அறிவு உள்ளதா?

மனதுக்கு பகுத்தறிவு கிடையாது. அதற்கு நல்லது கெட்டது தெரியாது. சரியானவற்றையும் தவறானவற்றையும் பிரித்துப்பார்க்கும் தன்மையும் கிடையாது. மனம் மனதுக்குள் பதிந்திருக்கும் பதிவுகளைக் கொண்டே முடிவுகளை எடுக்கிறது.

கோழி முட்டையை சாப்பிட்டால் தான் உடலுக்கு புரோட்டீன் கிடைக்குமா?

கோழிகள் புரோட்டீனோ முட்டையோ சாப்பிடுவதில்லை, இருந்தும் அவற்றின் முட்டைகளில் அதிகமான புரோட்டீன் இருக்கின்றன, அவற்றுக்கு எங்கிருந்து புரோட்டீன் கிடைத்தன? கோழிகளின் உடல் சுயமாக புரோட்டீனை உருவாக்குகின்றன.

கோழியின் உடலால் ப்ரோட்டீனை சுயமாக உருவாக்க முடியும் பொது மனிதனின் உடலால் சுயமாக புரோட்டீனை உருவாக்க முடியாதா? பரிமாணத்தின் உச்சம் மனிதன் அவன் உடலால் தனக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் சுயமாக உருவாக்கிக்கொள்ள முடியும்.

ஆன்மீகம் என்றால் என்ன?

மனித வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு; தான் தேடிய எதுவுமே உண்மையில்லை, தான் தேடிய அனைத்துமே அழியக்கூடியவை என்று மனிதர்கள் உணர்ந்து.

ஏன் பிறந்தோம்? ஏன் மனிதனாகப் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்? ஏன் மரணிக்கிறோம்?. மரணத்துக்குப் பிறகு எங்கே செல்கிறோம்?. மரணத்துக்குப் பின்பாக என்ன நடக்கும்?. எப்படி எந்த கேள்விக்கும் விடை தெரியாமல், அறியாமல் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களை நெறிப்படுத்த உருவானதே ஆன்மீகம். மனித அறிவுக்கு எட்டாத விசயங்களுக்கும், மனிதனுக்கு உருவாகும் சூட்சமத்தைப் பற்றிய கேள்விகளுக்கும் விடைக்கான வழி சொல்வதுதான் ஆன்மீகம்.

மனித உடலைத் தாண்டிய அறிவும், தேடுதலும்தான் ஆன்மீகம்.

உணவை உட்கொண்டதும் எதனால் வாந்தி வருகிறது?

உணவை உட்கொண்டதும் வாந்தி வந்தால், உட்கொண்ட உணவை உடலால் ஜீரணிக்க முடியவில்லை அல்லது அந்த உணவு உடலுக்கு ஒவ்வாதது அல்லது ஆபத்தானது என்று அர்த்தம். உடலுக்கு ஒத்துக் கொள்ளாத அல்லது ஆபத்தான உணவு என்பதால் உடல் உடனடியாக உடலைவிட்டு வாந்தியாகா வெளியேற்றுகிறது.

இரவு உறக்கம் போதுமானதாக இல்லை என்பதை எவ்வாறு அறிந்துக் கொள்வது?

இரவு உறக்கம் உடலுக்கு போதவில்லை என்றாலோ, இரவு உறக்கம் திருப்தியாக இல்லை என்றாலோ காலையில் எழுந்திருக்கும்போது, சோர்வு, லேசான தலைச் சுற்றல், உடல் வலிகள் இருக்கும்.

உடல் பலகீனமாக இருக்கிறது என்பதை எவ்வாறு அறிந்துக் கொள்வது?

உடல் பலகீனமாக இருப்பவர்களுக்கு உட்கொள்ளும் உணவு எளிதில் ஜீரணமாகாது, அதனால் உணவை உட்கொண்டவுடன் அசதியும் சோர்வும் உண்டாகும். தூங்கி எழுந்தால் தான் அவர்களின் உடலால் மீண்டும் செயல்பட முடியும்.

அவர்களின் உடல் விரைவில் சோர்வடையும், சோம்பலும், எரிச்சலும், அடிக்கடி அசதியும் உண்டாகும். அஜீரணம், மலச்சிக்கல் உண்டாகும், அடிக்கடி தலைவலி உண்டாகும். இவை அனைத்தும் உடலின் பலகீனத்தைக் குறிக்கும் அறிகுறிகள். இவற்றை அலட்சியப் படுத்தும்போது நோய்கள் உண்டாகும்.

மனிதனால் இயற்கையைச் சாராமல் சுயமாக வாழ முடியுமா?

இயற்கையைச் சார்ந்தும், பல உயிர்கள் இணைந்தும், அனைத்து உயிர்களும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துமே இந்த உலகில் வாழ்கின்றன. மனிதன் உட்பட எந்த உயிராலும் இயற்கையைச் சாராமல் சுயமாக வாழ முடியாது.

மனிதர்களின் வாழ்க்கையில் ஏன் ஏற்ற தாழ்வுகள் உருவாகின்றன?

மனிதப் பிறவிக்கும் மற்ற உயிரினங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மற்ற எந்த உயிரினத்துக்கும் தன் வாழ்க்கையைத் தனது விருப்பம் போல் வாழும் உரிமை கிடையாது. தனக்கு எது வேண்டும் வேண்டாம் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையும் மற்ற உயிரினங்களுக்கு கிடையாது.

மனிதனுக்கு மட்டும் தன் வாழ்க்கையை தனது விருப்பம் போல் வாழும் உரிமையுள்ளதால்; அவன் வாழும் காலங்களில் பல தவறுகளைச் செய்கிறான். இந்த உலக வாழ்க்கையும் மனித பிறப்பும் ஆன்மாவுக்குப் பயிற்சியாக இருப்பதனால்; அவன் செய்த தவறுகளைத் திருத்துவதற்காக அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிறப்பில் ஏற்ற தாழ்வுகள் உருவாகின்றன.

மக்கள் வீட்டிலேயே இருப்பதினால் எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று குறையும்?


இடங்களிலும் பொருட்களிலும் கொரோனா வைரஸின் வாழும் காலம் அதிகபட்சம் 14 நாட்கள் என்று நம்பப்படுகிறது. மனிதர்களின் உடலிலும் அதிகபட்சம் 14 நாட்களுக்கு தான் கொரோனா வைரஸ் வாழும், அதற்குள் அது அந்த நபருக்கு எதாவது உடல் தொந்தரவுகளை உருவாக்கித் தனது இருப்பை காட்டி கொடுத்துவிடும்.

அதனால், 14 நாட்கள் பொது மக்கள் விலகியிருந்தால் புதிய நோயாளிகள் உருவாக மாட்டார்கள். ஏற்கனவே கிருமி தோற்று இருந்தவர்களும் தனக்கு உடலில் தொந்தரவு இருக்கிறது என்பதை அறிந்து குணப்படுத்திக் கொள்ளலாம்.

COVID-19 என்றால் என்ன அர்த்தம்?

COVID-19 என்றால் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட Corona குடும்பத்தைச் சார்ந்த கிருமி நோய் என்று அர்த்தம். COVID-19 என்றால் Corona Virus Disease 2019.

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

ஒரு மனிதனிடமிருந்து அடுத்த மனிதனுக்கு பரவுவதாக நம்பப்படுகிறது. இந்த கிருமிகள் விலங்குகளுக்கு பரவாது என்றும் நம்பப்படுகிறது.

கிருமி இருக்கும் ஒரு மனிதன் தும்மினாலோ, இருமினாலோ, அருகில் இருப்பவர்களுக்குப் பரவும் என்று நம்பப்படுகிறது. கிருமியால் பாதிக்கப்பட்டவர் அவர் கைகளால் ஒரு இடத்தை அல்லது பொருளை, தொட்டால் கிருமி அந்த இடத்தின் மீதும், பொருளின் மீதும் பரவும் என்று நம்பப்படுகிறது. கிருமித் தொற்று உள்ளவர் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நபரைத் தொட்டால், அவருக்கும் பரவும் என்று நம்பப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?

கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல். இவை மூன்றும் இருந்தாலே கொரோனா வைரஸ் தொற்றிவிட்டது என்று அர்த்தமில்லை. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இவை மூன்றும் காலம் காலமாக மனிதர்களுக்கு வந்து போகும் தொந்தரவுகள் தான்.

இதுவரையில் எத்தனை நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது?

07/04/2020 இரவு 9 மணிவரையில் உலகம் முழுவதும்:

1,362,852 நபர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

293,743 நபர்கள் இந்த நோயிலிருந்து முழுமையாகக் குணமாகி வீடு திரும்பியிருக்கிறார்கள்.

76,367 நபர்கள் இறந்திருக்கிறார்கள்.

மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் ஆபத்தானதா?

கொரோனா வைரஸால் ஆபத்தான கிருமி என்று சொல்ல முடியாது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 2% டினர் மட்டுமே மரணித்திருக்கிறார்கள். மரணித்தவர்களில் பெரும்பாலோனோருக்கு மற்ற நோய்களும் இருந்தன மேலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.

உண்மையைச் சொல்லப்போனால் கொரோனா வைரஸால் பாதிப்பால் இறந்தவர்கள் என்று கூறப்படுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அந்த கிருமித் தொற்றால் இருந்தாலும், மற்ற நோய்களினாலும் முதுமையின் காரணமாகவும் இறந்து தான் போயிருப்பார்கள்.

உடல் ஆரோக்கியமாகவும் உடலில் எதிர்ப்புச் சக்தி பலமாகவும் இருப்பவர்கள் எதைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. அவர்களை எந்த கிருமியும் ஒன்றும் செய்யாது.

கொரோனா வைரஸ் எவ்வாறு உயிரைக் கொல்கிறது?

கொரோனா வைரஸ் உயிரைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தான கிருமியோ நோயோ அல்ல. மற்ற கடுமையான நோய்கள் உள்ளவர்களும், உடலும் மனமும் பலவீனமாக உள்ளவர்களும் மட்டுமே மரணிக்கிறார்கள். மேலும் ஒரு சிலர் மருந்துகளின் வீரியம் தாங்காமலும், பக்கவிளைவுகளாலும் மரணிக்கக் கூடும். கொரோனா வைரஸ் தொற்றி உயிரிழந்தவர்களைக் கணக்கிட்டால் புரியும்.