கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

குழந்தைகளை வளரவிடுங்கள்

குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்களை படிக்க வைப்பதோ, திருமணம் செய்துவைப்பதோ அல்ல. பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் இந்த உலகில் பிறப்பது பள்ளி பாடங்களைப் படிப்பதற்காகத் தான் என்பதைப் போன்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதும் திருமணம் செய்துவைப்பதும் தான் பெற்றோர்களின் கடமை என்பது பெரும்பாலான பெற்றோர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும், அது ஓரறிவு உயிராக இருந்தாலும் ஆறறிவு உயிராக இருந்தாலும், இந்த பூமியில் பிறப்பெடுப்பது வாழ்க்கையென்றால் என்னவென்று கற்றுக்கொள்வதற்காகத்தான். வாழ்க்கை, உறவு, அன்பு, பாசம், கருணை, இன்பம், துன்பம், ஏற்றம், தாழ்வு என பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ள வரும் உயிர்களை. பள்ளிக்கூடம், வேலை, பணம் என மூன்று விலங்குகளைப் பூட்டி இதுதான் உலகம் என்று சில பெற்றோர்கள் தவறான பாதையைக் காட்டுகிறார்கள்.

பள்ளிப் பாடங்களைப் படித்தால் இந்த உலகில் அனைத்தும் கிடைத்துவிடும் என்ற ஒரு மாயை அனைவரிடமும் இருக்கிறது. கல்லூரியைக் கூட தாண்டாத பலர் வியாபாரம் செய்வதையும், கல்லூரி படிப்பைக் கூட முடிக்காத பலர் கோடீசுவரர்களாக இருப்பதையும், எழுதப்படிக்கத் தெரியாத பலர் சகல வசதிகளுடன் வாழ்வதையும், பல்கலைக்கழகம் வரையில் படித்தவர்கள் கூட வேலையில்லாமல் வருமானமில்லாமல் இருப்பதையும், இந்த உலகில் வாழத்தெரியாமல் தவிப்பதையும் கண்கூடாகப் பார்த்தும் பள்ளிப் பாடம் படித்தால் அனைத்தும் கிடைத்துவிடும், படிக்காதவர்களுக்கு எதுவும் கிடைக்காது என்ற மாயையை மட்டும் மாற்ற இயலவில்லை.

அனைத்து பெற்றோர்களும் ஒன்றைமட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உலகமென்றால் என்ன? வாழ்க்கையென்றால் என்ன? மனிதர்கள் என்றால் யார்? மனிதர்களின் இயல்புகள் என்ன? செல்வமென்றால் என்ன? எதற்காகச் செல்வம் சேர்க்கிறோம்? என்பன போன்றவற்றைச் சிந்தித்துப் புரிந்துகொண்டு வாழும் மனிதர்கள் மட்டும்தான் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், செல்வந்தர்களாகவும், வாழ்கிறார்கள்.

பெற்றோர்களான நமது கடமையாக இருப்பது பிள்ளைகளை இந்த உலகில் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வழிகாட்டுவது மட்டுமே. தன் வாழ்க்கையில் நடக்கும், சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும், ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்று சிந்தித்து, ஆராய்ந்து வாழும் மனிதர்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் வெற்றிபெறுகிறார்கள். பிள்ளைகளைப் படி படி என்று நச்சரிப்பதும், படிக்கச் சொல்லி வற்புறுத்துவதும் எந்த பலனையும் உண்டாக்காது.

வாழ்க்கை என்றால் என்ன? எதிர்கால வாழ்க்கையில் அவர்கள் என்னவெல்லாம் சந்திக்கப் போகிறார்கள்? அனைத்தையும் சமாளித்து வாழ்வது எப்படி? போன்றவற்றைப் புரியவைத்தால்; அவர்களுக்கு என்னவெல்லாம் தேவை, அவற்றை அடைய என்ன வழி என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற படிப்பை அவர்களே தேடியும் விரும்பியும் படிப்பார்கள்.

ஊருக்குப் புதிதாக வந்த ஒருவர், கொண்டுவந்த முகவரிக்குச் செல்ல வழி தெரியாமல் நிற்கும் போது, அவருக்கு வழிகாட்டுவதைப் போன்று; இந்த பூமியின் நிம்மதியாக, அமைதியாக, பாதுகாப்பாக வாழ்வதற்கு நம் பிள்ளைகளுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். நாம் போக வேண்டிய ஊருக்குரிய பாதையை அவர்களுக்குக் காட்டக்கூடாது.

அவர்கள் எங்குச்செல்ல விரும்புகிறார்களோ அங்குச் செல்வதற்கான வழியைத்தான் கூறவேண்டும். நமது சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் குழந்தைகளின் மீது திணிப்பது, நாம் போகும் ஊருக்கான பாதையை வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய நபருக்குக் கூறுவதைப் போன்றதாகும்.

குழந்தைகளின் பிறவி நோய்களுக்கான காரணங்கள் என்ன?


இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகள் நோய்களுடனும், குறைகளுடனும் பிறப்பதற்கும்; குழந்தையைப் பெற்ற தாய்மார்கள் பல உடல் உபாதைகளுக்கு ஆளாவதற்கும், பெற்றக்  குழந்தைக்கு பால் சுரக்காமல் தாய்மார்கள் அவதிபடுவதற்கும், மிக முக்கிய காரணமாக இருப்பது, கர்ப்பக் காலத்தில் தாய்மார்கள் உட்கொண்ட இரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சத்து மாத்திரைகளே.

நம் வயிறு ஒன்றும் குப்பைத் தொட்டியல்ல
ஒன்றைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள். நமது வாயும் வயிறும் குப்பைத் தொட்டிகள் அல்ல. நமது வாய் இயற்கையால் வழங்கப்பட்ட உணவுகளை உண்பதற்காகவும், நமது வயிறு இயற்கையால் வழங்கப்பட்ட உணவுகளை ஜீரணிப்பதற்காகவும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. நமது வயிறு இரசாயனங்களைக் கொண்டு, செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகளையும், மருந்துகளையும், பொருட்களையும் ஜீரணிக்காது.

அவ்வாறானால் நாம் உட்கொள்ளும் இரசாயன மருந்துகள் என்னவாகும்?
நாம் உட்கொள்ளும் மருந்துகளில் உடலுக்கு உதவக்கூடிய விசயங்கள் ஏதாவது இருந்தால், அதை உடல் கிரகித்துக் கொண்டு மற்றவற்றை கழிவாக உடலிலிருந்து வெளியில் அனுப்பிவிடும். இவ்வாறு உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில், மிகக் கடுமையான, மிகக் கொடுமையான இரசாயனங்களை உடலால் வெளியேற்ற முடியாத சூழ்நிலையில், சில கழிவுகள் உடலுக்குள்ளேயே தங்கிவிடும். இவ்வாறு உடலுக்குள்ளேயே தங்கிவிடும் கழிவுகளே அனைத்து உடல் உபாதைகளையும் உருவாக்குகின்றன.

குழந்தைகளுக்கு உருவாகும் தொந்தரவுகள்.
குழந்தைகளுக்கு உருவாகும் தொந்தரவுகள் பெரும்பாலும் தாயின் கர்ப்பப்பையிலேயே தொடங்குகின்றன. இயற்கையாகவே தாயின் கர்ப்பப்பையானது குழந்தை உருவாகவும், குழந்தை வளரவும் மிக பாதுகாப்பானதாக படைக்கப்பட்டிருக்கிறது.

தாயின் கர்ப்பப்பையானது, அதில் வளரும் குழந்தையின் அனைத்து நோய்களையும் நீக்கி, பரம்பரை நோய்கள் என்று கூறப்படும் நோய்கள் அண்டாமல் தடுத்து, வெளியிலிருந்து எந்த பாதிப்புகளும் குழந்தையை நெருங்காமல் பாதுகாக்கும் அமைப்பிலேயே படைக்கப்பட்டிருக்கிறது.

இறைவனுக்கு தெரியாதது மருத்துவர்களுக்கு தெரிந்துவிட்டது?
மிக அழகாக, மிக உன்னதமாக, இறைவன் படைத்த கர்ப்பப்பையில். எந்த ஒரு முன் மாதிரியும் இன்றி மிக உன்னதமான, மிக உயரிய படைப்பாக மனித இனம் படைக்கப்படுகிறது. இவ்வாறு இயற்கையின் கரங்களில் வளரும் குழந்தையை பிடுங்கி, நாங்கள் பாதுகாக்கிறோன் என்று கூறுபவர்களை நம்பி, அவர்கள் கொடுக்கும் இரசாயனங்களை உட்கொண்டு. பல தாய்மார்கள் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் சீரழிகிறார்கள்.

இரசாயனங்கள் உடலுக்கு கேடானவை.
கர்ப்பம் தரித்த தாய்மார்கள் அல்லது கர்ப்பம் தரிக்க ஆசைப்படும் தாய்மார்கள், எந்த காரணத்தைக் கொண்டும் இரசாயனங்களை உபயோகிக்கக் கூடாது. இரசாயனங்களை உணவாகவோ, பானமாகவோ, ஒப்பனையாகவோ, மருந்தாகவோ, ஊசியாகவோ எந்த வகையில் பயன்படுத்தினாலும். அது அந்த தாய்க்கும் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தீங்கை விளைவிக்கும்.

கர்ப்பமுற்ற தாய்மார்கள் உட்கொள்ளும் இரசாயனங்கள், அந்த தாயின் உடலையும் அவளின் கர்பப்பையையும் முழுமையாக செயல்பட விடாமல். அவள் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை கட்டுப் படுத்துகிறன.

ஒரு கர்ப்பமுற்ற தாய், இரசாயனங்களை உட்கொள்ளும் போது, அவளின் உடலானது அந்த  இரசாயனங்களை எதிர்த்து போராடுகிறது. உடலின் உள்ளே செல்லும்  இரசாயனங்களை முறிப்பதிலும், அதை வெளியேற்றுவதிலும், பெருமளவு சக்திகளை செலவழிப்பதால், அவள் கருவின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் சக்தி போதாமல் குழந்தைக்கு குறைகள் உண்டாகின்றன.

கர்ப்பமுற்ற தாய்மார்கள் உட்கொள்ளும் இரசாயனங்கள்
பெரும்பாலும் கர்ப்பமுற்ற தாய்மார்கள் இரும்புச் சத்து, கல்சியம் சத்து, விட்டமின், க்லுகொஸ் போன்ற மருந்து மாத்திரைகளைச் உட்கொள்கிறார்கள். ஏன் உட்கொள்கிறார்கள் என்று கேட்டல், டாக்டர் பரிந்துரைத்தார்கள், குழந்தையின் ஆரோக்கியத்துக்காக என்று கூறுவார்கள். ஆனால் யாரும் டாக்டர்களை திரும்பி கேட்பதில்லை இந்த மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பாக பிறந்த என் முன்னோர்கள் நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள், ஆனால் இவற்றை உட்கொள்ள தொடங்கிய பிறகு பிறந்த மனிதர்கள் 60 வயதை தாண்டுவதே இயலாத காரியமாக இருக்கிறதே ஏன்? என்று.

நீங்கள் கேட்கலாம் விட்டமின், கல்சியம் போன்ற ஊட்டச் சத்துக்கள் உடலுக்கு அவசியம் தானே அவற்றை உட்கொள்வதினால் என்ன தவறு இருக்கிறது என்று. இயற்கையில், இயற்கையால் உருவாகும் கல்சியம், விட்டமின் போன்ற சத்துக்களுக்கும் டாக்டர்கள் கொடுக்கும், மருந்து கம்பனிகள் உருவாக்கும் செயற்கை சத்துக்களுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?. இயற்கையாக மண்ணில் விளைந்த மலர்களுக்கும், ப்லாஸ்திக் மலர்களுக்கும் உள்ள வித்தியாசம். இரண்டையுமே நாம் மலர்கள் என்றுதான் கூருகிறோம். ஆனால் உண்மையில் இரண்டும் ஒன்றல்ல.

இரசாயனங்களிலிருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள்.
கர்ப்பமுற்ற தாய்மார்கள் மட்டுமின்றி, யாருமே எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டமின், கல்சியம் போன்ற ஊட்டச்சத்து மாத்திரைகளையும், சோடியாம் கலந்த உப்புக்களையும் உட்கொள்ள வேண்டாம்.

ஆரோக்கியமாகவாழ்வோம்… ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம் ...


உங்கள் குழந்தைகளுக்கு வாழ்வதற்கு கற்றுக் கொடுங்கள்!

உங்கள் குழந்தைகள் இந்த உலகத்தில் சான்றோராக வாழ வேண்டுமா? இந்த வாழ்க்கையையும் உலகத்தையும் மனிதர்களையும் புரிந்துக் கொண்டு பாதுகாப்பாக, நிம்மதியாக, ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? ஆம் என்ற பதில் உங்களிடம் இருந்தால்; இந்த பத்து விசயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

1. பசி உண்டான பிறகு உணவை உட்கொள்ள பழக்குங்கள். பசி உண்டானால் பசியின் தன்மை மற்றும் பசியின் அளவை அறிந்து சாப்பிட கற்றுக் கொடுங்கள். பசி இல்லையென்றால் எனக்கு உணவு வேண்டாம் என்று தைரியமாக சொல்ல பழக்குங்கள்.

2. கேள்விகள் கேட்க ஊக்குவியுங்கள். யார் எதை சொன்னாலும் ஏன்? எதற்கு? எதனால்? அதன் நோக்கம் மற்றும் விளைவு என்ன? என்று கேள்விகள் கேட்கச் சொல்லுங்கள். கேள்வி கேட்காமல் எதையும் நம்பக் கூடாது என்று பழக்குங்கள்.

3. வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். உங்கள் பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ற புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். நீங்களும் உடன் அமர்ந்து பயனுள்ள எதையாவது வாசியுங்கள்.

தமிழ் வாசிக்க கற்றுக்கொடுங்கள். தமிழில் தான் உலகின் அனைத்து இரகசியங்களும் ஞானங்களும் உள்ளன. இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒரு நாள் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் அவசியம் தேவைப்படும்.

4. செல்வத்தின் அவசியத்தை புரியவையுங்கள். இந்த உலகில் வாழ்வதற்கு பணம் மிகவும் அவசியம் என்பதை விளக்குங்கள். அதே நேரத்தில் பணம் சேர்ப்பதற்காக மனிதப் பிறப்பு எடுக்கவில்லை என்பதையும் புரியவையுங்கள்.

5. நம் எண்ணப்படிதான் நம் வாழ்க்கை இருக்கும், அதனால் வாழ்க்கை வளமாக வேண்டுமென்றால், மனதை வளமாக வைத்திருக்க வேண்டும் என்பதை புரியவையுங்கள். மனதில் எப்போதும் நல்ல எண்ணங்கள் இருக்க வேண்டும் தீயனவற்றை விளக்க வேண்டும்.

6. இந்த உலகில் தீர்வு இல்லாத பிரச்சனை என்று எதுவுமே கிடையாது. அதனால் எதற்கும் களங்க வேண்டாம் அனைத்தும் நிச்சயமாக மாறும் என்று கூறுங்கள்.

7. அன்பை அறிமுகப்படுத்துங்கள். மனிதர்களை அறிமுகப்படுத்துங்கள். உறவுகளை பேண கற்றுக்கொடுங்கள். உறவுகளின் முக்கியத்துவத்தை விளக்குங்கள்.

8. இயற்கையை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்துங்கள். புற்கள் முதலிய, மரங்கள், பறவைகள், மீன்கள், விலங்குகள், பூமி, கிரகங்கள், அனைத்தையும் அறிமுகப்படுத்துங்கள்.

9. உங்கள் குழந்தைகளை சிந்திக்க தூண்டுங்கள். சுயமாக முடிவெடுக்க அனுமதியுங்கள். அவர்களுக்கு எது தேவை என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.

10. தானமும் தர்மமும் செய்ய பழகுங்கள். தர்மங்கள் கொடுக்கும் போது அவர்களின் கைகளால் கொடுக்கப் பழகுங்கள்.

நீங்கள் வாழ்ந்துக் காட்டும் வழியிலும், நீங்கள் கற்றுக் கொடுக்கும் பழக்க வழக்கங்களையும் கொண்டும் தான் உங்கள் பிள்ளைகள் தங்களின் எதிர்கால வாழ்க்கையை வாழப் போகிறார்கள் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் வையுங்கள். பள்ளிப் பாடங்கள் மட்டும் ஒருவனை சிறப்பாக வாழ வைக்காது.

ஏறதாள 7 வருடங்களுக்கு ஒரு முறை குழந்தைகளின் குணங்கள் மாற்றம் அடையும். முதல் ஏழு வருட அனுபவங்களை கொண்டு எட்டாவது வருடம் முதல் வாழ்வார்கள். அடுத்த 7 வருடம் அனுபவங்களைக் கொண்டு 14 ஆவது வருடம் முதல் வாழ்வார்கள். மனதின் இந்த மாற்றம் இருதிவரையில் தொடர்ச்சியாக நடக்கும். மனப் பதிவுகள் சரியாக அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

மருத்துவரிடம் ஊசி போட்ட பிறகு குழந்தைகளுக்கு காய்ச்சல் உருவாவது ஏன்?

மருத்துவரிடம் சென்று குழந்தைகளுக்கு ஏதாவது ஊசி போட்டாலோ; அல்லது நோய் தடுப்பூசி போட்டாலோ, பல குழந்தைகளுக்கு காய்ச்சல் உருவாகும். இந்தக் காய்ச்சல் உருவாக காரணம் என்ன?.

குழந்தைகளுக்கு ஊசி போட்டவுடன் காய்ச்சல் உருவானால், குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட ஊசியில் கலந்திருக்கும் ரசாயனங்களோ அல்லது கிருமிகளோ அந்தக் குழந்தையின் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம். அந்த ஊசியில் கலந்திருக்கும் உடலுக்கு ஒவ்வாத ரசாயனங்களையும் கிருமிகளையும் கொல்வதற்காகத்தான், உடலானது தனது உஷ்ணத்தை அதிகரிக்கிறது. உடலின் உஷ்ணம் அதிகரித்து அதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து, அந்தக் கிருமிகளையும் ரசாயனங்களையும் எதிர்த்து உடல் போராடுகிறது. காய்ச்சல் என்பது உடலில் நன்மைக்காக மட்டுமே உருவாகும் என்பதை பெற்றோர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

யாருக்காவது காய்ச்சல் உருவாகி, அந்த காய்ச்சல் அதிக நாட்கள் இருந்தால் மருத்துவர்கள் என்ன சொல்வார்கள்?. இது வைரஸ் காய்ச்சல், கிருமி காய்ச்சல், கிருமி தோற்று என்று கூறுகிறார்களா இல்லையா?. கிருமி காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், என்று மருத்துவர்கள் பெயர்கள் வைத்திருக்கும் போதே நமக்கு தெரியவேண்டும், கிருமிகள் உடலுக்குள் சென்றால் காய்ச்சல் உண்டாகும் என்பது.

எந்த காரணத்துக்காக மருத்துவர்கள், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க சொல்கிறார்களோ, அதே காரணத்துக்காகத்தான் கிருமிகள் உடலுக்குள் செல்லும் போது காய்ச்சல் உண்டாகிறது, கிருமிகளை கொல்வதற்கு.

காய்ச்சலை கட்டுப்படுத்த கொடுக்கப்படும் மருந்துகளும் ஊசிகளும் குழந்தைகளின் நோய்யெதிர்ப்பு சக்தியை கொன்று, ஊசியில் இருக்கும் குழந்தையின் உடலுக்குத் தீங்கான, கிருமிகளும், இரசாயனங்களும், உடலிலேயே தங்கிவிட துணை புரிகிறது. இன்று உடலில் தேங்கும் இந்த கிருமிகளும் இரசாயனங்களும் பின்னாட்களில் கொடிய நோய்களாக குழந்தைகளின் உடலில் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.

சில குழந்தைகளுக்கு சிறுவயதில் காய்ச்சல் கண்ட பிறகு பேச்சு வராமல் போவதற்கும், பார்வை கோளாறுகள் உண்டாவதற்கும், மூளை வளர்ச்சி குறைவதற்கும், கை கால்கள் செயல் இழப்பதற்கும், இடுப்புக்குக் கீழ் செயல்படாமல் போவதற்கும் இது போன்ற ஊசிகளில் இருக்கும் ரசாயனங்களும் கிருமிகளுமே முக்கிய காரணமாக அமைகின்றன. முடிந்த வரையில் உங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் கொடுக்காதீர்கள்.

ஒரு வேளை குழந்தைகளுக்கு காய்ச்சல் உண்டானால், ஈரத்துணியை நனைத்து தலையிலும், முகத்திலும், நெஞ்சிலும், துடைத்து விடுங்கள். ஒரு துணியை ஈரமாக்கி நெற்றியில் பற்றுக் கொடுங்கள். உணவு ஏதும் கொடுக்காதீர்கள். காய்ச்சல் படிப்படியாக குறைந்துவிடும். ஒருவேளை மருத்துவம் தேவைப்பட்டால், இயற்கை மருத்துவத்தை மட்டும் நாடுகள் ரசாயனங்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்.

Image by Steve Buissinne from Pixabay

அறிவாளி குழந்தைகள் VS புத்திசாலி குழந்தைகள்

குழந்தை வளர்ப்பு
குழந்தையை கருவில் சுமந்து ஈன்றெடுத்து வளர்ப்பதை, சிலர் ஏதோ கின்னஸ் சாதனையை படைத்துக் கொண்டிருப்பதை போன்று உணர்கிறார்கள். அளவுக்கு மீறிய கவனிப்பும், கட்டுப்பாடும், பல குழந்தைகளை எதிர்காலத்தில் முட்டாள்களாகவும், சமுதாயத்தில் வாழத் தெரியாதவர்களாகவும், மாற்றிவிடுகிறது.

குழந்தையை வளர்க்கும் பெரும்பாலானோர் தன் கவனம் முழுவதையும் குழந்தைகளின் மீது வைத்திருக்கிறார்கள், மாறாக குழந்தையை வளர்க்கும்போது முழு கவனத்தையும் தம்மீதும் அந்தக் குழந்தையை சுற்றி இருக்கும் பெரியவர்களின் மீதும் வைத்திருக்க வேண்டும். எந்த குழந்தையும் பெற்றோர்கள் சொல்வதைக் கேட்டு வளர்வதில்லை, மாறாக பெற்றோர்களின் செயல்களையும், நடவடிக்கைகளையும், சொற்களையும், பார்த்து, கேட்டு வளர்கிறது.

குழந்தையை சுற்றி இருக்கும் பெரியவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? என்பதை குழந்தைகள் பிறந்தது முதல் கவனிக்க தொடங்குகிறார்கள்.

ஒரு குழந்தை பெரியவன் ஆனதும் எவ்வாறு நடந்து கொள்வான்? எவ்வாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்வான்? எவ்வாறான வாழ்க்கை வாழ்வான்? என்பதெல்லாம் பெற்றோர்கள் கற்றுக் கொடுத்தவைகளை கொண்டும், பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுத்தவைகளைக் கொண்டு அமைவதில்லை. மாறாக அந்த குழந்தை 12 வயதுக்குள், பார்த்த, கேட்ட, அனுபவித்த, விஷயங்களை வைத்தே, அந்த குழந்தையின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

புத்திசாலிக்கும் அறிவாளிக்கும் உள்ள வித்தியாசம் பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. 

ஒரு குழந்தையை நல்ல பள்ளிக்கூடத்தில், நன்றாக பாடம் நடத்தக்கூடிய ஆசிரியரிடம் கல்வி கற்க வைத்தால். அந்த ஆசிரியர் அந்த குழந்தையை அறிவாளியாக மாற்றலாம், ஆனால் எத்தனை பள்ளிக்கூடத்தில், எத்தனை பல்கலைக்கழகத்தில், கற்றாலும் எந்த குழந்தையையும் புத்திசாலியாக மாற்ற முடியாது.

அறிவாளிகளுக்கும் புத்திசாலிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அறிவாளி தான் கற்றுக்கொண்டவற்றை, கற்றுக்கொண்ட துறையில் பயன்படுத்துவார். உதாரணத்திற்கு காரை பழுதுபார்க்க கற்றுக்கொண்டவர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த அறிவைக் கொண்டு காரை மட்டுமே பழுது பார்க்க முடியும். அதை விடுத்து மற்ற வாகனங்களை அவருக்கு பழுது பார்க்கவோ அதைப் பற்றிய உயரிய அறிவோ புரிதலோ இருக்காது. ஆனால் ஒரு புத்திசாலி இதே வாகன பழுதுபார்க்கும் படிப்பை படித்தாலும், தான் கற்றுக்கொண்ட இந்த அறிவை மற்ற துறைகளில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற புரிதலும் இருக்கும்.

அறிவாளி ஒரு சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்வது என்று அவனுடைய அனுபவத்தில் அல்லது அவனுடைய படிப்பில் இருந்தால் அதை பயன்படுத்துவான். இல்லை என்றால் அந்த சூழ்நிலைக்கு கட்டுப்பட்டு நடப்பான். புத்திசாலிக்கு ஒரு சூழ்நிலையை சமாளித்து, அதிலிருந்து வெளிவரும் ஆற்றல் இயல்பாகவே இருக்கும். புத்திசாலி அவன் வாழ்நாளிலேயே சந்தித்திராத ஒரு பிரச்சினையை, கேள்விப்பட்டிராத ஒரு பிரச்சினையை, அவன் எதிர்கொண்டாலும் கூட, அதிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்ற ஆற்றல் அவனுக்குள் இருக்கும்.

ஒரு குழந்தை படிப்பதினால் அறிவாளி ஆகிறான் ஆனால் அவனது அனுபவங்களின் மூலமே புத்திசாலி ஆகிறான். குழந்தைகளின் பெரும்பாலான அறிவு வளர்ச்சி பன்னிரெண்டு வயதுக்குள்ளாகவே முடிந்துவிடுவதால், வெளி உலகத்தைப் பார்க்காது, மனிதர்களுடன் கலக்காது வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள், மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர், என்று எந்த வகையான தொழில் புரிந்தாலும் அவர்களுக்கு புத்தி கூர்மை குறைவாகவே இருக்கும்.

அவர்களின் துறையைச் சாராத, ஒரு சூழ்நிலையை, அவர்களால் எந்த காலத்திலும் சமாளிக்க முடிவதில்லை. அவற்றை சமாளிக்க பிறரின் உதவியையே நாடுகிறார்கள். வெளி மனிதர்களுடனும், பல குழந்தைகளுடனும் விளையாடி, மண்ணில் புரண்டு, குளத்தில் குதித்து, ஆற்றில் நீந்தி, இயற்கையுடனும், மனிதர்களுடனும், மக்களுடனும், இந்த சமுதாயத்தில் கலந்து வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாக உருவாகின்றார்கள். படிப்பு இல்லாத குழந்தைகள் கூட, எவ்வாறான சூழ்நிலையாக இருந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் அவர்களிடம் இயற்கையாகவே உருவாகிவிடும். சிறிய வருமானம் இருந்தால் கூட அதை வைத்துக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடிய புத்திசாலித்தனம் அவர்களுக்கு இருக்கும்.

குழந்தைகளுக்கு வெளியுலகத்துடன் வாழ கற்றுக்கொடுங்கள். நீங்கள் முதலில் வெளி உலகத்துக்கு வாருங்கள், மனிதர்கள் அதிகமாக இருக்கும் இடங்களுக்கும். மனிதர்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கும், அடிக்கடி உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். எதிர் வீட்டுப் பிள்ளைகளுடனும், அருகில் உள்ள வீடுகளில் உள்ள குழந்தைகளுடனும், உங்கள் பிள்ளைகளை சேர்ந்து விளையாட அனுப்புங்கள். உற்றார், உறவினர், நண்பர்களுடன், குழந்தைகள், இயல்பாக பழக அனுமதியுங்கள்.

இயற்கையுடன் இணைந்து வாழ குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். ஆறு, குளம், கடல், போன்ற நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று நீந்த சொல்லுங்கள். காடு, மலை, கடல், போன்ற இடங்களுக்கு குழந்தைகளை விளையாட அழைத்துச் செல்லுங்கள். இயற்கையை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். விலங்குகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். மனிதர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

குழந்தைகளுக்கு ஆயிரம் விஷயங்கள் புத்தகங்களிலிருந்து கற்றுக் கொடுப்பதை விடவும், இரண்டு விஷயங்கள் இயற்கையிலிருந்து கற்றுக் கொடுத்தால், அது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பயனுள்ளதாக இருக்கும். புத்திசாலிக் குழந்தையால் அறிவாளியாக முடியும். ஆனால் எந்த அறிவாளியாலும் புத்திசாலியாக முடியாது. சிறுவயது தாண்டிவிட்டால், புத்தியை கூர்மைப் படுத்துவது சிரமம். இளமையில் கல்...


இளம் பருவத்தினர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தடுப்பது எப்படி?

பெற்றோர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம், எல்லாப் பிள்ளைகளும் மனதின் கேள்விகளுக்கு விடைகளைத் தேடி தான் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். பிள்ளைகள் பிறக்கும்போது மனம் இருக்காது, பிள்ளைகள் வளர வளர மனமும் சேர்ந்து வளர்ந்துக் கொண்டிருக்கிறது. மனம் வளர தொடங்கியவுடன் பிள்ளைகள் கேள்விகள் கேட்க தொடங்கிவிடுவார்கள்.

சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு, புதிய விசயங்களை கற்றுக்கொள்ளும் பிள்ளைகள்; ஒரு கால கட்டத்தில் தனது சந்தேகங்களை தானே செய்து பார்த்து அறிந்துகொள்ள விளைகிறார்கள். பிள்ளைகளின் அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தின் ஒரு பக்க விளைவுதான் தீய பழக்கங்கள்.

பிள்ளைகள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருக்க தீர்வு
முதலில் பிள்ளைகள் சுயமாக சிந்திக்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிகமாக அறிவுரைகள் சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும். பிள்ளைகள் பெற்றோர் சொல்வதைக் கேட்டு வளர்வதில்லை, மாறாக பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்துதான் வளர்கிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை பெற்றோர்கள் தான் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும். அதைப்போலவே ஒழுக்கமாக வாழும் மனிதர்களின் நட்பையும் உறவையும் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உருவாக்கித்தர வேண்டும்.

பிள்ளைகளிடம் அன்பாகவும் நட்புடனும் பழக வேண்டும். தினமும் பிள்ளைகளுடன் பேச வேண்டும், பள்ளிக்கூடத்தில் நடந்தவற்றை பேசி அறிந்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் செல்லும் இடங்கள், அவர்கள் பழகும் நண்பர்களை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் நண்பர்களின் வீட்டுக்கோ, விளையாடவோ, வெளியிலோ செல்லும்போது அவ்வப்போது பெற்றோர்கள் உடன் செல்ல வேண்டும். அல்லது பெற்றோர்கள் அவர்கள் வாகனத்தில் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். ஆனால் அன்பு காட்டுவதாக நினைத்துப் பிள்ளைகளுக்கு அதிகமாக செல்லம் கொடுத்துக் கெடுத்து விடக் கூடாது. அன்பை காட்டுவதிலும் அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். அளவுக்கு மீறிய செல்லம் உங்கள் பிள்ளைகள் தீய வழிகளில் செல்வதற்கு வழிவகுக்கும்.

பெற்றோர்களின் வாழ்க்கையின் கஷ்டங்களின் தழும்புகளை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள், ஆனால் உங்கள் வாழ்க்கையின் வேதனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் வாழ்க்கையில் என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை பிள்ளைகளுக்கு விவரிக்காமல் சுருக்கமாக கூறி. அதிலிருந்து எவ்வாறு வெளி வந்தீர்கள். அதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டவை என்ன என்பதை உங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் காட்டப்படுபவை முழுமையான உண்மைகள் அல்ல, அவை வெறும் நடிப்பு என்று சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு புரிய வையுங்கள். சினிமா பைத்தியமாக மாறாமல் பிள்ளைகளைப் பாதுகாத்து கொள்ளுங்கள்.

பிள்ளைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். உங்கள் பிள்ளைகள் வாசிக்க வேண்டும் என்றால் நீங்கள் முதலில் வாசிக்கத் தொடங்க வேண்டும். நீங்கள் வாசிக்கத் தொடங்கினால் அதை பார்த்து உங்கள் பிள்ளைகளும் வாசிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

 உங்கள் பிள்ளைகளுடனும், குடும்பத்துடனும் அதிக நேரத்தைச் செலவிடுங்கள். ஒன்றாக இரவு உணவை உட்கொள்வது, குடும்பத்துடன் படம் பார்க்கச் செல்வது. கடற்கரைக்கு, பூங்காக்களுக்குச் செல்வது, உறவினர்களின் வீடுகளுக்கு செல்வது போன்ற பழக்கங்களை ஏற்படுத்துங்கள்.

குடும்பத்துடன் அன்னோனியமாக இருக்கும் பிள்ளைகளில் 80% பிள்ளைகள் தீய பழக்கங்களுக்கு ஆளாவதில்லை. குடும்பத்தையும் குடும்பத்தினரின் அன்பையும் இழந்த பிள்ளைகள் தான் அதிக அளவில் தீய பழக்கங்களுக்கு ஆளாகின்றனர்.

மனோதத்துவ தீர்வு
நெல் விவசாய நிலங்களில் எந்த வயலுக்கு நீரோட்டத்தைத் தடுக்க வேண்டுமோ, அந்த வரப்பை அடைத்து. எந்த வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டுமோ அதுக்கு தக்கவாறு அந்த வரப்பை வெட்டி விடுவார்கள்.

அதைப் போல் உங்கள் பிள்ளைகளின் தீய செயல்களுக்கு எது காரணமாக இருக்கிறது என்று கவனித்து, அதைத் தடுத்து. உங்கள் பிள்ளைகள் எப்படி வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல அவர்களின் தினசரி வாழ்க்கையை மாற்றுங்கள்.

புதிய பொழுதுப் போக்கு அல்லது விளையாட்டுகளில் ஈடுபடத் தூண்டி விடுங்கள். அவர்களின் சிந்தனையை மாற்றுங்கள்

முழுமையான தீர்வு
இளம் பிள்ளைகளின் தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் தடுக்க ஒரே வழி அவர்களின் சிந்தனையை, அவர்களின் தேடுதலை மாற்றிவிடுவது மட்டுமே. அறிவுரைகள் கூறி யாரையும் திருத்த முடியாது. படிக்கும் பழக்கமும், குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும், நல்ல மனிதர்களின் பழக்கமும், நட்பும் மற்றும் புதிய நல்லபொழுது போக்கும் விளையாட்டுகளுமே நிரந்தரமான ஒரு தீர்வை தரும். இளம் தலைமுறையினரை பாதுகாப்போம், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்.

குறைகளுடைய, ஊனமுற்ற, குழந்தைகள் ஏன் பிறக்கிறார்கள்

குழந்தைகள் ஊனமாகவோ, குறைகளுடனோ, மூளை வளர்ச்சி குறைவாகவோ, பிறந்தால் இரண்டு விஷயங்களைத்தான் காரணமாக பெரும்பாலானோர் கூறுவார்கள். ஒன்று இறைவன் அந்த குழந்தையையும் பெற்றோரையும் சோதிக்கிறார் என்று கூறுவார்கள். அல்லது அந்தப் பெற்றோர் செய்த பாவம் அல்லது பெற்றோர் பெற்ற சாபத்தினால் அந்த குழந்தை குறைகளுடன் பிறந்திருக்கிறது என்று கூறுவார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் இவை இரண்டுமே தவறுதான். இந்த உலகில் இருக்கும் அனைத்து மதங்களும் அனைத்து நம்பிக்கைகளும் இறைவன் கருணையுடையவன், நியாயமானவன், அன்பானவன், என்று தான் கூறுகின்றன. இறைவன் அன்பும் கருணையும் உடையவன் என்ற கூற்று உண்மையாக இருந்தால் இவ்வாறான குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை இவ்வாறான குழந்தைகள் பிறப்பதற்கு இறைவன் தான் காரணம் என்றால், அந்த இறைவனுக்கு அன்பும் கருணையும் இருக்க வாய்ப்பே இல்லை.

மனிதர்களிலேயே கெட்டவர்கள் கொடூரமானவர்கள் என்று கூறக்கூடிய மனிதர்கள் கூட குழந்தைகளுக்கு தீங்கு செய்ய அஞ்சுவார்கள், அவ்வாறு இருக்கையில் அன்பும் கருணையும் உடைய இறைவன் குழந்தைகளை ஊனமாக படைப்பாரா? என்றால் நிச்சயமாக கிடையாது.

ஆனால் குழந்தைகள் ஊனமாகவும் குறைகளுடன் பிறப்பது நம் கண் முன்னாலேயே பார்க்கிறோம். நம் கண் முன்னே நடக்கின்ற ஒரு உண்மையான விசயமாக இருப்பதினால் இதற்கு விடை தேட வேண்டியது நம் கடமையாகிறது. எதையாவது ஒன்றை கண்மூடித்தனமாக நம்புவதைவிட சிந்தித்து செயல்படுவது சிறந்ததல்லவா.

மனித வாழ்க்கையில் சத்தியமான ஒரு உண்மை என்னவென்றால் எந்த ஒரு காரண காரியமும் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே நடக்காது. உதாரணத்திற்கு இன்று நம் குழுவில் கேட்கப்பட்ட மூன்று நான்கு கேள்விகளுக்கு கூட ஏதோ ஒரு காரணம் நிச்சயமாக இருக்கும். நான் கூறுகின்ற இந்த பதில்கள் கூட யாரோ சிலருக்கு தேவையானதாகவும் இருக்கும். இதைப் போன்றே குழந்தைகள் குறைகளுடன் பிறப்பதற்கும் நிச்சயமாக காரணங்கள் இருக்கும். அந்த காரணம் என்னவென்றால், அந்தக் குழந்தை, அந்தக் குழந்தையின் பெற்றோர், அவர்களின் குடும்பத்தார், அனைவரும் சேர்ந்து முற்பிறவியில் செய்த தவறுகள் தான் இதற்கு காரணம்.

ஒரு குழந்தை ஊனமாகப் பிறந்தால், பெற்றோர்களின் சாபம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் அனைத்து வேதனைகளையும்  அந்த குழந்தையின் பெற்றோர்கள் மட்டுமே தனியாக அனுபவிப்பதில்லை. அந்தக் குழந்தையும், அந்த குழந்தையின் உறவினர்களும் சேர்ந்து தான் வேதனைகளை அனுபவம் செய்கிறார்கள்.

பெற்றோர்கள், குழந்தை மற்றும் அதன் உறவினர்கள் அனைவரும் வேதனையை அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே, சில குழந்தைகள் ஊனமாகப் பிறக்கிறார்கள். இல்லை எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை என்று கூறுபவர்களுக்கு நீங்கள் நம்பவில்லை என்றால் அது உங்கள் விருப்பம். ஒரு குழந்தை ஊனமாக பிறப்பதற்கு, அந்த குழந்தையை பராமரிக்க, யார் யாரெல்லாம் கஷ்டப்படுகிறார்களோ அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் காரணமாக இருப்பார்கள்.

காட்டுக்குள் வாழும் விலங்குகளை பார்த்தால் விளங்கும். விலங்குகள் கூட மிக மிக அரிதாகத்தான் ஊனமாகப் பிறக்கின்றன. மனிதர்கள் தான் மிக அதிகமான குறைகளுடைய குழந்தைகளை பெற்று இருக்கிறார்கள். குறைகளுடைய குழந்தைகள் பிறப்பதற்கு அவர்களுடைய போன ஜென்மத்து வாழ்க்கை மட்டுமின்றி. இந்த ஜென்மத்தில் இந்த வாழ்க்கையில் குழந்தையின் பெற்றோர்களின் வாழ்க்கை முறையும், அவர்கள் உட்கொள்ளும் இரசாயன மருந்துகளும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.

சரி பெற்றோர்களின்  இரசாயன பயன்பாட்டினால் கருவில் வளரும் குழந்தை ஊனமாக இருந்தால், குழந்தையின் தவறில்லையே. பின்பு ஏன் குழந்தை துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அந்த குழந்தை வளர வளர பலவகையான இன்னல்களையும் கஷ்டங்களையும் அனுபவிக்குமே; என்று கேட்பவர்களுக்கு. கருவில் குழந்தை வளரும்போது அதன் வளர்ச்சி ஒரு காலகட்டத்தை அடையும் வரையில் அந்த கருவில் உயிர் (ஆன்மா) இருக்காது.

கரு குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்த பிறகு, அந்தக் குழந்தை, அந்தக் குழந்தையின் குடும்பத்தார், அவர்களின் வாழ்க்கை முறைகளை வைத்து. இந்தக் குழந்தை பிறந்தால் எந்த வகையான இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவம் செய்யும் என்று கணித்து. அந்த அனுபவங்களை, அனுபவிக்க வேண்டிய விதி எந்த உயிர்க்கு இருக்கிறதோ, அந்த உயிர் அந்தக் கருவில் செலுத்தப்படும்.

அந்த உயிர் குழந்தையாக பூமியில் பிறந்து தன் தண்டனைக் காலம் முடியும் வரையில், அந்தக் குழந்தை ஊனத்துடன் உயிரோடு இருக்கும். சிலருக்கு குறுகிய கால தடையாக இருப்பதால், சில ஊனமுற்ற குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்து விடுவார்கள். தண்டனை காலம் அதிகமாக இருந்தால் பல வருடங்கள் உயிரோடு இருப்பார்கள்.

சரி, ஒரு சந்தேகம் குறைகளுடைய குழந்தைகள் பிறக்காமல் தவிர்க்க முடியுமா?. நிச்சயமாக முடியும். ஒரு விதை மரமாக வளர வேண்டுமானால், அதற்கு மண், சூரிய கதிர், நீர், கற்று, சக்தி போன்றவை தேவை. இவற்றில் ஒன்று குறைந்தாலும் விதை மரமாகாது. அதைப்போலவே பழைய கர்மாக்கள் கெட்ட பலனை தர வேண்டுமானால், இந்த வாழ்க்கையிலும் தவறான விசயங்களை செய்ய வேண்டும். தவறான வாழ்க்கை முறை, தவறான உணவு முறை, சக்தி குறைபாடு, இரசாயன பயன்பாடு போன்றவை இருந்தால் மட்டுமே குறைகளுடைய குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உள்ளன. இதைத்தான் நம் முன்னோர்கள் "விதியை மதியால் வெல்லலாம்" என்று சொன்னார்கள்.

மனதறிந்து பாவங்களை செய்யாதீர்கள், யாருக்கும் கெடுதல் செய்யாதீர்கள். யார் நமக்கு என்ன பாவங்கள், துரோகங்கள், செய்திருந்தாலும் அனைத்தையும் மன்னித்துவிடுங்கள். நீங்கள் இதுவரையில் ஏதாவது தவறுகள் செய்திருந்தால், சம்பந்தப்பட்ட நபரிடமோ, இறைவனிடமோ மன்னிப்பு கோருங்கள்.

இந்த வாழ்க்கை அனைவருக்கும் சிறப்பாகவும், மகிழ்ச்சியானதாகவும், அமையட்டும்.


குழந்தைகளுக்கு உதட்டுப் பிளவு ஏன் ஏற்படுகிறது?

Cleft lips, Cleft palate என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உதட்டுப் பிளவுகள் மற்றும் வாயின் அண்ணத்தில் உண்டாகும் பிளவுகளும் குழந்தைகளுக்கு ஏன் உருவாகின்றன? இந்தியாவில் என் உறவுக்கார பெண் ஒருவரின் மகனுக்கு உதட்டில் பிளவு பிறக்கும் போதே இருந்தது. நான் மலேசியாவில் இருப்பதனால் இந்த வகையான குறைகளுடைய குழந்தைகளை நான் பார்த்ததில்லை.

அந்த பெண்ணின் மகனுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை செய்து உதட்டுப் பிளவுகளை சரி செய்கிறார்கள் என்று ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்தார்கள். அறுவை சிகிச்சை முடிந்த மறுநாள் நான் அந்த குழந்தையை பார்க்கச் சென்றேன். அந்த மருத்துவமனையில் இந்த வகையான குறைகளுடைய குழந்தைகளுக்கென தனிப் பிரிவே இருந்தது. அங்குச் சென்று அங்கு இருந்த குழந்தைகளையும் அங்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களையும் பார்த்த பொழுது எனக்குள் கோபமும் சந்தேகமும் அதிகரித்தது.

அங்கு இருந்த ஒரு தாதியிடம் "nurse" நான் இந்த அறுவை சிகிச்சைகளை செய்த மருத்துவரை காணவேண்டும் என்றேன். அதற்கு அவர் அந்த டாக்டர் இன்று வரமாட்டார் என்றார். அவர் அனுபவமுள்ள முதிர்ந்த தாதியாக இருந்ததால் நான் அவரிடம் கேட்டேன். "குழந்தைகள் ஏன் வாய் பிளவு நோய்களுடன் பிறக்கிறார்கள் என்று" அவர் என்னை யார் என்று விசாரித்து விட்டு சொன்னார் "கர்ப்பமுற்ற தாய்மார்கள், கர்ப்பமாக இருக்கும் போது உட்கொண்ட மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவாகத் தான் குழந்தைகள் ஊனங்களுடன் பிறக்கிறார்கள் என்று". நான் அவருக்கு நன்றி கூறி விடைபெற்றேன்.

அந்த நர்சுக்கு தெரிந்த இந்த விஷயம் ஒரு டாக்டருக்கு தெரியாதா?. குழந்தைகள் ஊனமாக பிறக்க வாய்ப்புகள் உண்டு என்று தெரிந்தும், ஏன் ஆங்கில மருத்துவர்கள் இரசாயன மருந்துகளை கர்ப்பமுற்ற பெண்களுக்கு பரிந்துரைக்கிறார்கள்?

அமெரிக்காவில் இருந்து இலவசம்
சற்று சிந்தனை செய்யுங்கள். ஏன் அமெரிக்காவில் இருந்து ஏதோ ஒரு அமைப்பு இந்தியாவில் உள்ள பிள்ளைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள்?. இந்த கேள்வியை நான் கேட்டதுக்காக உங்களுக்கு கோவம் உண்டாகலாம். ஆனாலும் முதலில் சிந்தியுங்கள். எங்கோ உள்ள குழந்தைகளுக்கு ஏன் எவனோ வந்து உதவ வேண்டும்?. நல்ல மனதை நான் குறை சொல்கிறேன் என்று நினைகிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள்.

எது மருத்துவம்?
உதடு மற்றும் அண்ணத்தில் வெடிப்புகளுடன் குழந்தைகள் பிறக்காமல் தடுப்பது சிறந்ததா? அல்லது உடல் குறைகளுடன் குழந்தைகள் பிறக்க காரணமாக இருந்துவிட்டு, இலவச அறுவை சிகிச்சை செய்வது சிறந்ததா?. எது சிறந்தது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

மருத்துவத்தின் அரசியல்
மீண்டும் சற்று சிந்தனை செய்யுங்கள். உங்களுக்கு தெரிந்த ஒருவர் நொண்டிக் கொண்டு நடந்தால், இரத்தம் சிந்தினால் அல்லது அடிபட்டு கிடந்தால், ஏன்? என்ன? என்று விசாரிப்பீர்கள் தானே?. அதற்கு காரணமும், தீர்வும் தேடுவீர்கள் தானே?. ஆனால் அப்படி நடந்ததை நீங்கள் கண்களால் காணவில்லை என்றால். அப்படி நடந்ததே உங்களுக்கு தெரியாது என்றால், அதன் தொடர்பாக சிந்திக்கவோ, விசாரிக்கவோ மாட்டீர்கள் அல்லவா?.

அதுதான் மருத்துவ அரசியல். வெளி உலக மக்கள் யாரும் வாய் அல்லது அண்ணப் பிளவு உள்ள குழந்தைகளை பார்க்கக்கூடாது என்று திட்டமிட்டு இலவசமாக அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள் என்பது எனது கருத்து. ஒருவேளை மக்கள் உதடு மற்றும் வாய் அண்ணப் பிளவுகள் உள்ள குழந்தைகளை அதிகமாக காணத் தொடங்கினால், அந்த குறைகள் உருவாக காரணம் என்ன என்று சிந்திக்கத் தொடங்குவார்கள். அதற்கு நிரந்தர தீர்வு தேடுவார்கள். தங்களின் குழந்தைகளுக்கு இந்த குறைகள் வராமல் தடுக்க முயற்சி செய்வார்கள். இது நடந்தால் ஆண்டுக்கு 11000 கோடி ரூபாய்கள் வரையில் வருமான இழப்பு ஏற்பட வாய்புள்ளது, மருத்து, இரசாயனம் மற்றும் மருத்துவ தொழில் துறைகளுக்கு. இதை நடக்க விடுவார்களா?. அந்த வருமானத்தை தக்கவைத்துக்கொள்ள தான் இந்த இலவச அறுவை சிகிச்சைகளை செய்கிறார்கள்.

பெற்றோர்களின் மனோதத்துவம்
குறைகளுடைய குழந்தைகளை பெற்றவர்கள், முதலில் வேதனைப்படுகிறார்கள். சிறிது நாட்களில் இறைவன் சோதனை, சாமி, முன்னோர்கள் சாபம், செய்வினை, ஆவி, பூதம் என எதையாவது சொல்லி தன்னை தானே ஏமாற்றிக்கொள்கிறார்கள். ஒரு குழந்தைக்கு ஏதாவது குறை ஏற்படும் போது இந்த குறை ஏன் உருவானது என்று யோசித்து, அதற்கான உண்மை காரணத்தை கண்டறிந்தால் அதன் பின்னர் பிறக்கும் எந்த குழந்தைக்கும் இது போன்ற குறைகள் உண்டாகாமல் பாதுகாக்கலாம் அல்லவா?.

ஆனால், தமிழகத்தின் பரம்பரை நோயான மறதியும், அலட்சிய போக்கும், சுயநலத்துடன் கலக்கும்போது, அடுத்தவன் எப்படி போனால் நமக்கு என்ன, நாம் நன்றாக இருந்தால் போதும் என்று முடிவுக்கு வருகிறார்கள். சென்ற தலைமுறையின் அலட்சிய போக்கும் சுயநலமும் இன்றைய தலைமுறையின் நோய்கள். இன்று நமது சுயநலமும் அலட்சியமும் நமக்கு அடுத்த தலைமுறையின் நோய்களாக மாறும்.

உதடு பிளவுக்கு காரணம்
ஆங்கில மருத்துவர்கள் கர்ப்பமுற்ற தாய்மார்களுக்கு பரிந்துரைக்கும், இரசாயன மருந்துகளே குழந்தைகள் ஊனமாக பிறப்பதற்கு மூல காரணமாக இருக்கின்றன. ஆங்கில மருத்துவர்கள் இரும்பு சத்து, கால்சியம் போன்ற சத்து மாத்திரைகள் என்ற பெயரில் கொடுக்கும் இரசாயனங்களே, தாய்மார்களின் உடலையும் கர்ப்பப்பையையும் பாதித்து, அந்த கர்ப்பப்பையில் உருவாகும் குழந்தையையும் ஊனமாக்குகிறது.

தவறான வாழ்க்கை முறைகளும், தூக்கமின்மையும், தவறான உணவு முறைகளும், இரசாயன பயன்பாடுகளும், மன சிதைவும், சில குழந்தைகளை ஊனமாக்குகின்றன. எப்படி பார்த்தாலும் 90% குழந்தைகளின் ஊனத்துக்கு இரசாயன மருந்துகளே முக்கிய காரணமாக இருக்கின்றன.

உதட்டு வெடிப்பு குறைகளுக்கு தீர்வு
ஆங்கில மருத்துவத்தையும், இரசாயனங்களையும், முழுமையாக ஒதுக்குவது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாகும். மருத்துவர்களை நம்பாமல் உங்கள் உடலை நம்புங்கள், உங்களை படைத்த இறைவனை நம்புங்கள், உங்களை பாதுகாக்கும் இயற்கையை நம்புங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். ஆங்கில மருத்துவம் தோன்றுவதற்கு முன்பும் குழந்தைகள் பிறந்து கொண்டு தான் இருக்கின்றன.

பெண் பிள்ளைகளின் பருவம் அடையும் காலமும் உடல் உபாதைகளும்

இந்த காலத்தில் பெண் பிள்ளைகள் வெகு விரைவாக, 12 வயதிலெல்லாம் பூ பெய்து விடுகிறார்கள். சில பிள்ளைகள் 10 வயதிலும், இன்னும் சில பிள்ளைகள் 9 வயது, 8 வயதிலெல்லாம் பூ பெய்து விடுகிறார்கள். இது இயற்கைக்கு மாறான தன்மையாகும்.

விரைவாக பருவம் அடைவது ஆரோக்கியம் அல்ல
பெண் பிள்ளைகள் பருவம் அடைவதாவது, அவள் கர்ப்பப்பையில் ஒரு உயிரை, ஒரு குழந்தையை சுமக்க, அவளின் கர்ப்பப்பை தயாராகி விட்டது என்பதைத் தானே அறிவிக்கிறது? 12 வயதில், 9 வயதில், 8 வயதில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை சுமக்க தயாராக இருக்கிறது என்று உடல் அறிவித்தால், அந்த உடலில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்று தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

14 வயதுக்கு மேல் பருவம் அடைவது தான் ஆரோக்கியம்
14 - 15 வயதுதான் பெண் பிள்ளைகள் பருவம் அடைய ஏற்ற பருவமாகும். இது புரியாமல் 15 - 16 வயதில் பூப்பெய்தும் பிள்ளைகளை நோயாளி போலும் 12 வயதில் பூப்பெய்தும் பிள்ளைகளை ஆரோக்கியவான் போலும் மக்கள் நினைக்கிறார்கள். ஒரு பெண் பிள்ளை 14 வயதுக்கு முன் பருவம் அடைந்து விட்டால், அவளின் கர்ப்பப்பை பலகீனமாக இருக்கிறது என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 14 வயதில் பருவம் அடைவதே ஆரோக்கியமாகும்.

பெண் பிள்ளைகள் விரைவாக பூபெய்த கரணம்
பெண் பிள்ளைகள் விரைவாக பூபெய்வதற்கு காரணம் அவளின் கர்ப்பப்பையும் உடலும் பலகீனமாக இருப்பதுதான். தவறான உணவு முறைகளினாலும், தவறான வாழ்க்கை முறைகளினாலும் தான் இந்த தொந்தரவுகள் உருவாகின்றன. குறிப்பாக பசியின்றி உண்பது, பசிக்கு மீறி உண்பது, ஹார்மோன் ஊசி போடப்பட்ட கோழி இறைச்சிகளை அதிகமாக உண்பது, KFC, Marry Brown, McDonald, Pizza, Burger, Fries, Chips போன்ற துரித உணவுகளை அதிகமாக உண்பது.

பாகெட்களில் அடைக்கப்பட்ட உணவுகள், பிஸ்கெட், நொறுக்கு தீனிகள், குளிர்பானங்களை அதிகமாக உண்பது, மற்றும் மன அழுத்தங்களும், உடல் ஆரோக்கியம் சீர்கெட முக்கிய காரணமாக இருக்கின்றன.

பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, பெற்றோர்கள் இத்தகைய உணவு வகைகளை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்க வேண்டும். இல்லை என் பிள்ளைகள் பேச்சை கேட்பதில்லை, அடம் பிடிக்கிறார்கள் என்று நீங்கள் கூறினால். அவர்களுக்கு அந்த பழக்கத்தை உருவாகியதே நீங்கள்தான். சற்று கடுமையாக நடந்து கொள்ளுங்கள்.

பருவம் அடைந்த சிறுமிகளின் தொந்தரவுகள்
பருவம் அடைந்த பெண் பிள்ளைகள், பருவம் அடைந்த ஆரம்ப கால கட்டத்தில் சில தொந்தரவுகளை உணரலாம். குறிப்பாக மாதம் தவறி வருதல், அதிகமாக அல்லது குறைவான மாத போக்கு. மாத போக்கு சில நாட்கள் நீடித்தல் அல்லது ஓரிரு நாட்களில் நின்று விடுதல். பருவம் அடைந்து சில மாதங்கள் வராமல் இருத்தல். கால், தொடை, இடுப்பு பகுதிகளில் வலி போன்றவை.

பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் இவற்றை தெரிந்து, புரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களின் பெண் பிள்ளைகளுக்கும் கற்று தர வேண்டும்.

- 16 வயது வரையில் பருவம் அடைய வில்லை என்றாலும் பரவாயில்லை, பொறுமையாக இருங்கள், உடல் தன்னை தானே சீர்செய்து கொண்டு, பருவம் அடைவாள்.

- பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு, சில மாதங்கள் மாத சுழற்சி நடக்கவில்லை என்றால் தவறில்லை.

- பருவம் அடைந்த பெண் பிள்ளைகளின் மாத சுழற்சி முறையாக நடக்க சில காலம் ஆகலாம், சிலருக்கு சில வருடங்கள் கூட ஆகலாம், அதனால் பயம் தேவை இல்லை.

பெண் பிள்ளைகளின் தொந்தரவுகளுக்குத் தீர்வு
பெண் பிள்ளைகள் பருவம் அடைந்த தொடக்கத்தில் தோன்றும் எந்த தொந்தரவுகளுக்கும் மருத்துவம் பார்க்க கூடாது. மீறி மருத்துவம் செய்தால் அது அவர்களின் கர்ப்பப்பையை பாதித்து நோய்களையும், உடல் உபாதைகளையும் உருவாகும்.

உணவு முறைகளையும் வாழ்க்கை முறைகளையும் சரி செய்தாலே போதும், அனைத்து தொந்தரவுகளும் குணமாகும். பசி எடுத்து சாப்பிட சொல்லுங்கள். இனிப்பான பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகமாகச் சாப்பிட கொடுங்கள். இரவில் விரைவாக படுக்கைக்கு செல்ல சொல்லுங்கள். இது போதும், எந்த மருத்துவமும் தேவையில்லை.

தற்போது ஏதாவது மருந்துகள் கொடுத்து கொண்டிருந்தால், உடனே நிறுத்துங்கள். அனைத்து தொந்தரவுகளும் படி படியாக குணமாகும்.

கண் பார்வையும் கண் கண்ணாடியும்

கண்ணுக்கு கண்ணாடி அணியும் பழக்கம் இன்று பரவலாக காணப்படுகிறது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையில் வயது வரம்பு இல்லாமல் அனைவரும் கண்ணுக்கு கண்ணாடி அணிய தொடங்கிவிட்டார்கள்.

ஒரு காலத்தில் முதியவர்கள் மட்டுமே பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி இன்று சிறு குழந்தைகளும் பயன்படுத்தும் பொருளாக மாறிவிட்டது. இது ஒரு தவறான நடைமுறையாகும். இந்த பழக்கம் மனிதர்களின் தவறான வாழ்க்கை முறைகளையே சுட்டி காட்டுகிறது.

ஒன்றை எப்போதும் மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். இறைவன் கொடுத்த எந்த உறுப்பும் பாதியில் பழுதடையாது. இறைவன் சிறந்த படைப்பாளன். பாதியில் ஒரு உறுப்பு சீர்கேடு அடைந்தால், நம் வாழ்க்கை முறை அல்லது உணவு முறை சரியில்லை என்று அர்த்தம்.

குழந்தைகளின் கண்கள் பழுதடைய காரணம்
தாய் கர்ப்பமாக இருக்கும் போது உட்கொண்ட மருந்தும் மாத்திரைகளும், கர்ப்பமாக இருக்கும் போது போடப்படும் ஊசிகளும். சிறு குழந்தைகளாக இருக்கும் போது அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகளும், ஊசிகளும் குழந்தைகளின் கண்கள் பழுதடைய முக்கிய காரணமாக இருக்கின்றன. கண்களை பற்றியும் மனித உடல் அமைப்பைப் பற்றியும் தெளிவான புரிதல் இல்லாமையும், கண்ணாடி மட்டுமே கண் பார்வை கோளாறுகளுக்கு ஒரே தீர்வு என்ற எண்ணமுமே மக்கள் கண்ணாடி அணிவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

கண் கண்ணாடி செய்யும் கேடுகள்
கண் கண்ணாடி அணியும் அனைவருக்கும் நன்றாக தெரியும். கண் கண்ணாடி அணியும் பழக்கம் ஆரம்பித்ததிலிருந்து ஆறு மாதங்களுக்கு அல்லது வருடத்துக்கு ஒரு முறை கண்ணாடியின் சக்தி (power) மாறி கொண்டே இருக்கும். கண் பார்க்கும் திறன் மாறும் அல்லது தலைவலி, மயக்கம் உண்டாகும்.

உண்மை என்னவென்றால் கண்ணாடியின் திறன் மாறுவதில்லை மாறாக கண்கள் தான் அதன் பார்க்கும் திறனை இழந்து கொண்டிருக்கின்றன. கண் கண்ணாடி அணியும் அனைவருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அவர்களின் கண்கள் மேலும் பழுதடைந்து கொண்டே இருக்கும்.

கண் கோளாறுகளுக்கு தீர்வுகள்
எந்த ஒரு உடல் உபாதைக்கும், உடலின் தொந்தரவுக்கும் தீர்வு என்பது அந்த தொந்தரவை சரி செய்வதாக, அந்த தொந்தரவை குணப்படுத்துவதாக தான் இருக்க வேண்டுமே ஒழிய அதை மறைப்பதாக இருக்க கூடாது. கண்களின் பார்க்கும் திறன் குறையும் போது கண்ணாடி அணிவது கண்களின் பாதிப்புகளை குணப்படுத்தும் வேலையல்ல மாறாக கண்களின் கோளாறுகளை மறைக்கும் ஒரு கேடான செயலாகும்.

கண்கள் ஏன் பார்க்கும் திறனை இழந்தன என்று கண்டுபிடித்து அவற்றை சரி செய்வதன் மூலமே கண்களின் பார்வையை சரி செய்ய முடியும். கண்ணாடியை அணிவது எப்போதுமே ஒரு நல்ல தீர்வாக அமையாது.

கண் பார்வை பாதிப்புகளை குணப்படுத்தும் வழிமுறைகள்
கண் கண்ணாடி அணியும் பழக்கம் உள்ளவர்கள் முதலில் கண்ணாடியை கழட்டிவிட வேண்டும். குழந்தைகளுக்கு கண் கண்ணாடி மாட்டிவிட்ட பெற்றோர்கள் தயவுசெய்து முதலில் அதை கழட்டிவிடுங்கள்.

கண் கண்ணாடி இல்லாமல் பார்த்து பழகுங்கள், உங்கள் பிள்ளைகளையும் கண்ணாடி இல்லாமல் பார்க்க பழக்குங்கள். பள்ளி கூடங்களிலும், வேளை இடங்களிலும், வாகனம் ஓட்டும் போதும், மற்றும் அவசர காலங்களிலும் மட்டுமே கண் கண்ணாடியை பயன்படுத்துங்கள். மற்றபடி வீட்டில் இருக்கும் போது பார்வை தெளிவில்லாமல் இருந்தாலும், மங்கலாக இருந்தாலும் பரவாயில்லை, கண் கண்ணாடி இல்லாமல் பார்த்து பழகுங்கள். உங்கள் பார்வையின் திறன் படி படியாக மேம்படும்.

கண் பார்வை மேம்பட
கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் எந்த இரசாயன ஊசி மருந்துகளும் பயன் படுத்தாவிட்டால், பிறக்கும் குழந்தை எந்த உடல் உபாதைகளும் இல்லாமலும் ஆரோக்கியமாக பிறக்கும்.

உடலின் திறனையும், கண் பார்வை திறனையும் கெடுக்க கூடிய இரசாயன மருந்துகளை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். எந்த உடல் உபாதைக்கும் இரசாயனங்களை பயன்படுத்த கூடாது.

வானம், மரங்கள், செடி கொடிகள், போன்றவற்றை அதிக நேரம் கண்டு ரசியுங்கள். தினம் மூன்று முறையாவது கண் விழிகளை பச்சை தண்ணீரில் கழுவுங்கள். ஆறு குளம் போன்ற இயற்கை நீரோடைகளில் மூழ்கி கண்களை திறந்து பாருங்கள், கண் விழிகளை கழுவுங்கள். உணவில் கீரை வகைகளை தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புளிப்பான உணவு வகைகளை தவிர்த்துவிடுங்கள். தோசை, இட்லி, வடை, பரோட்டா, ரொட்டி, பன், கேக், போன்று மாவுகளில் இருந்து செய்யப்படும் உணவு வகைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

கண் பார்வை மேம்பட, கண் பார்வை குணமாக, கண் பார்வையை மேம்படுத்த கூடிய இனிப்பான பழங்களையும், காய்கறிகளையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்ட வற்றை பின்பற்றினால் படி படியாக கண் பார்வை மேம்படும், தெளிவாக மாறும்.

பரம்பரை நோய்கள்

பரம்பரை நோய்கள் என்றால் என்ன?
பரம்பரை நோய்கள் என்றால், தாய் தகப்பனிடம் இருந்தோ, தாத்தா பாட்டியிடம் இருந்தோ, அல்லது பாட்டன் பூட்டியிடம் இருந்தோ, அடுத்த தலைமுறைக்கு பரவும் நோய்கள் என்று நம்பப்படுகிறது?

பரம்பரை நோய்கள் என்று எவற்றை குறிப்பிடுகிறார்கள்?
ஆங்கில மருத்துவர்களால், குணபடுத்த முடியாத நோய்களையும். எவ்வாறு உருவாகிறது என்ற காரணம் தெரியாத நோய்களையும். மற்றும் ஒரே குடும்பத்தில் பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இருக்கும் நோய்களையும் பரம்பரை நோய்கள் என்று குறிப்பிடுவார்கள்.

பரம்பரை நோய்கள் என்று எதுவும் இல்லை
உண்மையை சொல்லப்போனால் பரம்பரை நோய்கள் என்று எதுவுமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். பெற்றோர்களுக்கு இருக்கும் நோய்கள் பிள்ளைகளுக்கும் உருவாக வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

இயற்கையின் அமைப்பை பொறுத்தமட்டில், பெற்றோர்களும் பிள்ளைகளும் தனி தனி உயிர்கள். அவர்களின் வாழ்க்கையும் வெவ்வேறு நோக்கங்களை கொண்டது. அதனால் அவர்களின் உடல், மனம், மற்றும் சக்தியின் அமைப்பும் வெவ்வேறு வகையாக இருக்கும். அதனால் பெற்றோருக்கு இருக்கும் நோய்கள் பிள்ளைகளுக்கும் நிச்சயமாக வரும் என்பது வெறும் அபத்தம் மட்டுமே.

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான நோய்கள் இருப்பதேன்?
ஒரே குடும்பத்தை சார்ந்த அத்தனை உறுப்பினர்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான உணவு முறைகளையும், ஒரே மாதிரியான வாழ்க்கை முறைகளையும் கொண்டிருப்பார்கள். அவர்களின் உணவு முறையும் வாழ்க்கை முறையும் ஒரே மாதிரியாக இருப்பதால்தான், அவர்களுக்கு உண்டாக்க கூடிய நோய்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

முறையான உணவு முறையும், வாழ்க்கை முறையும் கொண்ட ஒரு பிள்ளைகளுக்கு, அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து எந்த நோயும் அண்டுவதற்கு வாய்ப்புகள் கிடையாது.
பிள்ளைகள் விரைவாக சாப்பிட என்ன செய்யலாம்?

பிள்ளைகளை விரைவாக சாப்பிடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. பொறுமையாகவும் நிதானமாகவும் மென்று உணவை விழுங்கக் கற்றுத்தர வேண்டும்.

பொறுமையாகவும் நிதானமாகவும் மென்று விழுங்கப்படும் உணவு மட்டுமே முழுமையாக ஜீரணமாகும், உடலுக்குத் தேவையான சக்தியாக மாறும், உணவின் கழிவுகளும் முழுமையாக வெளியேறும். பிள்ளைகளும் இறுதிவரையில் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

குழந்தைகளுக்கு எதனால் வாந்தி வருகிறது?

குழந்தைகளுக்கு ஜீரணசக்தி பலகீனமாக இருக்கும் போதும், உடலில் உபாதைகள் உருவாகும் போதும், வாந்தி வரும். இவை இரண்டுமே மிக நல்ல விசயங்கள். வயிற்றில் இருக்கும் அனைத்தையும் வெளியேற்றிவிட்டு உடல் விரைவாக உடலின் தொந்தரவுகளையும் நோய்களையும் குணப்படுத்தும்.

குழந்தைகளுக்கு எதனால் வயிறு உப்புசம் உண்டாகிறது?

குழந்தைக்கு வயிறு உப்புசமாக இருந்தால் அந்த குழந்தைக்குப் பசியில்லாமல் பால் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த குழந்தை அருந்தும் பால் முழுமையாக ஜீரணமாகவில்லை, அருந்திய பால் வயிற்றில் கெட்டுப்போய் வயிறு உப்புசம் உண்டாகிறது.

குழந்தைக்கு வயிறு உப்புசமாக இருந்தால் பால் கொடுப்பதைக் குறைக்க வேண்டும். பசியினால் நன்றாகஅழவிட்டு பால் கொடுக்கவும்.சிறிது ஆறிய வெந்நீர் கொடுக்கலாம்.

பவுடர் பால் கொடுப்பவர்களாக இருந்தால்அதிகமாக தண்ணீர் கலந்து கொடுக்கலாம். சரியாகவில்லை என்றால் பாலை மாற்றிப் பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு பாக்கெட் பால் கொடுக்கலாமா?

பாக்கெட் பால் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்கும் விஷமாகும். குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களும் பாக்கெட் பாலை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு எது?

பிறந்தது முதல் இரண்டு வயது வரையில் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பால் சுரக்காதவர்கள், சுத்தமான நாட்டுப் பசுவின் பாலில் ஒன்றுக்கு நான்கு என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா?

நிச்சயமாக கொடுக்கலாம், கட்டாயம் கொடுக்கவும் வேண்டும். பெரியவர்களைப் போலவே, குழந்தைகளின் உடலுக்கும் தண்ணீர் அவசியமான தேவையாகும். சிறுகுழந்தைகளுக்கும் தினமும் ஒரு வேலை தண்ணீர் கொடுக்க வேண்டும். 

குழந்தைகளுக்கு மனம் எவ்வளவு முக்கியமானது?

பிறந்தது முதலாக ஒரு குழந்தை பார்க்கும், செவிமடுக்கும், உணரும், அனுபவிக்கும் அத்தனை விசயங்களையும் வழிகாட்டியாகக் கொண்டுதான், அந்த குழந்தை தன் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும். சிறு வயதில் குழந்தைகளின் மனதில் பதியும் பதிவுகளே, அவர்களின் மகிழ்ச்சியை, நம்பிக்கையை, ஆரோக்கியத்தை, மற்றும் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.

இதை மனதில் கொண்டு குழந்தைகளும் தேவையற்ற விசயங்களைப் பார்க்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு மனம் இருக்குமா?

குழந்தைகள் பிறக்கும்போது அவர்களுக்கு மனம் இருப்பதில்லை. குழந்தைகள் வளர வளர அவர்கள் ஐம்பொறிகளைக் கொண்டு அனுபவிக்கும் மற்றும் கற்றுக்கொள்ளும் விஷயங்களைக் கொண்டு மனம் உருவாகிறது.

குழந்தைகளுக்கு வாயில் ஏன் எச்சில் வழிகின்றன?

குழந்தைக்கு வாயில் எச்சில் வழிகிறதென்றால், அந்த குழந்தையின் உடலில் உணவை ஜீரணிக்கும் தன்மை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். குழந்தைகளுக்கு வாயில் எச்சில் வழிந்தால் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும், பால் குடிக்கும் குழந்தையாக இருந்தால் பாலை மாற்ற வேண்டும்.

வாயில் எச்சில் வழிவதை தொடரவிட்டால், வயிறும் ஜீரண உறுப்புகளும் மேலும் பலகீனமாகி, குழந்தை சோர்வாகவும் ஆற்றலும் புத்திக் கூர்மையும் அற்ற குழந்தையாக வளரும்.