கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label கால்கள். Show all posts
Showing posts with label கால்கள். Show all posts

சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் ஏன் புண்கள் உண்டாகின்றன?

கால்களிலும் உடலிலும்  தேங்கிய கழிவுகளையும் இரசாயனங்களையும் உடலைவிட்டு வெளியேற்ற உடலின் எதிர்ப்புச் சக்தி சுயமாகவே ஒரு புண்ணை உருவாக்குகிறது.

கால்களிலும் உடலிலும்  தேங்கிய கழிவுகள் நீராகவும் சலமாகவும் இரத்தமாகவும் அந்த புண்ணின் மூலமாக உடலை விட்டு வெளியேறும். உடலின் கழிவுகள் வெளியேறியபிறகு புண் சுயமாகவே ஆறிவிடும்.

அதிக தூரம் நடந்தால் ஏன் கால்கள் வீக்கமடைகின்றன?

நோயாளிகளுக்கும் அதிகமான மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கும்    சிறுநீரகங்கள் பலவீனமடைகின்றன அதனால் உடலின் ஆற்றல் குறைகின்றன. அதிக தூரம் நடக்கும் போது, நடக்கத் தேவையான சக்தியை உடலால் உற்பத்தி செய்ய இயலாத போது, அதன் அறிகுறியாக கால்கள் வீக்கமடைகின்றன.

பேருந்து பயணத்தில் என் கால்கள் வீங்குகின்றன?

பேருந்து பயணத்தில் கால்களை தொங்கவைத்துக் கொண்டு அமருவதால் , இரத்த ஓட்டத்தில் கால்கள் வரையில் செல்லும் இரத்தத்தில் இருக்கும் கழிவுகள் கால்களில் தேங்குவதால் கால்கள் வீங்குகின்றன. சிறுநீரகம் பலவீனமடைவதால் சிறுநீரும் உடலுக்குத் தேவையில்லாத தண்ணீரும் முறையாக வெளியாக முடியாமல், அதிக நேரம் கால்களை தொங்கவிடும் போது கால்களுக்கு இறங்கி கால்கள் வீக்கமடைகின்றன.

கால்கள் வரையில் செல்லும் கழிவுகளும் கழிவு நீரும் மீண்டும் சுழற்சியில் உடலுக்குள் கொண்டுவர முடியாமல் கால்களில் தேங்குவதால் கால்கள் வீக்கமடைகின்றன.

நோயாளிகளுக்கு கால்கள் ஏன் வீங்குகின்றன?

நோயாளிகளுக்கும் அதிகமான மாத்திரைகளை உண்பவர்களுக்கும் சிறுநீரகம் பலவீனமடைகின்றன. சிறுநீரகம் பலவீனமடைவதால் சிறுநீரும் உடலுக்குத் தேவையில்லாத தண்ணீரும் முறையாக வெளியாக முடியாமல், அதிக நேரம் கால்களைத் தொங்கவிடும் போது கால்களுக்கு இறங்கி கால்கள் வீக்கமடைகின்றன.

மாத்திரைகளை நிறுத்தி வாழ்க்கை முறைகளை மாற்றினால் கால்களின் வீக்கம் மாறும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு என் கால்கள் அழுகுகின்றன?

சர்க்கரை நோயாளிகள் அதிகமான ஆங்கில மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். ஆங்கில மருந்துகள் பெரும்பாலும் இரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் அவற்றை உடலால் முழுமையாக வெளியேற்ற முடிவதில்லை.

அவற்றை முழுமையாக உடலால் வெளியேற்ற முடியாத போது, அவை உடலிலும் இரத்தத்திலும் தேக்கம் கொள்கின்றன. இரத்தத்தில் தேங்கிய இரசாயனங்கள் புவியீர்ப்பு விசையினால் கால்களில் அதிகமாகத் தேங்கி, கால்கள் அழுகுகின்றன.

சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் ஏன் புண்கள் உண்டாகிறது?

கால்களில் தேங்கிய கழிவுகளையும் இரசாயங்களையும் உடலைவிட்டு வெளியேற்ற உடலின் எதிர்ப்பு சக்தி சுயமாகவே ஒரு புண்ணை உருவாக்குகிறது.

நோயாளிகளுக்கு கால்கள் ஏன் கருத்து போகின்றன?

ஒருவர் நோய்வாய் படுகிறார் என்றால் அவரின் உடல் பலகீனமாக இருக்கின்றது என்று அர்த்தம். உடல் பலகீனமாக இருப்பதினால் நோயாளிகள் உண்ணும் உணவுகளில் இருக்கும் கழிவுகள் மற்றும் இரசாயனங்கள் உடலால் முழுமையாக சுத்திகரித்து வெளியேற்ற முடியாமல் இரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.

அதுமட்டுமின்றி இனிப்பு நீர், இரத்த கொதிப்பு, இருதய கோளாறுகள், மூட்டு வலி, போன்ற நோய்களுக்காக தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களின் மருந்துகளில் இருக்கும் கழிவுகளும், இரசாயனங்களும் அவர்களின் இரத்தத்தில் கலந்துவிடும்.

இரத்தத்தில் கலந்துவிட்ட இரசாயனங்களும், கழிவுகளும், பூமியின் புவி ஈர்ப்பு விசையின்  காரணமாக இரத்த ஓட்டத்தின் மூலமாக  கால்களுக்கு இறங்கி, மீண்டும் உடலின் மேற்பகுதிக்கு செல்ல முடியாமல்  காலங்களிலேயே தேங்குகின்றன. இதனால்தான் அவர்களின் கால்களும், தசைகளும், சதைகளும், கருத்து போகின்றன.

புண்களுக்காக காலை துண்டிக்க தேவையில்லை

காலில் புண் உண்டானால், அந்தப் புண்ணை மருந்துகளைப் பயன்படுத்தி உடனடியாக ஆற்றி விட வேண்டும். புண்களை ஆற்ற முடியாவிட்டால் புண்ணிருக்கும் பகுதியோடு காலை வெட்டி விட வேண்டும். இல்லையென்றால் அதில் கிருமிகள் உருவாகும். அந்த புண் பரவத் தொடங்கும். புண் மேலும் பெரிதாகும், வலியும் வேதனையும் அதிகரிக்கும். உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். இதுதான் கால்களில் புண்கள் உண்டாகும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள.

சர்க்கரை நோயாளிகளுக்கு காலை துண்டித்தால், வெட்டிய காலின் புண்ணை ஆற்ற முடிகிறது. அவ்வாறு இருக்கையில் சுயமாக தோன்றிய புண்களை ஏன் ஆற்ற முடிவதில்லை என்று ஆங்கில மருத்துவர்கள் சிந்திக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் உருவாகும் புண்கள், சர்க்கரை நோயினால் உண்டாகும் பாதிப்போ, Side effect அல்ல. அவர்கள் உட்கொண்ட ஆங்கில இரசாயன மருந்துகளின் பக்கவிளைவு. உடலில் சேர்ந்த இரசாயன மருந்துகளை வெளியேற்றவே உடல் சுயமாக காலில் துளையிட்டு கழிவுகளை வெளியேற்றுகிறது. இதை புரிந்துக் கொண்டு ஒத்துளைக்காமல், புண்களை ஆற்ற வேண்டும் அல்ல காலை துண்டிக்க வேண்டும் என்று கிளம்பும் போது தான் அந்த நோயாளியின் நிலை மேலும் மோசமடைகிறது. உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.

டிசம்பர் மாதம் 2018 யில், என்னை ஒரு நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு. மேலே படத்தில் இருக்கும் நபரின் கால்கள் கருத்து போய்விட்டது. வலி அதிகமாக இருக்கிறது என்று கூறினார். என்னிடம் ஆலோசனைகள் கேட்டார். நான் சில விவரங்களை கூறி. எந்த காரணத்தை கொண்டும் ஆங்கில மருத்துவம் பார்க்க வேண்டாம் என்றேன். அவருக்கும் ஆங்கில மருத்துவத்தில் உடன்பாடில்லை என்றார்.

சில நாட்களில் கருத்து போன காலில் புண் உருவாக தொடங்கியது. சில நாட்களில் புண்ணிலிருந்து, சலமும், நீரும், இரத்தமும், கழிவுகளும், வெளியேற தொடங்கின. வலி அதிகரித்தது. புண்கள் பெரிதாகவும், ஆழமாகவும் மாறியது. தொடக்கத்தில் பயந்தாலும் பிறகு மிகவும் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இருந்தார். சில வாரங்களில் புண்கள் ஆற தொடங்கின. பிப்ரவரி 2019 யில், இரண்டு மாதங்களில் புண் முற்றாக குணமாகி விட்டது. மேலும் குணமாகும் அவரின் முழு ஆரோக்கியமும் திரும்பும்.

அவர் எந்த மருந்து மாத்திரைகளும் பயன்படுத்த வில்லை. அக்குபங்சர், இயற்கை மருத்துவம், மற்றும் healing மட்டுமே. பூரண குணமடைந்து வருகிறார். மனித உடல் இவ்வாறு தான் செயல்படுகிறது. மனித உடலுக்கு தனது நோய்களை குணப்படுத்திக்கொள்ள எந்த மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. கொஞ்சம் அவகாசம் கொடுத்து, உடல் சொல்வதை கேட்டு நடந்தால் எல்லா நோய்களும் சுயமாகவே குணமாகிவிடும்.


உடலின் வலிகளும், வலிகள் மறைத்து போவதும்

உடலில் வலிகள் இருக்கும் வரையில் உடலுக்கு பெரிய அளவில் ஆபத்து ஏதுமில்லை. ஆனால் உடலின் வலிகளை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை உட்கொண்டு, பின் வலிகள் மரத்துவிட்டால், இப்போதுதான் உண்மையான ஆபத்து தொடங்குகிறது என்று அர்த்தம். உடலின் ஏதாவது ஒரு பகுதியில் வலி உண்டானால், ஏதோ ஒரு புதிய நோய் உருவாகிக்  கொண்டிருக்கிறது என்று அர்த்தமில்லை. மாறாக வலி ஏற்படும் பகுதியில் நோய் குணப்படுத்தும் வேலை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். இந்த உண்மையை ஆராய சர்க்கரை நோயாளிகளை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்.

மனிதர்கள் பின்பற்றும் சில தவறான வாழ்க்கை முறைகளினால் உடலில் கெட்ட சர்க்கரைகள் உருவாகவும், தேங்கவும் தொடங்குகின்றன. உடலில் உருவாகும் கெட்ட சர்க்கரைகள் பெரும்பாலும் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். ஆனால் சர்க்கரை நோயைக் குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் போது; கெட்ட சர்க்கரைகள் உடலில் இருந்து வெளியேற முடியாமல் உடலின் உள்ளேயே தேங்கத் தொடங்கும்.

கெட்ட சர்க்கரைகள் எந்த உறுப்பில் அதிகமாக சேருகிறதோ, அந்த உறுப்பை பாதித்து, அதை பழுதாக்கிவிடும். இரத்தத்தில் சுழன்று கொண்டிருக்கும் கெட்ட சர்க்கரைகள், புவியீர்ப்பு விசையின் காரணமாக கால் பாதங்களில் அதிகமாக சேரும். மருந்து மாத்திரைகள்  சாப்பிட்டதால் தான் கெட்ட சர்க்கரைகள் உடலிலேயே தேங்கி கால்களில் புண்களும், வலிகளும்  உருவாகின்றன என்பதை உணராமல். வலி உண்டானவுடன் மீண்டும் மருத்துவரையே நாடி, வலியை கட்டுப்படுத்த இன்னும் அதிகமான மருந்து மாத்திரைகளை உட்கொள்ள தொடங்குவார்கள்.

இப்போது என்ன நடக்குமென்றால் உடலில் தேங்கியிருக்கும், இரசாயனங்களும், கழிவுகளும் காலில் ஒரு துளையிட்டு புண்ணாகி உடலிலிருந்து வெளியேற முயற்சி செய்யும். அந்த புண்ணையும் மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தும் போது, கால்கள் மரத்துப் போகும், பல வேளைகளில் கால் அழுகத் தொடங்கும். கால் விரல்கள் அழுகி விழுவதுக் கூட பலருக்கு தெரிவதில்லை. பல நோயாளிகளுக்கு கால்கள்  இருக்கின்றது என்ற உணர்வே இருக்காது.

வலி  உண்டான போது அச்சம் கொண்ட நோயாளிகள் வலி மறைந்து கால்கள் மரத்துப் போன பிறகு அச்சத்தை விட்டு ஏதோ நோய்கள் குணமாகி விட்டதைப் போன்று கற்பனை செய்யத் தொடங்குகிறார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு கால்கள் மரத்துப் போவதும்  உணர்ச்சிகள் இல்லாமல் போவதும் ஒரு ஆபத்தான அறிகுறியாகும். இதற்குப் பின்புதான் அவர்களுக்கு கால்கள்  அழுகத் தொடங்கும், புண்களும் பெரிதாகத் தொடங்கும்.

நான் எதற்காக இவற்றை  விவரமாக கூறிக் கொண்டிருக்கிறேன் என்றால் சர்க்கரை நோயாளிகளின் கால்களில் புண்கள் உருவாவதற்கும், கால்கள் அழுகுவதற்கும் இரசாயன மருந்து மாத்திரைகள் தான் முக்கிய காரணம். ஒருவேளை பல வருடங்களாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு கால்களில் திடீரென புண்கள்  தோன்றினால் அல்லது வலிகள் உருவானால் அச்சம் கொண்டு அதை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை நாடாதீர்கள். வாழ்க்கை முறைகளையும், உணவு முறைகளையும் மாற்றுங்கள். உங்கள் உடலை நம்புங்கள்.

காலில் உண்டான புண்களின் வழியாக உடலில் சேர்ந்திருக்கும் அனைத்து இரசாயனங்களும், கழிவுகளும், கெட்ட சர்க்கரைகளும், வெளியேறிவிடும். அதன் பின்பாக உடல் சுயமாக அந்த புண்ணை ஆற்றி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்துவிடும். தாயின் கருவறையில் எந்த ஒரு முன்மாதிரி இன்றி உங்கள் உடலை உருவாக்கியது உங்களின் இயக்க சக்திதானே?. அந்த சக்திக்கு உடலில் ஒரு குறைபாடு ஏற்படும்போது அதை  சரிசெய்துகொள்ள தெரியாதா? சிந்தித்துப் பாருங்கள்.

அதிகமாக நிற்பதனால் கால்களில் வெரிகோஸ் வெயின் உண்டாகுமா?

நிச்சயமாக இல்லை. வெரிகோஸ் வெயின் (நரம்பு புடைத்தல்) நோய்க்கும் நிற்பதற்கும் நடப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தினம் நின்றுகொண்டோ நடந்துகொண்டோ இருக்கும் எந்த விலங்குகளுக்கும் கால்களில் இந்த தொந்தரவு இல்லை.

உடலில் உள்ள உறுப்புகள் எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்டனவோ அதற்காகப் பயன்படுத்தும் போது எந்த தொந்தரவும் நோயும் உண்டாகாது.