புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

இறைவன் பேதம் பார்ப்பதில்லை

இறைவன் பேதம் பார்ப்பதில்லை
இயற்கை பேதம் பார்ப்பதில்லை
இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
என எந்த பேதமும் இல்லாமல்

பசி, தாகம், தூக்கம்
அனைவருக்கும் உண்டு
பிறப்பும் இறப்பும்
அனைவருக்கும் சமமே

நோய்களும், மரணமும்
இன்பமும், துன்பமும்
சலுகைகள் வழங்குவதில்லை

சூரியன் அனைவரையும் சுடும்
நிலா அனைவரையும் காயும்
மழை அனைவரையும் ஈரமாக்கும்
நிலம் அனைவரையும் தாங்கும்

சுனாமி வந்தது
இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
என எந்த பேதமும் இல்லாமல்
அனைவரும் சமமாக
மிதந்தனர் பிணமாக

நிலநடுக்கம் வந்தது
கோயில், மசூதி
தேவாலயம், புத்தவிகாரம்
என எந்த பேதமும் இன்றி
சிதைந்து வீழ்ந்தன
மண்ணின் மடியில்

இயற்கை பேதம்
பார்ப்பதில்லை
சலுகைகள்
வழங்குவதில்லை

வெள்ளம் வந்தது
அலையா விருந்தாளியாக
இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
அனைவர் வீட்டிலும்

கோயிலின் பூசாரி
மசூதியின் இமாம்
தேவாலயத்தின் ஆயர்
புத்ததுறவிகள்
யாருக்கும் சலுகையில்லை

இன்பமும், துன்பமும்
நோயும், மரணமும்
அனைவருக்கும் சமமே

இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
யாருக்கும் சலுகையில்லை
அனைவரையும்

துப்பாக்கிகள் சுடும்
அருவாள்கள் வெட்டும்
விஷங்கள் கொள்ளும்

அனைவருக்கும்
பிறப்பு முதல்
இறப்பு வரையில்
ஒரே நியதிதான்

நீ எதில் உயர்ந்தவன்?
உன் மதம் எதில் உயர்ந்தது?

இந்து, முஸ்லிம், கிருத்தவன்
பௌத்தன், சமணன், நாத்திகன்
அனைவர் வாயிலும்
மண்ணள்ளி தான் போடுவார்கள்
இறந்த பிறகு

அனைவர் உடலும்
மண்ணுக்குத்தான்
இரையாகும்

கண்டிப்பாக மரணமடையும்
மனிதர்கள் - உயிர்
பிரியும் வரையிலாவது
உயிரோடு இருக்கலாமே

நீ எதை வேண்டுமானாலும்
நம்பிக்கை கொள்
நீ எதை வேண்டுமானாலும்
வழிபாடு செய்

பயணங்கள் வெவ்வேறாக
இருக்கும்போது
பாதைகள் வெவ்வேறாகத்
தானே இருக்கும்

உன் வழி உனக்கு
அவர் வழி அவருக்கு

மதங்கள் மனிதர்களை
காக்க வேண்டுமே ஒழிய
மனிதர்கள் மதங்களை
காக்கத் தேவையில்லை

கடவுள் நம்பிக்கை
உள்ளவன்தான்
அடுத்த கடவுள்
நம்பிக்கையாளனை
கொல்கிறான் - கடவுளின்
பெயர்கள் மாறுபடுவதால்

ஆதியும் அந்தமும் இல்லா
அகிலாண்ட கோடி
பிரம்மாண்ட நாயகன்
இறைவன்

அவனுக்கு பல பெயர்கள்
இருக்கக் கூடாதா?
இறைவனை ஏன் - ஒரு
கூட்டுக்குள் அடைகிறீர்கள்?
முடியுமா உங்களால்?

கடவுளின் பெயரால்
மனிதர்கள் செய்யும்
அயோக்கியத்தனங்கள்
கடவுளுக்கே பொறுக்காது

உலகத்து ஜீவராசிகளில்
மிகவும் - முட்டாளானது
மனித இனம்தான்

இறைவன் செய்த
மிகப்பெரிய தவறு
மனிதர்களைப் படைத்ததுதான்

மனிதர்களின்
ஆறாம் அறிவு
வரமல்ல சாபம்

விலங்குகளை பார்த்தாவது
வாழப் பழகிக்கொள்ளுங்கள்

அன்புடன் வாழ்வது மட்டுமே
நீ மனிதன் என்பதற்கு
அத்தாட்சி

காத்திரு மழை வரும்போது வரட்டும்

தேடித் தேடித் தேடிப்போய்
தொலைந்து போனார் பலர்

ஓடி ஓடி ஓடியே
ஓய்ந்து போனார் பலர்

நடந்து நடந்து நடந்தே
கலைத்துப் போனார் பலர்

நீ எதையுமே
தொலைக்கவில்லை
தேடாதே

நீ சென்று சேரவேண்டிய
இடமும் இல்லை
பயணிக்காதே

மனம்தான் மனிதன்
மனதை புரிந்துகொள்
சும்மா இரு மரமாக

மரத்துக்குத்தான்
மனிதனைத் தெரியும்

மனம்தான் உன்
விளைநிலம்

நிலத்தை உழுதுவிடு
விதைகளை தயார்செய்

மேகத்தைப் பிழிந்து
நீரெடுக்க யாராலும் முடியாது

மழை வரும்போது வரட்டும்
விளைச்சல் நிச்சயம் உண்டு

மனம்தான் மனிதன்
மனதை புரிந்துகொள்
சும்மா இரு மரமாக

நீ சொன்ன வார்த்தை


இல்லை என்று - நீ
சொன்ன வார்த்தை
இன்னும் என் காதில்
ஒலித்துக் கொண்டே
இருக்கிறது

என் காதலை நீ
இல்லையென்று சொன்னது
வேதனைதான்
அதிலும் வேதனை

பைக்கில் டூர்
இருட்டுக்கடை அல்வா
சில்லென ஜிகர்தண்டா
ஆரியபவன் லஞ்ச்

அப்படியே
கைமாத்தாக வாங்கிய
3000 ஓவாவையும்
சேர்த்தே

இல்லையென்று
சொன்னது தான்

என்னைக் கொல்லும் காதலே

தனிமை தவத்தால்
கொல்கின்றன - உன்
பூவும் பொட்டும்

ஓரப் பார்வையால்
கொல்கின்றன - உன்
கண்களிரண்டும்

சிரித்துச் சிதறி
கொல்கின்றன - உன்
உதடும் சிரிப்பும்

ஆடி அசைந்து
கொல்கின்றன - உன்
ஜிமிக்கியும் கம்மலும்

துள்ளிக் குதித்து
கொல்கின்றன - உன்
வளைவும் வளையலும்

காற்றில் தவன்று
கொல்கின்றன - உன்
பாவாடையும் தாவணியும்

சிணுங்கிச் சிரித்து
கொல்கின்றன - உன்
கொலுசும் மணியும்

தனிமையில் என்னை
கொல்கின்றன - உன்
குரலும் நினைவும்

புயல் கடந்த பாதை

தென்னமர தோப்புக்குள்ளே
நீ வந்து போனது தான்
புயல்வீசக் காரணமோ
மரம்சாயக் காரணமோ

தென்னை மரங்கள்
சாயக்கண்டு
கஜா மீது
பலி சொன்னோம்

உன் பாதம் தீண்டிவிட
ஆசையாய் பணிந்திருக்கும்
முறிந்ததையும் மறந்துவிட்டு
நீ நடந்த பாதைகளின்
வாசனையை நுகர்ந்திருக்கும்

உன்னழகை கண்டுவிட்டால்
உன் பாதம் பட்டுவிட்டால்
ஆலமும் சாய்ந்துவிடும்
பாவம் தென்னை என்ன செய்யும்


உன் நினைவு கோல்லுதடி

மல்லிகைப் பூச்சரமும்
பாவாடை தாவணியும்
சிணுங்கும் வளையல்களும்
சிரிக்கும் கொலுசுகளும்

நெத்தியிலே குட்டிப் பொட்டும்
ஒய்யார புன்சிரிப்பும் - உன்னை
தீண்டிய நாணத்தினால்
உதிர்ந்துவிடும் மல்லிகையும்

எனக்கு முன் உன்னைச் சுமக்கும்
மின்னும் காலணியும்
குளுமையும் உஷ்ணமும் கலந்த
ஓரக் கண் பார்வைகளும்

கொத்திக் கொத்தி தின்னுதடி
என்னுயிரை மிச்சமின்றி
கொல்லாமல் கொல்லுதடி
உன் நினைவு நித்தம் நித்தம்

உயிர் வாழும் ஆசையுண்டு
உன்னோடு வாழ்வதென்றால்
இன்றே பிரியட்டும் என்னுயிர்
நீயில்லா வாழ்கையென்றால்

மனத்துக்கொண்டே இருக்கிறது

உதிர்ந்த பின்பும்
பிரியாத மல்லிகையின்
வாசம் போல்

பிரிந்த பின்பும்
பிரியாத - உன்
நினைவுகள்

மனத்துக் கொண்டே
இருக்கிறது - என்
மனதில்

காதலும் கவிதையும்

கவிதைகள் வடிக்கும்
தருணத்தில் எல்லாம்
உன் நினைவுகள்
உதிப்பதில்லை

உன் நினைவுகள்
தோன்றும் தருணத்தில்
எல்லாம் கவிதைகள்
உதிப்பதில்லை

இருந்தும்
உன் நினைவுகளோடு
வடிக்கும் கவிதையில்
முழுமை தெரிகிறது

தூரமும் எல்லையும்
காதலில் இல்லை
என்பதும் புரிகிறது

காதலின் அர்த்தங்கள்

அதன் அர்த்தங்கள் 
புரிந்த பின்புதான்
கவிதைக்கு மரியாதை
அதுவரையில் அது
வெறும் புலம்பல்கள்தான்

என் மனம் உனக்கு
புரிந்த பின்புதான்
காதலுக்கு மரியாதை
அதுவரையில் அது
வெறும் கற்பனைகள்தான்

அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒன்றாக உணர்கிறேன்

அதிர்ச்சியையும்
மகிழ்ச்சியையும்
ஒன்றாக உணர முடியுமா?
இப்போது உணர்கிறேன் - நான்

கூட்ட நெரிசலில்
செல்போனை தொலைத்தவன்
அனுபவிக்கும் அதிர்ச்சியையும்

அவனுக்குப் பரிசாக
ஐபோன் கிடைத்ததைப்
போன்ற மகிழ்ச்சியையும்
ஒன்றாக உணர்கிறேன்

நீ என் காதலை
நிராகரித்தப் போதும்
அருகில் புன்னகைத்த
உன் தங்கையை
கண்ட போதும்
😉

காதலின்றி - அமையாது உலகு

கோடி கோடியாக
கவிதைகள் எழுதியும்
சொற்களுக்கு இன்னும்
பஞ்சம் உருவாகவில்லை

புதிதாக தினம்
கவிதைகளை
தீட்டிக் கொண்டே 
இருக்கிறார்கள்

காரணம்
பெண்கள் - இன்னும்
பிறந்துக் கொண்டே
இருக்கிறார்கள்

காதலும் தினம்
மலர்ந்துக் கொண்டே
இருக்கிறது

காதலின்றி - அமையாது
உலகு

நீயல்லவா அதிசயம்

இந்த உலகில்
ரகசியம் என்றும்
அதிசயம் என்றும்
நடக்க முடியாதது என்றும்
எதுவுமே கிடையாது

என்பதை - நேற்றுதான்
உணர்ந்துக் கொண்டேன்
அனைத்தும் மொத்தமாக
என் வாழ்வில் நடந்தது

நேற்று காலையில்
கல்லூரி வாசலில்
உன்னைக் கண்டேன்

என் மனதின் இசை

கர்நாடக சங்கீதமாக
துடித்துக் கொண்டிருந்த
என் மனது

உன்னைக் காணும்
வேளைகளில் மட்டும்
குத்துப் பாடலாக
குத்துகிறது

நீ என் அருகில்
நெருங்கும் போது
சிம்பனி இசையாக
பம்புகிறது

தனிமையில் - உன்
நினைவுகள் தோன்றும்
போது மட்டும்
சாவு மேளமாக
தெறிக்கவிடுகிறது

நீயும் சேலையும்

சேலையே உன்னை
விரும்பி உடுத்திக்கொள்ளும்
வயதிலும்

சேலையை நீ
விரும்பி உடுத்திக்கொள்ளும்
வயதிலும்

சேலையாலே உன்னை
நீ மறைத்துக் கொள்ளும்
வயதிலும்

நான் உன்
சேலையாகவே இருக்க
விரும்புகிறேன்

காதலிக்கு கவிதை

பஞ்சவர்ண
நிலா

வண்ண
மலர்க்காடு

தேன் சிந்தும்
தேக்கு

இசை பாடும்
மூங்கில்

பனியில் செதுக்கிய
சிற்பம்

ராஜ போதையின்
ராணி

உயிரை உருக்கும்
ரோஜா


உன் காதலை ஏண்டி மறைத்தாய்?

என் காதலை - நான்
சொல்லும் போது

உன் காதலை - ஏனோ
ஒளித்து வைத்தாய்

பூவுக்குள் - புயலை
பூட்டி வைத்தாய்

இறுதி வரையில் சொல்லாமல்
கடலுக்குள் பாறையாக

உன் ஆசைகள் முழுதும்
ஏண்டி மறைத்து வைத்தாய்?

காதலி விழித்துக் கொள்வாள்

என் இதயம் கூட
மௌனம் அனுசரிக்கின்றது
சப்தமின்றி மௌனமாக
துடிக்கின்றது

என் காதலி
விழித்துக்கொள்வாள்
என்ற பயத்தில்

நாடி துடிப்பும் - நாசூக்காய்
மௌன விரதம் இருக்கிறது
தென்றலுக்கும் தலையாட்டும்
மெல்லிய மலரல்லவா

இன்றைய காதல்

இன்று நான்
அவளைப் பார்த்தேன்
என்பதில் தொடங்கி

அவளை தினமும்
பார்த்து ரசித்துக்
கொண்டே இருக்கிறேன்
என்று தொடர்ந்து

ஏண்டா அவளைப்
பார்த்தேன் - என்பதில்
முடிகிறது - காதல்

இல்லத்தரசிகள்

உழைப்பின் ஊதியம்
அன்பாக, ஆதரவாக
அரவணைப்பாக
கருணையாக

வழங்கப்பட வேண்டும்
இல்லத்தரசிகளுக்கு

கடல் மணலாய் - கரைந்துக் கொண்டிருக்கிறேன்

உனக்காக காத்திருந்து
உன்னைக் காணாமல்
திரும்பிச்செல்லும்
நேரங்களில்

கரை தேடி
வரும் அலைகள்
வெறும் கையோடு
திரும்புவதைப் போல்
திரும்புகிறேன்

மறுபடியும் உன்னை
காணும் வரையில்
கடல் மணலாய் - கரைந்துக் 
கொண்டிருக்கிறேன்