கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

மனிதர்கள் ஏன் தீயவர்களாக இருக்கிறார்கள்?

அவன் திமிர் பிடித்தவன், அவன் கெட்டவன், அவன் பொறாமை பிடித்தவன், என்று குற்றச்சாட்டும் பலர், தங்களுடைய குணங்கள் எதிரியிடமும் இருக்கும் என்று நம்புவதால் ஏற்படும் விளைவுகள் தான் இவை. பிற மனிதர்களிடம் நீங்கள் காணும் குணாதிசயங்கள், பெரும்பாலும் வெறும் கண்ணாடியைப் போன்று பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. உங்களுடைய குணாதிசயங்களைத்தான் நீங்கள் பிறரிடம் காண்கிறீர்கள்.

மேலும் மனிதர்கள் எனது ஆசையும் தேவையும் நிறைவேறினால் போதும் என்று இருப்பதால், பெரும்பாலானவர்கள் மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் சுயநலவாதிகளாகவும் தீயவர்களாகவும் இருக்கிறார்கள்.

சில உயிரினங்கள் ஏன் அழிந்து போய்விட்டன?

இந்த பூமியில் வாழ்ந்த மற்றும் வாழுகின்ற ஒவ்வொரு உயிரினமும் இந்த பூமியின் ஒரு அங்கமாக மற்றும் அதன் இயக்கத்துக்கு உறுதுணையாக படைக்கப்படுகின்றன. படைக்கப்பட்ட உயிரினத்தின் படைத்த நோக்கம் நிறைவேறியவுடன் அந்த உயிரினம் சுயமாகவே அழிந்துவிடும். இந்த உலகில் எதுவுமே நிரந்தரமாக இருக்காது, உலக நியதி.

இந்த உலகத்தை காப்பாற்ற மனிதர்கள் என்ன செய்யலாம்?

இந்த உலகத்தில் அனைத்துமே சுயமாகவே நடைப்பெறுகின்றன. மனிதர்கள் உட்பட எந்த உயிரினத்துக்கும் இந்த உலகின் இயக்கத்தில் எந்த பங்கும் கிடையாது. இந்த உலகின் படைப்புகளை சீரழிக்காமல் இருந்தால் மட்டுமே போதுமானது.

இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் அழிந்துவிட்டாலும் ஆயிரம் ஆண்டுகளுக்குள் மீண்டும் உயிர்கள் உருவாக தொடங்கிவிடும்.

இந்த உலகத்தில் அனைத்து விஷயங்களும் அழியக்கூடியவையா?

இல்லை, இந்த உலகத்தில் நாம் காணும் அனைத்தும் ஒன்று மற்றொன்றாக மாற்றம் பெறுமே ஒழிய எதுவுமே அழியாது.

உதாரணத்துக்கு ஒரு பழம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பழத்தை மனிதன் சாப்பிட்டதும் பழம் அழிவதில்லை மாறாக பழம் மனிதனாக மாறிவிட்டது. மனிதன் இறந்து மக்கி மண்ணாகிறான். அந்த மண்ணிலிருந்து (மனிதனிலிருந்து) புற்களும் புழுக்களும் உற்பத்தியாகின்றன. புற்களை ஆடு சாப்பிடுகின்றது. புற்கள் ஆடாக மாறுகின்றன. ஆட்டை புலி சாப்பிட்டால், ஆடு புலியாக மாறுகிறது.

இவ்வாறு இந்த உலகில் உயிருள்ள மற்றும் உயிரில்லாத அதனை விஷயங்களும் அழியாமல் உருமாற்றங்கள் மட்டுமே அடைகின்றன.

உலகில் உள்ள அனைத்தையும் கடவுள் படைக்கிறாரா?

இல்லை, கடவுளின் படைப்பை எவராலும், எவற்றாலும் அளிக்க முடியாது. இந்த உலகில் உள்ள அனைத்தும் அழியக்கூடியவை அதனால் அவை கடவுளின் படைப்பாக இருக்க முடியாது.

எதற்காக இந்த உலக வாழ்க்கை

இந்த உலக வாழ்க்கையை எனக்கு புரிந்த மொழியில் சொல்கிறேன் கேளுங்கள். இந்த உலகம் என்பது ஆன்மாக்களின் பயிற்சி பட்டறை. 1 அறிவு ஜீவனாக இந்த பூமியில் தோன்றும் உயிர்கள் 6 அறிவு ஜீவன்கள் வரையில் இந்த பூமியில் வாழும். 7வது அறிவை எட்டியவுடன் வேறு உலகிக்கு செல்லும்.

வாழ்க்கை பாடத்தை ஒழுங்காக படித்து புரிந்து கொள்ளும் உயிர்கள் எந்த தடுமாற்றமும் இன்றி தன் பயணத்தை தொடரும். தன் இலக்கை அடையும். ஐந்து அறிவு வரையில் இயந்திரம் போன்று வாழ்க்கை ஆன்மாக்களை ஓட்டி செல்லும். ஆறாவது அறிவு வந்ததும் மனம் முழுமை பெறும். மனம் எனும் மாயையில் சிக்கிய உயிர்கள் இந்த உலக வாழ்க்கையை துறக்க முடியாமல் தள்ளாடும். அந்த ஆன்மாக்களுக்கு வழிகாட்டி கூட்டி செல்லவே ஞானிகள் இந்த பூமியில் தோன்றுகிறார்கள். ஒரு அறிவு முதலாக ஒவ்வொரு பிறப்பும் ஆன்மாக்களுக்கு பயிற்சிதான். ஆன்மாக்களை செம்மை படுத்தவே இந்த உலக வாழ்க்கை.

வீடு என்று அழைக்கப்படும் ஆன்மாக்களின் தாய் கிரகத்தில் தவறுகளை செய்யும் ஆன்மாக்கள் தண்டனைக்காகவும் பயிற்சிக்காகவும் இந்த பூமிக்கு வருவதுண்டு. சிறு வயது முதலே பிரசித்தி பெற்ற பலரை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். முதிர்ச்சி அடைந்த ஆன்மாக்களும், வீட்டிலிருந்து வரும் ஆன்மாக்களும், முக்தி அடைந்த ஆன்மாக்களும் இந்த பூமியில் பிறக்கும் போதே ஞானியாகவும், மகானாகவும், மென்மை பெற்றவர்களாகவும் காணப்படுகிறார்கள்.

இந்த பூமி உங்களுக்கு ஒரு பயிற்சி மையம் என்றும். இந்த உலகில் நீங்கள் அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் உங்களின் பயிற்சிதான் என்றும் புரிந்துக் கொள்ளுங்கள். ஆன்மாக்களின் உண்மையான வீடு என்று ஒன்று உண்டு. அங்கு திரும்பி செல்வதே ஆன்மாக்களின் நோக்கம். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு ஏக்கம், ஒரு தேடுதல் இருக்கும். அதை இந்த பூமியில் அல்லது வழிபாட்டு தளங்களில் காண முடியாது. உங்களுக்குள் தான் காண முடியும். வீடு பற்றிய தேடுதல் தான் அது. அதனால்தான் இந்த உலகையே காலடியில் வைத்தாலும் மனிதனின் மனதை திருப்தி படுத்த முடியாது. காரணம் மனம் தேடுவது சுதந்திரத்தை, ஆன்மா விடுதலையை.