கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label உலக அரசியல். Show all posts
Showing posts with label உலக அரசியல். Show all posts

கோவிட்-19 மூன்றாவது உலகப்போர்


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியை உருவாக்கி, இன்று உலகத்தையே ஒரு திறந்தவெளி சிறையாக மாற்றிவிட்டார்கள். வாகன விபத்தில் செத்தவன் முதல், வலிப்பு வந்த செத்தவன் வரையில் அனைவரையும், கொரோனா வைரஸ் பாதிப்பில்தான் செத்தார்கள் என்று மக்களை நம்பவைத்துள்ளார்கள்.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலமாக சில முதலாளிகளும் பல முட்டாள்களும் இணைத்து மரணபயத்தை மக்களிடையே பரப்பிவிட்டார்கள். பெரும் தொழிலதிபர்கள் வியாபார நோக்கத்துக்காக ஒரு பக்கம் பயத்தைத் தூண்டினால், சில முட்டாள்கள் லைக்ஸ் கிடைக்கும், புதிய சப்ஸ்க்ரைபர்கள் கிடைப்பார்கள் என்ற ஆசையில் மக்களிடையே தவறான வதந்திகளைப் பரப்பிவிட்டார்கள். இது அந்த வியாபார கூட்டத்துக்கும் பொன்னான வாய்ப்பாக அமைந்தது.

திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சில காணொளிகளும், விளையாட்டாக உருவாக்கப்பட்ட சில காணொளிகளும், மக்களை முட்டாளாக்க உருவாக்கப்பட்ட சில காணொளிகளும் மக்களின் அறிவை மங்கச் செய்தன. காய்ச்சல், இருமல், சளி, தொண்டை கட்டுதல், சோர்வு, வலிகள், வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல் இவை பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களுக்கு வந்து போதும் உடல் தொந்தரவுகள்தான். பல்லாயிரம் ஆண்டுகளாக வந்துபோகும் இந்த தொந்தரவுகளுக்கு கொரோனா என்று பெயர் சூட்டியவுடன் மக்களிடையே உருவான பயத்தையும் பீதியையும் கவனித்தீர்களா?

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் பலமுறை சந்தித்த தொந்தரவுகள், ஒரு புதிய பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டதும் அப்படியே மூளையைக் கழட்டி மூலையில் வைத்துவிடும் தொலைக்காட்சி, வானொலி, whatsapp, facebook, என எதில் என்ன வந்தாலும் நம்பக்கூடிய கூட்டமாக மாறிவிட்டார்கள். உயிர் போய்விடும், மரணம் நெருங்கிவிடும் என்று பயத்தைக் காட்டியதும் எதையும் செய்யக்கூடிய அடிமைகளாக மாறினார்கள்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் சராசரியாக 2.5% முதல் 7% வரையில் மரணிக்கிறார்கள் என்று உலக நாடுகள் அறிக்கை வெளியிடுகின்றன. இது மற்ற பெரிய நோய்களினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் மிகவும் சிறிய விகிதாச்சாரம். மரணித்தவர்களில் பெரும்பாலானோர் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள், அவர்களில் பெரும்பாலானோருக்கு வேறு வகையான நோய்களும் இருந்தன. 

கோவிட்-19 வைரஸ் தாக்கிதான் மக்கள் மரணமடைகிறார்கள் என்றால் அனைவரும், அல்லது அனைத்து வயதினரும் மரணமடைய வேண்டும் அல்லவா? 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் நாள்பட்ட நோய்களுக்காக ஆங்கில மருத்துவம் செய்பவர்களும் மட்டுமே மரணிக்கிறார்கள் என்றால் அவர்களை எப்படி கோவிட்-19 கிருமியினால் மரணித்தார்கள் என்று கூற முடியும்?

முடியும்… அரசாங்கங்களும், செய்தி, தொலைக்காட்சி நிறுவனங்களும் நினைத்தால் எதை வேண்டுமானுழும் சொல்வார்கள். அதுவும் மக்கள் நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு உண்மையைப் போன்றே சொல்வார்கள். எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டுவதற்காக நலமாக உள்ள மக்களையும் நோயாளிகள் என்பார்கள். மருத்துவமனைகளில் மரணிக்கும் அனைவரையும் கிருமிகளினால் இறந்தார்கள் என்று கணக்கில் சேர்த்துக் கொள்வார்கள்.

மக்களை பயமுறுத்தவும், அடிமைப்படுத்தவும், தன் கட்டுக்குள் வைத்திருக்கவும் நடக்கும் நாடகம் இது. கோவிட்-19 எனும் இந்த கேளிக்கூத்தை நினைத்து அச்சம் கொள்ளாதீர்கள். இது வெறும் வியாபாரம், சில அமைப்புகளும், சில அரசாங்கங்களும், சில பெரும் நிறுவனங்களும், சில கோடீஸ்வரர்களும், இணைந்து போது மக்களை அடிமைப்படுத்தும் ஒரு யுக்தி. ஆயுதமின்றி, இரத்தமின்றி, நடக்கும் மூன்றாவது உலகப்போர்

தொடரும்...

முஸ்லிம்கள் நாய்களை வளர்க்கலாமா? கூடாதா?

முஸ்லிம்களுக்கு நாய்களை வளர்க்கக் கூடாது என்று அல்குர்ஆனில் எந்த ஒரு தடையும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக அல்குர்ஆன் நாய்களை வளர்ப்பதை அனுமதிக்கிறது. உஸ்தாஸ்கள், ஆலிம்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள்தான் நாய்கள் வளர்ப்பதை தடை செய்கிறார்கள். நாய்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவை போன்ற ஒரு பிம்பம் மக்களிடையே இருப்பதினால், சிலர் நாய்களை துன்புறுத்துகிறார்கள், கொல்கிறார்கள். இது மிகப் பெரிய பாவமாகும். இதற்கு கடுமையான தண்டனையும் நிச்சயமாக இறைவனிடம் உண்டு.

...அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி (நாய்களுக்கு) , பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்;. எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன். (Al-Maaida: 4)

ஹதீஸ்களில் நாய் வளர்க்கக் கூடாது என்று இருப்பதாக கூறுகிறார்கள். அல்குர்ஆன் அனுமதித்த பிறகு எதற்காக ஹதீஸை பின்பற்ற வேண்டும்?. அல்குர்ஆனை விடவா ஹதீஸ் உயர்ந்தது?

உலக அரசியலை புரிந்துக்கொள்ளுங்கள்
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, இடைப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு இயக்கம், அல்லது ஒரு குழு முஸ்லிம்களை, கொல்வதற்கும், அடிமைப் படுத்துவதற்கு, நாய்கள் தடையாக இருக்கும் என்று அறிந்துக் கொண்டு. திட்டமிட்டு நாய்களை, ஹராம் நஜிஸ், என்று பரப்பி விட்டிருக்கிறார்கள். அல்குர்ஆனை ஆராய்ச்சி செய்யாத மக்களும், அவற்றை நம்பிக் கொண்டிருக்கிறார்கள், பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் முஸ்லிம்கள், கொல்லப்படுவதையும், துன்புறுத்தப்படுவதையும், வேதனை படுத்தப்படுவதையும், அடிமையாக்கப் படுவதையும், சூறையாடப் படுவதையும் அனுதினமும் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கலாம். அவற்றில் வெளிப்படையாக காட்டப்படுபவை குறைவானவை மட்டுமே, நம் அறிவுக்கு எட்டாமல் இன்னும் அதிகமாக நடக்கின்றன.

சற்று சிந்தித்துப் பாருங்கள், இந்த வேதனைகளை அனுபவிக்கும் முஸ்லிம்கள் நாய்களை வளர்த்திருந்தால். கொல்லப்பட்ட, ஊனமான, துன்புறுத்தப்பட்ட, மானபங்கம் செய்யப்பட்ட, முஸ்லிம்களில் பாதி பேர்களாவது காப்பாற்ற பட்டிருப்பார்கள். உண்மையா? இல்லையா?. ஒரு மனிதர் துன்பப்படும்போது, மனிதர்கள் வேண்டுமானால் பயத்தினால் ஒதுங்கி நிற்கலாம், நாய்கள் நிற்குமா?. தன் உயிர் இருக்கும் வரையில் எஜமானனை காத்து நிற்காதா?. அதனால்தான் இஸ்லாமியர்களுக்கு நாய்கள் தடை.


உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் 
ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், சிரியா, வங்கதேசம், மியான்மர், அவ்வளவு ஏன் நம் பக்கத்து மாநிலங்களில் எத்தனை முஸ்லிம்கள் கொல்லப் படுகிறார்கள். எத்தனை முஸ்லிம்கள், உடமைகளை இழந்து, உரிமைகளை இழந்து, மானம் இழந்து அலைகிறார்கள். அவர்களை ஏன் மலக்குகள் வந்து காப்பாற்றவில்லை?. அவர்களுக்கு உதவாத மலக்குமார்கள் உங்களுக்கு வந்து உதவுவார்கள் என்று இன்னும் நம்புகிறீர்களா?.

இந்த நம்பிக்கை தான் உண்மையான ஈமான் என்று சிலர் வாதிடுவார்கள். இது நம்பிக்கையல்ல, மூட நம்பிக்கை என்கிறேன் நான். உங்களுக்கு உதவிக்கும் பாதுகாப்பிற்கும் இறைவன் நாய்களை படைத்து துணைக்கு அனுப்பி விட்டான். அதை வளர்க்காமல் வானத்திலிருந்து உதவி வரும் என்று மேலேயே பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் தவறுதான்.

மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. (Ad-Dukhaan: 38)

அத்தனை ஹதீஸ்களும் உண்மையல்ல
ஹதீஸ்களின் பெயரால் முஸ்லிம்கள் முட்டாள்கள் ஆக்கப்படுகிறார்கள் என்பது எனது கருத்து. நாய்களை வளர்ப்பது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், உங்கள் வீட்டுக்கும், மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியாத, வருவாரா? வரமாட்டாரா? என்று தெரியாத மலக்குகள், வீடுகளில் நாய்களை வளர்த்தால் உள்ளே வரமாட்டார் என்ற வெறும் நம்பிக்கையின் அடிப்படையில், நாய்களை ஒதுக்குவது உங்கள் உடமைகளுக்கும், உயிருக்கும் ஆபத்தாக முடியும்.

நாய்கள் வளர்த்தால் மலக்குகள் வர மாட்டார்கள், இதுதானே பெரும்பாலானோர் கூறும் காரணமாக இருக்கிறது? அப்படி என்றால் நாய் வளர்க்காதவர்கள் வீடுகளில் மலக்குகள் வந்து ஆபத்துகளில் உதவுகிறார்களா? அவ்வாறான உதவிகளை பெற்றவர்கள் யாராவது உண்டா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அல்லது கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?

நாய்களை வளர்க்காத முஸ்லிம்களின் வீடுகளில் கொள்ளை, கொலை, கற்பழிப்பு, போன்ற கெட்ட விஷயங்கள் நடக்காமல் மலக்குகள் தடுக்கிறார்களா? அல்லது யாரையாவது மலக்குகள் வந்து காப்பாற்றி இருக்கிறார்களா? இவ்வாறு நடந்ததாக கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?. ஆனால் நாய்களை வளர்த்திருந்தால், கண்டிப்பாக அவை காப்பாற்ற முயற்சிகளை செய்திருக்கும் அல்லவா?. தனக்கு சம்பந்தம் இல்லாத எத்தனையோ நபர்களை குழந்தைகளை நாய்கள் காப்பாற்றியதாக நீங்கள் நாளிதழ்களில் வாசித்ததில்லையா? கேள்விப் பட்டதில்லையா?

எல்லாவற்றையும் அப்படியே நம்பாதீர்கள், சிந்தியுங்கள்
அல்குர்ஆனில் பலமுறை ஒலிக்கும் ஒரு வசனம், நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? சிந்திக்கும் சமுதாயமாக மாற மாட்டீர்களா? என்பதுதான். சிந்திக்க சொல்லி அல்குர்ஆன் தூண்டுகிறது, சிந்திக்கக் கூடாது, நபியை எதிர்த்து ஹதீஸை எதிர்த்து, அல்குர்ஆனை எதிர்த்து கேள்விகள் கேட்கக் கூடாது என்று நமது ஹஜ்ரத்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.

நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா? (As-Saaffaat: 155)

முஸ்லிம்களே வீட்டுக்கு இரண்டு நாய்களை வளர்க்க தொடங்குங்கள்
நாட்டு நாய்களை வளர்க முயற்சி செய்யுங்கள், நாட்டு நாய்கள் மட்டும்தான் விசுவாசமாக யாருக்கும் அஞ்சாமல், தன் உயிரைக் கொடுத்து எஜமானனை பாதுகாக்கும். அழகுக்காக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நாய்களை வாங்குவதும் வளர்ப்பதும் வீண் வேலையாகும்.

அல்குர்ஆனை பின்பற்றுகிறீர்களா? அல்லது மனிதர்களை பின்பற்றுகிறீர்களா? முடிவு உங்கள் கையில் தான் உள்ளது. ஒரு வேட்டை நாய் பிடித்து வரும் விலங்கை உண்ணலாம் என்றால், நாய் வளர்க்காமல் அதை செய்ய முடியுமா?. நாய்களை வளர்க்கக் கூடாது என்றால் இந்த வசனத்தை அல்லா இறக்கி வைக்க தேவையே இல்லையே.

இந்தக் கட்டுரையை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. மக்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. சிந்தியுங்கள்.ஆசை மற்றும் பயம் வியாபாரிகளின் மூலதனம்

ஆசை மற்றும் பயம், இவை இரண்டும் மனிதர்களின் அனைத்து நோய்களுக்கும் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கின்றன. மனிதர்களுக்கு ஆசைகாட்டி அல்லது பயத்தை உருவாக்கி எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம்.

இன்றைய வியாபாரிகளின் மூலதனம் எது  என்று சற்று  சிந்தித்துப் பாருங்கள். நம் ஊர்களில் இருக்கும் சிறு வியாபாரிகளை விட்டுவிடுங்கள். பெரிய மற்றும் சர்வதேச வியாபாரிகள் தங்களின் வியாபாரங்களை எவ்வாறு  நடத்துகிறார்கள்? எவ்வாறு விரிவு படுத்துகிறார்கள்? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆசை மற்றும் பயம், இவற்றை வைத்துதான் வியாபாரிகள் தங்களின்  வியாபாரங்களை நடத்திவருகிறார்கள். மனிதர்களுக்கு ஆசையை உருவாக்குவது அல்லது பயத்தை உருவாக்குவதும், இவை இரண்டுமே இன்றைய காலகட்டத்தின்  கேடுகெட்ட வியாபார தந்திரமாகும்.

ஒரு பொருளை விற்பனை செய்ய  வேண்டுமா? அதற்கு  மிகச் சுலபமான வழி, அந்தப் பொருள் அதை செய்யும், இதை செய்யும் என்று மக்களின் ஆசையைத் தூண்ட வேண்டும் அவ்வளவுதான். அந்த வழி கை கொடுக்கவில்லையா?. இந்தப் பொருளை பயன்படுத்தவில்லை என்றால் அப்படி ஆகும் இப்படி ஆகும் என்று பயமுறுத்த வேண்டும். ஒரு உதாரணத்துக்காக சொல்கிறேன். நம் தொலைக்காட்சி பெட்டிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களை சற்று நேரம்  எண்ணிப் பாருங்கள்.

எங்கள் பொருட்களை உட்கொள்ளுங்கள்  ஆரோக்கியமாக வாழலாம். எங்கள் பொருட்களை பயன்படுத்துங்கள் வெண்மையான சருமம் பெறலாம். எங்கள் பொருட்களை பயன்படுத்துங்கள் முடி நன்றாக வளரும். எங்கள் பொருட்களை பிள்ளைகளுக்குக் கொடுங்கள், நன்றாக வளருவார்கள், புத்திசாலியாக இருப்பார்கள் இப்படி ஏதாவது ஒரு பொய்களை சொல்லி உங்களின்  ஆசைகளைத்  தூண்டுவார்கள்.

இன்னொரு பக்கம் அதே தொலைக்காட்சி பெட்டியில், எங்கள் பொருட்களை பயன்படுத்துங்கள் இல்லை என்றால் உங்களுக்குச் சருமம் நோய்கள் உருவாகும், உங்களை கிருமிகள் தாக்கும். எங்கள் கிரிமை பயன்படுத்துங்கள் இல்லை என்றால் புற்றுநோய் உருவாகும். இப்படி ஏதாவது பொய்களை சொல்லி மக்களை பயமுறுத்துவார்கள். வியாபார கூட்டத்தினர்.

இப்போது புரிகிறதா ஏன் தமிழகம்  முழுவதும் இலவச தொலைக்காட்சி பெட்டிகள் கொடுத்தார்கள் என்று. நீங்கள் செய்திகளோ  திரைப்படங்களோ பார்ப்பதற்காக  அல்ல, அதன் இடைவேளைகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களை பார்ப்பதற்காகத் தான். உங்கள் மனதில் ஆசை அல்லது பயத்தை விதைக்க தொலைக்காட்சி பெட்டிகளை கருவிகளாக பயன்படுத்துகிறார்கள். இதுவும்  சர்வதேச கம்பெனிகளின் சதி தான்.

இப்போது நம் வாழ்க்கையை சற்று  ஆராய்ந்து பார்ப்போம், மதம் முதல், மருத்துவர்கள் வரையில்  அனைவரும் நமக்கு ஏதாவது ஒரு வகையில் ஆசையை அல்லது பயத்தை தூண்டிவிட்டு  தங்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். மனிதர்களிடம் ஆசையும் பயமும் இருக்கும் வறையில் அவர்கள், யாருக்காவது   அடிமையாகவே இறுதி வரையில் இருக்க நேரிடும்.

மருத்துவ உலகத்தில் வியாபாரம்
இன்றைய மருத்துவ உலகத்தைப் பாருங்கள், குறிப்பாக ஆங்கில மருத்துவர்கள் செய்வதை சற்று  சிந்தித்துப்  பாருங்கள். ஆங்கில மருத்துவர்களிடம் சென்றால், 80% ஆங்கில மருத்துவர்கள் இரண்டு விசயங்களைக் கண்டிப்பாக செய்வார்கள்.

நோய்களைப் பற்றிய அல்லது உங்கள் உடலின் தொந்தரவுகளைப்   பற்றிய பயத்தை முதலில் ஏற்படுத்துவார்கள். ஏதாவது ஒரு  உடலின் தொந்தரவுக்காக ஆங்கில மருத்துவரை சென்று சந்தித்தால் அவர் எல்லா சோதனைகளையும் செய்துவிட்டு, உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் வேலையைத் தொடங்குவார்.

ஆங்கில மருத்துவத்தின் பயமுறுத்தும் வேலை
அவருக்கு மருத்துவம் செய்ய தெரியவில்லை என்றால் அல்லது குணப்படுத்த முடியவில்லை என்றால் ஒன்றை முதலில் செய்வார். இந்த நோயைக் குணப்படுத்த முடியாது கண்டிப்பாக மரணமடைந்து விடுவீர்கள் என்பார்.  உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்பார். உடலின் உறுப்பை வெட்டி எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கு ஆபத்து என்பார். நான் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை தினமும் உட்கொள்ள வேண்டும், இல்லையேல் உயிர் போய்விடும் என்பார். இவ்வாறாக ஏதாவது ஒரு பொய்யை சொல்லி பயத்தை முதலில் நோயாளிகளின் மனதில் உருவாக்குவார்கள்.

இவர்கள் செய்யும் மிகவும்  கேடான செயல், மனிதனின் மரணத்துக்கு நாள் குறிப்பது தான். மனிதனின் மரணத்துக்கு நாள் குறிக்க இவர்கள் யார்?. இவர்களுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?. ஆங்கில மருத்துவர்களா மனிதர்களைப் படைத்தார்கள்?.

நோய்களை குணப்படுத்த தெரியவில்லை என்றால், உண்மையான மனிதனாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?. “ஐயா எனக்கு உங்களின் நோயை குணபடுத்த தெரியவில்லை, மற்ற மருத்துவங்களில் அல்லது மற்ற மருத்துவரிடம் முயற்சி செய்து பாருங்கள்” என்று தானே கூற வேண்டும். இதுதானே தர்மம். இதை விட்டுவிட்டு, அவர்களுக்கு  தெரியவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, யாராலும் குணபடுத்த முடியாது நீங்கள் கண்டிப்பாக இறந்துவிடுவீர்கள்  என்பார். “நீயாட என்னைப் படைத்தாய்? என் சாவுக்கு நாள் குறிக்க நீ யாரடா?” என்று கேள்வி கேட்க திராணியற்றவர்கள். அந்தப் பன்னாடைகள் சொல்வதை நம்பி உயிரை விட்டுவிடுகிறார்கள்.

ஆங்கில மருத்துவர்கள் ஆசைகளை  தூண்டுவார்கள்
இந்த இரசாயனத்தை உட்கொள்ளுங்கள், உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளரும், ஆரோக்கியமாக இருக்கும், புத்திசாலியாக இருக்கும் என்று ஏதாவது பொய்களை சொல்லி கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு மருந்துகளை விற்பனை செய்வார்கள்.

கர்ப்பமான தாய்மார்கள் இந்த ஊசியை போட்டுக் கொள்ள  வேண்டும், அந்த ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும், புத்திசாலியாக இருக்கும் என்று ஆசையைத் தூண்டுவார்கள்.

பக்கவிளைவுகள் இல்லாத ஆங்கில மருந்துகளே இல்லை என்று எல்லா ஆங்கில மருத்துவர்களுக்கும் தெரியும், அதை தெரிந்து கொண்டே  கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு வேண்டுமென்றே சத்து மாத்திரைகள் என்ற பெயரில் இரசாயனங்களை கொடுத்து. ஆரோக்கியம் இல்லாத, நோய்வாய்பட்ட, ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கக் காரணமாக சில ஆங்கில மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு கேடுகெட்ட பணத்தாசை பிடித்தவர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஆசையும் பயமும் தான் ஆங்கில மருத்துவத்தின் மூலதனம்
இன்றைய பெரும்பாலான ஆங்கில மருத்துவர்கள், குறிப்பாக பெரிய காப்ரெட் நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் இந்த பயமுறுத்து வேலைகளையும், ஆசை காட்டும் வேலைகளையும் வைத்தே வியாபாரம் நடத்துகிறார்கள்.

பல பெரிய மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு, “டார்கேட்” கொடுக்கப்படுகிறது. இத்தனை அறுவை சிகிச்சைகள்  செய்ய வேண்டும். இவ்வளவு மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும். இவ்வளவு சத்து மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்று. அந்த "டார்கேட்டை" அடையவே ஆரோக்கியமான மனிதர்களையும் நோயாளிகளாக மாற்றுகிறார்கள் சில மருத்துவர்கள்.

ஜாக்கிரதையாக இருங்கள். எந்த ஒரு பெரிய மருத்துவமனைக்கும் செல்லாதீர்கள். நான் உட்பட யார் சொல்வதையும் அப்படியே நம்பாதீர்கள். நன்றாக சிந்தித்து, ஆராய்ந்து செயல்படுங்கள்.

பயம் மற்றும் ஆசை வேண்டாம்
நோய்களைப் பார்த்தும், உடலின் தொந்தரவுகளை பார்த்தும் பயம் கொள்ளாதீர்கள். எல்லா நோய்க்கும் ஒரு தீர்வு நிச்சயமாக இருக்கும்.

பெரிய மருத்துவமனைகளுக்கும் செல்லாதீர்கள். இலவசமாக எந்த உடல் பரிசோதனைக்கும் செல்லாதீர்கள். யார் சொல்வதையும் முழுமையாக நம்பாதீர்கள். தொலைக்காட்சி பெட்டியில் வரும் விளம்பரங்களில் காட்டப்படும் எதையும் வாங்காதீர்கள்.

சிந்தித்துச்  செயல்படுங்கள்...


Bitcoin பிட்கோயின் சில விழிப்புணர்வு உண்மைகள்

சில காலத்துக்கு முன்பாக எந்த ஊடகத்தைப் பார்த்தாலும் பிட்கோயினை பற்றிய பேச்சுதான். ஊடகங்கள் ஏன் திடீரென பிட்கோயினை பற்றி பேசின?. ஊடகங்களுக்கு பிட்கோயினை பற்றி பேச என்ன தேவை உண்டானது? அல்லது அவற்றை பேச வைத்தது யார்? இது சிந்திக்க வேண்டிய விஷயம்.

Bitcoin பின்பாக இந்த உலகத்தையே அலையவிட்டுவிட்டார்கள். அந்த பிட்கோயினை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். பிட்கோயினை உருவாகிய Satoshi Nakamoto எனும் நபர் யார்?. அவர் எங்கு இருக்கிறார்? அவர் ஏன் பிட்கோயினை உருவாக்கினார்?

பிட்கோயின் அசூர விலையேற்றம் அடையும் முன்பாக ஏன்? எவ்வாறு? எங்கிருந்து? Microsoft நிறுவனர் Bill Gates ஏன் பிட்கோயினை வாங்கினார்? ரான்ஸோம் வைரஸை பரவவிட்டது யார்?. Ransom வைரஸ் பரவ விட்டு அதற்குத் தீர்வாக ஏன் பிட்கோயினை கேட்டார்கள்?

2010 யில் 0.10 அமெரிக்கா காசாக இருந்த பிட்கோயின், 2017யில் எவ்வாறு 19,706 அமெரிக்க டாலராக வளர்ந்தது? அதன் மதிப்பை நிர்ணயித்தது யார்?. பிட்கோயினை உருவாக்கிய Satoshi Nakamoto என்பவர் கூட யார் என்று தெரியாத சூழ்நிலையில் பிட்கோயினை, தற்போது உருவாக்குவது யார்? பாதுகாப்பது யார்? கண்காணிப்பது யார்?

பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் சிக்குவதற்கு முன்பாக 1 அமெரிக்க டாலராக மதிப்பில் இருந்த பிட்கோயின் திடீரென அசூர வளர்ச்சி அடைந்ததின் பின்னால் யார் இருக்கிறார்கள்? இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சாதி இருக்கிறதா?

பிட்கோயின் தான் உலகை ஆளப்போகிறது. பிட்கோயின்தான் உலகின் எதிர்கால வர்த்தக நாணயம் என்றெல்லாம் பேசுபவர்கள், அவற்றை தாங்களே வைத்துக் கொள்ளாமல் ஏன் கூவி கூவி விற்பனை செய்கிறார்கள்?. பிட்கோயின் மட்டுமின்றி பிட்கோயினை போன்று இன்னும் நூற்றுக்கணக்கான மின் நாணயங்கள் (cryptocurrency) உள்ளன.

மக்கள் பிட்கோயினை வாங்குவதற்கு நூற்றுக்கணக்கான இணையச் சேவைகள் இருக்கும் போது, மக்கள் அதை விற்பதற்க்கு ஏன் இணையப் தளங்கள் இல்லை?. பிட்கோயினை வாங்க, விற்க, சேமிக்க, எந்த கட்டணமும் இல்லாத போது, பல இணைய நிறுவனங்கள், அவற்றை சேமிக்க, பரிமாற்றம் செய்ய, இலவசமாக இடமும், சேவையும், தருவது ஏன்?.

பெரும் செல்வந்தர்கள் சிலர் தங்களின் பிட்கோயின்களை விற்பனை செய்த பின்பாக, 20,000 அமெரிக்க டாலர் மதிப்பில் இருந்த பிட்கோயின் 6270 அமெரிக்க டாலராக சரிந்தது ஏன்?. அல்லது பிட்கோயினின் விலை சரிய போவது தெரிந்துதான் அவர்கள் விற்றார்களா?

ஒரு நாள் உலக வங்கி பிட்கோயின் செல்லாது என்று அறிவித்தால் பிட்கோயினை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? பிட்கோயினுக்கு பின்னல் ஒரு பெரிய கார்ப்பரேட் சதி இருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன். மக்களே சற்று விழிப்பாக இருங்கள். யாரையும் எதையும் நம்பி ஏமாறாதீர்கள். சிந்தித்து செயல்படுங்கள்.


உலக அரசியல் - சினிமாவும் மருத்துவமும்

தமிழர்கள் இயற்கையாகவே புத்திசாலிகள். பிரபஞ்சத்தின் அறிவும், புரிதலும், ஆற்றலும், தொடர்பும் உடையவர்கள். அவர்களை எவ்வாறு வியாபாரிகள் ஏமாற்றினார்கள்? அவர்களிடம் இருந்த பாரம்பரிய மருத்துவங்களை, அவர்களே வெறுத்து ஒதுக்கும் நிலையை இவ்வாறு உருவாக்கினார்கள்? எவ்வாறு ஆங்கில மருத்துவம் மட்டுமே உலகில் சிறப்பானது என்று அவர்களை நம்ப வைத்தார்கள் என்று பல நாட்கள் சிந்தித்தேன். இறுதியில் கண்டுகொண்டேன்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பாக அனைத்து பாரம்பரிய மருத்துவங்களும் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தன. இந்தியாவை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அனைத்து இயற்கை மருத்துவங்களையும் அழிக்கும் வேளையில் இறங்கினார்கள். இயற்கை மருத்துவத்தைப் பற்றிய பயத்தை மக்களிடம் விதைத்தார்கள். ஆங்கிலேயர்களையும் ஆங்கில மருத்துவர்களையும் கடவுலுக்கு நிகராக மக்கள் மனதில் விதைத்தார்கள். இந்தியாவின் பாரம்பரிய மருத்துவர்களை முட்டாள்கள் போலவும், ஏமாற்றுக்காரர்கள் போலவும் சித்தரித்து; மக்களையும் நம்பவைத்தார்கள். மற்றுமொரு இடத்தில் இயற்கை மருத்துவர்களை மிரட்டுவதும், வரி போடுவதும், லைசன்ஸ், சான்றிதழ் போன்று பல விசயங்களைக் காட்டி மிரட்டி அவர்களை மருத்துவ தொழிலில் இருந்து வெளியேற வைத்தார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஏன் நமது பாரம்பரிய மருத்துவங்கள் மீண்டும் எழுச்சி பெறவில்லை?. அதற்குக் கரணம் சினிமா! மருத்துவர்களும், மருந்து கம்பெனிகளும், பெரிய காப்ரெட் நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து சினிமா, தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ் போன்ற பொது ஊடகங்களின் மூலமாக மக்களிடம் ஆரோக்கியம், மருத்துவம் மற்றும் மனித உடல் பற்றிய தவறான கருத்துக்களை கொண்டு சேர்த்தார்கள்.

நான் கூறப்போகும் காட்சியை, பழைய திரைப்படங்களில் நீங்கள் அதிகமாக பார்த்திருக்கலாம். ஒரு விபத்து நடக்கும் ஒருவர் வந்து "பட்டணத்து பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று கூறுவார்". ஒரு பெண் பிரசவ வேதனையில் இருப்பார் அல்லது குழந்தை பிறக்கக் கஷ்டப்படுவார் உடனே, நாட்டு மருத்துவர் அல்லது ஒரு பாட்டி வந்து "பட்டணத்து பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று கூறுவார்".

ஒருவர் நாட்டு மருத்துவம் பயனளிக்காமல் இறந்துவிடுவார், உடனே இன்னொருவர் சொல்வார். பட்டணத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்பார். பல திரைப்படங்களில் பிரசவத்திலோ, நோய்களினாலோ, விபத்தாலோ ஒருவர் இறக்கும் போது அருகில் இருப்பவரோ அல்லது ஒரு நாட்டு மருத்துவரோ சொல்வார் ஆங்கில மருத்துவரிடம் சென்றால் காப்பாற்றி இருக்கலாம் என்பார்.

இப்படியே சிறிய நோயா? கொடிய நோயா? விபத்தா? பிரசவ கஷ்டமா? ஆண்மை இல்லையா? எந்தத் தொந்தரவாக இருந்தாலும் "பட்டணத்து பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் அவர்கள் காப்பாற்றுவார்கள்" என்று சினிமாக்களில் காட்டி மக்களின் மனதில் பதிய வைத்தார்கள். மக்களும் போது ஊடகங்களில் வருவதால் அவற்றை நம்பி ஆங்கில மருத்துவத்துக்கு அடிமையானார்கள்.

இவ்வாறு அவர்கள் உருவாக்கிய பிம்பத்தை உடைக்க பல நல்ல உள்ளங்கள் உழைத்து வருகிறார்கள். மக்கள் ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்று எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உழைக்கிறார்கள். ஆனால் அந்த நல்ல உள்ளங்களை புரிந்துகொள்ளாமல் முட்டாள்கள் என்றும் ஏமாற்றுகாரர்கள் என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள்.

இந்த ஆங்கில மருத்துவத்தின் பிம்பத்தை உடைத்திருக்கிறது "மெர்சல்" திரைப்படம். பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் பல பரதேசிகள் மருத்துவர்களாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது "மெர்சல்". எந்த சினிமாவை வைத்து நம்மை ஏமாற்றினார்களோ, அதே சினிமாவை வைத்து உடைக்க முயற்சி செய்திருக்கிறார்கள் "இயக்குநர் அட்லி மற்றும் நடிகர் விஜய்". படத்தைப் பார்த்து கைதட்டி விட்டு மட்டும் வராமல் அதில் சொல்லப்படும் கருத்துக்களை கொஞ்சம் மனதில் பதித்து வையுங்கள்.

சுகப்பிரசவம் ஆக கூடாது என்பதற்காக கர்ப்பமுற்ற பெண்களுக்கு, இரசாயனங்களை சத்து மருந்து என்று ஏமாற்றி விற்பனை செய்வதும். சுகப்பிரசவம் ஆகக்கூடிய பெண்ணுக்கு கொடி சுற்றி உள்ளது, இரத்தம் போதவில்லை, பன்னீர் குடம் உடைந்து விட்டது என்று பொய்களை சொல்லி மிரட்டி அறுவை சிகிச்சை செய்வது.

தோலின் மேல் ஒரு கீறலை போட்டு தைத்துவிட்டு அறுவை சிகிச்சை செய்தாகிவிட்டது என்று போய் சொல்லி இலட்சக் கணக்கில் பணம் பறிப்பது. மூச்சுத் திணறல் என்று மருத்துவமனைக்கு சென்றால் இருதய கோளாறு என்று பொய் சொல்வது. இடுப்பு வலி என்று மருத்துவமனைக்கு சென்றால் கிட்னி கோளாறு என்று பொய் சொல்லி கிட்னி திருடுவது. இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

ஆங்கில மருத்துவம் மட்டுமல்ல எல்லா மருத்துவமும் பணம் செய்யும் தொழிலாக மாறிவிட்டது. உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றிக்கொள்ள ஒரே ஒரு வழிதான் உள்ளது. உங்கள் உடலைப் பற்றிய அடிப்படை அறிவை நீங்கள் பெற்றுக்கொள்வது மட்டும்தான் அது.

என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன், யாரையும் நம்பாதீர்கள். இன்றைய காலகட்டத்துக்கு மிகத் தேவையான மெர்சல் என்ற திரைப்படத்தை தந்த இயக்குநர் அட்லி மற்றும் நடிகர் விஜய் அவர்களுக்கு எனது நன்றிகள். இந்தப் படத்தில் மருந்து கம்பனிகளை விட்டு விட்டீர்கள். மருந்து கம்பெனிகளின் அட்டகாசத்தையும் திரைப்படமாக்குங்கள். மெர்சல்2, வேண்டும்.


ஹீலர் பாஸ்கரின் கைதின் உண்மை நோக்கம் என்ன?

ஹீலர் பாஸ்கரை வீட்டுப் பிரசவம் செய்வது எவ்வாறு என்று பயிற்சி கொடுக்கிறார் என்ற காரணத்துக்காக கைது செய்திருக்கிறார்கள். இந்த கைதின் நோக்கம் என்ன? விட்டு பிரசவம் நடக்க கூடாது என்பதா? அல்லது சுகப்பிரசவம் நடக்க கூடாது என்பதா?.

இரண்டுமே கிடையாது, யாருமே இனி சுகப்பிரசவத்தை பற்றி பேசக்கூடாது, வீட்டுப் பிரசவத்தை பற்றி பேசக்கூடாது. விட்டு பிரசவம் செய்வது எவ்வாறு என்று யாரும் யாருக்கும் கற்று கொடுக்க கூடாது என்று அனைவரையும் பயமுறுத்தும் நோக்கத்துடன் மட்டுமே ஹீலர் பாஸ்கர் அவர்களை கைது செய்திருக்கிறார்கள். இனிமேல் அனைவரும் வீட்டு பிரசவம் செய்வது எவ்வாறு என்று பேச அஞ்சுவார்கள் அல்லவா? அதுதான் அவர்களின் நோக்கம்.

சரி! தெரிந்து கொண்டேதான் கேட்கிறேன் சுகப்பிரசவமோ, வீட்டு பிரசவமோ நடப்பதினால் அரசாங்கத்திற்கு என்ன நஷ்டம்? அல்லது "வீட்டு பிரசவம் முயற்சி செய்து ஒரு பெண்மணி இறந்துவிட்டார், அதனால்தான் கைது செய்கிறோம்" என்றால் ஒரு நாளைக்கு எத்தனை மரணங்கள் ஏற்படுகின்றன ஆங்கில மருத்துவமனைகளில்? பிரசவத்தின் போது எத்தனை பெண்மணிகள் உயிரிழக்கிறார்கள்? தவறான ஊசி, தவறான மருந்து, தவறான ஆபரேஷன், என்று வருடத்திற்கு எத்தனை ஆயிரம் பேர் இறந்து போகிறார்கள்?. ஆங்கில மருத்துவத்தை தடை செய்யலாமா? ஆங்கில மருத்துவமனைகளை மூடிவிடலாமா? அரசாங்கத்திற்கு அந்த தைரியம் இருக்கிறதா? குறைந்தபட்சம், ஏன் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று சிந்திக்கவோ, கேள்விகளை எழுப்புவதற்கோ ஆண்மை இருக்கிறதா?. அரசாங்கத்திற்கும், அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும்?

இந்த கட்டுரையை எழுதும் நான் வீட்டில் தான் பிறந்தேன், உயிரோடு இருக்கிறேன். ஆங்கில மருத்துவமனையில் பிறந்த என் தம்பி பிறந்த அன்றே இறந்துவிட்டார்.


குழந்தைகளின் கார்ட்டூன்களில் ஆபாசங்கள்


நாம் காண்பவற்றிலிருந்து உருவாகும் மன பதிவுகள் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. நம் குழந்தைகள் காண்பவற்றிலிருந்து உருவாகும் மன பதிவுகள் அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன.

இன்று பல கார்ட்டூன்களில் முதன்மை காட்சியாக நகைச்சுவைகள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன, ஆனால் அவற்றின் ஓரங்களில் காமம், கோபம், வெறுப்பு, வெறி, வன்முறை, தீய எண்ணங்கள் போன்றவற்றை தூண்டக் கூடிய சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.

கார்ட்டூன்களை பார்க்கும் நாமும் நம் குழந்தைகளும் பெரும்பாலும்  அவற்றை கவனிப்பதில்லை. கார்ட்டூன்களில் காட்டப்படும் ஆபாசம், வெறுப்பு, கோபம், போன்ற தீய குணங்களைத் தூண்டக்கூடிய வார்த்தைகளையும், விசயங்களையும், காட்சிகளையும், குழந்தைகள் கவனிக்காவிட்டாலும்; குழந்தைகளின் மனமானது உன்னிப்பாக கவனித்து அவற்றை பதிவு செய்துகொள்ளும். இதுவே பின்னாட்களில் குழந்தைகள் பெற்றோர்களை வெறுப்பதற்கும், எதிர்ப்பதற்கு, சக பிள்ளைகளுடன் வம்புகள் செய்வதற்கும், சமூகம் வெறுக்கக்கூடிய சில செயல்களைச் செய்வதற்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.

டிஸ்னி போன்ற சில கார்ட்டூன் நிறுவனங்கள் வேண்டுமென்றே சில ஆபாசக் காட்சிகளையும் வக்கிரம் நிறைந்த காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும், கார்ட்டூன்களில் சேர்கின்றன. குழந்தைகளின் மனதை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக இருக்கும் வகையில் வடிவமைப்பதுதான் இவர்களின் நோக்கமாக இருக்கிறது.

குடும்ப அமைப்பைச் சிதைத்து, குடும்ப உறவுகளைப் பிரித்து அன்பு என்ற உணர்வே இல்லாத வகையில் குழந்தைகளை மாற்றுவதற்காகவே, சில கருத்துக்களும், சில காட்சிகளும், புத்தகங்களும், நாளிதழ்களும், நடத்தப்படுகின்றன.

பெற்றோர்கள் இவற்றை உன்னிப்பாக கவனித்து பிள்ளைகளின் எதிர்காலத்தை முக்கியத்துவம் கொடுத்து. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை, என்பதை தெளிவாகப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

தீயவற்றையும், தேவையில்லாதவற்றையும் பிள்ளைகள் பார்க்காமல், கவனிக்க வேண்டும். அதுவே அவர்களின் எதிர்காலத்துக்கு நன்மையாக அமையும். உங்களின் குழந்தைகளை சிறுவயது முதலே என்ன பார்க்கிறார்கள், கேட்கிறார்கள், வாசிக்கிறார்கள், செய்கிறார்கள் என்பதை கவனித்ததில் கொள்ளவேண்டும். வெள்ளம் வரும்முன் அணைப்போட வேண்டும்.