கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label உறுப்புகள். Show all posts
Showing posts with label உறுப்புகள். Show all posts

உடல் உறுப்புகளை நீக்க வேண்டிய அவசியமில்லை, அனைத்து உறுப்புகளையும் குணப்படுத்த முடியும்ஒன்றை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் உடலின் உறுப்புகளை வெட்டுவதோ அவற்றை நீக்குவதோ எந்த நோய்க்கும் தீர்வாகாது.  இந்த உலகில்  குணப்படுத்தக்கூடிய மருத்துவம் இல்லாத நோயே இருக்காது; ஆனால் மருத்துவம் செய்ய தெரியாத மருத்துவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தவறான மருத்துவர்களிடம் சிக்கி சீரழிந்தவர்கள் அதிகம்.

எந்த நோய் தோன்றினாலும் அந்த நோயை குணப்படுத்தக்கூடிய சரியான மருத்துவத்தை நாடுங்கள். ஆறு மாதங்களுக்குள் நோய்கள் குணமாக தொண்டங்கவில்லை என்றால் வேறு மருத்துவ முறைகளை நாடுங்கள். ஒரே மருத்துவரையோ மருத்துவ முறையையோ நம்பி உங்களின் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள்.

மனதில் தேங்கும் உணர்ச்சிகளுக்கு தொடர்புடைய உடலின் உள் உறுப்புகள் எவை?

உணர்ச்சிகளும் அவை பாதிக்கும் உறுப்புகள்

ஆணவம், கர்வம், திமிர், தற்பெருமை போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகுநாட்களுக்குத் தேங்கும்போது, இருதயம், சிறுகுடல், இரத்த நாளங்கள், மூட்டுக்கள், நாக்கு போன்ற உடலின் பகுதிகளைப் பாதிக்கும்.

கவலை, துக்கம் போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகுநாட்களுக்குத் தேங்கும்போது, மண்ணீரல், வயிறு, தசைகள், இடுப்பு, கீழ் உதடு போன்ற உடலின் பகுதிகளைப் பாதிக்கும்.

ஏக்கம், பற்று, நெடுநாள் கவலை, போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகுநாட்களுக்குத் தேங்கும்போது நுரையீரல், பெருங்குடல், தோல், முடி, மூக்கு, தோள்பட்டை, போன்ற உடலின் பகுதிகளைப் பாதிக்கும்.

அச்சம், பயம், காமம் போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகுநாட்களுக்குத் தேங்கும்போது, சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, எலும்புகள், கர்ப்பப்பை, ஆண்மை, காது போன்ற உடலின் பகுதிகளைப் பாதிக்கும்.

பொறாமை, எரிச்சல், கோபம் போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகுநாட்களுக்குத் தேங்கும்போது, கல்லீரல், பித்தப்பை, தசை நார்கள், கண்கள் போன்ற உடலின் பகுதிகளைப் பாதிக்கும்.

கோமா நிலையில் இருப்பவர்களுக்கு நாம் பேசுவது விளங்குமா?

கோமா நிலையில் இருப்பவர்களுக்கு, உடலின் வெளியுறுப்புக்கள் இயங்காதே ஒழிய, உடலின் உள்ளுறுப்புக்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கும். அதனால் அவர்களுக்கு அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் பேசுவது நன்றாக விளங்கும். தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றன என்பனவும் விளங்கும். ஆனால் கண்களை விழிக்கும் வரையில் நினைவில் இருக்குமா என்பது சந்தேகமே.

குறிப்பிட்ட உடல் உறுப்புகள் பழுதடைவது எதனால்?

கழிவுகளும் இரசாயனங்களும் இரத்த ஓட்டத்தில் கலந்து சென்று அதிகமாக எந்த உறுப்பில் செருகிறதோ, அந்த உறுப்பு பழுதடைகிறது.