கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label ஈர்ப்பு விதி. Show all posts
Showing posts with label ஈர்ப்பு விதி. Show all posts

The Law of Attraction, ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது?.

ஈர்ப்பு விதி என்பது என்ன?
The Law of Attraction, ஈர்ப்பு விதி - என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது என்பதில் தான் இப்போது பிரச்சனை. ஆளுக்கு ஒரு மாதிரியாக சொல்கிறார்கள். பெரும்பாலும் நினைத்தால் நடக்கும், ஆசைப்பட்டால் நடக்கும், கற்பனை செய்தால் கிடைக்கும், கனவு கண்டால் நடக்கும், என்பதுதான் பெரும்பாலோர் கூறும் ஈர்ப்பு விதியாக இருக்கிறது.

நினைப்பதும் ஆசைப்படுவதும் உண்மையில் நடக்கத் தொடங்கினால், இந்த உலகமே தலைகீழாக இருந்திருக்கும். இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் அரசனைப் போல் அல்லவா வாழ்ந்திருப்பான். செல்வசெழிப்பும், ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் வேண்டாத மனிதர்கள் உண்டா? அத்தனை மனிதர்களும் அரசர்களைப்போன்ற வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்தால் மட்டுமே, ஆசைப்பட்டால், கற்பனை செய்தால் கிடைக்கும் என்பது உண்மையாக இருக்கும்.

நிஜ வாழ்க்கையில் முயற்சி செய்பவர்களும், உழைப்பவர்களும், வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்பவர்களும் மட்டுமே முன்னேறுகிறார்கள்.

பசியோடு உறங்கச் செல்லும் மனிதர்களின் அடிப்படை தேவையே உணவு மட்டும்தான்.ஆனால் அதை கூட அடைய முடியாமல் போகிறது. ஏழைகளின் கனவு பணம், பலருக்கு கனவாகவே போகிறது. இறுதிவரை வசதி வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி தேவை, ஆனால் அது பலருக்கு கிடைப்பதே இல்லை. அப்படியானால் ஈர்ப்பு விதி என்றால் என்ன? ஈர்ப்புவிதி என்பது உண்டா இல்லையா? ஒருவேளை இருந்தால் அது எவ்வாறு செயல்படுகிறது?.

ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது?
Law of Attraction? ஈர்ப்பு விதி என்பது எவ்வாறு செயல்படுகிறது என்றால், இயற்கையின் படைப்பில் மனிதர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அதுதான் சட்டம். மனிதர்களுக்கு தேவைகள், ஆசைகள் உருவாகும்போது,அவற்றை அடைவதற்குரிய வழிகாட்டுதல்களும், வழிகளும், அறிவும் அவர்களுக்கு வழங்கப்படும். அவற்றை முறையே பயன்படுத்தினால், அவர்கள் ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறும்.

ஈர்ப்பு விதி என்பது மனிதன் ஆசைப்படுவதையோ, அவன் விரும்புவதையோ, அவன் கனவு காண்பதையோ, அவன் நம்புவதையோ கொடுப்பது அல்ல. ஒரு மனிதனுக்கு என்ன தகுதி இருக்கிறதோ அதைக் கொடுப்பதுதான் ஈர்ப்பு விதி. ஆசைப்பட்டதை அடைய வேண்டுமென்றால், முதலில் அதை அடைய தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக அதற்குரிய உழைப்பை போடவேண்டும். இவற்றை செய்தால்தான் இயற்கை வழிகாட்டும், உதவியும் செய்யும்.

இயற்கை பேசுவதையும், இயற்கை காட்டும் அறிகுறிகளையும் சிறிது உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நம் வாழ்கையில், நம்மை சுற்றி நடப்பதை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினால், அனைத்தையும் நிச்சயம் அடையலாம்.

நீங்கள் ஆசைப்படும் அனைத்தும் நடக்க வேண்டுமா?
மிகச் சுலபம், உங்களுக்கு என்ன தேவை என்று முடிவுக்கு வாருங்கள். அது ஏன் உங்களுக்கு தேவை, அதனால் உங்களுக்கு என்ன பயன் என்று சிந்தித்துப்பாருங்கள்.

அதை அடைய தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குரிய உழைப்பை செலுத்துங்கள். இவற்றை செய்தால் உங்கள் தேவைகளும் ஆசைகளும் நிச்சயமாக நிறைவேறும்.


LOA 5 -உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய நன்றியுணர்வு | Gratitude |

மனிதர்கள்  விரும்பும் விஷயங்களை, தங்களின் லட்சியங்களை அடைய முடியாமல் இருப்பதற்கும். பல வேளைகளில் தங்களின் தேவைகளை அடைய முடியாமல் இருப்பதற்கும் மிக முக்கியமான காரணம் அவர்களுக்கு நன்றி உணர்வு இல்லாமல் இருப்பதே. இறைவன் இதுவரையில் அவர்களுக்கு கொடுத்த விஷயங்களுக்கு நன்றி செழுத்தால் இருக்கும் போது புதிதாக பெறுவதற்கு தகுதியை இழந்து விடுகிறார்கள். 

கேட்டதை கொடுக்கும் மனதின் சக்தி

கேட்டதை கொடுக்கும் மனதின் சக்தி 
நமது பாரம்பரியத்தில் மனதுக்கு மிகவும் முக்கியமான இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அனைத்து சுபகாரியங்களையும் மனதையே பிரதானமாக கொண்டே நடத்தினார்கள். ஒரு ஆணையும் பெண்ணையும் தாம்பத்திய பந்தத்தில் இணைக்கும் நிகழ்வுக்குக் கூட, திரு “மனம்” என்றுதான் பெயர் வைத்தார்கள். இன்றும் நாம் துன்பத்தில், துயரத்தில், கவலையில் இருப்பவர்களை சந்திக்கும் போது கூறும் வார்த்தை “மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள்”. “மனதை தளரவிடாதீர்கள்” என்பதாகத்தான் இருக்கிறது.

நோயாளிகளை சந்திக்கும் போது கூட உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆறுதல்கள் கூறும் போது. மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சேர்த்துதான் ஆறுதல் கூறுகிறோம். அந்த அளவுக்கு மனதின் திறனும் முக்கியத்துவமும் நம்மவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

மனம் மட்டும் நம்பிக்கை கொண்டால் அனைத்தும் நலமாகும் 
ஒருவருக்கு என்ன நோய் இருந்தாலும், அது எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும், அவரின் மனம் மட்டும் என் நோய்கள் நிச்சயமாக குணமாகும் என்ற தைரியத்துடன் இருந்தால். நிச்சயமாக அனைத்து நோய்களும் குணமாகும். ஒருவர் எந்த வகையான துன்பத்தில், துயரத்தில், சிக்கி இருந்தாலும் இந்த நிலை நிச்சயமாக மாறும், என் வாழ்க்கை சீர் பெறும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். அவரின் வாழ்க்கை நிச்சயமாக மாறும்.

ஆனால் மனதை நம்ப வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை
நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், நான் தைரியமாக இருக்கிறேன், எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறும் பலரும் உண்மையில் மனதளவில் பலவீனமாகவே இருக்கிறார்கள். அவர்கள் கூறும் நம்பிக்கை, தைரியம் அனைத்தும் புத்தியின் அளவில் மட்டுமே பதிந்திருக்கிறது. அவர்களின் மனமோ அதனை நம்ப மறுக்கிறது, மனதுடன் மனிதர்களுக்கு தொடர்பு இல்லாததால் மனதின் பதிவுகளைப் பற்றி மனிதர்களுக்கு புரிவதில்லை.

இவர்களின் சிந்தனையிலும், புத்தியிலும், இருக்கும் விஷயங்களை வைத்து, மனதிலும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயத்தை ஒரு தடவை கூறும்போது அல்லது ஒரு தடவை படிக்கும் போது அதனை மனம் நம்பாது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பலமுறை சிந்திக்கும் போதும், வாசிக்கும் போதும் மட்டுமே மனம் அதனை நம்பத் தொடங்கும்.

மனதை நம்ப வைக்கும் வழிமுறைகள்
மனம் ஒரு விஷயத்தை நம்ப வேண்டுமென்றால், அந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். அந்த விஷயத்தை கற்பனையில் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த விஷயம் உங்களுக்கு கிடைத்துவிட்டது போலவும், அதை நீங்கள் அடைந்து விட்டது போலவும் ஒரு உணர்வு உங்களுக்குள் தோன்ற வேண்டும்.

ஒரு உதாரணம் சொல்கிறேன், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களின் நடை, உடை, பாவனை, ஸ்டைல், அனைத்துமே நடிகர் ரஜினிகாந்தைப் போலவே அமைந்திருக்கும். காரணம் அவர்கள் ரஜினிகாந்தின் படங்களை திரும்பத் திரும்ப பார்த்தார்கள், அவரைப் பற்றியே சிந்தித்தார்கள், அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களாகவே மாறுகிறார்கள். மனம் இவ்வாறுதான் செயல்படுகிறது.

எவரொருவர் ஒரு விசயத்தை மீண்டும் மீண்டும் நினைக்கிறாரோ, மீண்டும் மீண்டும் சிந்திக்கிறாரோ, மீண்டும் மீண்டும் படிக்கிறாரோ. அவர் அந்த விசயமாகவே மாறுகிறார். அந்த விசயத்துக்கும் அவருக்கும் சூட்சம நிலையில் ஒரு உறவும் பந்தமும் உருவாகிறது. அந்தப் விசயம் இருக்கும் இடத்தை நோக்கி இவர் பயணிக்கிறார் அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி அந்த விசயம் இவரை வந்தடையும்.

ஆசைப்பட்டவற்றை அடையும் வழிமுறைகள்
உங்கள் வாழ்க்கையில் எதை அடைய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும். அது பணமோ, செல்வமோ, பொருளோ, பெயரோ, புகழோ, ஞானமோ, மனிதர்களோ, அது எதுவாக இருந்தாலும் அதை அடைய.

1. அது ஏன் உங்களுக்கு வேண்டும்? எதற்காக அதன் மீது ஆசைப்படுகிறீர்கள்? என்ற தெளிவான புரிதல் உங்களுக்கு இருக்க வேண்டும்.

2. நீங்கள் ஆசைப்பட்டது கிடைத்தால், என்ன செய்வீர்கள்? அதனால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள்? என்பது புரிய வேண்டும்.

3. அதை அடைவதற்கான வழியை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

4. அதன் தொடர்பாக தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

5. அதன் தொடர்பான புத்தகங்கள், இணைய பக்கங்களை, வாசிக்க வேண்டும்.

6. அதற்கு தொடர்புடைய மனிதர்களை சந்திக்க வேண்டும். அவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

7. மனதளவில் கற்பனையில், அதை நீங்கள் அடைந்து விட்டது போலவும், அதை பயன்படுத்துவது போலவும், ஒரு உணர்வு ஏற்பட வேண்டும்.

8. இறுதியாக அது உங்களுக்கு கிடைத்து விட்டது போலவும். அதை பயன்படுத்துவது போலவும், அதை அனுபவிப்பது போலவும், அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும்.

அனைவரும் கூறுவது போல் நான் கற்பனை செய்து பாருங்கள் என்று சொல்லவில்லை. அது உண்மையில் அடைந்த பிறகு ஏற்படும் உணர்வு, இப்போதே ஏற்பட வேண்டும். அதுதான் நான் கூறுவது.

இறுதியாக ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஒருவர் ஆசைப்படுவதால் மட்டும் ஒரு விசயம் அவருக்கு கிடைத்து விடாது. அதற்குரிய காலமும், நேரமும், பயிற்சியும், முயற்சியும், உழைப்பும், சேர்ந்தால் மட்டுமே ஒருவருடைய ஆசை நிறைவேற்றப்படும்.


மனதினால் உருவாகும் நோய்கள்

ஏழையை செல்வந்தனாகவும், செல்வந்தனை ஏழையாகவும், முட்டாளை அறிவாளியாகவும், அறிவாளியை முட்டாளாகவும், நல்லவனைக் கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனாகவும் மனம் முயன்றால் மாற்ற முடியும். அதைப் போலவே ஆரோக்கியமான மனிதனை நோயாளியாகவும், நோயாளியை ஆரோக்கியமாகவும் மனம் முயன்றால் மாற்றமுடியும்.

அதை சாப்பிட்டால் அந்த நோய் உருவாகும், இதை சாப்பிட்டால் இந்த நோய் உருவாகும், இந்த உணவுகளை சாப்பிட்டால் வாயு பிடிப்பு உருவாகும், ஆட்டிறைச்சி சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு உண்டாகும், கடல் உணவுகளை சாப்பிட்டால் அரிப்புகள் உண்டாகும், இனிப்பு சாப்பிட்டால் நோய்கள் உண்டாகும், பழங்களை சாப்பிட்டால் சளி உண்டாகும், போன்ற செய்திகளை வாசித்து. அதனை மனமும் நம்பிக்கை கொண்டுவிட்டால். அந்த குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடும் போதெல்லாம் உடலில் அந்த குறிப்பிட்ட நோய்களை உருவாக வாய்ப்புகள் உள்ளன.

இந்த பருவத்தில் இந்த நோய்கள் உருவாகும், அந்த வயதில் அந்த நோய்கள் உருவாகும் என்ற தகவல்களை வாசித்தாலோ அல்லது யாராவது கூறினாலோ அவற்றை நம்பாதீர்கள். வயது அதிகரிக்கும் போது நோய்கள் உண்டாகும் என்பதும், உடல் உறுப்புகளின் செயல் திறன் குறையும் என்பதும், உடல் உறுப்புகள் செயல் இழக்கும் என்பதும் வெறும் கற்பனைகள் மட்டுமே. ஆனால் இது போன்ற செய்திகளை நம்புவோருக்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றினாலும் நோய்கள் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மழையில் நனைந்தால் நோய்கள் உருவாகும், குளத்தில், ஆற்றில், கடலில் குளித்தால் நோய்கள் உருவாகும் போன்ற வதந்திகளை நம்பிக்கைக் கொண்டோருக்கும். ஒரு நோய் உண்டானால், அதை தொடர்ந்து மற்ற புதிய நோய்களும் உருவாகும் என்று நம்புவோருக்கும், பல நோய்கள் எளிதாக உருவாக வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறான நோய்கள் உருவாவதற்கு மனம்தான் காரணம். மனம் ஒன்றை நம்பிக்கை கொண்டுவிட்டால். உடல் அதனை ஏற்றுக் கொண்டு செயல்படுத்திவிடும். அதனால் மருத்துவ குறிப்புகள் என்ற பெயரில் Facebook, Whatsappகளில் உலாவரும் தேவையற்ற தகவல்களை வாசிக்காதீர்கள், நம்பாதீர்கள், பரப்பாதீர்கள். நீங்கள் ஒரு தவறான செய்தியை வாசித்து, அதை உங்கள் மனமும் நம்பிக்கை கொண்டுவிட்டால், அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

எந்த விசயம் எதில் வந்தாலும், யார் சொன்னாலும், அப்படியே நம்பிவிடாதீர்கள். சிந்தித்து ஆராய்ந்து பின்புதான் நம்பிக்கை கொள்ள வேண்டும்.


LOA 3: நமது ஆசைகளை, தேவைகளை, லட்சியங்களை, குறிக்கோள்களை, அடைவது எப்படி?


இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது  தேவைகளை ஆசைப்பட, அடைய, அனுபவிக்க உரிமையுண்டு. ஆனால் அதற்குரிய உழைப்பும் முயற்சியும் இருக்க வேண்டும்.

LOA 2: ஈர்ப்பு விதி - நமது தேவைகள் எவ்வாறு நிறைவேற்றப் படுகின்றன?

  • நமது தேவைகள் எவ்வாறு நிறைவேற்றப் படுகின்றன? 
  • நாம் கேட்பவை எவ்வாறு கிடைக்கின்றன? 
  • எவற்றையெல்லாம் நம்மால் அடையமுடியும்?
  • நம் பிரார்த்தனைகள் /  தேவைகள் ஏன் நிறைவேறுவதில்லை?

Law of Attraction - 1 - Western vs Thiruvalluvar மேற்கத்திய & திருவள்ளுவர் கூறும் ஈர்ப்புவிதி


நாம் ஆசைப்படும் அனைத்தையும் கொடுக்கும் ஆற்றல் மனதுக்கு உள்ளதா?

இல்லை, மனதில் ஒரு ஆசையோ தேவையோ உருவாகும் போது அதை எவ்வாறு அடைவது என்று மனம் திட்டம் வகுக்கும், வழிகாட்டும். ஆசையும், உழைப்பும், முயற்சியுடன் சேரும் போது மட்டுமே நாம் ஆசைப்படுபவை நடக்கும். ஆசைப்படுவதால் மட்டும் எதுவுமே கிடைக்காது.

வாழ்க்கையில் நாம் ஆசைப்படும் அனைத்தும் கிடைக்குமா?

நம் எண்ணத்தில் தோன்றும் ஆசைகளை மனம் உடனடியாக பூர்த்தி செய்வதில்லை. மாறாக நம் மனதில் தோன்றும் ஆசைகளின் நோக்கம் என்ன? அவற்றின் தேவை என்ன? என்பதை ஆராய்ந்து. அந்த தேவைகளையே மனம் பூர்த்தி செய்ய முயல்கிறது.

மனிதனும் மனமும்

மனதை வெறும் பதிவு செய்யும் இயந்திரமாக நினைத்து கடந்து செல்ல முடியாது. அதையும் தண்டி, அது பல ஆற்றல்களை கொண்டது. மனம் என்பது இறைவன் நமக்களித்த ஒரு அற்புதமான ஆற்றலாகும். மனமானது எல்லா வல்லமைகளையும் பெற்றது. மனதின் உதவியுடன் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அமைதியான மனம், நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதுப் போல் அமைதியற்ற மனமானது நிம்மதியை அழித்து மகிழ்ச்சியை சீரழிக்க கூடியது.

மனமானது உடல் ஆரோக்கியம் முதல், உடல் பலம், கல்வி, அறிவு, ஒழுக்கம், செல்வம், நிம்மதி, மகிழ்ச்சி வரையில் அனைத்தையும் நிர்னைக்க கூடியதாக இருக்கிறது. சீர் கெட்ட மனம் ஒரு யானையையும் பூனையாகிவிடும். ஆரோக்கியமான மனம் ஒரு பூனையைக் கூட யானை பலம் கொண்டதாக மாற்றிவிடும். ஒரு மனிதனுக்கு கல்வி, அறிவு, செல்வம், பெயர், புகழ், மக்கள் என அனைத்தும் இருந்தாலும், அவன் மனம் மட்டும் சீர்கெட்டுவிட்டால், அவனை செல்லாக் காசாக்கிவிடும். இவை ஒன்றும் இல்லாதவனாக இருந்தால் கூட மனம் மட்டும் செம்மையானால், இவை அனைத்தையும் தக்க நேரத்தில் அவனுக்கு கிடைக்க செய்யும்.

மனம் மட்டும் முழு இயல்புடனும் ஆற்றலுடனும் செயல் புரிந்தால், மனிதன் அனைத்து ஆற்றல்களையும் இயல்பாகவே பெற்றுவிடுவான். வாழ்வதற்குத் தேவையான அறிவு, ஆற்றல் முதல் அஷ்டமாசித்திகள் வரையில் அனைத்தையும் அடையும் ஆற்றல் மனதிடம் உண்டு. மனதை தீய எண்ணங்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை அழகானதாக இருக்கும்.

மனிதன் என்பவன் உடல், உயிர், மனம் மற்றும் சக்தியின் கலவையே. ஆதலால் மனம் வேறு மனிதன் வேறு என்பதும், மனதை அழிக்கிறேன் ஒழிக்கிறேன் என்பதெல்லாம் தவறான புரிதலைக் கொண்டவர்கள் கூறும் செய்திகளாகும். மனதை நாம் செய்ய வேண்டிய ஒரே விசயம், புரிந்து கொள்வது மட்டுமே.

விரும்பியதை அடையும் வழிகள்


ஒரு விவசாயியின் நோக்கமென்ன? அவரின் தேவையென்ன?. போதிய விளைச்சல், அவ்வளவுதானே?. அவர் ஆசைப்பட்ட மாதிரியே நெற்கதிர்கள் விளைந்து நிற்கின்றன. அவரின் தேவைகள் நிறைவேறுகின்றன. அந்த விளைச்சலுக்கு நேரடியாக அவர் எதையாவது செய்தாரா?. அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் ஏதாவது நேரடி தொடர்புகள் உள்ளனவா?. எதுவுமே கிடையாது, ஆனாலும் அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவானது.

அவ்வாறானால், அந்த நெற்பயிர்கள் உருவாக அவர் எதுவுமே செய்யவில்லையா? என்றால். எதுவுமே செய்யாமல் எவ்வாறு பலன் கிடைக்கும்?. கால நேரம் பார்த்து சரியான நேரத்தில், முறையாக நிலத்தை உழுதார், நீர் பாய்ச்சினார், நெல் மணிகளை தூவினார், தேவைப்படும் போதெல்லாம் நீர் விட்டார், இயற்கை உரமிட்டார், களையெடுத்தார், நெற்பயிர்கள் உருவாக சூழ்நிலைகளை மட்டும் சரியாக அமைத்துதந்தார். இயற்கை அவருக்கு உதவி செய்தது. அவரின் உழைப்புக்கு உரிய சன்மானம் கிடைத்தது, அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவானது. மற்றபடி அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

மனிதன் ஆசைப்படும் அனைத்தையும் இயற்கை வழங்கும், மனிதனின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆனால் அதன் மீது அவனுக்கு எந்த அதிகாரமுமில்லை. மனிதனுக்கு ஆசைப்படும் அதிகாரமுண்டு ஆனால் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கும் அதிகாரமில்லை.

மனிதன் எதை நோக்கி தன் உழைப்பை போடுகிறானோ அது மட்டுமே அவனுக்குக் கிடைக்கும். நல்லதோ கெட்டதோ, எதற்காக உழைத்தாலும் இயற்கை உதவி செய்யும், அது கண்டிப்பாக கொடுக்கப்படும். எந்த மனிதனின் வாழ்க்கையிலும் கடவுளும் இயற்கையும் குறுக்கிட மாட்டார்கள். மனிதர்கள் தனக்கு தேவையானதை தானே தேடிக்கொள்ளும் முறையில்தான் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.

எதை பற்றியும் கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள். உங்கள் ஆசைகள் நிறைவேற உங்களால் முடிந்த உழைப்பை மட்டும் வழங்குங்கள். நீங்கள் நினைத்தது நிச்சயமாக நிறைவேறும்.

குறள் 619:
தெய்வத்தான் ஆகா தெனினும், முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.