கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label இரசாயனம். Show all posts
Showing posts with label இரசாயனம். Show all posts

பாக்கெட் பாலின் கேடுகள்

இந்திய கலாச்சாரத்தில் பால் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. சாமிக்கும் பால், ஆசாமிக்கும் பால். பிறந்தாலும் பால் ஊற்றுவார்கள், இறந்தாலும் பால் ஊற்றுவார்கள். ஆனால் பாக்கெட் பாலை மட்டும் நோய்களை உண்டாக்குவதற்காகவே ஊற்றுகிறார்கள் போலும்.

பால் உடலுக்கு மிகவும் நல்லது என்ற ஒரு மாயை மனிதர்களுக்கிடையில் உள்ளது. குறிப்பாக வளரும் குழந்தைகள் பால் அருந்தினால் நல்லது என்று பல பெற்றோர்கள் நம்புகிறார்கள். பால் ஏன் அருந்துகிறீர்கள் என்று கேட்டால் பாலில் அதிக கால்சியம் இருக்கிறது என்று கூறுவார்கள். சரி மனிதர்கள் பால் அருந்தினால் கால்சியம் கிடைக்கும் என்று கூறும் மருத்துவர்கள், பசு மாட்டுக்கு எவ்வாறு கால்சியம் கிடைத்தது என்று ஏன் சிந்திக்க வில்லை?.

ஒரு மாடு எத்தனை இடை இருக்கும்?. ஒரு மாடு எத்தனை வேகமாக வளரும்?. மாடு எவ்வளவு வேலைகளை செய்யும்?. மாடு எவ்வளவு சுமையை சுமக்கும்?. இவ்வளவு உழைப்புக்காக தான் மாட்டின் பாலில் அதிகமான கால்சியம் இருக்கிறது. மனிதர்களுக்கு மாட்டின் அளவுக்கு உருவமும் இல்லை, உழைப்பும் இல்லை அப்புறம் எதற்கு மாட்டின் அளவுக்கு கால்சியம்?.

சரி! ஒரு ஐந்தறிவு ஜீவனான பசுவின் உடலால் அதிகமான கால்சியத்தை உற்பத்தி செய்ய முடியும் போது ஆறறிவு ஜீவனான மனிதனின் உடலால்; அந்த உடலுக்கு தேவையான கால்சியத்தை உற்பத்தி செய்துக் கொள்ள முடியாதா?. சற்று சிந்தியுங்கள். ஒரு விலங்கால் செய்ய முடிந்த ஒரு வேலையை மனிதனால் செய்ய முடியாதா?

பசும்பால் மனிதர்கள் பயன்படுத்துவதற்காக இயற்கை வழங்கவில்லை பசுவின் கன்று அருந்துவதற்காக தான் படைத்திருக்கிறது. பசும்பாலை இரண்டாம் கட்ட உணவாக பயன்படுத்தலாமே ஒழிய நேரடி உணவாக பயன்படுத்துவது ஆரோக்கியமில்லை. சமைத்த உணவை உட்கொள்ளாத சிறு குழந்தைகளும் முதியவர்களும் மற்றும் நோயாளிகளும் மட்டுமே பசும்பாலை அருந்தலாம். மற்றவர்கள் பசும்பால் அருந்தினால் அவை ஜீரணிக்க வெகுநேரம் ஆகும். வயிறும் உடலும் மந்தமாகும். நாளடைவில் உடலின் ஜீரண திறன் பழுதடைந்து பல நோய்கள் உண்டாகும்.

பால் அருந்தும் வழக்கம் உள்ளவர்கள், சுத்தமான கறந்த பாலை மட்டும் அருந்துங்கள். பாக்கெட்டில் விற்கும் எந்த நிறுவனத்தின் பாலையும் அருந்த வேண்டாம்.

பாக்கெட் பால் மனிதனுக்கு மிகவும் கெடுதியானது.
இன்றைய மனிதர்கள் குறிப்பாக இந்தியர்கள் உட்கொள்ளும் உணவு பொருட்களில் மிகவும் கெடுதியானது பாக்கெட்டில் வரும் பால் தான். அவர்கள் உட்கொள்வது மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளுக்கும் கொடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறார்கள். பாக்கெட்டில் வரும் பால்களை எங்கு வேண்டுமானாலும் ஊற்றுங்கள். வாயிலும் வயிற்றிலும் மட்டும் ஊற்றாதீர்கள், விலங்குகளுக்குக் கூட கொடுக்காதீர்கள்.

இந்தியாவுக்கு சென்ற போது கவனித்தேன், அங்கு எந்த கம்பெனியின் பால் பாக்கெட்டிலும் பசும் பால், மாட்டுபால், கறவைப் பால், பசு, அல்லது மாடு இப்படி எந்த வார்த்தைகளும் கிடையாது. Ingredients / என்ற பாலில் கலக்கப்பட்ட பொருட்களின் விவரங்களை பார்த்தால் கூட அதில் பசும் பால் என்ற வார்த்தை கூட கிடையாது. அவ்வளவு ஏன் பசு மாட்டின் படத்தைக் கூட பால் பாக்கெட்டில் போடுவது கிடையாது.

தொலைக்காட்சி பெட்டியில் வரும் விளம்பரங்களில் கூட நான் கவனித்தேன். அவர்கள் பசு, மாடு, பசும்பால் என்ற வார்த்தைகளை உச்சரிப்பது கிடையாது. இவை அனைத்துமே, நீங்கள் அருந்துவது பசும் பால் அல்ல என்று உங்களுக்கு மறைமுகமாக அறிவிக்கிறார்கள். இவை சட்டரீதியாக எந்த சிக்கலும் உண்டாக கூடாது என்ற அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் .

பாக்கெட் பாலில் உள்ளது என்ன?
அதிகம் தண்ணீர், கொஞ்சம் பசும்பால் அதுவும் அந்த பால் கெட்டுப்போக கூடாது என்பதற்காக இயற்கையாக பாலில் இருக்கும் உடலுக்கு நன்மை தரக் கூடிய அனைத்து பொருட்களையும் நீக்கிவிட்டு அதை இரசாயனம் கலந்து பதப்படுத்துகிறார்கள்.

செலவுகளை குறைப்பதற்காகவும், லாபத்தை அதிகரிக்கவும் அதில் செயற்கை பால் பவுடர், மைதா, பல வகையான இரசாயனங்கள், தண்ணீர் மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட உடலுக்கு ஒவ்வாத சத்து பொருட்களைக் கலக்கிறார்கள்.

பாக்கெட் பால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்
ஒரு வயதான பெண்மணியிடம் பாக்கெட் பாலின் தீங்கை பற்றி பேசும் பொது அவர் கூறுகிறார், தூய பசும்பால் தண்ணியாக நீர்த்துப் போயிருக்கும் பாக்கெட் பால் தான் நல்லா கெட்டியாக இருக்கும் அதனால்தான் பாக்கெட் பால் வாங்குகிறேன் என்று. அவர் ஆசைப்பட்டது போல் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் அருந்த அவர் தயாராக இருக்கிறார். உடல் ஆரோக்கியத்தை விடவும் நாக்கின் சுவையே முக்கியம் என பலர் எண்ணுகிறார்கள்.

பாக்கெட் பாலை அருந்தினால் அந்த நோய் உருவாகும் இந்த நோய் உருவாகும் என்று பயமுறுத்த எனக்கு விருப்பமில்லை. ஆனால் பாக்கெட் பால் மிக மோசமான மிகக் கெடுதியான பல நோய்கள் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது. பாக்கெட் பாலை பயன்படுத்துவதை இன்றே நிறுத்துங்கள்.

ஆரோக்கியமாக வாழ குறிப்புகள்
பசும்பால் மனிதர்களுக்கு மிகவும் நல்லது என்பது வெறும் மாயை மட்டுமே. அது உண்மை அல்ல. பாலை செரித்து சக்தியாக மாற்றக்கூடிய தன்மை பலர் வயிற்றுக்கு இருப்பதில்லை. அதனால் பாலை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

- செரிமான கோளாறு, வயிறு மந்தம் மற்றும் நோய் உள்ளவர்கள் பால் அருந்துவதை உடனே நிறுத்துங்கள்.

- பிறந்த குழந்தைகளுக்கு நான்கு வயது வரையில் தாய் பாலை மட்டுமே கொடுங்கள். தாய்ப் பால் எனக்கு ஊறவில்லை என்று கூறும் தாய்மார்கள், எல்லா வகையான இரசாயன மருந்துகளையும் நிறுத்துங்கள் நிச்சயம் தாய்ப்பால் ஊறும்.

- பசு மாடு வளர்ப்பவர்களிடம் இருந்து கறந்த பால் வாங்குங்கள். அவர்கள் மிக அதிகமாகப் போனாலும் தண்ணீரை மட்டும்தான் கலப்பார்கள்.

- பசு வளர்ப்பவர்களிடம் பால் வாங்கி அதில் ஒன்றுக்கு நான்கு என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து உபயோகியுங்கள்.

- சிறுவர்களும் முதியவர்களுக்கு ஒன்றுக்கு ஆறு என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து பயன்படுத்துங்கள்.

பாக்கெட்டில் விற்கும் எந்த நிறுவனத்தின் பாலையும் அருந்த வேண்டாம்.


சத்து மாத்திரைகள் உடலுக்கு நன்மைகளை தருகின்றனவா?

உடலின் ஆரோக்கியத்திற்காக, பலத்திற்காக, அல்லது அழகுக்காக என்று பலர் சத்து மாத்திரைகள், சத்துமாவுகள், விட்டமின், மினரல் போன்றவற்றை உட்கொள்கிறார்கள். இவை உடலுக்குத் தேவையானதா? உடலுக்கு அவசியமானதா? இவற்றினால் மனிதர்களுக்கு நன்மைகள் விளையுமா?

மழை பெய்யும் போது மிகுதியாக எவ்வளவு மழை பெய்தாலும், மழை நீருடன் ஆற்று நீர் வந்து சேர்ந்தாலும் கடல் அவற்றை ஏற்றுக்கொள்ளும். எவ்வளவு நீர் சேர்ந்தாலும் அவற்றை தாங்கிக் கொள்ளும், சேர்த்து வைக்கும் தன்மை கடலுக்கு இருக்கிறது.  ஆனால் அதே மழைநீர் ஒரு வாலியில் பெய்தால், அந்த வாலி நிரம்பியதும் மிகுதியாக உள்ள நீர் வழிந்து வெளியே ஓடிவிடும்.

வாலியைப் போலத்தான் நம் உடலும் உடலில் தேவைக்கு அதிகமாக நாம் உட்கொள்ளும் விட்டமின், மினரல் போன்ற சத்துக்கள் அனைத்தும் சிறுநீர் அல்லது மலம் மூலமாக உடலைவிட்டு வெளியேறிவிடும். தினமும் விட்டமின் மாத்திரைகள் அல்லது சத்து மாத்திரைகள் உட்கொள்வது ஒரு தேவையற்ற வேலை மட்டுமே.

உடல் தனக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும், நாம் உண்ணும் உணவின் மூலமாக தானே உற்பத்தி செய்து கொள்ளும் ஆற்றலுடன் படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் உடலுக்கு சத்துக்கள் தேவைப்படும் என்பதற்காக மருந்து மாத்திரைகள், சத்துப் பொருட்கள், சத்துமாவுகள் போன்றவை உட்கொள்ள தேவையில்லை. இவற்றை உட்கொள்வது பண விரயம் மட்டுமே. அதுமட்டுமின்றி இரசாயனம் மூலமாக தயாரிக்கப்படும் விட்டமின் மினரல் போன்ற சத்துக்கள் உடலுக்கு கெடுதல்களையும் நோய்களையும் உருவாக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும், அந்த உணவுப் பொருள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, என்னென்ன கலக்கப்பட்டிருக்கின்றன என்ற விவரங்கள் இருக்கும். நீங்கள் வாங்கும் எந்த சத்து அல்லது விட்டமின் மாத்திரைகளிலாவது, அந்த மாத்திரைகள் எவற்றிலிருந்து  தயாரிக்கப்பட்டவை என்ற விவரங்கள் போட்டிருக்கிறதா?

இனிமேல் மருந்து மாத்திரைகள், சத்து மாத்திரைகள் வாங்கும்போது அவற்றை பரிந்துரைக்கும் மருத்துவரிடமோ மருந்து கடையிலோ கேளுங்கள் இந்த மாத்திரைகள் எவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டவை என்பதை. சத்துக்களே இல்லாத, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மாத்திரைக்கு சத்து மாத்திரை என்று பெயர் அதை நாமும் வாங்கி உட்கொண்டு கொண்டிருக்கிறோம்.

ஒரு மனிதனுக்கு கண், காது, மூக்கு, கை, கால் என உடல் உறுப்புகள் முழுமையாக இருக்கும்; அதைப்போல் இறந்து போன ஒரு சடலத்திலும் கண், காது, மூக்கு, கை, கால், என்று அனைத்தும் இருக்கும் அதற்காக சடலத்தை யாரும் மனிதன் என்று அழைப்பதில்லை. மற்றும் அந்த சடலம் மனிதனும் அல்ல.

அதைப் போன்றே சத்து மாத்திரைகளின் இரசாயன கட்டமைப்பும் உண்மையான சத்துக்களைப்  போன்றே இருக்கலாம். இரசாயன (chemical) கட்டமைப்பு ஒன்றாக இருக்குமே ஒழிய அதன் உயிர் சக்தி இருக்காது. உயிர் சக்தி இல்லாத இந்த மாத்திரைகள் இறந்து போன சடலத்துக்கு சமமானவையே. இவற்றை உட்கொள்ளும் மனிதர்களுக்கு நோய்களை உருவாக்குமே ஒழிய எந்த வகையான நன்மைகளும் உருவாக வாய்ப்பே கிடையாது.

சத்து மாத்திரைகளை உட்கொண்டாலும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அவற்றை முதலில் நிறுத்துங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் அவற்றை கொடுக்காதீர்கள். இயற்கையாக கிடைக்கக்கூடிய சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளுங்கள்.

பழங்கள் காய்கறிகள் போன்ற உணவு வகைகளில் மட்டுமே உண்மையான முழுமையான சத்துக்களும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். பழங்களை அதிகமாக உண்ணும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். காய்கறிகளை அரைவேக்காட்டில் சமைத்து சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். அதிகமாக பழங்கள் காய்கறிகளை சாப்பிடுங்கள். எந்த மருந்தும் மாத்திரையும் தேவையில்லை, இதுவரையில் ஆரோக்கியமாக வாழலாம்.


எவையெல்லாம் சிறந்த உணவுகள்?

எவையெல்லாம் ஆரோக்கியமான, உடலுக்கு உகந்த உணவுகள் என்று தெரிய வேண்டுமென்றால், ஆரோக்கியமான உணவு என்றால் என்னவென்று முதலில் தெரியவேண்டும். ஆரோக்கியம் என்றால் என்னவென்றும் புரிய வேண்டும்.

எந்த நோயையும், எதிர்வினையையும், எந்த உடல் - மன பாதிப்பையும் உருவாக்காத உணவு வகைகள் தான் ஆரோக்கியமான உணவுகள் என்று ஏற்றுக்கொள்ளலாமா? என்றால், அது முடியாது. எந்த தீய எதிர்வினையையும் உருவாக்கவில்லை என்றாலும், உடலுக்கு எந்த நன்மையையும் வழங்காத உணவை எதற்காக உட்கொள்ள வேண்டும்?. அவ்வாறென்றால் எவை ஆரோக்கியமான உணவு வகைகள்?.

எந்த உணவாக இருந்தாலும், உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களையும், சக்தியையும் வழங்குமென்றால், அவற்றை உட்கொள்பவரின் உடல் அவற்றை முறையாக ஜீரணிக்கும் என்றால், அவை நல்ல உணவுகள் தான். தாராளமாக உட்கொள்ளலாம்.

உணவில் கலக்கப்படும் இரசாயனங்கள்
தொடர்ந்து வாசிப்பதற்கு முன்பாக சற்று சிந்தனை செய்யுங்கள். இரசாயனங்களும், உயிர் கொல்லிகளும் கலக்கப்படாத உணவுகள் என்று ஏதாவது மிச்சம் இருக்கிறதா? சிந்தித்து விட்டு தொடர்ந்து வாசியுங்கள்.

நாம் அருந்தும் நீரில் இருந்து, காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள், மீன் வகைகள், அரிசி, பருப்பு, தானியங்கள், மசாலா பொருட்கள், சமையல் பொருட்கள், எண்ணைகள், என அனைத்திலும் கலப்படம், இரசாயன கலவைகள். இனி எவற்றை உட்கொள்வீர்கள்?

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பாலில் இருந்து, முதியவர்களுக்கு கொடுக்கப்படும் சத்து மாவுகள் வரையில் அனைத்திலும் கலப்படம், இரசாயனம் இனி எவற்றை கொடுப்பீர்கள்?.

உணவில் கலப்படம் மற்றும் இரசாயனம்
உங்கள் உணவை நீங்களே பயிர் செய்தால் ஒழிய கலப்படத்தையும் இரசாயனங்களையும் தவிர்க்க முடியாது. இன்னும் ஒரு முக்கியமான விசயம், பயிர் செய்தது நீங்கலாக இருந்தாலும், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் தெளிக்காவிட்டாலும், நீங்கள் விதைத்த தாவரத்தின் விதைகளை உருவாக்கியது யார் என்று பார்க்கவேண்டும். விதைகள் மரபணு மாற்றப்பட்டவையாக இருக்கலாம்.

Organic Foods ஆர்கானிக் உணவுகள்
ஆர்கானிக் உணவுகள் என்றால் என்ன?. பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் இரசாயனம் தெளிக்கப்படாத உணவுகள். சரி, பூச்சிக்கொல்லியும் இரசாயனமும் நீங்கள் தெளிக்கவில்லை, ஆனால் நீங்கள் பயன்படுத்தும் இயற்கை உரத்தை உருவாக்க பயன்படும் ஆடு, மாடு, கோழி, வாத்து, பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் உணவுகளில் இரசாயனங்கள் கலக்கப்பட்டிருந்தால்? அந்த இரசாயனம் நீங்கள் பயன்படுத்தும் உரங்களிலும் இருக்கும் தானே? உரங்களில் இருக்கும் இரசாயனங்கள் பயிர்களிலும் கலக்கும் தானே?. இனி அது எப்படி ஆர்கானிக் உணவுகள் ஆகும்?.

உணவுகளை உற்பத்தி செய்த பின்னர், அவற்றை  பொட்டலம் போட, கெட்டுப் போகாமல் தடுக்க, அவற்றை பாதுகாக்க என சிறிதளவேனும் இரசாயனம் கலக்கப்படும் தானே?.

கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான ஆர்கானிக் உணவுகள், உண்மையான இயற்கை உணவு வகைகள் அல்ல. இரசாயனமும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் குறைவானவை, மனிதர்களுக்கு நேரடியான கெடுதல்களை செய்யாதவை என்று வேண்டுமானால் கூறலாம். இப்படி அனைத்து வகையான உணவிலும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் இரசாயனங்களும் கலக்கப்படும் போது இனி எவற்றை உட்கொள்வீர்கள்?

அவர் அதில் இரசாயனம் இருக்கும் என்று சொன்னார்! இவர் இதில் பூச்சிக்கொல்லிகள் இருக்கும் என்று சொன்னார்! என்று நாம் கூறலாம். எல்லாம் சரி, அனைத்திலும் பூச்சிக்கொல்லிகளும் இரசாயனங்களும் இருக்கும் போது, இனி எதை சாப்பிட வேண்டும் என்று அவர் கூறினாரா?.

உலகத்தின் தலைச் சிறந்த உணவுகள் தேன், தேங்காய், பழங்கள், கருப்பட்டி ஆனால் இன்று இவை அனைத்திலும் கலப்படம், பூச்சிக்கொல்லி, மெழுகு, சரி இனி எவற்றை சாப்பிடுவது?.

சிறந்த உணவு பழக்கம்
எவற்றை உட்கொள்வது என்று ஆராய்ந்து எவற்றில் எவ்வகையான இரசாயனங்கள் கலக்கப்படுகின்றன என்பதை ஆராய்வதை விடவும், எப்படி சாப்பிடுவது என்பதை அறிந்துகொள்ளுங்கள். மற்றதை உங்கள் உடல் கவனித்து கொள்ளும்.

ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். நீங்கள் உங்களுக்குத் தெரியாமலேயே உடலுக்கு ஒவ்வாத ஒரு உணவை உட்கொண்டு விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும்? அது உடலுக்குள்ளேயே இருக்குமா அல்லது உங்கள் உடல் அதை வெளியேற்றிவிடுமா?

உடலுக்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ளும் போது, வாந்தி மற்றும் வயிற்றுபோக்கின் மூலமாக அவை வெளியேற்றப் பட்டு விடுகின்றன அல்லவா?. அமிர்தமாகவே இருந்தாலும், உடலுக்கு ஒவ்வாதவை என்றால் உங்கள் உடல் தானாகவே அவற்றை வெளியேற்றிவிடும். அப்புறம் என்ன பயம். உங்கள் உடலுக்குத் தெரியாத விசயமா உங்களுக்குத் தெரிந்துவிட போகிறது?.

உணவை உட்கொள்ளும் முறைகள்
நீங்கள் எதை உட்கொண்டாலும் அதிலிருந்து எந்தத் தொந்தரவும் உருவாகக் கூடாது என்றால், முதலில் உணவை உட்கொள்ளும் முறைகளை கற்றுக்கொள்ளுங்கள்.

1. உட்கொள்வதற்கு முன்பாக உணவைப் பாருங்கள்
2. உணவின் வாசனையை நுகருங்கள், வடிவத்தை ரசியுங்கள்.
3. விரல்களால் நன்றாக பிசைந்து பின்னர் உண்ணுங்கள்
4. வாயில் போட்டு, எச்சில் கலந்து, நன்றாக மெல்லுங்கள்
5. மென்று உணவின் ருசி மாறிய பிறகு விழுங்குங்கள்
6. சாப்பிடும்போது தண்ணீர் அருந்தாதீர்கள்.

இவை ஆறையும் முறையாக செய்தால். உடல் உணவை முறையாக ஜீரணித்து, எல்லாக் கழிவுகளையும், இரசாயனங்களையும் முறையே வெளியேற்றிவிடும். இரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள், கலப்படங்கள் பற்றிய பயம் தேவையில்லை.


மருந்துகளின் பக்கவிளைவுகள் என்றால் என்ன?

மருந்துகள் என்பன உணவிலிருந்து, அதாவது மலர்கள், பழங்கள், இலைகள், தலைகள், தண்டுகள், வேர்கள், போன்ற இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட வேண்டும். அந்த மருந்துகள் நோயாளிகளுக்கு மருந்தாகவும், அல்லாதவர்களுக்கும், அதிகமாக உட்கொண்டவர்களுக்கும், உணவாகவும் செயல்புரிய வேண்டும்.

இரசாயனங்கள் உணவல்ல, அவற்றை உட்கொண்டாலும் அவற்றை ஜீரணிக்கும் தன்மை மனித உடலுக்கு கிடையாது. ஆங்கில மருந்துகள் பெரும்பாலும் இரசாயனங்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. ஒரு இரசாயனம் பெரிய தீங்கை விளைவிக்காமல் இருக்கலாம். ஆனால் இரண்டு அல்லது மூன்று மாத்திரைகளை ஒன்றாக உட்கொள்ளும் போது. பல இரசாயனங்கள் ஒன்றாக வயிற்றுக்குள் செல்கின்றன. பல இரசாயனங்கள் ஒன்றாக உடலுக்குள் செல்லும்போது அவை என்ன விளைவுகளை உருவாக்கும் என்பது மருத்துவர்களுக்குக் கூட தெரியாது.

சிலர் ஐந்து முதல் பத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் விழுங்குகிறார்கள். இந்த பத்து வெவ்வேறான இரசாயன கலவைகள் ஒன்றாகச் சேரும்போது நிச்சயமாக பெரிய தீங்குகளை உண்டாக்கும்.

நோயாளிகளின் நோய்கள் முற்றுவதற்கு காரணம் என்ன?

மனிதர்களுக்கு உடலில் தொந்தரவுகள் உண்டாவதற்கு உடலில் சேரும் கழிவுகள் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றன. இவ்வாறு இருக்கையில், உடலில் தொந்தரவு உள்ளவர்கள் ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இரசாயனங்களை மருந்துகள் என நம்பி உட்கொள்ளும் போது. உடலில் இரசாயனங்களும் கழிவுகளும் அதிகரித்து. சிறிய தொந்தரவுகள் நோய்களாக மாறுகின்றன. சில வேளைகளில் மரணங்களைக் கூட உண்டாகின்றன.

கர்ப்பமுற்ற பெண்கள் சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமா?

தேவையில்லை, தினம் சாப்பிடும் உணவை முறையாக மென்று பொறுமையாக சாப்பிட்டாலே, அந்த பெண்ணின் உடல் அவளுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் சுயமாக உற்பத்தி செய்துகொள்ளும்.

சத்து மாத்திரைகள் இரசாயனங்களிலிருந்து தாயார் செய்யப்படுவதால், அவை பல பக்கவிளைவுகளை, அந்த கர்ப்பமுற்ற தாய்க்கும், அவள் வயிற்றில் வளரும் கருவுக்கும், உண்டாக்கக் கூடும்.

சர்க்கரை நோய் இருந்தால் கால்களில் புண்கள் தோன்றுமா?

இல்லை, எந்த இரசாயன உணவுகளும், இரசாயன மருந்துகளும் உட்கொள்ளாதவர்களுக்கு கால்களில் புண்கள் உண்டாகாது. இரசாயன பயன்பாட்டால் சிறுநீரகமும் இரத்தமும் கெட்டுப்போகும் போது மட்டுமே கால்களில் புண்கள் உருவாகும்.