கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

ஆரோக்கியம் உடலின் உள்ளேயும் வெளியிலும் இருக்க வேண்டும்.

மனிதனின் ஆரோக்கியம் என்பது உடலின் மேற்பகுதியைப் பார்த்து அறிந்துகொள்ளும் விஷயமல்ல. ஆரோக்கியமென்று சொன்னாலே முழுமையான ஆரோக்கியம் என்று தான் பொருள்கொள்ள வேண்டும். உடலின் உள்ளும், புறமும், மனமும் ஆரோக்கியமாக தனது இயல்பில் இயங்க வேண்டும். தோலின் அழகு அல்லது முகத்தின் அழகை மட்டும் கணக்கில் கொண்டு ஆரோக்கியத்தை அளக்கக் கூடாது.

அண்மையில் நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்தார். அவர் மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரையில் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தால், பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருந்தார். ஆரோக்கியமாக இருப்பதைப் போல் தெரிந்த அவர் ஏன் திடீரென்று மரணமடைந்தார்?. அவரின் மரணத்துக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, ஆனாலும்.

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் மூன்று முக்கியமாக விசயங்களை நமக்கு அறிவிக்கிறது. ஒன்று மனிதனின் வயதுக்கும் மரணத்துக்கும் சம்பந்தமில்லை, யாருக்கும் எப்பொழுதும் மரணம் வரலாம். இரண்டு, உடலின் வெளியிலிருந்து நாம் காணும் ஆரோக்கியத்துக்கும் உடலின் உள்ளே இருக்கும் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தமில்லை. தோல் அழகாக பளபளப்பாக இருக்கலாம் ஆனால் உடலின் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இல்லையென்றால் நோயும் மரணமும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். மூன்றாவது இரசாயனங்கள் எப்பொழுதும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைத் தராது.

இவை மூன்றும், நம் கண்களின் முன்பும், நம்மைச் சுற்றியும் அடிக்கடி பலருக்கு நடக்கும் விஷயங்கள்தான் ஆனாலும் ஒரு பிரபல நடிகைக்கு நடந்தால்தான் நமக்குப் புரிகிறது. அழகாக இருப்பதற்காக கிரீம், எண்ணெய், சோப்பு மற்றும் பல இரசாயனங்களிலிருந்து செய்யப்படும் பொருட்களைப் பயன்படுத்துவதும். உடலில் ஏதாவது உபாதைகள் ஏற்பட்டால் மருந்தென நம்பி இரசாயனங்களிலிருந்து செய்யப்படும் ஆங்கில மருந்துகளை உண்பதும் நமக்கு வாடிக்கையாகி விட்டது. இவை தவறு என்பதை ஸ்ரீதேவியின் மரணம் நிரூபித்து விட்டது.


ஒரு மனிதனின் உடலில் இருக்கும் அனைத்து வகையான தொந்தரவுகளையும் அவன் முகத்தை மட்டும் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலின் தன்மைகளையும் அவன் உடலின் ஆரோக்கியத்தையும் முகப்பொலிவையும், முகத்தின் தன்மைகளையும் கொண்டு கண்டுகொள்ளலாம். இது இயற்கையின் வடிவமைப்பு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியை பொய்யாக்கி விட்டார்கள் ஆங்கிலேயர்கள்.

ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த இரசாயன அழகு சாதனங்கள், இயற்கையின் வடிவமைப்பை மாற்றிவிட்டன. உடலின் உள்ளே ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் அந்த நபரின் வெளித்தோற்றம் மட்டும் அழகாக இருக்கிறது. இது ஒரு தவறான செயல், காரணம் அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு, தன் உடலில் உபாதைகள் இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள முடியாமல் போகிறது. உதாரணத்திற்கு சில வேளைகளில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் முகத்தைப் பார்த்து அவர் ஏதோ ஒரு தொந்தரவில் இருக்கிறார் என்று கண்டு கொள்வோம் அல்லது மற்றவர்கள் நமது தொந்தரவுகளை கண்டுகொள்வார்கள். இரசாயனங்களின் பயன்பாட்டுக்குப் பின் இது முடியாமல் போகிறது.

முகத்திலும் உடலிலும் நீங்கள் தேய்க்கும் அனைத்தும் உங்கள் உடலின் உள்ளுறுப்புகளுக்கும் செல்லும் என்பது அப்பட்டமான உண்மை. அதற்கு உதாரணம் வயிறு உப்புசமாக அல்லது வயிற்று வலியாக இருந்தால் வயிற்றில் தைலங்களை தேய்க்கும் போது வயிற்றின் உள்ளே மாற்றங்கள் தெரிகிறது அல்லவா?. கால் அல்லது மூட்டு வலியாக இருக்கும் போது அவற்றின் மேல் பூசும் தைலங்கள், உள்ளே உணரும் வலியின் தன்மைகளை மாற்றுகிறது அல்லவா?. இந்த உதாரணம் போதாதா, நாம் உடலின் மேற்பரப்பில் தேய்க்கும் பொருட்கள் உடலின் உள்ளே மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதற்கு.

 அழகுசாதன பொருட்கள்
நாம் அனுதினமும் பயன்படுத்தும் சோப்பு, சாம்பு, எண்ணெய், மற்றும் வாசனைத் திரவியங்கள் அவற்றைப் பயன்படுத்துபவர்களின் உடலின் உள்ளே செல்கின்றன. மற்றும் அவை பல கேடுகளை செய்கின்றன. குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் சிகப்பழகு கிரீம், பருக்களை போக்கும் கிரீம், மற்றும் மற்ற அழகுசாதன பொருட்கள், பல இரசாயனங்கள் மூலம் செய்யப்படுகின்றன. இவை பெண்களின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கின்றன குறிப்பாக வயிற்றையும், தோலையும், மற்றும் கர்ப்பப்பையையும் வெகுவாக பாதிக்கின்றன.

இன்று பல பெண்கள் அனுபவிக்கும் மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பை கோளாறுகள், உடல் பருமன், மற்றும் செரிமான கோளாறுகளுக்கும் அவர்கள் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன.

மறுபடியும் சொல்கிறேன், மனிதன் அனுபவிக்கும் அனைத்து உடல் உபாதைகளுக்கும், நோய்களுக்கும். அவன் பயன்படுத்து இரசாயனங்கள் தான் காரணம். இரசாயன பயன்பாட்டை நிறுத்தும் வரையில் ஆரோக்கியம் திரும்பாது. இரசாயன பயன்பாட்டைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.


கோழி முட்டையை சாப்பிட்டால் தான் உடலுக்கு புரோட்டீன் கிடைக்குமா?

கோழிகள் புரோட்டீனோ முட்டையோ சாப்பிடுவதில்லை, இருந்தும் அவற்றின் முட்டைகளில் அதிகமான புரோட்டீன் இருக்கின்றன, அவற்றுக்கு எங்கிருந்து புரோட்டீன் கிடைத்தன? கோழிகளின் உடல் சுயமாக புரோட்டீனை உருவாக்குகின்றன.

கோழியின் உடலால் ப்ரோட்டீனை சுயமாக உருவாக்க முடியும் பொது மனிதனின் உடலால் சுயமாக புரோட்டீனை உருவாக்க முடியாதா? பரிமாணத்தின் உச்சம் மனிதன் அவன் உடலால் தனக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் சுயமாக உருவாக்கிக்கொள்ள முடியும்.

உணவின் மூலமாக உடலின் பஞ்சபூத சக்திகளை எவ்வாறு சமப்படுத்துவது?

உடலின் பஞ்சபூத சக்திகளும், உணவின் சுவைகளும்
மனிதனின் உடலானது பஞ்சபூத சக்திகளின் கலவையினால் உருவானது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். பஞ்சபூத சக்திகளால் உருவான இந்த உடல், தினமும் செயல்படுவதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும், நீண்ட நாட்கள் வாழ்வதற்கும் பஞ்சபூத சக்திகள் இன்றியமையாத தேவையாக இருக்கிறது.

பஞ்சபூத சக்திகளை நம் உடலானது வெளியிலிருந்து சிறிதளவு பெற்றுக் கொண்டாலும், பெரும்பான்மையான சக்திகளை உடல் சுயமாகவே உற்பத்தி செய்துகொள்கிறது. நம் உடலின் உள் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு பஞ்சபூத சக்தியை உருவாக்கும் தன்மையுடன்தான் படைக்கப்பட்டிருக்கிறது.

இருதயம் நெருப்பு சக்தியையும், மண்ணீரல் நிலம் சக்தியையும், நுரையீரல் காற்று சக்தியையும், சிறுநீரகம் நீர் சக்தியையும், கல்லீரல் ஆகாய (மரம்) சக்தியையும் உற்பத்தி செய்கின்றது.


நாம் உண்ணும் உணவும், உணவின் சுவைகளும் உடலின் உள்ளுறுப்புகளுக்கு சக்தியளிக்கவும், பஞ்சபூத சக்திகளை உற்பத்தி செய்யவும் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் உணவில் உள்ள சுவைகளே பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால்தான் உணவை உட்கொள்வதற்கு முன்பாக இனிப்பு சுவையுள்ள பழங்களை உட்கொள்வது ஒரு வழக்கமாக நம் கலாச்சாரத்தில் இருக்கிறது. உணவு வேலைகளுக்கு முன்பாக இனிப்பான பழங்களை உட்கொண்டால் நமது மண்ணீரலும் வயிறும் உணவுகளை ஜீரணிக்கத் தயாராகும்; அதற்குப் பிறகு உட்கொள்ளும் உணவுகள் எளிதாக ஜீரணமாகும்.

இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கரிப்பு மற்றும் காரம் என ஆறு சுவைகளும் உடலுக்கு மிகவும் அவசியமானவை. உடலில் பஞ்சபூத சக்திகள் சமநிலையில் இருக்க வேண்டும் என்றால் எந்த சுவையையும் ஒதுக்கக்கூடாது. எல்லாச் சுவையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

நம் உடல் சுயமாக உற்பத்தி செய்துகொள்ளும் பஞ்சபூத சக்திகளின் அளவு குறையும் போது, அந்த சுவை தொடர்புடைய உறுப்புகளில் கழிவு தேக்கங்களும், பலகீனங்களும், பாதிப்புகளும், குறைபாடுகளும், நோய்களும், உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நம் உண்ணும் உணவுகளில் உள்ள சுவைகள், இயற்கையான சுவைகளாக இருக்க வேண்டும். செயற்கையான சுவைகளை உட்கொள்ளும் போது, அந்த சுவைகள் தொடர்புடைய உறுப்புகள் பாதிப்படையத்தொடங்கும்.

இயற்கையிலேயே உருவாகக் கூடிய உணவுகள், பழங்கள், காய்கறிகள், தாவரங்கள், கிழங்கு வகைகள், போன்றவை ஆறு சுவைகளும், அதாவது ஐந்து பஞ்சபூத சக்திகளையும் முழுமையாக பெற்றதாக இருக்கின்றன.


உதாரணத்திற்கு வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வோம். வாழைப்பழத்தில் இனிப்பு சுவை பெருமளவு இருப்பதால் வாழைப்பழம் இனிப்பாக இருக்கிறது. ஆனாலும் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கரிப்பு மற்றும் காரம் என ஆறு சுவைகளும் வாழைப்பழத்தில் மறைவாக இருக்கும். மற்ற சுவைகள் சிறிய அளவில் இருப்பதால் நம் நாக்கினால் அவற்றை எளிதில் உணர முடிவதில்லை.

அதைப்போல் பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், அரிசி, கோதுமை, பருப்புகள், தேன், போன்றவற்றிலும் ஆறு சுவைகளும் இருக்கும். உணவுகளில் என்ன சுவை பெருமளவு இருக்கிறதோ அந்த சுவையை மட்டுமே நம் நாவால் உணர முடிகிறது. உணவுகள் சுத்திகரிக்கப் படும்போதும், பதப்படுத்தப்படும் போதும், இரசாயனங்கள் கலக்கப்படும் போதும் ஓரிரு சுவைகளை இழந்துவிடுகின்றன.

நம் பாரம்பரிய உணவு முறை
நம் முன்னோர்கள் அன்றாட உணவுகளில் ஆறு சுவைகளும் இருக்கும்படியாக பார்த்துக் கொண்டார்கள். முன்பெல்லாம் நாம் தினசரி உண்ணும் உணவுகளில் ஆறு சுவைகளும் உடலுக்குக் கிடைத்துவிடும். இன்று நவீன விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில், நம் முன்னோர்களின் அறிவியல் அறிவை கோட்டை விட்டு விட்டோம்.

மன இச்சைகளுக்கு கட்டுப்பட்டு, உணவை உட்கொள்ளத் தொடங்கிய பிறகு. நம் உடலுக்குத் தேவையான சத்துகளும், சுவைகளும் முழுமையாகக் கிடைக்காமல் போயின. உடலில் உள்ளுறுப்புக்கள் பலகீனம் அடைந்து, பல பாதிப்புகளும், பலகீனங்களும், நோய்களும் உருவாகத் தொடங்கின.

உடல் நலத்தைப் பாதுகாக்க
நம் உடல் இறுதி வரையில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், தெம்பாகவும், பலமாகவும், இருக்க வேண்டுமென்றால்; நம் உணவில் அன்றாடம் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கரிப்பு மற்றும் காரம், என ஆறு சுவைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து இயற்கை உணவுகளிலும் ஆறு சுவைகளும் கிடைக்கும், அவற்றை முறையாகவும், சிறிய நெருப்பிலும், பதமாகவும் சமைத்தால், அந்த சுவைகளும் பாதிப்படையாமல் முழுமையாக உடலுக்குக் கிடைக்கும்.

இன்றைய காலகட்டத்தில் உள்ள உணவுகளில், உவர்ப்பு சுவை கிடைப்பதில்லை, என்பதனால்தான், வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை, நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள். நம் அன்றாடம் உண்ணும் உணவில் ஐந்து சுவைகளும், உணவுக்குப் பின் மேலும் வெற்றிலை பாக்கில் ஒரு சுவையும் சேரும்போது ஆறு சுவைகளும் ஒரு முழுமை பெறுகின்றன.

செயற்கை உணவுகளையும், பதப்படுத்திய உணவுகளையும் தவிர்த்துவிடுங்கள். சமையலில் செயற்கை சுவைகளையும், செயற்கைப் பொருட்களை தவிர்த்துவிடுங்கள். பழங்களில் மட்டுமே ஆறு சுவைகளும் எந்த சிதைவும் அடையாமல் முழுமையாகக் கிடைக்கும். அதனால் பழங்களை அதிகமாக உண்ணுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் பழக்கப் படுத்துங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

குழந்தைகளின் பிறவி நோய்களுக்கான காரணங்கள் என்ன?


இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகள் நோய்களுடனும், குறைகளுடனும் பிறப்பதற்கும்; குழந்தையைப் பெற்ற தாய்மார்கள் பல உடல் உபாதைகளுக்கு ஆளாவதற்கும், பெற்றக்  குழந்தைக்கு பால் சுரக்காமல் தாய்மார்கள் அவதிபடுவதற்கும், மிக முக்கிய காரணமாக இருப்பது, கர்ப்பக் காலத்தில் தாய்மார்கள் உட்கொண்ட இரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சத்து மாத்திரைகளே.

நம் வயிறு ஒன்றும் குப்பைத் தொட்டியல்ல
ஒன்றைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள். நமது வாயும் வயிறும் குப்பைத் தொட்டிகள் அல்ல. நமது வாய் இயற்கையால் வழங்கப்பட்ட உணவுகளை உண்பதற்காகவும், நமது வயிறு இயற்கையால் வழங்கப்பட்ட உணவுகளை ஜீரணிப்பதற்காகவும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. நமது வயிறு இரசாயனங்களைக் கொண்டு, செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகளையும், மருந்துகளையும், பொருட்களையும் ஜீரணிக்காது.

அவ்வாறானால் நாம் உட்கொள்ளும் இரசாயன மருந்துகள் என்னவாகும்?
நாம் உட்கொள்ளும் மருந்துகளில் உடலுக்கு உதவக்கூடிய விசயங்கள் ஏதாவது இருந்தால், அதை உடல் கிரகித்துக் கொண்டு மற்றவற்றை கழிவாக உடலிலிருந்து வெளியில் அனுப்பிவிடும். இவ்வாறு உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில், மிகக் கடுமையான, மிகக் கொடுமையான இரசாயனங்களை உடலால் வெளியேற்ற முடியாத சூழ்நிலையில், சில கழிவுகள் உடலுக்குள்ளேயே தங்கிவிடும். இவ்வாறு உடலுக்குள்ளேயே தங்கிவிடும் கழிவுகளே அனைத்து உடல் உபாதைகளையும் உருவாக்குகின்றன.

குழந்தைகளுக்கு உருவாகும் தொந்தரவுகள்.
குழந்தைகளுக்கு உருவாகும் தொந்தரவுகள் பெரும்பாலும் தாயின் கர்ப்பப்பையிலேயே தொடங்குகின்றன. இயற்கையாகவே தாயின் கர்ப்பப்பையானது குழந்தை உருவாகவும், குழந்தை வளரவும் மிக பாதுகாப்பானதாக படைக்கப்பட்டிருக்கிறது.

தாயின் கர்ப்பப்பையானது, அதில் வளரும் குழந்தையின் அனைத்து நோய்களையும் நீக்கி, பரம்பரை நோய்கள் என்று கூறப்படும் நோய்கள் அண்டாமல் தடுத்து, வெளியிலிருந்து எந்த பாதிப்புகளும் குழந்தையை நெருங்காமல் பாதுகாக்கும் அமைப்பிலேயே படைக்கப்பட்டிருக்கிறது.

இறைவனுக்கு தெரியாதது மருத்துவர்களுக்கு தெரிந்துவிட்டது?
மிக அழகாக, மிக உன்னதமாக, இறைவன் படைத்த கர்ப்பப்பையில். எந்த ஒரு முன் மாதிரியும் இன்றி மிக உன்னதமான, மிக உயரிய படைப்பாக மனித இனம் படைக்கப்படுகிறது. இவ்வாறு இயற்கையின் கரங்களில் வளரும் குழந்தையை பிடுங்கி, நாங்கள் பாதுகாக்கிறோன் என்று கூறுபவர்களை நம்பி, அவர்கள் கொடுக்கும் இரசாயனங்களை உட்கொண்டு. பல தாய்மார்கள் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் சீரழிகிறார்கள்.

இரசாயனங்கள் உடலுக்கு கேடானவை.
கர்ப்பம் தரித்த தாய்மார்கள் அல்லது கர்ப்பம் தரிக்க ஆசைப்படும் தாய்மார்கள், எந்த காரணத்தைக் கொண்டும் இரசாயனங்களை உபயோகிக்கக் கூடாது. இரசாயனங்களை உணவாகவோ, பானமாகவோ, ஒப்பனையாகவோ, மருந்தாகவோ, ஊசியாகவோ எந்த வகையில் பயன்படுத்தினாலும். அது அந்த தாய்க்கும் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தீங்கை விளைவிக்கும்.

கர்ப்பமுற்ற தாய்மார்கள் உட்கொள்ளும் இரசாயனங்கள், அந்த தாயின் உடலையும் அவளின் கர்பப்பையையும் முழுமையாக செயல்பட விடாமல். அவள் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை கட்டுப் படுத்துகிறன.

ஒரு கர்ப்பமுற்ற தாய், இரசாயனங்களை உட்கொள்ளும் போது, அவளின் உடலானது அந்த  இரசாயனங்களை எதிர்த்து போராடுகிறது. உடலின் உள்ளே செல்லும்  இரசாயனங்களை முறிப்பதிலும், அதை வெளியேற்றுவதிலும், பெருமளவு சக்திகளை செலவழிப்பதால், அவள் கருவின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் சக்தி போதாமல் குழந்தைக்கு குறைகள் உண்டாகின்றன.

கர்ப்பமுற்ற தாய்மார்கள் உட்கொள்ளும் இரசாயனங்கள்
பெரும்பாலும் கர்ப்பமுற்ற தாய்மார்கள் இரும்புச் சத்து, கல்சியம் சத்து, விட்டமின், க்லுகொஸ் போன்ற மருந்து மாத்திரைகளைச் உட்கொள்கிறார்கள். ஏன் உட்கொள்கிறார்கள் என்று கேட்டல், டாக்டர் பரிந்துரைத்தார்கள், குழந்தையின் ஆரோக்கியத்துக்காக என்று கூறுவார்கள். ஆனால் யாரும் டாக்டர்களை திரும்பி கேட்பதில்லை இந்த மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பாக பிறந்த என் முன்னோர்கள் நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள், ஆனால் இவற்றை உட்கொள்ள தொடங்கிய பிறகு பிறந்த மனிதர்கள் 60 வயதை தாண்டுவதே இயலாத காரியமாக இருக்கிறதே ஏன்? என்று.

நீங்கள் கேட்கலாம் விட்டமின், கல்சியம் போன்ற ஊட்டச் சத்துக்கள் உடலுக்கு அவசியம் தானே அவற்றை உட்கொள்வதினால் என்ன தவறு இருக்கிறது என்று. இயற்கையில், இயற்கையால் உருவாகும் கல்சியம், விட்டமின் போன்ற சத்துக்களுக்கும் டாக்டர்கள் கொடுக்கும், மருந்து கம்பனிகள் உருவாக்கும் செயற்கை சத்துக்களுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?. இயற்கையாக மண்ணில் விளைந்த மலர்களுக்கும், ப்லாஸ்திக் மலர்களுக்கும் உள்ள வித்தியாசம். இரண்டையுமே நாம் மலர்கள் என்றுதான் கூருகிறோம். ஆனால் உண்மையில் இரண்டும் ஒன்றல்ல.

இரசாயனங்களிலிருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள்.
கர்ப்பமுற்ற தாய்மார்கள் மட்டுமின்றி, யாருமே எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டமின், கல்சியம் போன்ற ஊட்டச்சத்து மாத்திரைகளையும், சோடியாம் கலந்த உப்புக்களையும் உட்கொள்ள வேண்டாம்.

ஆரோக்கியமாகவாழ்வோம்… ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம் ...


நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறைகள்

ஒருவர் நோய் வாய்ப்பட்டால் வைத்தியர் (மருத்துவர்) அவரை பரிசோதித்து, அவரின் உபாதைகளை அறிந்து, உடல் காட்டும் அறிகுறிகளைக் கொண்டு நோயாளியின் உண்மையான நோயை கண்டறிய வேண்டும். அந்த நோய் உடல் சம்பந்தப்பட்டதா? மனம் சம்பந்தப்பட்டதா? என்பதை கண்டறிய வேண்டும். நோயின் மூலத்தை அறிந்த பின்பு தான் மருத்துவம் செய்ய வேண்டும்.

மன நிம்மதி 
உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மன நிம்மதியும், மன அமைதியும் மிகவும் அவசியமானது. மனிதர்களின் பெரும்பாலான நோய்கள் மனதில் உண்டாகும் மாறுபாட்டாலேயே உருவாகின்றன.

உதாரணம் 1: ஒரு குழந்தையை மிரட்டினால் அல்லது பயமுறுத்தினால் அந்தக் குழந்தை பயத்தில் சிறுநீர் கழித்துவிடுகிறது. அந்தக் குழந்தையின் உடலில் என்ன நடந்தது? ஏன் அந்தக் குழந்தை சிறுநீர் கழித்தது?

உண்மையில் என்ன நடந்தது என்றால், அந்தக் குழந்தையின் மனதில் உண்டான அதிகப்படியான பயம் மனதின் சமநிலையை கெடுத்தது. அந்த பாதிப்பு சிறுநீர் பையை பாதித்து, சிறுநீர் சுயமாக வெளியேறத் தொடங்கியது. மனதில் உண்டாகும் பயமானது சிறுநீரகங்கள், சிறுநீர் பை, கர்ப்பப்பை, ஆண்மை மற்றும் உடலின் பல உறுப்புகளை பாதிக்கக் கூடியது. அதிகப்படியான பய உணர்வு உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட உறுப்புகளில் சில தொந்தரவுகள் உருவாகக் கூடும். அச்ச உணர்வுகளை நீக்கி விட்டால் அந்த பாதிப்புகள் நீங்கிவிடும்.

உதாரணம் 2: ஒரு வீட்டில் துக்ககரமான நிகழ்வுகள் நடக்கும் போது அந்த வீட்டைச் சார்ந்தவர்களுக்கு பசி உண்டாவதில்லை. மரணம் நடந்த வீட்டில் இதை கண்கூடாக அனைவரும் காணலாம். நாள் முழுதும் சாப்பிடாவிட்டாலும் அந்த வீட்டுக் குடும்ப உறுப்பினர்களுக்குப் பசி என்ற உணர்வு உண்டாவதில்லை. கவலையுடன் இருக்கும் மனிதர்கள் கூட எனக்கு பசியில்லை, உணவு வேண்டாம் என்பார்கள்.

இந்த சூழ்நிலையில் என்ன நடக்கிறது என்றால் துக்கம், சோகம், கவலை போன்ற உணர்வுகள் வயிற்றை பாதிக்கின்றன. வயிறு பாதிப்புக்கு உள்ளானதால் அது உணவைச் சீரணிக்கும் தன்மையில் இருக்காது. அதனால் அவர்களுக்குப் பசி உண்டாகாது.

மனதின் அமைதியும், சம தன்மையும் உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது. அதனால் யாருக்காவது உடல் நலம் பாதிப்படைந்தால், உடலை மட்டும் சோதிக்காமல், நோயாளியுடன் உரையாடி அவருக்கு மனம் தொடர்பான பாதிப்புகள் ஏதாவது இருக்கின்றனவா என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.
இயற்கை வாழ்வியல் என்றால் என்ன? ஏன் இயற்கையைச் சார்ந்து வாழ வேண்டும்?.

இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம், இயற்கையைச் சார்ந்து வாழ்தல், என்றெல்லாம் குறிப்பிடுகிறார்களே அவை என்ன?. இயற்கை வாழ்வியல் என்றால் என்ன? ஏன் இயற்கையைச் சார்ந்து வாழ வேண்டும்?.

இயற்கை மருத்துவம் பார்ப்பவர்களுக்கும், இயற்கையான வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், செயற்கையாக ஆங்கில மருத்துவம் பார்ப்பவர்களுக்கும், இரசாயனங்களை பயன்படுத்துபவர்களுக்கும், வாழும் நாட்கள் ஏறக்குறைய ஒன்றாகத்தானே இருக்கிறது. பிறகு ஏன் இயற்கையை சார்ந்து வாழ வேண்டும்?.

இயற்கையாக வாழ்பவர்கள் மட்டும் 150 ஆண்டுகள் வாழ்வார்கள் என்றால் பரவாயில்லை. இயற்கை வாழ்வியலுக்கும், செயற்கை வாழ்வுக்கும், பெரிதாக ஒரு வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லையே, இருவருடைய ஆயுட்காலமும் ஏறக்குறைய ஒன்றாகத்தானே இருக்கிறது. என்று கேட்பவர்களுக்கு பதில்.

இயற்கையாக வாழ்பவர்களுக்கும், செயற்கையாக வாழ்பவர்களுக்கும், ஆயுள் காலம் ஏறக்குறைய ஒரே அளவு இருக்கலாம் ஆனால் அவர்களின் வாழ்க்கைத் தரம், மிகவும் மாறுபட்டதாக இருக்கும்.

இயற்கையை சார்ந்து வாழ்பவர்கள் நோய் நொடிகள் எதுவுமின்றி, நிம்மதியாக வாழலாம், சந்தோஷமும், மகிழ்ச்சியும், அவர்களின் வாழ்க்கையில் இருந்து கொண்டே இருக்கும். ஒருவேளை நோய் நொடிகள் உருவானால் வந்தது கூட தெரியாமல், நோய் நொடிகள் விரைவாக குணமாகிவிடும்.

செயற்கையாக வாழ்பவர்களுக்கு, ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றினாலும். நிற்க முடியவில்லை, நடக்க முடியவில்லை, சாப்பிட முடியவில்லை, சாப்பிட்டால் ஜீரணிக்க முடியவில்லை, மலம் கழிக்க முடியவில்லை, உறங்க முடியவில்லை, இல்லறத்தில் சந்தோஷங்களை அனுபவிக்க முடியவில்லை, மன நிம்மதியில்லை, இடுப்பு வலிக்கிறது, கை கால் வலிக்கின்றன, தலை வலிக்கிறது, உடல் உறுப்புகளின் பலம் குறைகிறது, உடல் உறுப்புக்களின் செயல் திறன் குறைகிறது, என்று ஏதாவது ஒரு உபாதையுடன் அவர்களின் வாழ்நாட்களை கழிக்க வேண்டிவரும்.

செயற்கையாக வாழ்பவர்கள், மன நிம்மதியின்றி எதையாவது ஒன்றைப் பார்த்து பயந்து தங்களின் வாழ்நாட்களை அச்சத்துடன் கழிக்க நேரிடும்.

இயற்கையாக வாழ்தல் என்பது ஒன்றும் பெரிய கடினமான காரியமில்லை. உங்களுடைய உடலும், மனம், என்ன சொல்கிறது என்பதை மட்டும் பின்பற்றி வாழ்தல்தான், இயற்கையை சார்ந்து வாழ்தல். இந்த உலகத்துக்கும், இயற்கைக்கும், அதன் உயிர்களுக்கும், உங்களுக்கும் எந்த வகையான தீங்கும் செய்யாமல் வாழ்வதுதான் இயற்கை வாழ்வு.

இயற்கையாக வாழ்பவர்கள் சில ஆண்டுகள் வாழ்ந்தாலும், நிம்மதியாக, மகிழ்ச்சியாக, தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து விட்டு செல்வார்கள். நோய்நொடி, வலிகள், குறைபாடுகளுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதை விடவும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், 50 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டுச் செல்வது சிறப்பல்லவா?.

அடுத்ததாக பொருளாதார தாக்குதல். செயற்கையாக வாழ்பவர்கள் தங்களின் வாழ்நாட்களில் சம்பாதிப்பவற்றில் பாதிக்கு மேல் ஏதாவது ஒரு வகையில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இழந்துவிடுவார்கள். மருத்துவம், அழகு, ஆரோக்கியம், நாகரீகம், கல்வி, நவீனமயமாக்கல், முன்னேற்றம், சந்தோசம், குதூகலம், என்று ஏதாவது ஒரு வழியில் அவர்கள் சம்பாத்தியம் பணத்தை பெரும் நிறுவனங்களிடம் இழப்பதை அவர்கள் உணர மாட்டார்கள்.

நவீனமயமாக்கலும், நவீன மருத்துவமும் மக்களை முட்டாளாக்குகிறது. பெரும் நிறுவனங்களுக்கு அடிமைகளாக வைத்திருக்கிறது.

சிந்தியுங்கள்..


திருச்சியில் நான் பார்த்த மனிதர்கள்

இறைவன் இந்த உலகை எவ்வாறு படைத்திருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள எனக்கு ஆர்வம் அதிகம். அதனால் நான் எங்குச் சென்றாலும், அங்கு இருக்கும் தாவரங்கள்,விலங்குகள் மற்றும் மனிதர்களை கூர்ந்து கவனிப்பது வழக்கம். நான் மதுரைக்கும் திருச்சிக்கும் சென்றிருந்தேன். அங்கு நான் பார்த்த சில மனிதர்களைப் பற்றித்தான் இந்த கட்டுரையில் பேசப் போகிறேன்.

நான் பார்த்த வெளி நோயாளிகள்
மதுரையில் ஒரு பிரபலமான மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கு நான் பார்த்த நோயாளிகளில் பெரும்பாலானோர், தவறான வாழ்க்கை முறைகளினால் உருவான தொந்தரவுகளால் அங்கு வந்திருந்தனர். உண்மையில் அவர்கள் நோயாளிகளே அல்ல ஆனால் தன்னைதானே நோயாளிகள் என்று தவறான நம்பிக்கை கொண்டவர்கள்.

அந்த மருத்துவமனையில் நான் பார்த்த வெளி நோயாளிகளின் தொந்தரவுகளுக்கு மிக முக்கிய காரணங்களாக இருக்கக் கூடியவை:
1. குடிப் பழக்கம்
2. புகையிலை பழக்கம்
3. தூக்கம் இன்மை
4. தாமதமாக உறங்குவது
5. இரவில் விழித்திருப்பது
6. அதிகமாக உண்பது
7. பசி இன்றி உண்பது
8. மனம் நிம்மதி அற்று இருப்பது
9. இரசாயனம் கலந்த உணவுகள்
10. இரசாயன மருந்து மாத்திரைகள்

மிகச் சுலபமாக மாற்றிக்கொள்ளக் கூடிய இந்த சில விசயங்கள்தான் அங்கு இருந்த 80% மக்களின் தொந்தரவுகளுக்கு காரணமாக இருக்கக் கூடும். இந்த பழக்கங்களை மாற்றிக் கொண்டால் அனைத்து தொந்தரவுகளும் சுயமாக நீங்கிவிடும். அதை விடுத்து இலட்சக் கணக்கில் பணம் செலவழித்து உடலின் சிறிய தொந்தரவுகளைப் பெரிய நோய்களாக மாற்றிக் கொள்கிறார்கள்.

குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்.

திருவள்ளுவர் மிக அழகாகக் கூறி சென்றுள்ளார். இதற்கு முந்தைய வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்கு தக்க உணவு உட்கொண்டால். இந்த உடலை பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது.

நான் பார்த்த குழந்தை நோயாளிகள்
குழந்தைகளுக்கான பிரிவிலிருந்த குழந்தைகள் பெரும்பாலானோர் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போதே நோயுடன், அல்லது உடல் குறையுடன் வந்தவர்கள்.

இந்தக் குழந்தைகள் நோயாளிகளாகப் பிறப்பதற்கும் உடல் ஊனத்துடன் பிறப்பதற்கும் அந்த தாய் உட்கொண்ட இரசாயன மருந்துகள் தான் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கும். இந்த உண்மையை மறைப்பதற்கு, சொந்தத்தில் திருமணம், சத்து போதவில்லை என்று ஏதாவது பொய்யைச் சொல்வார்கள்.

மருத்துவர் சொல்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக கண்ட விட்டமின், கல்சியம், சத்து மாத்திரைகளைத் தின்று, ஊசிகளைப் போட்டுக்கொண்டு. பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கெடுதல் செய்கிறார்கள்.

ஆங்கில மருத்துவத்தின் பணம் பண்ணும் ஆசைக்கு இந்தத் தாய்மார்கள் பலியாகிறார்கள். தாய்மார்களே தயவு செய்து கொஞ்சம் சிந்தித்துச் செயல்படுங்கள். மருத்துவர் என்றாலும் அவரும் ஒரு வியாபாரிதான், நீங்களும் உங்கள் குழந்தைகளும் நோயாளிகளாக இருக்கும் வறைதான் அவனுக்கு வியாபாரம், வருமானம் எல்லாம்.

நான் பார்த்த பெண்கள்
திருச்சியில் சாரதாஸ் துணிக்கடை வாசலில் நின்று கொண்டு அங்கு சாலையில் நடக்கும் மனிதர்களைக் கவனிக்கத் தொடங்கினேன்.

முன்பெல்லாம் அந்தப் பெண்ணிடம் கேட்டு அல்லது தாலி, மெட்டி இருக்கிறதா என்று பார்த்துத்தான் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அந்த சிரமம் நமக்கு வேண்டாம் என்று ஆங்கில மருத்துவர்கள், பிள்ளை பெற்ற பெண்கள் அனைவரையும் டேங்கர் லாரிகளை போன்று மாற்றிவிட்டார்கள். பார்த்த உடனே தெரிந்து விடுகிறது, இவர்கள் குழந்தை பெற்ற பெண்கள் என்பது.

கிராமப்புற பெண்களும், ஏழைப் பெண்களும், ஆங்கில மருத்துவம் செய்யாத பெண்களும், நம் தாயும், பாட்டியும் 10 பிள்ளைகள் பெற்றும் கூட உடலை ஒல்லியாகவும், உடல் கச்சிதமாக வைத்திருக்கும் போது.

நகரத்து பெண்களுக்கு மட்டும் ஏன் உடல் பெருக்கிறது என்று சிந்திக்காமல். பிள்ளை பெற்றாலே உடல் பெருத்துவிடும், இடுப்பு, பிட்டம் எல்லாம் பெருத்துவிடும் என்று தவறாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய நவீன பெண்கள்.

ஏழைப் பெண்கள் எல்லாம் ஆரோக்கியமாக, சுயமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, நடுத்தர வர்கத்தின் பெண்களும், பணக்கார வீட்டுப் பெண்களும் மட்டும் அறுவைசிகிச்சை செய்து குழந்தை பெறுவது ஏன்?. பிள்ளை பெற்ற பின்பு உடல் பெருப்பது ஏன்?. பிள்ளை பெற்ற பின்பு, பால் சுரக்காமல் இருப்பது ஏன்?. அந்தத் தாய்க்கு பல வகையான ஆரோக்கிய சீர்கேடுகள் உண்டாவது ஏன்? என்று சிந்திப்பதில்லை.

பிறந்த குழந்தைக்கும், பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு வரும் அனைத்து ஆரோக்கிய தொந்தரவுகளுக்கும் ஒரே மூல காரணம் அவர்கள் உட்கொள்ளும் சத்து மாத்திரைகளும், அவர்கள் கர்ப்பமான பிறகு போட்டுக்கொள்ளும் ஊசிகளும் தான்.

தயவு செய்து இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பயன்படுத்தாதீர்கள். ஸ்கேன் எடுக்காதீர்கள். முடிந்தால் கர்ப்பம் தரித்த பின்பு ஆங்கில மருத்துவர்கள் முகத்திலேயே விழிக்காதீர்கள் ஆரோக்கியமான குழந்தைகளை ஈன்றெடுங்கள்.

நான் பார்த்த முதியவர்கள்
அங்கு நான் பார்த்த முதியவர்கள் பலர் எலும்பு தொடர்புடைய நோய்களாலும், உடல் பலம் இல்லாமலும் காணப்பட்டார்கள்.

இதற்குக் காரணம் அவர்களின் செரிமான கோளாறும் மலச்சிக்கலும்தான். உணவைக் குறைத்து, காரம் மற்றும் புளிப்புச் சுவைகளை குறைத்து. பசித்தால் மட்டும் அளவோடு உணவை உட்கொண்டு. இரவு உணவைச் சமைக்காத உணவாக அல்லது வெறும் பழங்களாக மாற்றிக் கொண்டாலே அவர்களின் அனைத்து தொந்தரவுகளும் குணமாகும். ஆரோக்கியம் மேன்படும்.

ஆரோக்கியமாக வாழ
இரசாயனங்களை அறவே தவிர்த்துவிடுங்கள். ஆங்கில மருத்துவம் வேண்டாம். பசித்தால் மட்டும் அளவோடு உண்ணுங்கள். பழங்கள், காய்கறிகள் அதிகமாக உண்ணுங்கள். இரவு விரைவாக படுக்கைக்குச் செல்லுங்கள்.

ஆரோக்கியமாக வாழ்வோம், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்அச்சத்தை விடுங்கள், ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.

அச்சத்தை விடுங்கள், ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள். அளவோடு இருக்கும் வரையில் எதுவுமே கெடுதல் இல்லை, தைரியமாக இருங்கள். எந்த உணவையாவது சாப்பிட  வேண்டும் என்று ஆசை உண்டானால், ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள், எந்தத் தவறுமில்லை. அளவை மட்டும் மீறாதீர்கள். எது அளவு என்றால்?. உங்கள் வயிறு சொல்வதுதான் அளவு. வயிறு நிறைந்து, பசி மாறிவிட்டால், சாப்பிடுவதை உடனே நிறுத்திவிட வேண்டும். 

வெள்ளை சீனி அந்த கெடுதலை செய்யும், அஜினாமோட்டோ இந்த கெடுதலை செய்யும், கோக்க கோலா அந்த உறுப்பைக் கெடுக்கும், பெப்சி கோலா இந்த உறுப்பைக் கெடுக்கும் என்று எதற்காகவும் அஞ்சாதீர்கள். அவற்றில் பல அபாயகரமான இரசாயனங்கள் கலந்திருப்பது உண்மைதான். ஆனாலும், உங்கள் உடலும் அதன் எதிர்ப்பு சக்தியும் அதனிலும் வலிமையானது.

மைதாவில் அது இருக்கும், உப்பில் இது இருக்கும் என்று எதற்கும் அஞ்சாதீர்கள். ஆசைப்பட்டதை அளவோடு உண்ணும் போது உடல் அதில் உள்ள ஆபத்தான விசயங்களை சுயமாகவே வெளியேற்றிவிடும், அச்சப்பட தேவையில்லை. ஆனால் பயத்துடன் ஒரு உணவைச் உட்கொண்டால், உங்கள் பயத்துக்கும், நம்பிக்கைக்கும் தக்கவாறு பக்கவிளைவுகள் உருவாக வாய்ப்புகள் உண்டு. இன்றைய உலகில் பக்கவிளைவுகள் இல்லாத உணவுகள், இரசாயனம், பூச்சிகொல்லிகள் இல்லாத உணவுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அத்தனை உணவு வகைகளிலும்  ஏதாவது ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.

அவர் சொன்னார், இவர் சொன்னார், அதில் படித்தேன், இதில் கேட்டேன் என்று அனைத்துக்கும் பயந்துக் கொண்டிருந்தால், எதைத்தான் சாப்பிடுவது?. இன்று விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்திருக்கிறார்கள், தாய்ப் பாலில் கூட சில இரசாயனங்கள் கலந்து குழந்தைக்கு செல்கிறது என்று. அதற்காக தாய்ப் பால் கொடுப்பதை நிறுத்திவிட  முடியுமா?.

ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன் மைதாவில் பென்சொயில், க்ளோரின், பொட்டாசியம் ப்ரொமட், என்சைம், அசெடொன் பெரொசைட், இவ்வாறான பல ஆபத்தான இரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அவை உடலுக்கு மிகவும் ஆபத்தானவை. சரி இப்போது கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்போம், இந்த இரசாயனங்கள் சமைத்த பின் அப்படியே இருக்குமா அல்லது அதன் தன்மைகள் மாற்றமடையுமா? கண்டிப்பாக மாறிவிடும்

என்னதான் ஆபத்தான இரசாயனமாக இருந்தாலும் அதை சமைக்கும் போது, அந்த இரசாயனம் மற்ற உணவுப் பொருட்களுடன் சேரும் போது அதன் தன்மை கண்டிப்பாக மாறிவிடும், அப்படியே இருக்காது. அதனால் எதற்காகவும் பயப்படாதீர்கள். பசித்தால் அல்லது அதிக ஆசை உண்டானால், ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள். அதில் உள்ள கழிவுகளை, ஆபத்தான விசயங்களை உங்கள் உடலே வெளியேற்றிவிடும்.

எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நான் சொன்னேன் என்பதனால், வேண்டுமென்றே இரசாயனம் கலந்த உணவுகளையும், தீங்கு செய்யக் கூடிய உணவு வகைகளையும் தேடி சாப்பிடாதீர்கள். பசியின் அளவுக்கு, அளவோடு நன்றாக மென்று விழுங்குங்கள் மற்றதை உங்கள் உடல் பார்த்துக் கொள்ளும்.

எதையும் அளவோடு வைத்துக்கொள்வது மிகவும் நன்மையானது.

Image by stokpic from Pixabay

நோய்களை குணப்படுத்தும் உண்மையான மருத்துவர்

உண்மையான மருத்துவர் 
நோயாளிகளின் நோய்களை குணப்படுத்துவது தாங்கள் அல்ல என்பதை, ரெய்கி சிகிச்சை அளிக்கும் அனைவரும் உணர வேண்டும். சிகிச்சை பெறுபவரின் உடலில் கலக்கும் பிரபஞ்ச ஆற்றல் தான் அவரின் நோய்களையும், வேதனைகளையும், துன்பங்களையும் நீக்க துணைப் புரிகிறது என்பதை உணர வேண்டும்.

ரெய்கி சிகிச்சை அளிப்பவர் அல்லது மற்ற இயற்கையை சார்ந்த சிகிச்சையை அளிப்பவர் நான்தான் சிகிச்சை அளிக்கிறேன், நான்தான் குணப்படுத்துகிறேன் என்ற எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் தான் மக்களுக்கு நோய்களை குணப்படுத்துகிறேன், துன்பங்களில் உதவுகிறேன் என்பன போன்ற எண்ணங்கள் உருவாக தொடங்கிவிட்டால் அவருக்குள் ஆணவமும் கர்வமும் உண்டாகி விட்டது என்று அர்த்தம். 

நடப்பான அனைத்தும் அவன் செயல், அவன் அருளாலே, அவன் உதவியைக் கொண்டு நான் என் முயற்சியை செய்கிறேன். முடிவை இறைவன் கையில் ஒப்படைக்கிறேன் என்று நல்லதோ கெட்டதோ அனைத்தையும் இறைவன் மீது சாற்றி விட வேண்டும். நான் தான் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்தால், முயற்சிகள் வெற்றி பெறாமல் போகலாம் மேலும் மற்றவர்களின் கர்மாக்களையும் நாம் சுமக்க நேரிடலாம். 

நோய்களை குணப்படுத்தும் 5 வழிமுறைகள் 
ஒரு மனிதர் நோய்வாய்ப் படும்போது அதை முழுமையாக குணப்படுத்த அவர் ஐந்து அடிப்படை ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இந்த ஐந்து அடிப்படை ஒழுக்கங்களை கடைபிடிக்கும் போது அவர் விரைவாக குணமடைவார். இந்த ஒழுக்கங்களை கடை பிடிக்கவில்லை என்றால் என்னதான் உயரிய மருத்துவம் செய்தாலும், நவீன மருத்துவம் செய்தாலும், அவரின் உடலும் மனமும் குணமடைய தாமதமாகும். 

1. உணவை உட்கொள்ளும் முறைகள் 
உணவு உண்ணும் பழக்கத்தை முதலில் முறைப்படுத்த வேண்டும். பசித்தால் மட்டுமே பசியின் அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும். அந்த உணவு உடலுக்கு ஒத்துக்கொள்ள கூடியதாகவும் எளிதில் ஜீரணிக்க கூடியதாகவும் இருத்தல் வேண்டும். 

2. தண்ணீர் அருந்தும் முறை 
தேவையில்லாமல் தாகம் இல்லாமல் தண்ணீர் அருந்த கூடாது. தாகம் உண்டானால் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். சீனி, வர்ணங்கள், வாசனைகள், இரசாயனங்கள், போன்றவை கலக்கப்பட்ட பானங்களை அருந்த கூடாது. சுடவைத்த அல்லது அதிகமாக வடி கட்டப்பட்ட தண்ணீரை அருந்தக் கூடாது. 

3. உடலுக்கு போதிய ஓய்வு வேண்டும் 
உடலில் சோர்வு உண்டானால் ஓய்வெடுக்க வேண்டும். அசதியாக இருக்கும் போது வற்புறுத்தி வேலைசெய்யக் கூடாது.  

4. இரவு உறக்கம் அவசியம் 
இரவு 9 மணிக்கெல்லாம் உறக்கம் வரவில்லை என்றாலும் படுக்கைக்கு சென்றுவிட வேண்டும்.  

5. மன அமைதி அவசியம் 
மனதை கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், எரிச்சல், கர்வம் போன்ற தீய எண்ணங்கள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். 

இந்த 5 விசயங்களை சரி செய்யும் போதே உடல் பாதி குணமாகிவிடும். மீதியை ரெய்கி சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம். 

ஆரோக்கியத்தை மீட்டு தக்க வைத்துக் கொள்ள

 
ஆரோக்கியம் என்பது இன்றியமையாத ஒன்று. இந்த உலகில் நீங்கள் அடைய நினைப்பது எதுவாக இருந்தாலும், அதை அடைய உங்களுக்கு அடிப்படை தேவையாக இருப்பது உடலின் ஆரோக்கியம். ஆரோக்கியம் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாக இருந்தாலும் அதை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது என்று பெரும்பாலான மனிதர்களுக்கு தெரிவதில்லை. ஆரோக்கியம் மனிதனின் உள்ளேதான் இருக்கின்றது என்பதை உணராமல், மருந்து, மாத்திரை, வைத்தியம் என்று பலர் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கில மருத்துவம் செய்பவர்கள், அந்த மருத்துவம் செய்து மீண்டும் முழுமையான ஆரோக்கியம் பெற்றதாக நான் யாரையும் இதுவரையில் பார்த்ததில்லை. அலோபதி (மேற்கத்திய) மருத்துவத்தில் ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஒன்று மரணம் வரையில் நோயாளியாகவே வாழ்ந்து, தினமும் மருந்து மாத்திரைகளை உட்கொள்வது. இரண்டு நோய் உண்டான உறுப்புகளை நீக்கிவிட்டு ஊனமாக தொந்தரவுகளுடன் வாழ்வது. அல்லது மருந்துகளின் மற்றும் இரசாயனங்களின் பக்கவிளைவுகளால் நோய் முற்றி அல்லது புதிய நோய்கள் உருவாகி மரணமடைவது. நோய்களை எவ்வாறு குணப்படுத்துவது என்று ஆங்கில மருத்துவத்துக்கு தெரியாது. காரணம் அவர்கள் நோய்களின் உண்மையான மூல காரணங்களை கண்டறிவதில்லை. மாறாக அவர்கள் நோய்களின் அறிகுறிகளுக்கு மட்டுமே மருத்துவம் செய்பவர்கள்.

ஆங்கில மருத்துவம் மட்டுமின்றி பெரும்பாலான மருத்துவங்கள் நோயாளிகளின் நோய்களை தீர்ப்பதில் தோல்வி கண்டுள்ளன. இதற்கு காரணம் அவர்களுக்கு மனிதர்களை பற்றிய முழுமையான புரிதல்கள் கிடையாது. மனிதன் என்பவன் உடல், மனம், ஆற்றல் மற்றும் உயிரின் கலவை என்பதை உணராமல், உடலுக்கு மட்டுமே மருத்துவம் செய்து எந்தப் பயனுமில்லை. நோய்கள் மனதிலும், ஆற்றலிலும், கர்மாவினாலும் உருவாகலாம்.

உடலில் உருவாகும் நோய்களுக்கு உடலிலும். மனதில் உருவாகும் நோய்களுக்கு மனதிலும். ஆற்றலினால் உருவாகும் நோய்களுக்கு ஆற்றலிலும் மருத்துவம் செய்ய வேண்டும். கர்மாவினால் உண்டாகும் நோய்களை மனதார ஏற்றுக்கொண்டு அவற்றை அனுபவிப்பதே, அவற்றை குணப்படுத்தும் வழியாகும். கர்ம வினைகளினால் உண்டாகும் நோய்களை குணப்படுத்த முயற்சி செய்தாலும் கர்மா கணக்கு தீரும் வரையில் அவற்றை குணப்படுத்த முடியாது.

ஒரு நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் அந்த நோய் ஏன்? எங்கே? எவ்வாறு? உருவானது என்பதை கண்டறிய வேண்டும். நோயின் மூல வேரை கண்டறியாமல் ஒரு சிறு புண்ணைக் கூட யாராலும் குணப்படுத்த முடியாது. இதற்கு உதாரணம் ஆங்கில மருத்துவர்கள், சர்க்கரை நோயாளிகளின் கால்களில் புண்களை குணப்படுத்த தெரியாமல் காலை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண புண்ணை ஆற்றத் தெரியாத மருத்துவத்தை நம்பி பலர் தங்களின் உயிரையும் ஒப்படைக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக: ஒருவருக்கு வயிறு வலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த வயிற்று வலியை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் அந்த வயிற்று வலி எங்கே? ஏன்? எதனால்? உருவானது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அதை விட்டு விட்டு வயிறு வலித்தால் இதை சாப்பிட வேண்டும் அல்லது அந்த மருந்தை சாப்பிட வேண்டும் என்று தொடங்கினால். அந்த வலி தற்காலிகமாக குறையலாம். ஆனால் அந்த வலி மீண்டும் வர கூடும், உடலின் மற்ற பகுதிகளுக்கும் வலி மாறக்கூடும், புதிய தொந்தரவுகள் வேறு வடிவிலும் உருவாகலாம் அல்லது சாதாரண வலியாக இருந்தது கொடிய நோயாகவும் மாறலாம்.

உடலில் வலிகள் உண்டாக பல காரணங்கள் இருக்கலாம். வலிக்கும் பகுதியில் சக்தி குறைவாக இருக்கலாம். உடலில் கழிவின் தேக்கம் அதிகமாக இருக்கலாம். அந்த வலி ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். மன அழுத்தமாக இருக்கலாம். அல்லது மனதில் உண்டான கவலை, பயம், துக்கம் போன்றவை வலிகள் உண்டாக காரணமாக இருக்கலாம்.

உடலில் தொந்தரவுகள் உண்டானால் அந்த தொந்தரவின் மூலத்தை கண்டறியாமல் எவ்வாறு மருத்துவர்கள் நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்?. ஒரு இயந்திரம், கணினி, அல்லது ஆய்வு கூடத்தின் அறிக்கைகளைக் கொண்டு அனைத்தையும் அறிந்துக் கொள்ள முடியுமா?. நிச்சயமாக யாராலும் முடியாது. இதனால் தான் இயந்திரங்களின் உதவியினால் கண்டறியப்படும் எந்த நோயும் குணமாவதில்லை. ஒரு இயந்திரம் (மிஷின்) ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வற்றை மீண்டும் கூறுமே ஒழிய அதற்கு எந்த அறிவும் கிடையாது. இயந்திரம் சொல்வது சரியாகத்தான் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

மனதில் தோன்றும் நோய்களையும், சக்தி தட்டுப்பாட்டால் உண்டாகும் நோய்களையும் கண்டறியக் கூடிய இயந்திரம் இதுவரையில் கிடையாது. ஒரு நோயாளியுடன் அமர்ந்து அவருடன் நேரம் செலவழித்து பொறுமையாகவும் விரிவாகவும் பேசினால் ஒழிய உண்மையான நோயின் மூலக் காரணத்தை கண்டறிய முடியாது.

உடலில் வலி என்று ஆங்கில மருத்துவரிடம் சென்றால் அவர் வலி தெரியாமல் இருக்க மாத்திரைகளை பரிந்துரைக்கிறார். அந்த மாத்திரைகள் வலியை குணப்படுத்துமா? அல்லது வலியை மறைக்க மட்டும் உதவுமா? நிச்சயமாக அந்த மாத்திரைகள் வலிகளை குணப்படுத்துவது கிடையாது மாறாக அந்த மாத்திரைகள் நோயாளி தன் வலியை உணராமல் இருக்க உணர்வு மண்டலங்களை கட்டுப்படுத்துகிறது. வலியை உருவாகிய நோயும் பாதிப்படைந்த உறுப்பும் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. பாதிப்புகளும் நோய்களும் பெரிதாகும். இதனால் தான் ஆங்கில மருத்துவத்தில் பெரும்பாலான நோயாளிகள் நோய்கள் குணமாகாமல் மற்றும் நோய்கள் மோசமாகி மரணிக்கிறார்கள்.