புதியவை
latest
குழந்தைகள்
Showing posts with label ஆரா. Show all posts
Showing posts with label ஆரா. Show all posts

ஆராக்களின் உதாரணம் (ஆரோக்கியமான ஆராக்களின் உதாரணம்) 

(ஆரோக்கியமற்ற ஆராக்களின் உதாரணம்) 

ஆராவையும் ஆற்றலையும் சீரழிக்க கூடிய விசயங்கள்


1. உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகள் மற்றும் பானங்கள்.
2. அதிகபடியான அசதி, சோர்வு, தூக்கமின்மை.
3. வாழ்க்கையில் விரக்தி அல்லது மன அழுத்தம்.
4. பயம், கவலை, சோகம், திமிர், கர்வம் போன்ற உணர்வுகள்.
5. உடலின் ஆரோக்கியம் குறைபாடுகள்.
6. தவறான புத்தகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள்.
7. தவறான மனிதர்களின் உறவுகள்.
8. தூய்மையற்ற இடங்கள்.
9. தவறான பழக்க வழக்கங்கள்.


ஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்

மனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழகும் போதும், தவறான இடங்களுக்கு செல்லும் போதும்; மனிதர்களின் ஆராவில் துளைகள் விழலாம் உடலின் ஆற்றல்களும் குறையலாம். உடலின் ஆற்றல் குறைவாக இருப்பதினால் அந்த துளைகளின் வழியாக தீய ஆற்றல்களும், தீய எண்ணங்களும், துர் ஆன்மாக்களும் அந்த மனிதனின் உடலுக்குள் நுழைய கூடும். இதன் காரணமாக பல துன்பங்களும், வேதனைகளும், நோய்களும் சம்பந்தப்பட்டவருக்கு அண்டக்கூடும்.

மனிதர்களின் ஒவ்வொரு தவறான பழக்கமும், தவறான வாழ்க்கை முறையும் அவர்களின் ஆராவையும் ஆற்றலையும் சீரழிக்க கூடும். அதைப்போன்றே மனிதர்கள் கடைபிடிக்கும் ஒவ்வொரு நல்ல பழக்க வழக்கமும் அவர்களின் ஆராவை சீர்படுத்தும்.

ஆரோக்கியமற்ற ஆராவையும் குறைந்து போன ஆற்றலையும் சில பழக்க வழக்கங்களை சரி செய்வதன் மூலமாக குணப்படுத்தலாம். 

1. உடலுக்கு ஒத்துப்போகும், எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை உண்பது.
2. அதிகமான பழங்களை உட்கொள்வது.
3. தூய்மையான நீரை பருகுவது.
4. போதிய அளவு ஓய்வெடுப்பது.
5. மனதை எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் வைத்திருப்பது.
6. நல்ல மனிதர்களுடன் பழகுவது.
7. புனிதமான இடங்களுக்கு செல்வது.
8. தூய்மையான ஆடைகளை அணிவது.
9. வாசனை திரவியங்களை பயன்படுத்துவது.
10. பூ, பன்னீரில் குளிப்பது.
11. கல்லுப்பு அல்லது மலை உப்பில் குளிப்பது.

இவை இழந்த ஆற்றல்களை திரும்ப பெரும், அல்லது இருக்கும் ஆற்றல்களை தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகள் 

ஆராவை (Aura) சீரழிக்க கூடியவை?

தவறான வாழ்க்கை முறையையும், தவறான உணவு முறையையும், தவறான மனநிலையும், தவறான பழக்க வழக்கங்களும், தவறான சூழ்நிலையும் நமது ஒளியுடலை (ஆராவை) சீரழிக்க கூடியவை.

ஆராவை (Aura) குணப்படுத்துவது எப்படி?

வாழ்க்கை முறையையும், உணவு முறையையும், மனநிலையையும், பழக்க வழக்கங்களையும், மாற்றும் போது ஒளியுடல் (Aura) குணமாகிவிடும்.

ஆராவின் (Aura) பொறுப்புகள் என்ன?

மனிதர்களின் ஒளியுடலின் (ஆராவின்) பொறுப்புகள், மனிதர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதும், மற்ற மனிதர்களின், உயிரினங்களின் எண்ணங்களை உணர்ந்துக் கொள்வதும், பிரபஞ்சத்துடன் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்வதுமாகும்.

ஆரா (Aura) என்பது என்ன?

ஆரா (Aura) என்பது மனிதர்களின் உடல்களில் ஒன்று. இந்த உடல் ஒளியால் ஆனது. இது மனிதனின் தோள்களுக்கு மேல் அமைந்துள்ளது. இதை  சாதாரணமாக கண்களால் காண முடியாது.

ஆரா (Aura) எங்கு அமைந்துள்ளது?

ஆரா எனும் ஒளியுடல் மனிதர்களின் தோலில் மேல் ஒரு ஆடையை போன்று அமைந்துள்ளது.

ஆரா (Aura) - ஒளி உடல்

ஆரா (Aura) என்பது என்ன?
ஆரா (Aura) என்பது மனிதர்களின் உடல்களில் ஒன்று. இந்த உடல் ஒளியால் ஆனது.

ஆரா (Aura) எங்கு அமைந்துள்ளது?
ஆரா எனும் ஒளியுடல் மனிதர்களின் தோலில் மேல் ஒரு ஆடையை போன்று அமைந்துள்ளது.

ஆராவின் (Aura) பொறுப்புகள் என்ன?
மனிதர்களின் ஒளியுடலின் (ஆராவின்) பொறுப்புகள், மனிதர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதும், மற்ற மனிதர்களின், உயிரினங்களின் எண்ணங்களை உணர்ந்துக் கொள்வதும், பிரபஞ்சத்துடன் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்வதுமாகும்.

ஆராவை (Aura) சீரழிக்க கூடியவை?
தவறான வாழ்க்கை முறையையும், தவறான உணவு முறையையும், தவறான மனநிலையும், தவறான பழக்க வழக்கங்களும், தவறான சூழ்நிலையும் நமது ஒளியுடலை (அவராவை) சீரழிக்க கூடியவை.

ஆராவை (Aura) குணப்படுத்துவது எப்படி?
வாழ்க்கை முறையையும், உணவு முறையையும், மனநிலையையும், பழக்க வழக்கங்களையும், மாற்றும் போது ஒளியுடல் (Aura) குணமாகிவிடும்.

Reiki Tamil Class #2 Body, Aura and Chakra


Online Tamil Acupuncture Class. 2nd Video introduction for body, aura and chakras.

மனிதனின் நான்கு உடல்களும் ஒன்றின் மேல் ஒன்றாக போர்வையைப் போன்று அமைந்துள்ளது. ஆரா என்பது மனிதனின் ஒளி உடல். அது ஒரு தொடர்பு மற்றும் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. மனிதனின் உணர்வுகள் மற்றும் எண்ணங்களுக்கு ஏற்ப வர்ணங்கள் மாறுப்பாடு அடையும். உடலின் சக்கரங்கள் என்பது மனிதனின் சக்தியை உற்பத்தி செய்து சேர்த்து வைத்து தேவைப்படும் போது பகிர்ந்தளிக்கும் சூட்சம உறுப்புகளாகும்.