கேள்வி பதில்
கேள்வி பதில்
Showing posts with label ஆன்மா. Show all posts
Showing posts with label ஆன்மா. Show all posts

ஜீவசமாதி என்றால் என்ன?

ஒரு ஆன்மா (உயிர்) இந்த உலகில் வாழ வேண்டுமென்றால் உடல் தேவை. உடல் அழித்துவிட்டால் உயிரால் இந்த உலகில் வாழ முடியாது. உடலைப் பிரிந்த உடல் அழிந்துவிடும், உடல் அழிந்தால் அந்த உடலுக்குச் சொந்தமான ஆன்மா ஆவியாக மாறிவிடும். ஆவியான ஆன்மா அதன் இஷ்டம் போல் இயங்க முடியாது. அதனால்…

நம் சித்தர்களும் ஞானிகளும் அவர்களுக்கு இந்த உலகில் கடமைகள் மீதமிருந்தும், ஆயுள் முடிவு நெருங்கிவிட்டால் அவர்களின் உடல் அழியாமல் இருக்க சில பயிற்சிகளையும் வழிமுறைகளையும் பின்பற்று தங்களின் உடலை அழியாமல் பாதுகாப்பார்கள்.

அந்த உடலைக் குறிப்பிட்ட நேரகாலத்தில் சமாதியில் வைத்து மூடிவிடுவார்கள். அவர்களின் உடலில் அசைவு இல்லாமல் இருந்தாலும் உயிர் அந்த உடலின் உள்ளேயே ஒடுங்கியிருப்பதால் அதற்கு ஜீவ சமாதி என்று பெயர் வைத்தார்கள். ஜீவசமாதியை அடைந்தவர்களின் நோக்கம் நிறைவேறும் வரையில் அந்த சமாதியில் உடலும் உயிரும் அழியாமல் இருக்கும்.

உலக வாழ்க்கையிலிருந்த போது அந்த சித்தர், ஞானி, மகான், என்னவெல்லாம் செய்தாரோ, அவருக்கு என்னவெல்லாம் ஆற்றல் இருந்ததோ அவை அத்தனையும் அந்த ஜீவசமாதியில் கிடைக்கும். ஜீவசமாதி என்பது உயிரோடிருக்கும் ஒரு மனிதனுக்கு சமமானதால், ஜீவசமாதிகளுக்கு கோவில்களை விடவும் ஆற்றலும் மரியாதையும் முக்கியத்துவமும் அதிகம்.

உறக்கத்தில் ஆன்மாவின் பயணங்கள் | Out of body experience | Astral projectionநாம் உறங்கும் போது நம் ஆன்மா என்ன செய்கிறது? உறக்கத்தில் பற்பல அனுபவங்கள் வருவது ஏன்?

மனித ஆன்மாக்களின் பூர்வீகம் எது?

மனிதர்களின் ஆன்மா இந்த பூமியைச் சார்ந்தது அல்ல என்பது எனது கருத்து. பிற கிரகங்களிலிருந்து ஆன்மாக்கள் பயிற்சிக்காக இந்த பூமியில் பிறப்பெடுக்கின்றன. பயிற்சி முடிந்து மீண்டும் சொந்த கிரகத்துக்குத் திரும்புவதை தமிழர்கள் வீடு பேறு என்றார்கள்.

மனிதர்கள் ஏன் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறார்கள்?

மனிதர்களுக்கு கவலை தோன்றினாலும், மகிழ்ச்சி தோன்றினாலும், சிந்தனைகள் தோன்றினாலும், பெரும்பாலானோர் வானத்தையே பார்ப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களின் வீடான பூர்வீகம் கிரகம் அங்குதான் இருக்கிறது. இன்னொரு காரணம் ஆகாஷிக் ரெகார்ட்ஸ் என்ற பிரபஞ்சத்தின் பதிவுகளை அவர்கள் பார்க்கிறார்கள், இவற்றை அவர்களின் ஆன்மா மட்டுமே அறியும்.

எதற்காக மனிதப் பிறவி எடுத்திருக்கிறோம்?

ஆன்மாக்களின் பயிற்சி காலமாக இந்த உலகம் இருக்கிறது. மனித வாழ்க்கை என்றால் என்னவென்ற பயிற்சிக்காகவும், இன்ப துன்பங்களை அறிந்துகொள்ளவும், அன்பு என்றால் என்னவென்று உணர்ந்து கொள்ளவும், மனித பிறப்பை எடுத்திருக்கிறோம்.

மறுபிறப்பு என்பது உண்டா?

உண்டு. ஆன்மாக்கள் அழிவதில்லை அவை மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்றன. ஆன்மாக்கள் பயிற்சிக்காக இந்த பூமிக்கு வருவதனால், வாழ்க்கை பயிற்சியில் தேறாத ஆன்மாக்கள் மீண்டும் பிறவி எடுக்க வேண்டி வரும்.

ஆன்மாக்களின் பரிமாண வளர்ச்சி

ஆன்மாக்கள் தொடக்கத்திலேயே மனித பிறப்பை எடுப்பதில்லை. ஆன்மாக்களின் வாழ்க்கை என்பது ஒரு பயிற்சியாகும், மரணமில்லா பெருவாழ்வுக்கான பயிற்சியாகத்தான் இந்த உலக வாழ்க்கை கருதப்படுகிறது. அதனால் இந்த பூமியில் தோன்றும் ஆன்மாக்கள் தொடக்கத்திலேயே, பூமியின் உயரிய பிறவியான மனித பிறப்பை எடுக்காமல்; ஒரு அறிவு உயிராக தன் வாழ்க்கையை தொடங்குகிறது. பிறப்பு இறப்பு என்பது உயிரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பரிமாணமே ஒழிய, மரணம் என்பது முடிவல்ல.

இன்று மனித வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஆன்மாக்கள் தொடக்கத்தில் ஒரு அறிவு ஜீவனான தாவரங்களாக, தங்கள் பிறவியை தொடங்கின; அதிலும் தாவரத்தில் மிக சிறிதான புல்லினத்தில் இருந்து. ஒரு அறிவு உடைய தாவரங்களில் அனைத்து வகையான பிறவிகளையும் பிறந்து அனுபவப்பட்டும் பின்பு அடுத்த நிலை பிறப்பான இரு அறிவு உயிராக அதாவது புழு, பூச்சி மற்றும் வண்டுகளாக பிறவி எடுக்கின்றன, இரு அறிவு பயிற்சி முடிந்த பின்பு, மூன்று அறிவு ஜீவனாக பிறவி எடுக்கின்றன. இந்த சுழற்சி இறுதியில் ஆறு அறிவு ஜீவனான மனிதனில் பூர்த்தி அடைகிறது.

மனித பிறவி எடுத்த ஆன்மாக்களுக்கு மட்டுமே மனமான ஆறாவது அறிவு கொடுக்கப்படுகிறது. பகுத்தறிவு கொடுக்கப்பட்டதால் மனிதர்களுக்கு மட்டுமே பாவ புண்ணிய கணக்குகள் உள்ளன. மனிதர்களை தவிர்த்து மற்ற உயிரினங்களுக்கு சரி தவறு மற்றும் பாவம் புண்ணியம் என்ற எந்த அளவுக்கோளும் கிடையாது.

மனித பிறவி என்பது விலங்கு பிறப்பின் தொடர்ச்சியாக இருப்பதனால்தான் சில மனிதர்களுக்கு விலங்குகளின் குணம் மீதம் இருக்கிறது. நம்மை சுற்றியே விலங்குகளின் குணமுடைய பல மனிதர்களை பார்க்கலாம். அவ்வளவு ஏன் நமக்கு கூட விலங்குகளின் சில குணங்கள் மிச்சம் இருக்கலாம். விலங்குகளிலிருந்து மனித பிறப்பு எடுத்த ஆன்மாக்கள் அதன் தொடர்ச்சியாக, மனிதனிலும் உயரிய பிறப்பும் எடுக்க வாய்ப்புள்ளது.

முதல் ஐந்து அறிவு வகைகளின் பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் எளிதாக தங்களின் பயிற்சியை முடித்துவிடுகின்றன. மனித பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் மட்டுமே, மனதின் இச்சைகளுக்கு கட்டுப்பட்டு இந்த பூமியில் சிக்கிக்கொள்கின்றன. மனிதர்களின் மனங்கள் பக்குவப்படும் வரையில் பிறவிகளும் பிறப்புகளும் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.

ஆறாவது அறிவு என்பது மனமானதால், ஏழாவது அறிவு மனதின் வளர்ச்சி நிலையாகத்தான் இருக்கும். இவ்வாறு ஆன்மாக்களுக்கு ஒன்பது அறிவுகள் வரையில் வளரும் ஆற்றல் இருக்கும் என்பது எனது கணிப்பு.