கேள்வி பதில்
கேள்வி பதில்

சிசேரியன் எனும் வியாபாரமும் கூலிப்படைகளும்

இன்றைய கால கட்டத்தில் கர்ப்பமுற்ற தாய்மார்கள் சிசேரியன் செய்து அல்லது வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுக்கும் செயல் அதிகரித்துவிட்டது. தவறான உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையினால் குழந்தையை ஈன்றெடுக்க முடியாமல் தவிக்கும் சில தாய்மார்களுக்கு, தவிர்க்க முடியாத காரணங்களால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க நேரிடலாம். ஆபத்தான சூழ்நிலையின் காரணமாக மட்டுமே அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

இதே நாட்டில் சில மருத்துவர்கள் பணத்துக்காக சுகப்பிரசவம் ஆகக்கூடிய பெண்களுக்குக் கூட ஏதாவது பொய்யான காரணம் கூறி, அவரையும் அவரின் குடும்பத்தாரையும் மிரட்டி, வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள். 

கேவலம் 20 ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கிடைக்கும் என்பதற்காக இந்த பாவச் செயலை துணிந்து செய்கிறார்கள். இந்த உலகில் மனிதர்கள் செய்யும் அத்தனை பாவங்களும் அவர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் ஏதாவது ஒரு வழியில் திரும்பவரும் என்ற அச்சமில்லாமல் கூலிப்படைகளைப் போன்று செயல்படுகிறார்கள். கூலிக்கு கை கால்களை வெட்டுபவர்களுக்கும் பணத்துக்காக கர்ப்பமுற்ற பெண்களின் வயிற்றைக் கிழிப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. அவர்களை மருத்துவர்கள் என்று கூறக்கூடாது, மருந்து வியாபாரிகள் என்றுதான் கூற வேண்டும். மருத்துவர் என்று அழைப்பதற்கு தகுதியில்லாத பாவிகள்.

சில மருத்துவர்களும், சில பொதுமக்களும் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுப்பதை ஒரு சாதனையைப் போன்றது பார்க்கிறார்கள். பெண்களே, தாய்மார்களே, உண்மையான நேர்மையான மருத்துவர்களே ஒன்றுமட்டும் நினைவில் கொள்ளுங்கள், கர்ப்பமுற்ற தாய்மார்களுக்கு வயிற்றைக் கிழித்து (சிசேரியன்) குழந்தையை வெளியே எடுப்பது சாதனையல்ல, மருத்துவமுமல்ல.

நன்மையான ஒன்றை உருவாக்குவதுதான் சாதனை அழிப்பது அல்ல. எந்த வலியும் வேதனையுமில்லாமல் ஒரு பெண் அவள் குழந்தையை ஈன்றெடுக்க ஒருவர் வழிகாட்டினால் அவர் மருத்துவர். குழந்தை ஆரோக்கியமாக பிறக்க, தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக வாழவும் வழிகாட்டினால் அவர் உண்மையான மருத்துவர்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலை, அல்லது தாயின் சேயின் உயிருக்கு ஆபத்தாக முடியக்கூடிய சூழ்நிலையில்லாமல் ஒருவன் ஒரு பெண்ணின் வயிற்றைப் பணத்துக்காக கிழிப்பானே ஆனால் அவன் மனிதனே அல்ல விலங்கினதைச் சார்ந்தவன். 

மருத்துவர்கள் என்று தங்கக்களை அடையாலப்படுத்திக் கொள்ளும் சில பெண்களும் பணத்துக்காக இன்னொரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவமும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பெண் மருத்துவர்கள் தான் கண்களால் காணக்கூடிய பேய்களின் உருவங்கள்.

வயிறு கிழிக்கப்பட்டு குழந்தை வெளியில் எடுக்கப்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பப்பையை நீக்கிவிட்ட பெண்கள் அனுபவிக்கக் கூடிய வேதனைகள்.

1. குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் போகலாம்.
2. குழந்தைக்கு அச்ச உணர்வு அதிகமாக இருக்கலாம்.
3. தாய்க்கு கால்வலி, மூட்டுவலி, இடுப்புவலி, பிடரிவலி உண்டாகலாம்.
4. கால் வீக்கம் உண்டாகலாம், நடக்கச் சிரமம் உண்டாகலாம்.
5. அசீரணம் மற்றும் மலச்சிக்கல் உண்டாகலாம்.
6. கர்ப்பப்பை தொடர்புடைய பாதிப்புகள், வலிகள், கட்டிகள், உண்டாகலாம்.
7. சில வருடங்களுக்குப் பிறகு, சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு உண்டாகலாம்.
8. இன்னும் பல தொந்தரவுகள் உண்டாகலாம்.

20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதற்காக வயிற்றைக் கிழிப்பவர்களே, கர்ப்பப்பையை நீக்குபவர்களே மேலே குறிப்பிட்ட அத்தனை வேதனைகளையும் அந்த தாய் தன் வாழ்நாள் முழுமைக்கும் அனுபவிக்க நேரிடும். அந்தப் பாவம் முழுவதும் உங்களையும் உங்களின் குடும்பத்தையும் தான் சேரும்.

சில பெண்கள் பிரசவ வேதனையை அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவும், குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும், வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள். இதுபோன்று சிந்திக்கும் பெண்களே ஒன்றை மறந்துவிடாதீர்கள், ஒரு தடவை வேதனையை அனுபவிக்கக் கூடாது என்று எண்ணுவதால் நீங்கள் வாழ்நாள் முழுமைக்கும் மேலே குறிப்பிட்ட வேதனைகளை அனுபவிக்க நேரிடும். சிந்தித்துச் செயல்படுங்கள்.

விலங்குகள்கூட எவர் உதவியுமின்றி சுயமாகவும் ஆரோக்கியமாகவும் குட்டிகளை ஈன்றெடுக்கும் போது ஆறறிவு மனிதர்களான உங்களால் இயலாதா? யாரையும் நம்பாதீர்கள் ஆரோக்கியமாக உண்ணுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள், உடல் சொல்வதை மட்டுமே கேட்டு நடங்கள், எந்த மருந்து மாத்திரைகளும் உட்கொள்ளாதீர்கள்; வலி வேதனையின்றி ஆரோக்கியமாக குழந்தைகள் பிறக்கும்.

மருத்துவ வியாபாரிகளே வேதனைகளை அனுபவிக்கும் பெண்களின் கண்ணீரும், வேதனையும், வேண்டுதலுக்கு உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் சும்மாவிடாது. திருத்தி பாவமன்னிப்பு தேடுங்கள்.

பல பெண்கள் என்னிடம் பகிர்ந்துகொண்ட வேதனைகளின் விளைவாகவும் இனிமேல் இதுபோன்ற கொடுமைகள் பெண்களுக்கு நடக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த கட்டுரையை எழுதுகிறேன். இந்த கட்டுரை அறத்தைப் பேணி தொழில் செய்யும் மருத்துவர்களுக்குச் சேராது.

தற்கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல் - சமுதாயத்தின் தோல்வி - பாகம் 2

மன தைரியமும், எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளும் துணிவும் இருந்தால் தற்கொலை என்ற பேச்சே எழாது. ஆனால் மன தெரியத்தை திடீரென உருவாக்க முடியாது. மனதின் திடம், தைரியம் என்பது புரிதலினால் உண்டாகும் துணிவாக இருக்க வேண்டும். வெறுமனே வாயால் சுடும் வடையாக இருக்கக் கூடாது.

இளமைப் பருவம் என்பது மிகவும் முக்கியமான, ஒரு மனிதனின் மரணம் வரையிலான எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய பருவமாகும். இளம் பிராயத்தில் ஒரு மனிதன் பார்க்கும் மனிதர்களும், அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும், அவன் கற்றுக்கொள்ளும் விஷயங்களும் தான் அவனது வாழ்வின் ஏற்றத்தையும் தாழ்வையும் நிர்ணயிக்கின்றன.

குழந்தைகளுக்கு இன்பங்களையும், மகிழ்ச்சியையும் மட்டுமே காட்டி வளர்க்கக் கூடாது. இந்த உலகில் இருக்கும் தீயவற்றையும் காட்டி வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால்தான் இந்த உலக வாழ்க்கையை பற்றிய தெளிவான பார்வை அந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

கூட்டுக் குடும்பங்களில் வளரும் குழந்தைகள் சிறுவயது முதலாக பல்வேறு பிரச்சினைகள் அந்தக் குடும்பங்களில் நடப்பதைப் பார்த்து வளர்வார்கள். இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை, வாழ்க்கையில் இது போன்ற பல்வேறு விஷயங்களை நாம் சந்திக்க நேரிடும் என்று சிறுவயதிலேயே அதற்குத் தயாராகிறார்கள். சிறு பாலியம் முதலே எந்தப் பிரச்சனையை எவ்வாறு அணுக வேண்டும் என்று பெரியவர்கள் எடுக்கும் முடிவுகளைப் பார்த்தும் பழக்குகிறார்கள்.

சிறு குடும்பங்களில் வாழும் குழந்தைகளுக்கு அதிக கவனிப்பும் சந்தோஷமும் கிடைக்கும். அதனால் அவர்கள் இதுதான் உலகம் என்று எண்ணி வளர்கிறார்கள். வளர்ந்த பிறகு வாழ்க்கையில் தோல்விகளும், நஷ்டங்களும், கஷ்டங்களும், துன்பங்களும், துயரங்களும், உண்டானால் அவற்றைச் சமாளிக்க முடியாமல் திணறிப் போகிறார்கள். சிலர் அச்சத்தினால் தங்களின் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள்.

பள்ளிக்கூட படிப்பை மட்டுமே நம்பி பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கக் கூடாது. பள்ளிக்கூட படிப்பு என்பது குழந்தைகளை சிறந்த வேலைக்காரர்களாக, அரசாங்கத்துக்கு அடங்கி ஒடுங்கி வாழும் மனிதர்களாக்க மாறும் வேலைகளை மட்டுமே செய்யும். இந்த உலகில் தைரியமாக தலைநிமிர்ந்து வாழ கற்றுத்தராது. இந்த உலகில் தலைநிமிர்ந்து வாழவும், பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், பெற்றோர்களும் குடும்ப உறவுகளும் தான் கற்றுத்தர வேண்டும்.

நமது பாரம்பரியம், பண்பாடு, நமது நாகரீகம், நமது வரலாறு, நமது முன்னோர்களின் வீரம் வரலாறு போன்றவற்றை சிறுவயது முதலே சொல்லி வளர்க்க வேண்டும். இறைவன், மதம், சமயம், ஆன்மீகம் போன்ற விஷயங்களை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். ஆன்மீக அறிமுகம் என்பது நமது நம்பிக்கைகளையும், மூட நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கங்களை பிள்ளைகளின் மீது திணிப்பதாக இருக்கக்கூடாது. நாம் கூறும் விஷயங்களைக் கேட்டு சிந்தித்து, பிள்ளைகள் எதிர்க் கேள்விகள் கேட்கும் அளவுக்கு பயனானதாக இருக்க வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் நடக்கும் நல்ல மாற்றும் கெட்ட விஷயங்களை பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் ஒவ்வொரு பிரச்சனையையும் பிள்ளைகளுடன் விவாதியுங்கள், உங்கள் பிள்ளைகளின் ஆலோசனைகளை கேளுங்கள். இந்த உலகில் என்னவெல்லாம் நடக்கின்றது என்பதைப் புரியவையுங்கள். வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குங்கள், குறிப்பாக தினமும் பத்திரிகைகளை வாசிக்கத் தூண்டுங்கள்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்ல மற்றும் கெட்ட விஷயங்களை உங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொண்டால் மட்டுமே உங்கள் பிள்ளைகளுக்கும் தங்களின் பிரச்சனைகளை பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் அவர்களின் ஆலோசனைகளை கேட்க வேண்டும் என்று தோன்றும். நாளை பெரியவர்கள் ஆனதும் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளே அடக்கி வைக்காமல் மற்றவர்களுடன் கலந்தாலோசனை செய்து, அதற்கான தீர்வை தேடுவார்கள்.

சிறுவயது முதலே மன திட்டத்துடன் வளரும் பிள்ளைகள் எந்த வகையான சவாலையும் சமாளித்து தைரியமாக, வெற்றிகரமான மனிதர்களாக வளர்வார்கள் வாழ்வார்கள்.

தற்கொலை, தற்கொலை முயற்சி, தற்கொலைக்குத் தூண்டுதல் - பாகம் 1

அண்மைக்காலங்களில் நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் நாம் அதிகமாகக் காணக்கூடிய ஒரு செய்தி தற்கொலை, தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல். ஒரு காலத்தில் வாழ வழியில்லாமலும், வாழத் தெரியாமலும், ஒடுக்குமுறைகளாலும் பல தற்கொலைகள் நடந்தன. பின்பொரு காலத்தில் காதல் தோல்வி, குடும்பப் பிரச்சனைகள், வாழ்க்கையில் தோல்வியென பலக் காரணங்களுக்காக தற்கொலைகள் நடந்தன. எந்தக் காரணத்துக்காக நடந்தாலும், தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு முடிவுதான்.

ஓரறிவு ஜீவன்கள் முதலாய அத்தனை ஜீவன்களுக்கு இந்த உலகில் பறந்து விரிந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றின் வாழ்விலும் பல இன்னல்கள் வந்துபோகின்றன. அவை எந்த இழப்புக்காகவும், எந்த பிரிவுக்காகவும், எந்த காரணத்துக்காகவும் தற்கொலை செய்துகொள்வதில்லை. அநியாயம் இழைக்கப்பட்ட, அனாதையான, உடல் ஊனமான விலங்குகள் கூட தைரியமாக வாழ்கின்றன, ஆனால் மனிதர்கள் மட்டும் வாழ்கையைக் கண்டு அச்சப்பட்டு தற்கொலை செய்துகொள்ளத் துணிக்கிறார்கள். சாவதற்கு அவர்களிடம் இருக்கும் துணிச்சல் கூட வாழ்வதற்கு இருப்பதில்லை.

அறியாதவர்கள், தெரியாதவர்கள், அறியாமையில் இருப்பவர்கள், பலகீனமானவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்ட காலம் மாறி, தற்போது படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், வசதிபடைத்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இந்த உலகில் மனித பிறப்பு எடுத்தது வாழ்வதற்காக, அந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்குக்கூட கற்றுத்தராத இந்த கல்விமுறையின் பயந்தான் என்ன?

தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாக நான் பார்ப்பது குடும்பங்களின் சிதைவுதான். கூட்டுக் குடும்பங்கள் என்பவை அடக்குமுறை, ஒடுக்குமுறை, கூட்டுக் குடும்பங்களில் பெண்களுக்கு சுதந்திரமில்லை , உழைப்புகள் சுரண்டப்படுகின்றன என்று பல்வேறு காரணங்களைக் கூறி சிறு சிறு குடும்பங்களாகி. பின்னர் அதுவும் சுருங்கி ஒரு பெற்றோர் ஒரு குழந்தை என்ற நிலையை உருவாக்கிக்கொண்டார்கள்.

இவற்றுக்குக் காரணம் மனிதர்களின் அச்ச உணர்வும், அறியாமையும், மேற்கத்திய நாகரீக மோகமும். தாய், தந்தை, அண்ணன் தம்பிகள், அக்காள் தங்கை, தாத்தா பாட்டி, சிற்றப்பா சித்தி, பெரியப்பா பெரியம்மா, மாமா மாமி என்று வாழ்வாங்கு வாழ்த்த குடும்பங்களும், சமுதாயமும் மாறி, சிறை கைதிகள் போன்று இரண்டு மூன்று நபர்களாக வாழத் தொடங்கியதன் விளைவுதான் இவை.

சிறு குடும்பங்களில் வளர்ந்த மனிதர்களின் மனதில் பெரும்பாலும் தைரியம் போதவில்லை, பிரச்சனைகளை சந்திக்கும் மனோபலமில்லை, எனக்கு யாருமில்லை, நான் தனியாக இருக்கின்றேன் என்ற தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. மேலும் அவர்களுக்கு உறவின் நெருக்கமும் வழிகாட்டுதல்களும் கிடைப்பதில்லை. ஒரு சின்ன பிரச்சனை தொற்றினாலும் நான் தனியாக இருக்கிறேன் எனக்கு யாருமில்லை என்று அஞ்சி பிரச்சனைகளுக்கு தீர்வை தேடாமல், குறுக்குவழியை நாடுகிறார்கள்.

மனித உடலில் நோய் தோன்றுவதற்கு முன்பாகவே அதற்கான மருந்து தோன்றிவிடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதைப்போன்றே மனித வாழ்க்கையில் ஒரு பிரச்சனை தோன்றுவதற்கு முன்பாக நிச்சயமாக அதற்கான தீர்வு தோன்றியிருக்கும். அந்த தீர்வை தேடும் தைரியமில்லாமல் தற்கொலைக்குத் துணிவது கோழைத்தனம் மட்டுமல்ல, மடத்தனம்.

பல வேளைகளில் மனிதர்களைத் தற்கொலைக்குத் தூண்டுவது அடுத்தவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்ச உணர்வுதான். குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டார்கள் நம்மைப்பற்றி அவதூறு பேசுவார்கள், தாழ்த்திப் பேசுவார்கள் என்ற அச்சத்தில் சிலர் தற்கொலை செய்துகொள்வார்கள். மனிதர்களுக்குத் துன்பத்தில் உதவாத, உறவினர்களுக்கு துன்பத்தில் துணைநிற்காத, தவித்த வாய்க்கு தண்ணீர் தராமல் குறைமட்டும் கூற தயாராக இருக்கும் இந்த உறவுகளுக்கும் சமுதாயத்துக்கும் அஞ்சி தற்கொலை செய்துகொள்வது போன்ற ஒரு மடமை உண்டா?

…. தொடரும்

கோவிட்-19 மூன்றாவது உலகப்போர் -2

ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் மலேசியாவில் ஒருவர் என்னைத் தொலைப்பேசி மூலமாகத் தொடர்பு கொண்டு, கொரோனா தொற்றுக்கு அறிகுறியாகக் கூறப்படும் அத்தனை அறிகுறிகளும் ஒரு வாரமாக என்னிடம் இருக்கிறது. வீட்டில் பிள்ளைகளும் பெரியவர்களும் இருப்பதனால் நான் வீட்டுக்குச் செல்லாமல் வெளியில் தங்கியிருக்கிறேன். கோவிட்-19 தொற்றாக இருக்குமோ என்று அச்சமாக இருக்கிறது! மருத்துவமனைக்குச் செல்லலாமா வேண்டாமா? என்ற குழப்பத்துடன் இருக்கிறேன். இந்த உடல் உபாதைகளைச் சரிசெய்யும் மருந்து ஏதாவது உள்ளதா? என்று கேட்டார்.

கிருமிகள் மற்றும் உடலைப் பற்றிய சில விளக்கங்களைக் கூறிவிட்டு, திரிகடுகு சூரணத்தை மருந்தாக, தினம் மூன்று வேலைகள் சாப்பிடுங்கள் என்றேன். காலையில் வெறும் வயிற்றில் ஒரு வேலையும், மதியம் சாப்பாட்டுக்கு முன்பாக ஒரு வேலையும், இரவு உறங்குவதற்கு முன்பாக ஒரு வேளையும் வெந்நீரில் ஒரு டீக்கரண்டி திரிகடுகு சூரணம் உட்கொள்ள அறிவுறுத்தினேன்.

சில நாட்கள் கழித்து தொலைப்பேசியில் கேட்டபொழுது, முதல் நாள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு வேலை திரிகடுகு சூரணம் உட்கொண்டதும், மதியம் தொண்டைக்கட்டு குணமானது, அன்று மாலையே முழுமையாக அத்தனை தொந்தரவுகளும் மறைந்துவிட்டன என்றார். சாதாரணமாக நாம் சளிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தும் இயற்கை மற்றும் சித்த மருந்துகள் மூலமாகக் குணமாகக்கூடிய சாதாரண தொந்தரவுதான் கோவிட்-19 தொற்று என்பது.

நாளிதழ்களில் வெளிவந்த செய்தி:
அண்மையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை கட்டணம் குறித்து தமிழக அரசுக்கு, இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாள் கட்டணமாக ரூ.2,31,820 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு நாளைக்கு ரூ.23 ஆயிரம் வரை வசூலிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொந்தரவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைச்சும், உலக நாடுகளும் அறிவித்த பின்பும், ஆங்கில மருத்துவர்கள் 2-3 லட்சங்களுக்கு என்ன மருத்துவம் செய்வார்கள்? இருக்கின்ற மருந்திலேயே குணமாகுமென்றால் கோவிட்-19 என்பது முன்பு இருந்துவந்த சாதாரண தொந்தரவுகள்தான், பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது என்று நான் சொல்வது சரிதானே?

சுகப்பிரசவம் ஆகக்கூடிய பெண்களுக்குக்கூட வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுக்கும் கேடுகெட்ட, மனசாட்சி இல்லாத சில மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இருக்கும் இந்த நாட்டில், காய்ச்சலுக்கு 2 லட்சம் வாங்கலாம் என்றால் விடுவார்களா? 

சாதாரணமாக கோவிட்-19 நோய் அறிகுறிகளைப் பரிசோதனை செய்கிறேன் என்ற பெயரிலேயே பல லட்சங்களை சம்பாதிக்கக்கூடிய சந்தர்ப்பம், இதை 50 ரூபாய் மருந்தில் குணமாகிவிட விடுவார்களா? அதனால்தான் கோவிட்-19 நோய்க்கு மருந்து என்று யார் பேசினாலும் ஒடுக்கப்படுகிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

கோவிட்-19னால் பாதிக்கப்பட்ட முதல் நாடு சீனா. அது முழுமையாக அந்தத் தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டது. அந்த நாட்டு அரசாங்கம் நாங்கள் பாரம்பரிய இயற்கை மூலிகை மருந்துகளைக் கொண்டுதான் பெரும்பாலான நோயாளிகளைக் குணப்படுத்தினோம் என்று கூறும்பொழுது இந்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் இயற்கை பாரம்பரிய மருத்துவங்களை ஒதுக்குவது ஏன்? சோதனை முறையில் கூட இயற்கை மருத்துவங்களைப் பரிசோதித்துப் பார்க்க முன்வராதது ஏன்?

காரணம் மருத்துவ வியாபாரம் மற்றும் பணம். மனித உயிர்களைவிடவும் பணம் சம்பாதிப்பது அவ்வளவு முக்கியமா? இறைவன் என்று ஒருவர் இருக்கிறார்! நீங்கள் செய்யும் அத்தனை விஷயங்களும் உங்களுக்கும் உங்களின் தலைமுறைக்கும் திரும்பிவரும், என்பதில் நினைவில் கொள்ளுங்கள்.


கோவிட்-19 மூன்றாவது உலகப்போர்


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியை உருவாக்கி, இன்று உலகத்தையே ஒரு திறந்தவெளி சிறையாக மாற்றிவிட்டார்கள். வாகன விபத்தில் செத்தவன் முதல், வலிப்பு வந்த செத்தவன் வரையில் அனைவரையும், கொரோனா வைரஸ் பாதிப்பில்தான் செத்தார்கள் என்று மக்களை நம்பவைத்துள்ளார்கள்.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலமாக சில முதலாளிகளும் பல முட்டாள்களும் இணைத்து மரணபயத்தை மக்களிடையே பரப்பிவிட்டார்கள். பெரும் தொழிலதிபர்கள் வியாபார நோக்கத்துக்காக ஒரு பக்கம் பயத்தைத் தூண்டினால், சில முட்டாள்கள் லைக்ஸ் கிடைக்கும், புதிய சப்ஸ்க்ரைபர்கள் கிடைப்பார்கள் என்ற ஆசையில் மக்களிடையே தவறான வதந்திகளைப் பரப்பிவிட்டார்கள். இது அந்த வியாபார கூட்டத்துக்கும் பொன்னான வாய்ப்பாக அமைந்தது.

திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சில காணொளிகளும், விளையாட்டாக உருவாக்கப்பட்ட சில காணொளிகளும், மக்களை முட்டாளாக்க உருவாக்கப்பட்ட சில காணொளிகளும் மக்களின் அறிவை மங்கச் செய்தன. காய்ச்சல், இருமல், சளி, தொண்டை கட்டுதல், சோர்வு, வலிகள், வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல் இவை பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களுக்கு வந்து போதும் உடல் தொந்தரவுகள்தான். பல்லாயிரம் ஆண்டுகளாக வந்துபோகும் இந்த தொந்தரவுகளுக்கு கொரோனா என்று பெயர் சூட்டியவுடன் மக்களிடையே உருவான பயத்தையும் பீதியையும் கவனித்தீர்களா?

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் பலமுறை சந்தித்த தொந்தரவுகள், ஒரு புதிய பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டதும் அப்படியே மூளையைக் கழட்டி மூலையில் வைத்துவிடும் தொலைக்காட்சி, வானொலி, whatsapp, facebook, என எதில் என்ன வந்தாலும் நம்பக்கூடிய கூட்டமாக மாறிவிட்டார்கள். உயிர் போய்விடும், மரணம் நெருங்கிவிடும் என்று பயத்தைக் காட்டியதும் எதையும் செய்யக்கூடிய அடிமைகளாக மாறினார்கள்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் சராசரியாக 2.5% முதல் 7% வரையில் மரணிக்கிறார்கள் என்று உலக நாடுகள் அறிக்கை வெளியிடுகின்றன. இது மற்ற பெரிய நோய்களினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் மிகவும் சிறிய விகிதாச்சாரம். மரணித்தவர்களில் பெரும்பாலானோர் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள், அவர்களில் பெரும்பாலானோருக்கு வேறு வகையான நோய்களும் இருந்தன. 

கோவிட்-19 வைரஸ் தாக்கிதான் மக்கள் மரணமடைகிறார்கள் என்றால் அனைவரும், அல்லது அனைத்து வயதினரும் மரணமடைய வேண்டும் அல்லவா? 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் நாள்பட்ட நோய்களுக்காக ஆங்கில மருத்துவம் செய்பவர்களும் மட்டுமே மரணிக்கிறார்கள் என்றால் அவர்களை எப்படி கோவிட்-19 கிருமியினால் மரணித்தார்கள் என்று கூற முடியும்?

முடியும்… அரசாங்கங்களும், செய்தி, தொலைக்காட்சி நிறுவனங்களும் நினைத்தால் எதை வேண்டுமானுழும் சொல்வார்கள். அதுவும் மக்கள் நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு உண்மையைப் போன்றே சொல்வார்கள். எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டுவதற்காக நலமாக உள்ள மக்களையும் நோயாளிகள் என்பார்கள். மருத்துவமனைகளில் மரணிக்கும் அனைவரையும் கிருமிகளினால் இறந்தார்கள் என்று கணக்கில் சேர்த்துக் கொள்வார்கள்.

மக்களை பயமுறுத்தவும், அடிமைப்படுத்தவும், தன் கட்டுக்குள் வைத்திருக்கவும் நடக்கும் நாடகம் இது. கோவிட்-19 எனும் இந்த கேளிக்கூத்தை நினைத்து அச்சம் கொள்ளாதீர்கள். இது வெறும் வியாபாரம், சில அமைப்புகளும், சில அரசாங்கங்களும், சில பெரும் நிறுவனங்களும், சில கோடீஸ்வரர்களும், இணைந்து போது மக்களை அடிமைப்படுத்தும் ஒரு யுக்தி. ஆயுதமின்றி, இரத்தமின்றி, நடக்கும் மூன்றாவது உலகப்போர்

தொடரும்...

குழந்தைகளை வளரவிடுங்கள்

குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்களை படிக்க வைப்பதோ, திருமணம் செய்துவைப்பதோ அல்ல. பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் இந்த உலகில் பிறப்பது பள்ளி பாடங்களைப் படிப்பதற்காகத் தான் என்பதைப் போன்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதும் திருமணம் செய்துவைப்பதும் தான் பெற்றோர்களின் கடமை என்பது பெரும்பாலான பெற்றோர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும், அது ஓரறிவு உயிராக இருந்தாலும் ஆறறிவு உயிராக இருந்தாலும், இந்த பூமியில் பிறப்பெடுப்பது வாழ்க்கையென்றால் என்னவென்று கற்றுக்கொள்வதற்காகத்தான். வாழ்க்கை, உறவு, அன்பு, பாசம், கருணை, இன்பம், துன்பம், ஏற்றம், தாழ்வு என பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ள வரும் உயிர்களை. பள்ளிக்கூடம், வேலை, பணம் என மூன்று விலங்குகளைப் பூட்டி இதுதான் உலகம் என்று சில பெற்றோர்கள் தவறான பாதையைக் காட்டுகிறார்கள்.

பள்ளிப் பாடங்களைப் படித்தால் இந்த உலகில் அனைத்தும் கிடைத்துவிடும் என்ற ஒரு மாயை அனைவரிடமும் இருக்கிறது. கல்லூரியைக் கூட தாண்டாத பலர் வியாபாரம் செய்வதையும், கல்லூரி படிப்பைக் கூட முடிக்காத பலர் கோடீசுவரர்களாக இருப்பதையும், எழுதப்படிக்கத் தெரியாத பலர் சகல வசதிகளுடன் வாழ்வதையும், பல்கலைக்கழகம் வரையில் படித்தவர்கள் கூட வேலையில்லாமல் வருமானமில்லாமல் இருப்பதையும், இந்த உலகில் வாழத்தெரியாமல் தவிப்பதையும் கண்கூடாகப் பார்த்தும் பள்ளிப் பாடம் படித்தால் அனைத்தும் கிடைத்துவிடும், படிக்காதவர்களுக்கு எதுவும் கிடைக்காது என்ற மாயையை மட்டும் மாற்ற இயலவில்லை.

அனைத்து பெற்றோர்களும் ஒன்றைமட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உலகமென்றால் என்ன? வாழ்க்கையென்றால் என்ன? மனிதர்கள் என்றால் யார்? மனிதர்களின் இயல்புகள் என்ன? செல்வமென்றால் என்ன? எதற்காகச் செல்வம் சேர்க்கிறோம்? என்பன போன்றவற்றைச் சிந்தித்துப் புரிந்துகொண்டு வாழும் மனிதர்கள் மட்டும்தான் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், செல்வந்தர்களாகவும், வாழ்கிறார்கள்.

பெற்றோர்களான நமது கடமையாக இருப்பது பிள்ளைகளை இந்த உலகில் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வழிகாட்டுவது மட்டுமே. தன் வாழ்க்கையில் நடக்கும், சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும், ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்று சிந்தித்து, ஆராய்ந்து வாழும் மனிதர்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் வெற்றிபெறுகிறார்கள். பிள்ளைகளைப் படி படி என்று நச்சரிப்பதும், படிக்கச் சொல்லி வற்புறுத்துவதும் எந்த பலனையும் உண்டாக்காது.

வாழ்க்கை என்றால் என்ன? எதிர்கால வாழ்க்கையில் அவர்கள் என்னவெல்லாம் சந்திக்கப் போகிறார்கள்? அனைத்தையும் சமாளித்து வாழ்வது எப்படி? போன்றவற்றைப் புரியவைத்தால்; அவர்களுக்கு என்னவெல்லாம் தேவை, அவற்றை அடைய என்ன வழி என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற படிப்பை அவர்களே தேடியும் விரும்பியும் படிப்பார்கள்.

ஊருக்குப் புதிதாக வந்த ஒருவர், கொண்டுவந்த முகவரிக்குச் செல்ல வழி தெரியாமல் நிற்கும் போது, அவருக்கு வழிகாட்டுவதைப் போன்று; இந்த பூமியின் நிம்மதியாக, அமைதியாக, பாதுகாப்பாக வாழ்வதற்கு நம் பிள்ளைகளுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். நாம் போக வேண்டிய ஊருக்குரிய பாதையை அவர்களுக்குக் காட்டக்கூடாது.

அவர்கள் எங்குச்செல்ல விரும்புகிறார்களோ அங்குச் செல்வதற்கான வழியைத்தான் கூறவேண்டும். நமது சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் குழந்தைகளின் மீது திணிப்பது, நாம் போகும் ஊருக்கான பாதையை வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய நபருக்குக் கூறுவதைப் போன்றதாகும்.

அடுத்த பிறவியில் மீண்டும் மனிதனாகப் பிறப்போமா?


இந்தப் பிறவியில் செய்த நன்மை தீமைகளைக் கணக்கில் கொண்டு  அடுத்த பிறவி தீர்மானிக்கப்படுகிறது. மனிதனாகப் பிறந்தவன் மீண்டும் மனிதனாகத் தான் பிறக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஓரறிவு முதல் ஆறறிவு வரை எந்தப் பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்து அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படும்.

எந்த மனிதனுக்கும் எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யாமல், ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ்பவர்கள் மீண்டும் மனித பிறப்பை அடைய வாய்ப்புகள் உள்ளன.

புட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீர் உடலுக்கு நன்மையானதா?

தண்ணீரில் இயற்கையாகவே உயிர்களை உருவாக்கக்கூடிய உயிர் சக்தி இருக்கிறது. அந்த உயிர் சக்தி மனித உடலுக்கு மிகவும் அவசியமானது. புட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரில் உயிர்சக்தியும், உயிர்ச்சத்துக்களும், நீக்கப்படுகின்றன.

தண்ணீரை பல மாதங்கள் பாதுகாக்கவும், வாசனை, அல்லது சுவை வராமல் இருப்பதற்காகவும் பாட்டில் தண்ணீரில் அத்தனை சத்துக்களும் நீக்கப்படுகின்றன. எந்த சத்தும் இல்லாவிட்டால் அது தண்ணீர் அல்ல வெறும் திரவம் மட்டுமே. பாட்டில் தண்ணீரை அருந்துவது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

Coca-cola, pepsi, Fanta போன்ற பானங்களை ஏன் உடலுக்குக் கெடுதி என்கிறார்கள்?

Coca-cola, pepsi, Fanta என்று பிரித்துப் பார்க்காமல் புட்டிகளில், பாட்டல்களிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் அத்தனை பானங்களும் எதாவது ஒரு வகையில் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவைதான். அவற்றில் கலக்கப்படும் மிகுதியான சீனியும், பதப்படுத்த, சுவையூட்ட, மற்றும் வர்ணத்துக்காக கலக்கப்படும் இரசாயனங்களும் மனித உடலுக்கு பல வகையிலும் தீங்கை விளைவிக்கின்றன.

பகலில் கண்களில் எதனால் எரிச்சல் உண்டாகின்றன?

பகல் வேளைகளில் கண்களில் எரிச்சல் உண்டானால் உடல் சோர்வாக இருக்கிறது, உடலில் கழிவுகள் கூடிவிட்டது, அல்லது உடலின் உஷ்ணம் அதிகரித்து விட்டது என்று அர்த்தம்.

தூங்கி எழுந்ததும் எதனால் கண்களில் எரிச்சல் உண்டாகின்றன?

காலையில் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும்போது கண்களில் எரிச்சல் உண்டானால் முந்தைய இரவு நீங்கள் ஒழுங்காகத் தூங்கவில்லை என்று அர்த்தம்.

போதுமான உறக்கமில்லாமல் பாதியில் எழுந்துவிட்டீர்கள், அல்லது தாமதமாக உறங்கச் சென்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இரவு வேளைகளில் உடல் செய்ய வேண்டிய கடமைகள் சில தடைப்பட்டதால் உடல் அதை கண்ணெரிச்சல் என்ற அறிகுறியில் காட்டுகிறது.

மனதுக்கு அறிவு உள்ளதா?

மனதுக்கு பகுத்தறிவு கிடையாது. அதற்கு நல்லது கெட்டது தெரியாது. சரியானவற்றையும் தவறானவற்றையும் பிரித்துப்பார்க்கும் தன்மையும் கிடையாது. மனம் மனதுக்குள் பதிந்திருக்கும் பதிவுகளைக் கொண்டே முடிவுகளை எடுக்கிறது.

கோழி முட்டையை சாப்பிட்டால் தான் உடலுக்கு புரோட்டீன் கிடைக்குமா?

கோழிகள் புரோட்டீனோ முட்டையோ சாப்பிடுவதில்லை, இருந்தும் அவற்றின் முட்டைகளில் அதிகமான புரோட்டீன் இருக்கின்றன, அவற்றுக்கு எங்கிருந்து புரோட்டீன் கிடைத்தன? கோழிகளின் உடல் சுயமாக புரோட்டீனை உருவாக்குகின்றன.

கோழியின் உடலால் ப்ரோட்டீனை சுயமாக உருவாக்க முடியும் பொது மனிதனின் உடலால் சுயமாக புரோட்டீனை உருவாக்க முடியாதா? பரிமாணத்தின் உச்சம் மனிதன் அவன் உடலால் தனக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் சுயமாக உருவாக்கிக்கொள்ள முடியும்.

அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய, மற்ற வேண்டிய வாட்ஸ்அப் செட்டிங்ஸ்ஆன்மீகம் என்றால் என்ன?

மனித வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு; தான் தேடிய எதுவுமே உண்மையில்லை, தான் தேடிய அனைத்துமே அழியக்கூடியவை என்று மனிதர்கள் உணர்ந்து.

ஏன் பிறந்தோம்? ஏன் மனிதனாகப் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்? ஏன் மரணிக்கிறோம்?. மரணத்துக்குப் பிறகு எங்கே செல்கிறோம்?. மரணத்துக்குப் பின்பாக என்ன நடக்கும்?. எப்படி எந்த கேள்விக்கும் விடை தெரியாமல், அறியாமல் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களை நெறிப்படுத்த உருவானதே ஆன்மீகம். மனித அறிவுக்கு எட்டாத விசயங்களுக்கும், மனிதனுக்கு உருவாகும் சூட்சமத்தைப் பற்றிய கேள்விகளுக்கும் விடைக்கான வழி சொல்வதுதான் ஆன்மீகம்.

மனித உடலைத் தாண்டிய அறிவும், தேடுதலும்தான் ஆன்மீகம்.

மெய்ப்பொருள் நண்பர்களின் கலந்துரையாடல் | Meipporul Friends Gathering and discussions 11/04/2020எங்கள் நட்பு வட்டாரத்தில் இணைய விரும்பும் நண்பர்கள் கீழே உள்ள Telegram/WhatsApp குழுக்களில் இணைந்து கொள்ளலாம்.

Follow Us@
----------
Telegram Group: https://t.me/Meipporul
Telegram Channel: https://t.me/MeiChannel
WhatsApp Group(s): https://bit.ly/meipporulWA

Facebook pages: 
----------

உணவை உட்கொண்டதும் எதனால் வாந்தி வருகிறது?

உணவை உட்கொண்டதும் வாந்தி வந்தால், உட்கொண்ட உணவை உடலால் ஜீரணிக்க முடியவில்லை அல்லது அந்த உணவு உடலுக்கு ஒவ்வாதது அல்லது ஆபத்தானது என்று அர்த்தம். உடலுக்கு ஒத்துக் கொள்ளாத அல்லது ஆபத்தான உணவு என்பதால் உடல் உடனடியாக உடலைவிட்டு வாந்தியாகா வெளியேற்றுகிறது.

இரவு உறக்கம் போதுமானதாக இல்லை என்பதை எவ்வாறு அறிந்துக் கொள்வது?

இரவு உறக்கம் உடலுக்கு போதவில்லை என்றாலோ, இரவு உறக்கம் திருப்தியாக இல்லை என்றாலோ காலையில் எழுந்திருக்கும்போது, சோர்வு, லேசான தலைச் சுற்றல், உடல் வலிகள் இருக்கும்.

உடல் பலகீனமாக இருக்கிறது என்பதை எவ்வாறு அறிந்துக் கொள்வது?

உடல் பலகீனமாக இருப்பவர்களுக்கு உட்கொள்ளும் உணவு எளிதில் ஜீரணமாகாது, அதனால் உணவை உட்கொண்டவுடன் அசதியும் சோர்வும் உண்டாகும். தூங்கி எழுந்தால் தான் அவர்களின் உடலால் மீண்டும் செயல்பட முடியும்.

அவர்களின் உடல் விரைவில் சோர்வடையும், சோம்பலும், எரிச்சலும், அடிக்கடி அசதியும் உண்டாகும். அஜீரணம், மலச்சிக்கல் உண்டாகும், அடிக்கடி தலைவலி உண்டாகும். இவை அனைத்தும் உடலின் பலகீனத்தைக் குறிக்கும் அறிகுறிகள். இவற்றை அலட்சியப் படுத்தும்போது நோய்கள் உண்டாகும்.