எழுத்தாளரை பற்றிராஜா முகமது காசிம்
ரெய்கி மாஸ்டர்

ஹோலிஸ்டிக் ரெய்கியின் நிறுவனர் ராஜா முகமது காசிம் அவர்கள் ஒரு பன்திறன் மற்றும் பன்முகம் கொண்ட ஆளுமையாவார் . சிறு வயதிலிருந்தே ஒரு தீவிர வாசகரான அவர், மனித பிறப்பின் நோக்கத்தைக் கண்டறிய தனது தேடுதலை இளம் வயதிலேயே தொடங்கிவிட்டார்.

அவரது பகுத்தறிவும், தர்க்க அறிவும், பகுப்பாய்வு தன்மையும், காலம் காலமாக கூறப்பட்டுவரும் மற்றும் நம்பி பின்பற்றப்பட்டுவரும் விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. மாறாக, காலம் காலமாக பின்பற்றப்பட்டுவரும் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், மத நம்பிக்கைகளையும், புராண கதைகளையும், கண்மூடித்தனமாக நம்பாமல் அனைத்தையும் ஏன், எதற்கு, எதனால், எப்படி என்பன போன்ற கேள்விகளை கேட்டு அதன்பின்னுள்ள உண்மைத் தன்மைகளை ஆராயத் தொடங்கினார்.

இஸ்லாம், கிருத்துவம், இந்து, பவுத்தம், சமணம், மற்றும் சீக்கிய மத நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் ஆராய்ச்சி செய்தார். குண்டலினி ரெய்கி, உசுய் ரெய்கி, மற்றும் அக்குபங்சர் கலைகளில் தேர்ச்சிப் பெற்றார்.

பிரபஞ்சத்தின் இயக்கம், பிரபஞ்ச ஆற்றலின் தன்மை, கர்மா கணக்கு, விதி, ஜாதகம், ஜோசியம், எண் கணிதம், உலகத்தின் இயக்கம் போன்றவற்றை ஆராய்ந்தார். மனிதர்களின் உடல், மனம், ஆரா, சக்ரா, போன்றவற்றை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அவற்றின் இயக்கத்தையும் தன்மைகளையும் ஆராய்ந்தார். அதன் மூலம் அவரை நாடி வருபவர்களின் உடல், மனம், ஆரா, சக்ரா ஆகியவற்றில் உள்ள தடைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் களைய வழிவகுக்கின்றார்.

அவரது பகுத்தாய்வு கண்ணோட்டமும், புதுமையான சித்தாந்தங்களும், ரெய்கியில் சில புதுமைகளை செய்யத் தூண்டியது. இதன் விளைவாக ரெய்கியுடன் உடலியல், மனம், கர்மா, போன்றவற்றை இணைத்து ஹோலிஸ்டிக் ரெய்கி என்ற புதிய ரெய்கி சிகிச்சை முறையை உருவாக்கினார். இது எவ்வித சந்தேகமுமின்றி ரெய்கி உலகில் ஒரு பெரிய திருப்புமுனையாகும். மேலும் இவர் ஒரு தன்முனைப்பு பேச்சாளர் மற்றும் ஆலோசகர். இவரது ஆலோசனைகள் பலரின் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளன.

மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு காலகட்டத்தையும், ஒவ்வொரு அம்சத்தையும் தனி தனியாகப் பார்க்காமல், ஒரு முழுமையாக, ஒன்றுடன் ஒன்றை இணைத்துப் பார்க்க வேண்டும் என்பது இவரின் சித்தாந்தமாகும். தொடக்கத்தில் தனது எழுத்துக்களின் மூலமாக தனது சித்தாந்தத்தைப் பேசத் தொடங்கினார். பின்பு தனது கருத்துக்களை யூடியூப் வீடியோக்களின் மூலமாக வெளிப்படுத்தினார். ஆரோக்கியம், ஆன்மீகம், செல்வம், தன்முனைப்பு, வாழ்க்கை முறைகள், பிரபஞ்சம், போன்றவற்றில் தனது மாறுபட்ட சிந்தனையை, தன் எழுத்துக்கள் மூலமும் இணையதளங்கள் மூலமும் வெளிப்படுத்தினார்.

அவரது தொலைநோக்குப் பார்வை rmtamil.com, reikitamil.com, holisticrays.com, மற்றும் பல இணைய தளங்களை உருவாக்கத் தூண்டியது. இணையதளங்கள், Facebook, மற்றும் WhatsApp குழுக்களின் மூலமாக அவரது கருத்துக்கள் பலருக்கு பயன்தந்துக் கொண்டிருக்கின்றன.