உடலுக்குத் தேவையான சிறப்பு உணவு

 
ஒரு ஏழை விவசாயி கஞ்சியை மட்டும் குடித்துவிட்டு காட்டிலும் மேட்டிலும் வெயிலிலும் கடுமையாக உழைக்கிறார், கடினமான வேலைகளைச் செய்கிறார். அவருக்கு சோர்வு உண்டாவதில்லை. ஆனால் ஒரு வசதிபடைத்தவரோ மிகவும் ஆரோக்கியமான, சத்துகள் நிறைந்தவை என்று நம்பும் உணவுகளை உட்கொள்கிறார், ஆனால் உணவை உட்கொண்ட பிறகு வயிற்று பாரமும், சோர்வும், அசதியும் உருவாகி அவதிப்படுகிறார். 

இவை நாம் அடிக்கடி காணக்கூடிய நிகழ்வுகள்தான். இந்த இரண்டு உதாரணங்களின் மூலமாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது உண்ணும் உணவை விடவும், அந்த உணவு உடலால் எளிதில் ஜீரணிக்கக் கூடியதா என்பதுதான் முக்கியம். மனிதனுக்கு கிடைக்கும் ஆற்றலும் சத்தும் சுவையான உணவினால் உருவானவை அல்ல மாறாக முழுமையாக நடந்த ஜீரணத்திலிருந்து உருவானவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எந்த உணவையும் அதன் சத்துக்காக சிறப்பாகத் தேர்ந்தெடுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை. உங்களிடம் இருக்கும் அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த உணவையும் உட்கொள்ளலாம். எந்த ஒரு சிறப்பு உணவும் தேவையில்லை. நீங்கள் உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளும் எந்த உணவை உட்கொண்டாலும், உங்கள் உடல் அதிலிருந்து அத்தனை தேவையான சத்துக்களையும் உருவாக்கிக் கொள்ளும்.

To Top