உடல் உபாதைகளை குணப்படுத்தும் வழிமுறைகள்

 
மனித உடலில் என்ன உபாதை உருவாகி இருந்தாலும், அதற்கு என்ன பெயர் சூட்டியிருந்தாலும் அந்த நோயைக் குணப்படுத்தக் கூடிய சில பயன்பாட்டு வழிமுறைகள்.

1. உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாத உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். எ.கா: மைதா மாவிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள், துரித உணவுகள்.

2. மாமிசம் மற்றும் அசைவ உணவுகள் உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

3. தூய வெள்ளை நிறத்தில் இருக்கும் அனைத்து வகையான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். எ.கா: தூள் உப்பு, வெள்ளை சீனி, சுவையூட்டி, பாக்கெட் பால், பிளேயர் கோழி.

4. இரசாயன பயன்பாட்டைக் குறைத்து நிறுத்த வேண்டும். எ.கா: சோப்பு, சாம்பு, பற்பசை, அழகுசாதன பொருட்கள்.

5. இரசாயன மருந்துகளைத் தவிர்க்க வேண்டும், காரணம் அவை நோய்களை நீக்காமல், நோய்களை அடக்கி வைக்கும் வேலைகளைச் செய்கின்றன. எ.கா: ஆங்கில மருந்துகள், தலைவலி மாத்திரைகள், பதப்படுத்தப்பட்ட மருந்துகள், புட்டியில் அடைத்த மருந்துகள்.

6. காலையில் விரைவாக எழுந்திருக்க வேண்டும். காலையில் சாதாரண தண்ணீரில் குளிக்க வேண்டும்.

7. காலை அல்லது மாலை வேளைகளில் சிறிது நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யலாம். அதிகமாக வற்புறுத்தி செய்யக்கூடாது. மெதுவாக எளிமையான உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும்.

8. உடலில் இயக்க தடைகளை உருவாக்கக் கூடிய செயல்களைத் தவிர்க்க வேண்டும். எ.கா: இறுக்கமான ஆடைகளை அணிவது, அளவுக்கு அதிகமான உடல் உழைப்பு செய்வது, செயற்கை இன்பங்கள்.

To Top