ரெய்கி சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது?

 

ரெய்கி மிகவும் நேர்த்தியுடனும், புத்தி கூர்மையுடனும் இயங்கக்கூடிய பேராற்றலாகும். ரெய்கி பேராற்றல் ஒரு மனிதனுக்கோ, விலங்குக்கோ, பொருளுக்கோ, கட்டடத்துக்கோ அனுப்பப்படும் போது; அது அந்த மனிதனிடமோ, விலங்கிடமோ, பொருளிடமோ, கட்டடத்திலோ, இருக்கும் குறை நிறைகளை சரிபார்த்து அவற்றை சீர்செய்ய தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்டிருக்கும் சக்தி குறைபாடுகளையும் சீர் செய்கிறது. ரெய்கியிடம் என்ன செய்ய வேண்டும் என்பதை பணித்தால் போதுமானது. அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை ரெய்கியே தீர்மானிக்கும்.

ரெய்கி மாஸ்டரின் கடமை, அந்த ஆற்றலை தேவைப்படும் மனிதருக்கு சரியாக கிடைக்க வழிசெய்வது மட்டுமே. ரெய்கி பேராற்றல் ஒரு மனிதனின் உடலில் நுழைந்தவுடன், அந்த மனிதனின் தேவைகளை சுயமாக கண்டறிந்து பூர்த்தி செய்ய தொடங்குகிறது.

உதாரணத்துக்கு:
மருத்துவ தேவைக்காக இந்த ஆற்றல் பணிக்கப்பட்டால், தொடக்கத்தில் அந்த நோயாளியின் வலிகளையும் வேதனைகளையும் குறைக்கத் தொடங்குகிறது. அதை தொடர்ந்து அந்த நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிந்து அதை சீர்படுத்துகிறது. அதை தொடர்ந்து அந்த நோயாளியின் இயக்க சக்தி, ஆரா, சக்ராக்கள், மனம், மற்றும் உடலை முழுமையாக குணப்படுத்தும் வேலையை செய்கிறது. இந்த சுழற்சி முழுமைப் பெற சில கால அவகாசம் தேவைப்படலாம். பல முறை ரெய்கி சிகிச்சையும் தேவைப்படலாம்.

To Top