மனித உடலின் சக்ராக்கள்

 
சக்ராக்கள் என்பவை என்ன?
மனிதர்களின் உடலில் ஏழு சக்தி மையங்கள் அமையப்பெற்றுள்ளன, அவற்றை சக்ராக்கள் என்று அழைக்கிறோம். சக்ரா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சக்கரம் என்று பொருளாகும். ஆற்றல்களை உருவாக்குவதும், கிரகிப்பதும், சேமித்து வைப்பதும், தொடர்புடைய பகுதிகளுக்கு ஆற்றல்களை பகிர்ந்தளிப்பதும் அவற்றின் வேலைகளாகும்.

சக்ராக்களில் உண்டாகும் குறைபாடுகளும், ஆற்றல் தட்டுப்பாடுகளும், அவற்றுடன் தொடர்புடைய உறுப்புகள் முழுமையாக இயங்க முடியாமல் தடைகளையும், தொந்தரவுகளையும் உருவாக்குகின்றன. சக்ராக்களில் உண்டாகும் குறைபாட்டினால் மனிதர்களின் வாழ்க்கையில் சில பல சிக்கல்களும், தடங்கல்களும், நோய்களும், கூட உருவாகின்றன.

மனித உடலும், வாழ்க்கையும், ஆற்றலுடன் தொடர்புடையவை ஆனதால், அந்த ஆற்றலை கட்டுப்படுத்தும் சக்ராக்களை சீர்செய்வதன் மூலமாக மனிதர்களின் நோய்களையும், தொந்தரவுகளையும், துன்ப துயரங்களையும் களைய முடியும்.

(மனிதர்களின் ஏழு சக்ராக்களும் அவற்றின் அமைவிடங்களும்)
 

மனிதனின் சக்ராக்களும் அவற்றின் தன்மைகளும்

1. மூலாதாரம் - Mooladhara - Root / Base chakra
அமைவிடம்: முதுகெலும்பின் ஆக கடைசியில், வால் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.
வண்ணம்: சிகப்பு
பஞ்சபூதம்: நிலம்

குணம்: மனிதனின் அடிப்படை தேவைகளையும் உணர்வுகளையும் உருவாக்குவது, பூர்த்தி செய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது.

2. சுவாதிஸ்தானம் - Svadhisthana – Sacral chakra
அமைவிடம்: தொப்புளிலிருந்து இரண்டு அங்குலம் கீழே அமைந்துள்ளது.
வர்ணம்: ஆரஞ்சு
பஞ்சபூதம்: நீர்

குணம்: மனிதர்களின் ஆசைகளையும், உணர்ச்சிகளையும் உருவாக்குவது, பூர்த்தி செய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது.

3. மணிபூரகம் - Manipura - Solar Plexus chakra
அமைவிடம்: தொப்புளுக்கும் நெஞ்சுக்கும் நடுவில் அமைந்துள்ளது. 
வர்ணம்: மஞ்சள்
பஞ்சபூதம்: நெருப்பு

குணம்: தன்மானம், தன்னம்பிக்கை, மற்றும் தன்மதிப்பை உருவாக்குவது, பூர்த்தி செய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது.

4. அனாகதம் - Anahatha – Heart chakra
அமைவிடம்: நெஞ்சு பகுதியில் இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
வர்ணம்: பச்சை
பஞ்சபூதம்: காற்று

குணம்: அன்பு, பாசம், கருணை, அமைதி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை உருவாக்குவது, பூர்த்தி செய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது.

5. விசுத்தி - Vishuddha –Throat chakra
அமைவிடம்: கழுத்தில் தொண்டை குழியின் பின் அமைந்துள்ளது.
வர்ணம்: நீலம்
பஞ்சபூதம்: மரம்

குணம்: பேச்சுத்திறன், நேர்மை, ஒழுக்கம் போன்ற வற்றை உருவாக்குவது, பூர்த்தி செய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது.

6. ஆக்கினை - Ajna – Brow / Third Eye chakra
அமைவிடம்: இரு கண்களின் புருவ மத்தியில் அமைந்துள்ளது.
வர்ணம்: கறுநீலம்
பஞ்சபூதம்: புத்தி

குணம்: புத்தி கூர்மையையும், பகுத்தறிவையும், சிந்தனை ஆற்றலையும் உருவாக்குவது, பூர்த்தி செய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது.

7. சஹஸ்ராரம் Sahasrara - Crown chakra
அமைவிடம்: தலையில் ஒட்டாமல், உச்சந்தலையின் மேற்புறமாக, தலையிலிருந்து ஒரு அங்குலம் மேலே அமைந்துள்ளது.
வர்ணம்: கத்தரிப்பு
பஞ்சபூதம்: பிரபஞ்சம்

குணம்: இந்தப் பிரபஞ்சத்தின் இரகசியங்களை அறிவிப்பது. ஞானத்தை விளங்க வைப்பது, பூர்த்தி செய்வது, மற்றும் கட்டுப்படுத்துவது.

To Top