மனிதனின் உடல்கள்


மனிதனின் உடல்கள்
ரெய்கி மற்றும் மருத்துவம் பற்றி பார்ப்பதற்கு முன்னதாக மனிதன் என்றால் யார் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மனிதன் என்பவன் பூத கண்களால் காணக்கூடிய பூதவுடல் மட்டுமே அல்ல. நான்கு வெவ்வேறு வகையான உடல்களின் கலவையே மனிதன் என்று அழைக்கப்படுகிறான். 

மனிதர்களிடம் நான்கு உடல்களையும் தாண்டி மேலும் சில விசயங்கள் இருந்தாலும், இந்த நான்கு உடல்கள்தான் மனிதர்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன. இந்த நான்கு உடல்களும் தனது சுய இயக்கத்தில், மனிதனின் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் பாதுகாக்க தனது பங்கை ஆற்றிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு உடலுக்கும் தனிப்பட்ட இயல்பு இருந்தாலும், இந்த நான்கு உடல்களும் ஆரோக்கியமாகவும் சமநிலையுடனும் இயங்கும்போது மட்டுமே ஒரு மனிதன் முழு ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வாழ முடிகிறது. இந்த நான்கு உடல்களும், ஒன்றோடு ஒன்று இணைந்தும், சார்ந்தும், உறுதுணையாகவும், உதவியாகவும் செயல்படுகின்றன. 

உதாரணத்திற்கு:
பூத உடல் இருந்தும் அதில் உயிர் இல்லாவிட்டால், அதனால் இயங்க முடியாது. அதை நாம் மனிதன் என்றும் அழைப்பதில்லை, பிணம் என்றே அழைக்கிறோம். உடலும் உயிரும் இருந்தும் புத்தி செயல்படவில்லையென்றால் மனநிலை பாதிக்கப்படுகிறார். அனைத்தும் இருந்தும் ஆற்றல் இல்லாவிட்டால் நோய்வாய்ப்படுகிறார். 

இவ்வாறு எந்த ஒரு உடலில் பாதிப்பு உண்டானாலும், அந்தப் பாதிப்பு மற்ற உடல்களின் இயக்கத்தை பாதிக்கிறது. ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மன அமைதியை பாதுகாக்கவும், சிறப்பான வாழ்க்கையை வாழவும், இந்த நான்கு உடல்களையும் பாதுகாப்பதும், ஆரோக்கியமாக வைத்திருப்பதும், மிகவும் அவசியமாகும்.

To Top