இன்றைய மனிதர்களுக்கு நோய்கள் உருவாகும் காரணங்கள்

 


மருத்துவத்துறை பெரும் வளர்ச்சி அடைந்து விட்டதாக கூறிக் கொள்ளும் இந்த காலகட்டத்தில் தான், மனிதர்களுக்கு நோய்களும் உடல் உபாதைகளும் அதிகமாக உருவாகின்றன. மனிதர்களுக்கு நோய்களும் உடல் உபாதைகளும் அதிகரித்துக் கொண்டே இருப்பதற்கு எனக்கு தோன்றிய சில காரணங்கள்.

1. உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை தவறுகள்.

2. உணவிலும் உடலிலும் அதிகமான இரசாயன பயன்பாடுகள்.

3. உடலின் இயக்கத்திற்கும் நோய்க்கும் வித்தியாசம் தெரியாத மனிதர்கள்.

4. உடலில் என்ன மாற்றம் நடந்தாலும் அதை நோயாகக் கருதி அச்சப்படும் மனிதர்கள்.

5. மனிதர்களின் உண்மையான நோய்களைக் கண்டறிய முடியாத மருத்துவர்கள்.

6. உண்மையான நோயை ஆராயாமல், உடல் காட்டும் அறிகுறிகளுக்கு (symptoms) மட்டுமே வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள். 

7. நோய்களை குணப்படுத்துவதைக் காட்டிலும், புதிய நோய்களை உருவாக்கும் இரசாயன மருந்துகள்.

8. பல வகையான மருந்து மாத்திரைகளை ஒன்றாக உட்கொள்ளும் போது உண்டாகும் பக்க விளைவுகள்.

9. இவை அனைத்துடன் சேர்த்து, மனிதர்களுக்கு உடல் மற்றும் மருத்துவத்தின் மீது இருக்கும் தவறான கண்ணோட்டங்கள்.

10. மருத்துவம் செய்துகொண்டால் அனைத்து உடல் உபாதைகளும் குணமாகும் என்ற அலட்சியப் போக்கு.

மேலே கூறப்பட்ட காரணங்களால் தான் எங்குத் திரும்பினாலும் மருந்தகங்களும் மருத்துவமனைகளும் புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன. காரணம் இன்றைய மருத்துவமுறை நோய்களை குணப்படுத்தவில்லை மாறாக புதிய நோய்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. 


To Top