முதுமையும் மருத்துவமும்

 

மனிதர்களுக்கு வயது அதிகரிக்கும் போது நோய்கள் உருவாவது இயல்பு தானே? நோய்கள் உண்டானால் அவற்றுக்கு மருத்துவம் செய்வது தானே இயல்பு? உடலின் உபாதைகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவம் செய்தால் தானே ஆரோக்கியமாக வாழ முடியும்? சரியான நேரத்தில் மருத்துவம் செய்யவில்லை என்றால் நோய் முற்றிப்போய் மரணம் கூட உண்டாகலாம் அல்லவா? 

மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் கருத்துக்கள் பல காலமாக மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் நம்பிக்கைகள். இவை சரியானவை போன்று தோற்றமளிக்கும் தவறான கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள். பிற மனிதர்கள் கூறும் கூற்றுக்களை ஆராயாமல் முழுமையாக நம்புவதால் உடலில் எவ்வகையான தொந்தரவு உண்டானாலும் அவற்றை நோய் என்று நம்புகிறார்கள். உடலில் வலி உண்டானால், ஏன் எதற்கு என்று சிந்திக்காமல் அதை நோய் என்று நம்புகிறார்கள். உடல் உறுப்புகளின் இயக்கத்தில் எந்த தொந்தரவு உருவானாலும் அதனை நோய் என்று நம்புகிறார்கள். மேலும் உடலில் இயல்புக்கு மாற்றமாக என்ன நடந்தாலும் அதனை நோய் என்று எண்ணி பலர் பயந்து நடுங்குகிறார்கள்.

உடலின் இயக்கத்தை பற்றிய புரிதல்கள் இல்லாததால் உடனே மருத்துவம் செய்ய வேண்டும் இல்லையென்றால் பெரிய பாதிப்புகள் உருவாகும் என்று அஞ்சுகிறார்கள். உடல் உபாதை பற்றிய அச்சமும், அவற்றுக்கு செய்யும் மருத்துவமும் தான் அவர்களின் சாதாரண உடல் தொந்தரவுகளை நோய்களாக மாற்றுகின்றன. மருத்துவம் செய்ய தொடங்கிய பிறகுதான் பலருக்கு உடலில் உண்மையான நோய்கள் உருவாக தொடங்குகின்றன. 

ஆரோக்கியமான அளவு, ஆரோக்கியமான இயக்கம், இயல்பான இயக்கம், இப்படி எதுவுமே உடலுக்கு கிடையாது. ஒரு மனிதனின் உடலை போன்று இன்னொரு மனிதனின் உடல் இயங்குவதில்லை. ஒவ்வொரு மனிதனின் உடலும் தனி தன்மை உடையது. உடலுக்கென்று தனி அறிவு உள்ளது. உடலில் என்ன நடக்க வேண்டும்? 

உடல் எப்போது, எப்படி இயங்க வேண்டும்? எப்போது என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற விசயங்களிலும் கூட யாரும் முடிவு செய்யவோ இயக்கத்தில் தலையிடவோ முடியாது. உடல் எவ்வாறு இயங்க வேண்டும்? உடலில் எப்போது என்ன செய்ய வேண்டும்? என்பன விசயங்களை தனி மனிதனின் உடல் தான் முடிவு செய்ய முடியும். அந்த உடலை பெற்ற மனிதன் கூட உடலின் இயக்கத்தில் தலையிட முடியாது.

உடலுக்கு சுயமான அறிவு உள்ளது, எப்போது? எப்படி? என்ன? செய்ய வேண்டும் என்பதை உடல் தான் முடிவு செய்யும். மனிதர்களோ மருத்துவர்களோ விரும்புவது போலெல்லாம் உடல் மாறாது இயங்காது. 

To Top