மனதிடம் கட்டளையிடுங்கள் நோய்கள் குணமாகும்

 

மனித மனம் தனக்கு வழங்கப்படும் கட்டளைகளை நிறைவேற்றும், மனிதனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும், மனதை சரியாக கையாண்டால் மனித வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். மனதுக்கு இருக்கும் இந்த அபார ஆற்றலை ஏன் நோய்களை குணப்படுத்த பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?

மனதின் உதவியைக் கொண்டு உடலில் உண்டாகும் உபாதைகளையும் தொந்தரவுகளையும் வலிகளையும் நோய்களையும் நிச்சயமாக குணப்படுத்திக் கொள்ள முடியும். கீழே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுங்கள்.

1. இரவு உறங்குவதற்கு முன்பாக அமைதியாக படுத்துக் கொண்டு, கண்களை மூடி, அமைதியாகவும் நிதானமாகவும் உங்களுடன் பேசுங்கள். 

2. உங்கள் பெயரை சொல்லி உங்களை நீங்களே கூப்பிடுங்கள்.

3. உங்கள் உடலில் இருக்கும் உபாதைகளை உங்களிடம் தெளிவாக கூறுங்கள். 

4. காலை எழுந்திருக்கும் நேரத்தை மனதிலும் கூறி அதற்குள் தொந்தரவுகளை குணப்படுத்திவிடுமாறு கட்டளையிடுங்கள்.

உதாரணத்திற்கு
ராஜா இன்று இரவு முதல் காலை 7 மணி வரை நான் உறங்குவேன். நான் எழுந்திருப்பதற்கு முன் கழுத்தில் ஏற்பட்டிருக்கும் சுளுக்கையும் உடல் வலிகளையும் குணப்படுத்திவிடு. என் உடலின் ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் மேம்படுத்து என்று கூறிவிட்டு உடனே உறங்கச் செல்லுங்கள்.

காலையில் எழுந்திருக்கும் போது உங்கள் உடலில் மாற்றத்தையும், உடல் வலிகள் குறைவதையும், நோய்கள் குணமாக தொடங்குவதையும், தொந்தரவுகள் மறைவதையும், காண்பீர்கள்.
 
உடலில் பல்வேறு தொந்தரவுகள் உடையவர்கள், ஒவ்வொரு தொந்தரவாக குணப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். 
உடலில் 10 தொந்தரவுகள் இருந்தாலும் கவலையில்லை, அனைத்தையும் குணப்படுத்தலாம், ஆனால் அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும், ஒரே நேரத்தில் குணப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்யக்கூடாது.

எது பழைய நெடுநாட்களாக இருக்கும் தொந்தரவு? என்பதை கண்டறிந்து அதை முதலில் சரி செய்யுங்கள். அல்லது எந்த உடல் உபாதை உங்களை மிகவும் நோகடிக்கிறதோ தொந்தரவு செய்கிறதோ அதை முதலில் குணப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

மருந்துகள், மாத்திரைகள், தைலங்கள், எதுவுமே இல்லாமல் மனதும் உடலும் சேர்ந்து செயல்படும் போது முறையான கட்டளையிட்டால் போதும் அனைத்து நோய்களும் படிப்படியாக குணமாகிவிடும்.

To Top