கதை: மூன்று நண்பர்கள்

ஒரு காட்டில் ஒரு குளம் இருந்தது, அந்த குளத்தில் வரும்முன் காப்போன், வருங்கால் காப்போன், வந்தபின் காப்போன் என்ற மூன்று மீன்கள் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. அந்த குளத்திற்கு வந்துபோகும் ஒரு கொக்கு அந்த மீன்களுடன் நட்பாக பழகி வந்தது.

ஒரு நாள் அந்த குளத்திற்கு வந்த கொக்கு தனது மீன் நண்பர்களை அழைத்து, அந்த காட்டின் எல்லையில் சில நபர்கள் பேசிக்கொண்டிருப்பதை கேட்டதாகவும், அவர்கள் நாளை இந்த குளத்தில் வலைவீசி மீன்களை பிடிக்கப் போவதாகவும் கூறியது.

அதைக் கேள்விப்பட்ட வருமுன் காப்போம் என்னை இப்போதே வேறு குளத்திற்கு கொண்டுபோய் விட்டுவிடு என்று அந்த கொக்கிடம் கேட்டுக்கொண்டது. அந்த கொக்கும் அவ்வாறே வரும்முன் காப்போன் மீனை அந்த காட்டில் இருக்கும் இன்னொரு குளத்தில் கொண்டு போய் விட்டது. மற்ற இரண்டு மீன்களும் அவர்கள் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டன.

மறுநாள் காலையில் வலைகளுடன் சில நபர்கள் காட்டுக்குள் வருவதாக அந்த மீன்களிடம் கொக்கு கூறியது. உடனே வருங்கால் காப்போன் என்னையும் அந்த குளத்தில் கொண்டுபோய் விட்டு விடு என்று கொக்கிடம் கேட்டுக் கொண்டது. அந்த கொக்கும் முன்பு வருமுன் காப்போம் மீனை விட்ட அதே குளத்தில் வருங்கால் காப்போன் மீனையும் கொண்டுபோய் விட்டது. மீன் பிடிக்க யாராவது வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று வந்தபின் காப்போம் மீன் அலட்சியமாக இருந்துவிட்டது. 

சிறிது நேரத்தில் சில நபர்கள் வலைகளுடன் அந்த குளத்துக்கு வந்து சேர்ந்தனர். அப்போது வருங்கால் காப்போன் மீன் அந்த கொக்கிடம் என்னையும் அந்த குளத்தில் போய் விட்டுவிடு என்று கேட்டுக் கொண்டது. கொக்கு அந்த மீனை பிடிப்பதற்கு முன்பாக வேடுவர்கள் அந்த கொக்கை அங்கிருந்து விரட்டிவிட்டனர். வந்தபின் காப்போன் மீனுடன் சேர்த்து அந்த குளத்தில் இருந்த அத்தனை மீன்களையும் வேடுவர்கள் பிடித்து சென்றனர். 

வந்தபின் காப்போன் மீனைப் போன்று தான் பெரும்பாலான நபர்கள் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்கிறார்கள். ஆரோக்கியம், குடும்பம், உறவுகள், பொருளாதாரம், ஆன்மிகம், பாதுகாப்பு, என்று அத்தனை விசயங்களிலும் அலட்சியமாக இருந்துவிட்டு பின்னாட்களில் வலியையும் வேதனைகளையும் அனுபவிக்கிறார்கள். 

வாருங்கள் காப்போன் மீனைப் போன்று எந்த விசயத்தையும் முன்கூட்டியே சிந்தித்து திட்டமிட்டு செயல்படும் மனிதர்கள் எப்பொழுதும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள் வாழ்க்கையில் வெற்றியும் பெறுகிறார்கள். 


To Top