ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்


ஜப்பானில் அமெரிக்க அணுகுண்டு வீசிய பிறகு, தளபதிகள் அணுகுண்டின் தாக்கத்தையும் விளைவையும் மாமன்னரிடம் தெரிவித்தார்களாம். ஜப்பானிய மாமன்னர் முதல் கேள்வியாக எத்தனை ஆசிரியர்கள் அணு வீச்சிலிருந்து தப்பித்து மீதம் இருக்கிறார்கள் என்று கேட்டாராம்.

எவ்வளவு பெரிய பாதிப்புகள் உண்டானாலும் சரியான குருமார்கள் மற்றும் ஆசிரியர்கள் இருந்தால் அனைத்தையும் கடந்து வரலாம். ஆசிரியர் என்பது தொழில் அல்ல அது அடுத்த தலைமுறையை உருவாக்கும் படைப்பாற்றல்.

அதனால்தான் இந்தியாவில் கூட மன்னர்களைக் காட்டிலும் துறவிகளுக்கும் உண்மையான குருமார்களுக்கும் அதிக உரிமையும் மரியாதையும் வழங்கப்பட்டன.

உண்மையான உள்ள தூய்மையுடன் பணியாற்றும் அத்தனை ஆசிரியர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள் நன்றிகள்.

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

To Top