உங்களை ஆட்டிவைக்கும் சாட்டை எது?

 


காட்டுக்கு அரசன் என்று போற்றப்படும் சிங்கமும் அதற்கு நிகரான பலம் கொண்ட புலியும், சர்க்கஸில் பல்டி அடிக்கிறது, வலயத்தில் பாய்கிறது, இரண்டு கால்களில் நடக்கிறது. தனது பயிற்சியாளன் முன்பு ஒரு பூனைக் குட்டியைப் போன்று  கூனி குறுகி நிற்கிறது. சிங்கமும் புலியின் தான் யார் என்பதையும், தனது பலம் என்ன என்பதையும் மறந்ததற்கு யார் காரணமா? என்ன காரணம்?

சர்க்கஸில் சிங்கத்தையும் புலியையும் மனிதன்  விரும்பியபடி எல்லாம் ஆட வைப்பதற்கும், செய்ய வைப்பதற்கும் அவர்கள் பயன்படுத்தும் யுக்தி என்ன? வளர்ப்பா? பயிற்சியா? பயிற்சியாளரா? சாட்டையா? 

இவை எதுவுமே இல்லை - பயம், குட்டியாக இருக்கும் பொழுதே பழக்கியது. இந்த மனிதன் சாட்டையால் அடிப்பான், அடித்தால் வலிக்கும் என்று சிறு வயது முதலாக பழக்கப்படுத்தப் பட்டுள்ளது. அந்த பயமே காட்டின் அரசர்களை அடிமையாக வைத்திருக்கிறது. 

வீட்டிலும் நாட்டிலும் நீங்கள் அடிமைப்படுத்தப் படுகிறீர்களா? உங்களின் கைவிலங்கு எது?  உங்களின் கால்விலங்கு எது? உங்களை ஆட்டிவைக்கும் சாட்டை எது?

சிந்தித்து, உங்கள் பதிலை கீழே பதிவு செய்யுங்கள்.

To Top