தடுப்பூசியில் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள

 
பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டியது சட்டப்படி கட்டாயமாக்கப்  படவில்லை. ஆனாலும் சில நாட்டு அரசாங்கங்கள், சில சலுகைகளையும், சட்டதிட்டங்களையும் காட்டி, மேலும் பொது மக்களுக்கு சில இடைஞ்சல்களை உருவாக்கி, தடுப்பூசிகளை தங்களின் மக்கள் மீது மறைமுகமாக திணிக்கிறார்கள்.

கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே  வியாபாரம் செய்யலாம், வியாபார தலங்களுக்குல்  நுழையலாம், கல்லூரிகளுக்கு திரும்பலாம், பள்ளிக்கூடம் செல்லலாம், ஊர்  விட்டு ஊர்  நாடு விட்டு நாடு செல்லலாம், என்று சட்டங்களை விதிக்கும் போது, அவை மறைமுகமாக தடுப்பூசி செலுத்திக்  கொள்வதை  கட்டாயம் ஆக்குகின்றன.

தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் வழங்கும் பணத்துக்காகவும், பதவியை தக்க வைத்துக் கொள்ளவும், மரண பயத்தினாலும், சில நாட்டு அரசாங்கங்களும் அதன் மேல்மட்ட நிர்வாகிகளும் தடுப்பூசி நிறுவனங்களுடன் இணக்கமாக போகிறார்கள். தடுப்பூசிக்கு எதிராக செயல்பட்ட சில நாட்டு தலைவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிட தக்கது.

வேண்டுமோ வேண்டாமோ, விருப்பம் உண்டோ இல்லையோ, ஒரு அரசாங்கத்தின் ஆட்சிக்கு உட்பட்டு வாழும் போது  அல்லது ஒரு நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் போது அவர்கள் கூறுவதை கேட்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகின்றன.

கட்டாய தடுப்பூசி போட வேண்டிய சூழ்நிலை உருவானால் அந்த தடுப்பூசியில் இருந்து  பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று பலர் என்னிடம் கேட்டார்கள். அவர்களுக்கு கூறியதையே உங்களுக்கும் கூறுகிறேன், விருப்பமிருந்தால் பின்பற்றுங்கள்.

முதலில் தடுப்பூசி மட்டுமில்லாமல் அனைத்து வகையான நோய்களில் இருந்தும், உபாதைகளில் இருந்தும், உடலின் பலவீனங்களில் இருந்தும்  தன்னை தற்காத்துக் கொள்ளக்கூடிய வகையில் உடலை ஆரோக்கியமாகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும் பொழுது ஒரு சில வழிமுறைகளை பின்பற்றினால் பெரிய பாதிப்புகள் உண்டாகாமல் தவிர்க்கலாம். உடலுக்கு இயல்பாகவே இயக்க சக்தியும், எதிர்ப்பு சக்தியும் இருப்பதனால் தேவையற்ற விசயங்கள் உடலுக்குள் நுழையும் போது அவற்றை அவசரகால நடைமுறையில் விரைவாக உடல் வெளியேற்றிவிடும். 

1. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் அளவுக்கு உடலில் ஆற்றல் இருக்க வேண்டும். அந்த கழிவு வெளியேற்ற செயலுக்கு தடை உருவாக்காமல் இருக்க வேண்டும். மேலும் உடல் சொல்லும் அறிகுறிகளை அறிந்து உடலுடன் ஒத்துழைக்க வேண்டும்.

2. தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே உணவைக் குறைத்து, பால் பொருட்களை தவிர்த்து, முடிந்தால் சைவமாக இருக்க வேண்டும்.

3. இரவில் பழங்களை மட்டுமே உட்கொள்வது இன்னும் சிறப்பு.

4. தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நாளன்று உணவை உட்கொள்ளாமல் பழம் அல்லது பழச்சாறு மட்டும் அருந்திவிட்டு ஊசியை செலுத்திக் கொள்ளவும்.

5. ஊசி செலுத்திக் கொண்ட பிறகு சுயமாக பசி உண்டாகும் வரையில் எதையுமே உட்கொள்ள கூடாது.

6. மறுநாள் சுயமாக பசி உருவாகவில்லை என்றால் பழங்களை மட்டும் சாப்பிடலாம் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தலாம்.

7. இயல்பாக நல்ல பசி உண்டாகும் வரையில் சமைத்த உணவுகளையோ பால் பொருட்களையோ உட்கொள்ளக் கூடாது.


8. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு உடலில் ஏதாவது தொந்தரவோ, காய்ச்சலோ, வலி வேதனையோ, உண்டானால் எந்த மருந்து மாத்திரையும் உட்கொள்ள கூடாது.

8. உடல் தடுப்பூசியின் விசக்கூறுகளை வெளியேற்றுவதால் தான் இந்த தொந்தரவுகள் உருவாகின்றன என்பதை புரிந்துகொண்டு உடலுடன் ஒத்துழைக்க வேண்டும்.

9. உடலின் காய்ச்சலும், சோர்வும், வலி வேதனை, நீங்கி உடல் சுறுசுறுப்பாக இயங்கும் வரையில், சுயமாக பசி உண்டாகும் வரையில், உடலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உடல் சொல்வதை கேட்டு நடந்தால் தடுப்பூசியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

To Top