செய்ய வேண்டிய நேரத்தில் சரியாகச் செய்


ஒரு காலத்தில் சேவல் கூவுவதைக் கேட்டுத் தான் மனிதர்கள் கண் விழித்தார்கள்.  இப்போதெல்லாம் சேவல் கூவுவதைக்  கேட்கவும்,  சேவலை பராமரிக்கவும் ஆள் இல்லை.  சேவலின்  கொக்கரிப்புக்கு  எந்த மதிப்பும் இல்லை.

இருந்தும், சேவல் ஒரு நாளும் தன்  கொக்கரிப்பை  நிறுத்துவதில்லை. காரணம் சேவல் தனக்காகவே கொக்கரிக்கிறது, மற்றவர்களின் கருத்தையும்  அங்கீகாரத்தையும் பாராட்டையும்  எதிர்பார்ப்பதில்லை.

எவ்வளவு சிறப்பாக தன் கடமையை செய்ய முடியுமோ அது செய்கிறது, தன்னால் எவ்வளவு சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்ட முடியுமோ வெளிக்காட்டுகிறது. 

எந்த காலத்திலும் மற்றவர்களின்  அங்கீகாரத்தையும் கருத்தையும்  பலனையும் எதிர்பார்ப்பதில்லை.

கடமையை செய்ய வேண்டிய முறையில், செய்ய வேண்டிய நேரத்தில் சரியாகச் செய், பலன் தானாக உன்னைத் தேடிவரும்.

 

To Top