ஆரோக்கியமான உணவு முறைகள்

நாம் உட்கொள்ளும் உணவுதான் நமது உடலாகவும், உடலின் உறுப்புகளாகவும், ஒவ்வொரு செல்லாகவும் இருக்கிறது உருவாகிறது. நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து உருவாகும் ஆற்றல் தான் உடலை இயக்கவும் பாதுகாக்கவும் பயன்படுகிறது. ஆகையால் உடலை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்க முறையான உணவுப் பழக்கம் என்பது இன்றியமையாதது.

உணவு என்பது மனிதனுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காதவையாக இருக்க வேண்டும். அந்த உணவு உடலுக்குத் தேவையான, நன்மையான கூறுகளையும் கொண்டதாக இருத்தல் வேண்டும். எளிதில் ஜீரணமாகக் கூடியவையாக இருக்க வேண்டும். பழங்களும், அரை வேக்காடாகச் சமைக்கப்பட்ட காய்கறிகளும், மற்றும் சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகளும், மனிதர்களுக்கு மிகவும் சிறந்த உணவுகளாகும்.

உண்ணும் உணவுகள் முறையாக ஜீரணமாகி அனைத்து சத்துக்களும் உடலில் சார்ந்து மீதமுள்ள கழிவுகள் எளிதாக வெளியேற சில ஆலோசனைகள்.

1. பசியின்றி உணவைத் தொடாதீர்கள். உணவை உட்கொள்ளும் போது பசி அடங்கிவிட்டால் உண்ணுபதை நிறுத்துங்கள்.

2. உணவை நன்றாக பொறுமையாக, மென்று விழுங்குங்கள். 

3. இனிப்பான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளுங்கள்.

4. சாப்பிடும்போது அவசியமின்றி அதிகமாக தண்ணீர் அருந்தாதீர்கள். 

5. சாப்பிடும் போது உணவின் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள். 

6. இரசாயனங்கள் கலந்த உணவுகள் அல்லது புட்டியில், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட பால், பானம் மற்றும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். 

7. உணவில் காரம், புளிப்பு, இனிப்பு மற்றும் மசாலா பொருட்களைக் குறையுங்கள். 

8. இரவு உணவை, மாலை 6-7க்குள் முடித்துக் கொள்ளுங்கள்

9. இரவில் சமைத்த உணவுகளைத் தவிர்த்து பழங்கள் மற்றும் தண்ணீரை மட்டுமே உட்கொள்ளுங்கள்.

10. நெருப்பில் சமைக்காத அல்லது சமைக்கத் தேவையில்லாத உணவுகளை அதிகமாக உட்கொள்ளுங்கள்.

மேலே கூறப்பட்டவற்றைப் பின்பற்றினால், உடலில் ஜீரணம் முறையாக நடைபெறும், மலச்சிக்கல் நீங்கும், உடல் பலம்பெறும், ஆரோக்கியம் மேம்படும். 

To Top