உடலின் இயக்கம்


 உடல் என்ற ஒற்றை சொல், தலை முடி முதலாக கால் பாதம் வரையிலான முழுமையை குறித்து நிற்கிறது. நமது உடலும் தலை முடி முதல் கால் பாதம் வரையில் முழுமையான ஒற்றை இயக்கமாக தான் இயங்குகிறது.

தலைமுடிக்கு தனி செயல்பாடு, கண்களுக்கு தனி செயல்பாடு, மூக்குக்கு தனி செயல்பாடு, இருதயத்துக்கு தனி செயல்பாடு, வயிற்றுக்கு தனி செயல்பாடு, கை கால்களுக்கு தனி செயல்பாடு, எலும்புகளுக்கு தனி செயல்பாடு, தோலுக்கு தனி செயல்பாடு என்றெல்லாம் கிடையாது.

உடலின் ஒவ்வொரு உறுப்பையும் தனி தனியாக பிரித்து, புரிந்து கொள்வதும், ஆராய்வதும்; உடலின் ஒவ்வொரு உறுப்பையும் தனி தனியாக பிரித்து சிகிச்சை செய்வதும், ஆங்கில மருத்துவத்தின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. ஆங்கில மருத்துவத்தின் இந்த நடைமுறை மனித உடலின் இயக்கத்தை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

ஆங்கில மருத்துவர்கள் மட்டுமின்றி பாரம்பரிய இயற்கை மருத்துவர்களில் பலரும் உடலை முழுமையாக பார்க்காமல், பிரித்து புரிந்துகொள்ள முயல்வது வேதனையளிக்கிறது. தலை முடி முதல் கால் பாதம் வரையில் முழுமையாக இயங்கும் இயக்கத்தை தனி தனியாக பிரித்து ஆராய்வதாலும், புரிந்துகொள்வதாலும், சிகிச்சை அளிப்பதாலும் தான் பெரும்பாலும் எந்த நோயும் முழுமையாக குணமாவதில்லை.

ஆங்கிலத்தில் சிம்ப்டம் (symptom) என்று குறிப்பிடப்படும் நோயின் அறிகுறிகளை தான் பெரும்பாலும் நோய் என்று எண்ணுகிறார்கள். தோலிலும், உடலின் வெளிப்புறத்திலும், முகத்திலும் உண்டாகும் தொந்தரவுகள் மற்றும் குறைபாடுகள் உடலின் முக்கியமான பகுதிகளில் உண்டான பலவீனத்தையும், நோய் கூறுகளையும், சேர்ந்திருக்கும் கழிவுகளையும் அடையாளம் காட்டக் கூடிய அறிகுறிகளாக தான் இருக்கின்றன.

உடலில் எந்த பாகத்தில் அல்லது எந்த உறுப்பில் தொந்தரவு உண்டானாலும், அந்த தொந்தரவு பெரும்பாலும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்புடையதாக தான் இருக்கும். நோய் உண்டான மற்ற பாகங்களையும் கண்டறிவதுதான், உண்மையான நோயை முழுமையாக கண்டறிவதாக இருக்கும். 


To Top