சிறப்பு உணவுகள் தேவையில்லை

 

ஒரு ஏழை விவசாயி வெறும் கஞ்சியை மட்டும் குடித்துவிட்டு, கடுமையாக உழைக்கிறார், கடினமான வேலைகளை செய்கிறார். அவருக்கு சோர்வு உண்டாவதில்லை. ஆனால் ஒரு வசதிபடைத்தவரோ மிகவும் ஆரோக்கியமான, சத்துகள் நிறைந்தவை என்று நம்பும் உணவுகளை உட்கொள்கிறார், ஆனால் உணவை உட்கொண்ட பிறகு வயிற்று பாரமும், சோர்வும், அசதியும் உருவாகி அவதிப்படுகிறார்.

இந்த இரண்டு சூழ்நிலைக்கு என்னக் காரணம்? உண்ணும் உணவை விடவும், அந்த உணவு உடலால் எளிதாக ஜீரணிக்க கூடியதா என்பதுதான் முக்கியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்?

எந்த உணவையும் சிறப்பாக தேர்ந்தெடுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை. உங்களுக்கு பிடித்தமான அல்லது இருக்கின்ற உணவை உட்கொள்ளுங்கள் அது போதும். எந்த ஒரு சிறப்பு உணவும் தேவையில்லை. ஆனால் உணவை உட்கொள்ளும் வழிமுறைகள் முக்கியமானவை.

நீங்கள் உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளும் எந்த உணவை உட்கொண்டாலும், உங்கள் உடல் அதிலிருந்து அத்தனை தேவையான சத்துக்களையும் உருவாக்கிக் கொள்ளும்.


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.