நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சை முறைகள்

உடலில் எந்த வகையான தொந்தரவு உண்டானாலும், அதை முழுமையாக சரிசெய்ய, உடலை ஒரு முழு இயக்கமாகப் பார்க்க வேண்டும். உடலில் தற்போது என்ன தொந்தரவு உண்டாகியிருக்கிறது என்பதை ஆராய வேண்டும். அந்த ஒரு குறிப்பிட்ட தொந்தரவைத் தாண்டி உடலில் வேறு தொந்தரவுகள் உள்ளனவா என்பதை ஆராய வேண்டும். இதற்கு முன்பாக என்னென்ன தொந்தரவுகள் உருவாகின என்பதையும், அவை எவ்வாறு? எப்போது? உருவாகின என்பதையும் ஆராய வேண்டும். தற்போதைய தொந்தரவுகளுக்கும் பழைய தொந்தரவுகளுக்கும் ஏதாவது ஒற்றுமைகள் அல்லது தொடர்புகள் உள்ளனவா என்பதை ஆராய வேண்டும்.

இவ்வாறு ஆராய்ந்து தொந்தரவின் மூலக் காரணத்தை அறிந்துக் கொண்டு, அதனை முழுமையாக நீக்கக்கூடிய சரியான இயற்கை மருத்துவத்தைப் பின்பற்ற வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இயற்கையின் அமைப்புக்கும் சட்டத்துக்கும் எதிராகச் செயல்படாமல், இயற்கையின் ஆற்றலையும், இயற்கையில் கிடைக்கும் பொருட்களையும் கொண்டு உடலின் மற்றும் மனதின் உபாதைகளை நீக்கிக் கொண்டு ஆரோக்கியமாக வாழும் வழிமுறைதான் இயற்கை மருத்துவம். 

சித்த மருத்துவம், ஆயுர்வேதம், நாட்டு மருத்துவம், வீட்டு மருத்துவம், ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர், போன்ற சிகிச்சை முறைகளைப் பின்பற்றுபவர்கள் அவரவர் மருத்துவ முறையை கீழ்க்கண்ட சிகிச்சைக்குப் பயன்படுத்தவும்.

1. முதலில் உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளையும், விசக்கூறுகளையும், நோய் காரணிகளையும் வெளியேற்ற உதவி செய்ய வேண்டும். 

2. உடலின் உயிராற்றலையும், இயக்க சக்தியையும் அதிகரிக்க வேண்டும்.

3. உடலில் வாதம், பித்தம், மற்றும் கபத்தை சீர் செய்ய வேண்டும்.

4. பாதிக்கப்பட்டவருக்கு தனது ஆரோக்கியம் திரும்பும் என்ற நம்பிக்கையையும், தைரியத்தையும் உருவாக்க வேண்டும். 

5. நிலம், நீர்நிலைகள், மழை, காற்று, சூரியன், நிலா, போன்ற இயற்கை ஆற்றல்களை உடலுக்குள் கிரகிக்க வேண்டும். 

6. உடலின் தசைகள் மற்றும் செல்களில் படிந்திருக்கும் கழிவுகளையும், விசக்கூறுகளையும், நோய் காரணிகளையும் வெளியேற்ற வேண்டும்.

7. இயற்கை உணவுகளின் மூலமாக உடலின் இயக்க சக்தியை அதிகரிக்க வேண்டும்.

8. விரதம் இருப்பதன் மூலமாக உடலின் கழிவுகளை வெளியேற்றி, இயக்க சக்தியை அதிகரிக்கலாம்.

9. பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவங்களின் மூலமாக உடலின் கழிவு நீக்கத்துக்கும், நோய் குணப்படுத்தும் வேலைக்கும், உடலின் இயக்கத்துக்கும், உடலின் உயிராற்றலை அதிகரிப்பதற்கும் உதவி செய்யலாம். 

To Top