சத்து மாத்திரைகள் உடலுக்கு தேவையா?

உடலின் ஆரோக்கியத்திற்காக, பலத்திற்காக, அல்லது அழகுக்காக என்று பலர் சத்து மாத்திரைகள், சத்துமாவுகள், வைட்டமின், மினரல், கால்சியம், போன்றவற்றை உட்கொள்கிறார்கள். இவை உடலுக்குத் தேவையானவையா? உடலுக்கு அவசியமானவையா? இவற்றினால் மனிதர்களுக்கு நன்மைகள் விளையுமா?

ஒரு மனிதனுக்கு கண், காது, மூக்கு, கை, கால் என உடல் உறுப்புகள் முழுமையாக இருக்கும்; அதைப்போல் இறந்து போன ஒரு சடலத்திலும் கண், காது, மூக்கு, கை, கால், என்று அனைத்தும் இருக்கும் அதற்காக சடலத்தை யாரும் மனிதன் என்று அழைப்பதில்லை. மேலும் அந்த சடலம் ஒரு மனிதனும் அல்ல.

சத்து மாத்திரைகளின் இரசாயன கட்டமைப்பு, உண்மையான சத்துக்களைப் போன்றே இருக்கலாம். இரசாயன (chemical) கட்டமைப்பு ஒன்றாக இருக்குமே ஒழிய அதில் உயிர் சக்தி இருக்காது. உயிர் சக்தி இல்லாத இந்த மாத்திரைகள் இறந்து போன சடலத்துக்கு சமமானவையே. இவற்றை உட்கொள்ளும் மனிதர்களுக்கு நோய்களை உருவாக்குமே ஒழிய நன்மைகள் உருவாக மாட்டா.

சத்து மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அவற்றை முதலில் நிறுத்துங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் அவற்றை கொடுக்காதீர்கள். இயற்கையாக கிடைக்கக்கூடிய உள்ளூர் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளுங்கள். பழங்கள் காய்கறிகள் போன்ற உணவு வகைகளில் மட்டுமே உண்மையான, முழுமையான, உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சமைத்துச் சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். அதிகமாக பழங்கள் காய்கறிகளை உட்கொண்டால், எந்த மருந்து மாத்திரையும் இன்றி இறுதிவரையில் ஆரோக்கியமாக வாழலாம்.

To Top